மாயவரம் போற
வழியில புத்தூர் ஜெயராமன் கடைன்னு ஒன்னு இருக்கு ஜாக்கி.... அதுல சாப்பிட்டு
இருக்கிங்களா?
எனது சீர்காழி நண்பர் ராஜசேகர் என்னிடத்தில் கேட்டார்...
இல்லை ஆனா கேள்வி பட்டு இருக்கேன்... நண்பர் மணிஜி மற்றும் அபி அப்பா அந்த கடை
பற்றி சிலாகித்து இருக்காங்க...
இந்த வாட்டி தீபாவளிக்கு ஊருக்கு வந்தா நிச்சயம்
அந்த கடையில போய் சாப்பிடறோம் ஜாக்கி
என்றார்...அவரோட பையன் என்னோட கிளாஸ்மெட் கண்டிப்பா அந்த கடைக்கு போறோம் அந்த கடையில சாப்பிடறோம் என்றார்... நேரம் இருப்பின்
செல்லலாம் என்று சொல்லி இருக்கின்றேன்..
உணவுக்கு
அப்படி என்ன முக்கியத்துவம்... ருசியை அறுத்து விடு என்கின்றார் பாலகுமாரன்...
ஆமாய்யா இவருக்கு சாப்பாடு புடிக்கலை அதனால ருசியை அறுத்துடனும்னு சொன்னா எப்படி ?என்று என் நண்பர்கள் என்னிடத்தில் வாதம் செய்து இருக்கின்றார்கள்..
ஆனால்
சாப்பாட்டுக்கு போய் சரவணபவனில் ஒருவர் பின்னால் நெடு நேரம் தேவுடு காத்து இருப்பதில் எனக்கு உடன் பாடு
இல்லை என்றாலும் வேறு வழியில்லாமல் சில
நேரம் தேவுடு காத்தும் இருக்கின்றேன்... நேற்று கூட தி நகரில் முருகன்
இட்லிகடை வாசலில் இட்லி சாப்பிட மக்கள் வரிசையில்
காத்து இருக்கின்றார்கள்...
காமமும்
சாப்பாடும் மனிதனின் ஆதார தேவைகள்.... அதுக்காக நிறையவே மனிதன்
மெனக்கெடுகின்றான்... என்பத்தான் உண்மை.... பெண்பார்க்க போய் யாராவது பெண்
வீட்டார் கொடுத்த பட்சன ருசியில் மயங்கி ,அந்த வீட்டு சமையல்காரனை
அழைத்துக்கொண்டு பெண் வேண்டாம் இந்த
சமையல்காரன் போதும் என்று யாராவது கிளம்பி வருவார்களா,-? அப்படி வந்தவனின் கதைதான் இந்த சால்ட்
அண்டு பெப்பர் மலையாளப்படம்...,
=========
Salt N' Pepper-2011/உலகசினிமா/இந்தியா/ருசிக்கு அடிமையானவன்.படத்தின் ஒன்லைன்..
ருசிக்கு
அடிமையான மத்திம வ்வயதை கடந்த இரண்டு பேர் எப்படி ஒன்றாகின்றார்கள் என்பதுதான்
இந்த படத்தின் ஒன்லைன்.
==============
Salt N' Pepper-2011/உலகசினிமா/இந்தியா/ படத்தின் கதை என்ன?
திருவனந்தபுரத்தில்
தொல்பொருள் ஆய்வுதுறையில் பணியாற்றும் லால்(காளிதாசன்) ஒர சாப்பாட்டு பிரியன்....அவனுடைய சமையல் காரன்
பாபுராஜோடு வாழ்கின்றான்...லாலுக்கு திருமணம் ஆகவில்லை....லாலின்
சொந்தக்கார பையன் ஆசிப் அலி (ராகவ்) அவன் வீட்டில் தங்கி வேலைதேட வருகின்றான்....
அதே
ஊரில் இருக்கும் ஸ்வேதா மேனன்(மாயா) ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அவள் ஒரு சாப்பாடு
பிரியை...அவளுக்கு திருமணம் ஆகவில்லை...அவள் நண்பி மைதிலி(மீனாக்ஷி)யோடு தங்கி
இருக்கின்றாள் ஒரு ராங் காலில் சாப்பாட்டு பிரியார்களான லாலுக்கு, ஸ்வேதா மேனனுக்கும்
நட்பு அரும்புகின்றது.. இந்த மெயின் கேரக்டர் நால்வரும் சில பல
குழப்பங்களுக்கு மத்தியில் எப்படி இனைகின்றார்கள் என்பதை திரையில்பார்த்து தெரிந்த
கொள்ளவும்.
==============
படத்தின்
சுவாரஸ்யங்களில் சில...
படன்தின்
முதல் காட்சியில் வரும் செம்பாவுக்கு டைட்டில் சாங்கில் காட்டப்படும் சாப்பாட்டு
கடை காட்சிகள் எடுத்த விதம் அதை டைட்டிலில் புகுத்திய விதம் ஒரு
அபுதமான ஆல்பம் அனுபவத்தை கொடுக்கின்றன....
இயக்குனர் Aashiq Abu மலையாள சினிமாவின் ரசனை மிகுந்த
இயக்குனர்....சில நாட்களுக்கு முன் நான் இவரின்
22 பிமேல் கோட்டயம் படம் பற்றி எழுதி இருக்கின்றேன்.... எப்படி அந்த
படத்தில் பெங்களூர் மான்டேஜ் அற்புதமாக
சின்னானே சாங்கில் வைத்தாரோ.. அதே போல இந்த படத்திலும் டைட்டில் சாங் மாண்டஜ் பேசப்படகின்றது....அந்த
ஒரு பாடல் போதும் ஆஷிக் பெரிய ரசனைக்காரன் என்பதை சொல்ல.....22 பிமேல் கோட்டயம் படத்தின் விமர்சனத்தை வாசிக்க..இங்கே கிளிக்கவும்.
நம்ம விஷால் நடித்து சண்டைக்கோழி படத்தின் வில்லன்
லால்தான் படத்தின் பிரதான ஹீரோ... சான்சே இல்லை அவரின் இயல்பான நடிப்பு...
ஸ்வேதாமேன்ன்...ரீமேக் ரிதிநிர்வேதம் படத்தின் தனது அகலமான இடுப்பில் கொலுசு கட்டி இந்திய
ஆண்களை டெம்ட் ஆக்கியவர்...தற்போது இயக்குனர் பிளஸ்சி எடுத்துக்கொண்டு இருக்கும்
புதிய படத்தில் கர்பவதியாக
நடிக்கின்றார்..உண்மையிலேயே கர்பவதியான ஸ்வேதா தன் பிள்ளை பேறுவை கூட படம் பிடித்துக்கொள்ள அனுமதி தந்தார் என்பது
சுவாரஸ்ய செய்தி....
ஸ்வேதா டப்பிங்
அர்ட்டிஸ்ட்டாக அவர் நடித்துக்கு இருக்கும் போர்ஷன்கள் ஏ ஒன்..
அதே போல அந்த
இளம் ஜோடிகள் அஷீப் ஆலி மைதிலி லவ் போர்ஷன்கள் அருமை... முக்கியமாக சாக்கடை நாற்றத்தோடு இருக்கும் மைதிலியை தூக்கி
செல்லும் போது நாந்நம் பிடிங்கி எடுக்க
தன்னை தூக்கிக்கொண்டு செல்லும்
காட்சியில் ஆசிப் மூக்கினை பிடித்த படி நடப்பது
அற்புதமான லவ் சீன்.
லால் மற்றும்
ஸ்வேதாமேனன் இருவரின் வாழ்வின் வெறுமையையும் மத்திய வயதை கடந்தவர்களின் தனிமையையும் மிக அழாக காட்சி
படுத்தி இருக்கின்றார்கள்..முக்கியமாக ஸ்வேதா மற்றும் லால் தண்ணி அடிக்கும்
போர்ஷன்கள்.... எட்டு போட டிரைவிங் ஸ்கூலில் படும் பாட்டில் நன்றாக நடித்து இருக்கின்றார்.
லால் மற்றும்
பாபுராஜ் இன்டிமசியை மிக அழகாக சொல்லி
இருக்கின்றார்கள்.. பெண் பார்க்க போகும்
இடத்தில் நடக்கும் அளப்பறை உங்களுக்காக கீழே பார்த்து ரசியுங்கள்.. முக்கியமாக உன்னியப்பத்தை எடுத்து வாயில் போட்டு அப்படியே மெய் மறக்க அந்த இடத்தில் வெளிப்படும் புல்லாங்குழல் இசை ருசியோ ருசி.....
கேக் தயாரிப்பு
பற்றி அந்த பிரெஞ்சு பீரியட் கதையும் அதன்
பின்னனியில் லால் வாய்ஸ் சான்சே இல்லை.... அது கவித்துமான காட்சிகள்....
Cinematography பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்...
இந்த படத்தின் பெரிய பலம்Shyju Kahild மிக அற்புதமாக
லைவ் லைட்டிங்கில் நிறைய காட்சிகள் படம்
பிடித்து இருக்கின்றார்.. அவருக்கு உறுதுணையாக Editing ங்கில்V.
Saajan உதவி செய்து
இருக்கின்றார்...
==============
படத்தின்
டிரைலர்
===================
படக்குழுவினர் விபரம்
Directed by Aashiq Abu
Produced by Sadanandan Lucsam
Debobroto Mandal
Written by Shyam Pushkaran
Dileesh Nair
Starring Lal
Shweta Menon
Mythili
Asif Ali
Baburaj
Music by Bijibal
Avial]
Cinematography Shyju Kahild
Editing by V. Saajan
Studio Lucsam Creations
Distributed by Remya Movies
Release date(s)
July 8, 2011
Running time 118 minutes
Country India
Language Malayalam
Budget 2.5 crore (US$472,500
===============
பைனல் கிக்..
ரொமான்டிக்
காமெடி பாடமான இந்த படத்தை வார
இறுதியில் ஒரு பியருடன் சமைக்க தெரியாத மனைவியை அருகில் அமர்த்திக்கொண்டு நக்கல் விட்டுக்கொண்டே
பார்க்கலாம்... மிக அற்புதமான சின்ன நாட் அதை அற்புதமான திரைக்கதையில் செதுக்கி
இருக்கின்றார்கள்.. இந்த படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ
.....EVER YOURS...
jackiesekar
EXCELLENT FILM YOUR REVIEW ALSO
ReplyDeleteMalluwood is back with youngsters and feel good , Simple budget and Crisp movies.The simplicity is famous in mallu movies and songs limited to needy areas. Thanks Now you have slight affections on chettans
ReplyDeleteJackie ur T shirt in the photo of Driving test still
ReplyDeleteJackie sir, பொழுது போக்கான படங்களை மட்டுமே பார்த்து கொண்டிருந்தேன் எப்பொழுது உங்கள் அறிமுகம் கிடைத்ததோ அதிலிருந்து அனைத்து விதமான ரசனைகளும் என்னை தொற்றி கொண்டது என்றால் அது மிகையல்ல நன்றி
ReplyDeleteஅருமையான திரைப்படம்...
ReplyDeleteசமையல்காரராக வரும் பாபுராஜ் அவர்கள் நடிகை வாணி விஸ்வநாத் அவர்களின் கணவர்.
லால் ஒரு பண்முகக் கலைஞர்...."அரங்கேற்ற வேளை" திரைப்படத்தின் கதை இவருடையது...
அருமையான திரைப்படம்...
ReplyDeleteசமையல்காரராக வரும் பாபுராஜ் அவர்கள் நடிகை வாணி விஸ்வநாத் அவர்களின் கணவர்.
லால் ஒரு பண்முகக் கலைஞர்...."அரங்கேற்ற வேளை" திரைப்படத்தின் கதை இவருடையது...
Interesting..
ReplyDelete