Studio Sex/2012/சுவீடன்/துப்பறியும் பெண் பத்திரிக்கையாளர்...



அனுதினமும் நகரத்தில் கொலைகள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன...
முக்கியமாக நமது ஊரில்  பட்டபகலில் வெட்டிப்போடும் சம்பவங்கள் நிறைய நடக்க ஆரம்பித்தவிட்டன.. பெரும்பாலும் தொழில் போட்டியும் கள்ளக்காதலும்தான் மிக முக்கிய காரணமாக  இருக்கின்றன..

 நிறைய  கொலைகள் நதி மூலம் ரிஷி மூலம் தெரியாமல்  மூடி மறைக்கப்படுகின்றன... ஆனால் மிக சாதாரணமாக  தோன்றும் சில கொலைகளுக்கு பின்புலத்தை ஆராய்ந்தால் தலையே சுற்றும்.... ஆனால் சில கொலைகளை போலிஸ் கை கழுவி விட்டாலும் அல்லது கொலையை மறைத்தாலும்  சில பத்திரிக்கைகள்  கொலைக்கான  பின்னனியை வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றன...

=======

Studio Sex/2012 படத்தின் ஒன்லைன்.

ஒரு  கொலையும்   அதுக்கு பின்னனியை தேடி   புறப்படும் ஒரு பத்திரிக்கை நிருபர் பெண்மணியின் கதை தான் இந்த படம்..
==========
Studio Sex/2012 படத்தின் கதை என்ன?


Annika Bengtzon(Malin Crépin) பிரபல பத்திரிக்கையில் பணிபுரியும் பெண் ரிப்போர்ட்டர்...நிறைய கிரைம் கட்டுரைகள் எழுதுபவர்...ஒரு சூடுகாட்டுக்கு பக்கத்தில் ஒரு பெண்ணின் உடல் கிடக்கின்றது அதுவும் நிர்வாணமாக கொலைசெய்யப்பட்டு இருக்கின்றாள்... அந்த கொலையின் நதி மூலத்தை தேடி செல்வதே படத்தின் கதை.

===========
படத்தின் சுவாரஸ்யங்கள்...

Malin Crépin பத்திரிக்கையார்      Annika Bengtzon பாத்திரத்தில் சிறப்பாக நடித்து  இருக்கின்றார்... Annika Bengtzon கதாபாத்திரம்  பிரபல நாவலாசிரியர் Liza Marklund உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம்...நகரத்தில்    நடக்கும் கொலைகளை துப்பறியும்  பத்திரிக்கை ரிப்போர்ட்ர் கேரக்டர்.       

கொலை அதன் பின்னனியை தேடிப்போவதும் ... அவள் குடும்பத்தை எப்படி சமாளித்து இந்த கொலையின் நதி மூலத்தை எப்படி கண்டுபிடிக்கின்றாள்.. என்பதுதான்  இந்த படத்தின் சவாரஸ்யம்..

சாதாரண கொலை.. அதுவும் ஒரு பார்டான்சர்... ஆனால அதுக்கு பின்னால் ஒரு அரசியல் புள்ளியின் கை என்று கதை சுவாரஸ்யத்தை தருகின்றது.. அதை தேடி போனால் அது ஆயுத வியாபாரம் என்று நீட்டி முழங்கி செல்கின்றது..

படத்தை பற்றி அதிகம் விவரிப்பதை விட பார்த்து ரசித்தல் நலம்.
           
===========
படத்தின் டிரைலர்.

============
படக்குழுவினர் விபரம்.

Genre Drama / Thriller
Director Agneta Fagerström-Olsson
Producer Jenny Gilbertsson
Screenplay Antonia Pyk
Actors Malin Crépin , Björn Kjellman , etc.

Original Music Adam Nordén
Production Yellow Bird Films Ltd
Year In 2012
Playing 89 minutes
Country Sweden




Language Swedish

=============
பைனல் கிக்.
இந்த படம் சஸ்பென்ஸ் திரில்லர்.. பார்க்கவேண்டிய படம். தியேட்டர்களில் ரிலிஸ் ஆகாமல் ஸ்டெயிட்டாக  டிவிடியில் ரிலிஸ் செய்து இருக்கின்றார்கள்.. 
=========

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

4 comments:

  1. பார்க்கவேண்டிய படம் என வகைப்படுத்தப்பட்டு, இவ்வளவு சிறிய/சுவாரசியமில்லாத விமர்சனமா ? என்னாச்சு ? நேரமின்மையா ?

    ReplyDelete
  2. நல்லப் படமாக தெரிகின்றது, பார்த்துவிட வேண்டியது தான் . பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  3. யாத்ரீகன்.... நேரமின்மையும் முக்கிய காரணம்.

    ReplyDelete
  4. உங்கள்து வேவைகளில் hollywood movies இற்கான tamil subtitle வசதியையும் சேர்த்துக்கொண்டால் பிரயோசனமாக இருக்கும்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner