60வயது கடந்த
நடிகர் குணச்சித்திர வேடங்களில் நடித்தால் ஏற்றுக்கொள்ளலாம்...
ஆனால் ஜாக்கி, புருஸ்லி போல மார்ஷல் ஆர்ட் பயண்படுத்தி சண்டை போடுவதை உங்களில் ஜீரணிக்க முடியுமா? உலகம் முழுவதும் ஜீரணிக்க வைத்து இருக்கின்றார்...அயர்லாந்து நடிகர் Liam Neeson
ஆனால் ஜாக்கி, புருஸ்லி போல மார்ஷல் ஆர்ட் பயண்படுத்தி சண்டை போடுவதை உங்களில் ஜீரணிக்க முடியுமா? உலகம் முழுவதும் ஜீரணிக்க வைத்து இருக்கின்றார்...அயர்லாந்து நடிகர் Liam Neeson
2008 இல்
டேக்கன் என்ற படம் ரிலிஸ் ஆனது....சினிமா விமர்சகர்கள் அந்த படத்தை குத்தி கிழித்து சின்னா பின்னமாக்கினார்கள்.....ஆனால்
உலகம் எங்கும் இந்த திரைப்படம் வெளியாகி
பணத்தை கொட்டோ கொட்டு என்று கொட்ட வைத்தது... அப்படி என்ன டேக்கன் படத்தில்
இருக்கின்றது என்ற கேள்வி உங்களுக்கு இயல்பாக எழலாம்.
டேக்கன் முதல்
பாகத்தின் கதை சுருக்கம் இதுதான்.... சிஐஏ ஏஜென்ட் Liam Neeson னின் மகள் பிரெஞ் நாட்டில் சுற்றுலா செல்லும் போது பெண்களை கடத்தி பாலியல் தொழிலில்
ஈடுபடுத்தும் கொடுர கடத்தல் கும்பலினால் கடத்த படுகின்றார்... எந்த துப்பும்
இல்லாத நிலையில் தனது மகளை கடத்தியவர்களை பழிவாங்குவதோடு மட்டும் அல்லாமல் தனது
மகளை மீட்டு வருவதே டேக்கன் முதல் பாகம் திரைப்படத்தின் கதை....
சரி இந்த
படத்தை சினிமா விமர்சகர்கள் கைமா
பண்ணியும் எப்படி படம் வெற்றி பெற்றது.. அதில்தான் நுவாரஸ்யம் இருக்கின்றது....
தன்னை கடத்தல்காரர்கள்
கடத்த போகின்றார்கள் என்று தெரிந்து... கட்டிலுக்கு அடியில் பதுங்கி கொண்டு கடத்த
போகும் சில நிமிடங்களுக்கு முன் அவள்
அப்பாவிடம் பேசுவாள்..அப்போது இன்னும் சில நொடிகளில் உன்னை எப்படியும்
கடத்துவாங்க.. ஆனா பயப்படக்கூடாது என்று நிதானமா பிரக்டிக்கலாக தன் மகளுக்கு
கிளாஸ் எடுப்பார்...
அதே போல
கடத்தல் காரனை போனில் தொடர்பு கொள்ளும் காட்சியில்...... Liam Neeson பேசும் வசனங்கள் சான்சே இல்லை....
நீ யாருன்னு
எனக்கு தெரியாது..
உனக்கு
என்ன வேணும்னு எனக்கு தெரியாது...
ஒருவேளை
என்கிட்ட நீ பணத்தை எதிர்ப்பார்த்தா?
என்கிட்ட அது இல்லை
ஆனா என்கிட்ட
என்ன இருக்குன்னா...? என் வேலை எனக்கு கற்றுக்கொடுத்த தனித்திறமை இருக்கு... அந்த திறமையால உன்னை
கண்டிப்பா கண்டுபிடிக்க முடியும்...
இப்ப என்னோட
பொண்ணை விட்டு விட்டாய் என்றால் இந்த பிரச்சனையை நான் தோண்டி துருவ போவதில்லை...
பட் நீ அவளை விடவில்லை என்றால் .....இந்த உலகில் எந்த இடத்தில நீ இருந்தாலும் உன்னை கண்டு
பிடித்துக்கொல்லுவேன் என்று போனில் சவால் விடுவார்...
அது போல எந்த துப்பும்
இல்லாத கடத்தல் கும்பலை தேடிச்சென்று பழிவாங்கி மகளை மீட்பதை மிகசுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து
இருப்பார்கள்... சரி இரண்டாவது பாகமான இந்தி திரைப்படத்தில என்ன புதுமை வைத்து இருக்கின்றார்கள். என்பதை
இப்போது பார்க்கலாம்..
================
Taken 2-2012/பிரெஞ்/டேக்கன்_ படத்தின் ஒன்லைன்..,.
மனைவி மற்றும்
மகளை கடத்திபோகும் கும்பலிடம் இருந்து அவர்களை எப்படி சிஐஏ எஜென் மிட்கின்றார்
என்பதுதான் படத்தின் ஒன்லைன்
===============
Taken 2-2012/பிரெஞ்/டேக்கன்
2 படத்தின் கதை என்ன?
சண்டைக்கோழி
படத்தில் ராஜ்கிரன் சொல்வது போல எங்கேயோ மிச்சம்
வச்சிட்டு வந்து இருக்கான் என்று விஷாலை பார்த்து சொல்லுவார்... அது போல Liam Neeson முதல் பாகத்தில் கொன்ற கடத்த்தல்காரர்களின்உறவுகள்
இந்த முறை Liam Neesonனின் மனைவி மகளை கடத்தி பழி
தீர்க்க முனைவதாக இரண்டாம் பாகம்
திரைப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கின்றார்கள்.. அது எப்படி என்பதை திரையில் பார்த்து தெரிந்து
கொள்ளுங்கள்...
=============
முதல்
பாகத்தில் மகளை கடத்தினார்கள்...முதல்பாகத்தில் கொலைசெய்ப்பட்ட கடத்தல்கார்ர்களின் அப்பா தன் மகனை கொன்ற லைம்
நீசனை பழிவாங்க,அவனது மனைவி மற்றும் மகளை
கடத்த திட்ட மிட... மகளை சாதூர்யமாக காப்பாற்றி விட்டு தானும்
மனைவியும் கடத்தல்காரர்களிடம் சிக்கி கொள்ள, அவர்களிடம் எப்படி
தப்பித்து தன் குடும்பத்தை லைம் நீசன்
எப்படி காப்பாற்றுகின்றார் என்பதை பர பர திரைக்கதையில் அசத்தி ,இருக்கின்றார்கள்...
போன படத்தை
விட இந்த படத்தின் மகளை உதவிக்கு அழைத்து இருக்கின்றார்கள்.. இஸ்தான்புல்
மேப் வைத்து சர்கிள் வரைந்து .. அவர்களிடம் இருக்கும்
கிரானைட்டை வெடிக்க வைத்து ஓட்டலுக்கு தான் கடத்தி வைக்கப்பட்ட இடத்துக்கும்
எவ்வளவு தூரம் என்பதை பாம் வெடிக்கும் ஒலி
அலைகள் மூலம் அறிவதற்கு தியேட்டரில் செம
கிளாப்ஸ்..
தன் மகளிடம்
இந்த முறை எல்லோரையும் அழித்து விட்டுதான்
மறுவேலை என்று நம்பிகை கொடுக்கும் காட்சிகள்.. அற்புதம்..
கிளைமாக்சில்
வில்லனிடம் பேசும் காட்சியில் இதுக்கு மேல என்னை துரத்த மாட்டேன்னு சொன்னா? இப்ப
கூட உன்னை கொல்லாம விட்டு விடுறேன்... என்றதும் வில்லன் ஏன் என்று கேட்க..? என்னால தொடர்ந்த ஓடிக்கிட்டு இருக்க முடியலை என்று சொல்லும் அதுக்கு அடுத்த
காட்சியும் அருமை....
இஸ்தான்புல் நகரத்தை
டாப் ஆங்கிலிலும் சரி....டிராவலிங் மற்றும் சேசிங் காட்சிகளிலும் சரி...ஒரு
லைவ்லிநஸ் டச்சோடு ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார்.... Romain Lacourbas அவருக்கு ஒரு ஸ்பெஷல் கிரீட்டிங்ஸ்...
==========
படத்தின்
டிரைலர்...
================
படக்குழுவினர் விபரம்
Directed by Olivier Megaton
Produced by Luc Besson
Written by
Luc Besson
Robert Mark Kamen
Starring
Liam Neeson
Maggie Grace
Famke Janssen
Rade Šerbedžija
Music by Nathaniel Méchaly
Cinematography Romain Lacourbas
Editing by Camille Delamarre
Vincent Tabaillon
Studio
EuropaCorp
Grive Productions
Canal+
M6 Films
Ciné+
Distributed by 20th Century Fox Europacorp Distribution
Release date(s)
7 September 2012 (Deauville Film Festival)
3 October 2012 (France)
Running time 91 minutes
Country France
Language English
Budget $45 million
Box office $139,236,724
=============
பைனல்கிக்.
Olivier Megaton இரண்டாம்பாகத்தை இயக்கி இருக்கின்றார்... கிரானைட்டை ஜஸ்ட லைக்தட்டாக
பூண்டு வெடி போல படத்தில்உபயோகபடுத்தி இருப்பது கண்டிக்க தக்கது.. கண்ணை
கட்டியதும் கவுண்ட் செய்து கொண்டு போகும்
வித்தையை பல படங்களில் பார்த்தாகி விட்டது என்றாலும் வயலின் வாசிக்கும் ஒரு கிழம் அதே இடத்தில் வயலின் வாசித்துக்கொண்டு இருப்பது போல காட்டி
இருப்பது ஓவர்... என்னதான் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் பர பர ஆக்ஷன்
காட்சிகளுக்காக இந்த படத்தை பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்டில் வைக்கின்றேன்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
நேற்றே இந்த பதிவை நீங்கள் அப்லோடி,பின்னர் டிலீட் செய்ததின் மர்மம் என்ன ஜாக்கி?
ReplyDeleteஒரு மர்மமும் இல்லை.. விஷ்வா... நேற்று ஒரு படத்தை பத்தி சொல்லியாச்சி.. இது இன்னைக்கு போ1ட் செய்ய வேண்டிய பதிவு.... பட் நேத்து ஒரு ஞாபக்த்துல போஸ்ட் பட்டன்ல கை பட்டு போஸ்ட் ஆயிடுச்சி... வேற ஒன்றும் இல்லை....
ReplyDeletenamma thalaivar vijakantth itha than lavaddi viruthakiri aakkunara thalaivare?
ReplyDeletenamma thalaivar vijakantth itha than lavaddi viruthakiri aakkunara thalaivare?
ReplyDelete