ஒரு படத்தோட போஸ்டர் டிசைன்
ஒன்னு போதும் அந்த படத்தை பார்க்கலாமா?
அல்லது வேண்டாமா என்று முடிவு செய்ய.. சில படத்தின்
போஸ்டர் டிசைன் ரொம்ப நல்லா இருந்து, படம் படு மொக்கையாக பார்த்து விட்டு பல்பு வாங்கியவைகள்
ஏராளம்.
பட் பீட்சா படத்தின் போஸ்டர் டிசைன் படத்தினை பார்க்க ஒரு துண்டுகோலாக அமைந்தது என்று
சொல்லுவேன்…
ஒரு வாரத்துக்கு முன் இந்த
படத்தினை பற்றி நிறைய பேர் சிலாகித்துக்கொண்டு இருக்க.,.. கார்திக்சுப்ராஜ் இயக்கிய
படங்களை யூடுபில் தேடி பார்க்க துவஙகினேன்…
அவர் குறும்படங்களை இப்போதுதான் முதன் முறையாக பார்க்க ஆரம்பித்தேன்…எனக்கு
சூட்கேஸ்ஸ்டோரி மற்றும் பெட்டிகேஸ்
குறும்படங்களை நான் ரொம்பவே ரசித்தேன்.. முக்கியமாக
பெட்டிகேஸ்... சினிமாவுக்கான எல்லா தகுதியும் அந்த படத்தில் இருந்தது...
அதனாலே இவர் இயக்கிய பீட்சா படத்தினை பார்க்க ஆவலாய் இருந்தேன்...
படம் நல்லா
இருக்கின்றது என்று ஆள் ஆளுக்கு உசுப்பி
விட்டார்கள்... சரி படத்தை பார்த்தே
தீருவது என்ற முடிவோடு படத்தையும் பார்த்து விட்டேன்... மற்றவர்கள் சொன்னது
போல படம் பிரமாதமாக இருந்ததா என்பதை சற்று
விரிவாக பார்ப்போம்...
============
பீட்சா
படத்தின் ஒன்லைன்..
பீட்சா டெலிவரி செய்ய போகும் இளைஞனின் வாகனம் விபத்தில் சிக்குகின்றது...
அதில் இருந்து அவனது வாழ்க்கை எப்படி
மாறுகின்றது என்பது படத்தோட ஒன்லைன்...
==========
பீட்சாபடத்தின் கதை என்ன?
விஜய்
சேதுபதி(மைக்கேல் ) ரம்யா நம்பீசன்(அனு) இரண்டு பேரும் அனாதை இல்லத்தில் சின்ன
வயசுல இருந்தே ஒன்னா வளர்ந்து காதலிக்கும்
கப்பிள்ஸ்....விஜய் சேதுபதி பீட்சா கடையில டெலிவரி பாயா சொற்ப்ப
சம்பளத்தில் வேலை பார்த்து தன் காதலியோடு கெட்டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து
வருகின்றார்....ஒரு சின்ன சிக்கலில் ரம்யாவை திடிர் திருமணம் செஞ்சுக்கிறார்...பீட்சா டெலிவரி
செய்ய போகும் போது அவரோட பைக் விபத்தில் சிக்குது... அவரோட வாழ்க்கை மாறுது எப்படி ?என்பதை வெண்திரையில் பாருங்கள்..
============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
விஜய் சேதுபதி
காட்டில் அடைமழை என்று சொல்லலாம்..பீட்சா
படத்துக்கே எல்லாரும் இப்படி புகழ்ந்து கொண்டு இருக்கையில் அடுத்து அவர் நடித்து
வரப்போகும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்படம் அவருக்கு இன்னோரு மணிமகுடமாக அந்த படம்
அமையப்போகின்றது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள்... அந்த படம் எல்லோருடைய வயிற்றையும்
பதம் பார்க்க போகின்றது...
லோ படஜெட்
படத்துக்கு ரொம்ப ஆப்ட்டா பொருந்துகின்றார் என்பதை விட கதைக்கு பொருத்தமான படங்களில் விஜய்சேதுபதி
தேர்ந்து எடுத்து நடிக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்... இனி சுந்தராபாண்டியன்
போன் வில்லன் கெட்டப்.. கொஞ்ச நாளைக்கு வேண்டாம் சேதுபதி....ஹீரோவா ஒரு ரவுண்டூ
அடிச்சி உங்க சிம்மாசனத்தை உறுதி செஞ்சிகிட்டு அப்புறம் இது போன்ற படங்களில் வில்லத்தனம் காட்டலாம்...
மைக்கேல்
கேரக்டரில் மிக ஆப்ட்டாக பொருந்துகின்றார்.... ஒரு பங்களா, அவர் ஒருசின்ன டார்ச் லைட்,ஸ்டேடிகேமில்
கேமரா.... சும்மா சொல்லக்கூடாது....வயித்தை கலக்கற அளவுக்கு பயப்பட வச்சி இருக்காங்க....
ஒரே ஒரு
டார்ச் லைட்... வேற சோர்ஸ் லைட் கிடையாது...ஆனா அப்ப அப்ப ரொம்ப இயல்பா துருத்திக்கிட்டு தெரியாதது போல
டாச்லைட்டை பக்கத்தில் இருக்கும் வெள்ளை சுவற்றில் அந்த வெளிச்சத்தை பாய்ச்சி
பவுன்ஸ் லைட்டில் அவர் பயப்படும் உடல் மொழி அழகு...விஜய் சேதுபதிக்கும்,.கேமராமேனுக்கு ஒரு சபாஷ்...
ரம்யா நம்பீசன்....
குள்ளநரிக்கூட்டம் படத்துல அறிமுகமாகி இந்த படத்துல கலக்கிட்டாங்க...
கேரள தேங்காய்
எண்ணெய் கொடுத்த வளமை கன்னத்தில் இருக்கும் சின்ன அழகான முகப்பருவில் இருந்து,
அவர் போட்டு இருக்கும் பனியனை டைட்டாக மாற்றும் அளவுக்கு கழுத்துக்கு கீழே திரட்சி பொங்கி வழிந்து
இருக்கின்றது...
அதனாலே மிக நெருக்காமாய் நடித்து இருக்கும்.... விஜய் சேதுபதி மேல்
பொறாமை பொத்துக்கொண்டு வருகின்றது..
பீட்சாகடையில்
வேலை பார்க்கும் பில்லிங்மேன் மற்றும் சமையல்காரர்கள் கேரக்டர்கள் வெகு
இயல்பாக செய்து இருக்கின்றார்கள்....
பொதுவாக ஷாட் பிலிம்மேக்கர்ஸ் செலவே இல்லாம ஷாட் வைப்பாங்க... செலவே அதிகம் இல்லாதது
போலத்தான் சீன் வைப்பாங்க... இயக்குனர்
கார்த்தி அதை சிறப்பா செய்து இருக்கின்றார்.,..
அதே போல
ஆடுகளம் நரேன் படத்துக்கு படம் அவர் நடிப்பில் மெருகு ஏறிக்கொண்டு இருக்கின்றது..
மிக இயல்பாக நடிக்கின்றார்.. அவரும் அவருடைய குரல் உடல்மொழி அசத்தல் முக்கியமாக
சுந்தரபாண்டியன் படத்துல அவர் கேரக்டர்.. சான்சே இல்லை.. இந்த படத்துலேயும் அசத்தி
இருக்கின்றார்.
இந்த படத்தை ரெட்
ஒன் எல்எக்ஸ் கேமராவுல ஷட் பண்ணி இருக்காங்க...ஒரே ஒரு பங்களா ஹீரோ ஒரு டார்ச்
லைட் என்று அந்த பங்களா ஷாட் அத்தனையும்
அருமை... அதே போல ரம்யா மற்றும் விஜய்
சேதுபதி சாங் மாண்டேஜ் ரொம்ப அற்புதமா இருக்கு...
இசை
சொதப்பவில்லை.... எடிட்டிங் நன்றாக இருக்கின்றது.... முக்கியமா நைட்டு எபக்ட்
பங்களா காட்சிகள்...
நான் லீனியர்
திரைக்கதையில் விஜய் சேதுபதி, ரம்யா அனாதை போர்ஷனுக்கு ஒரு பிளாஷ் பேக்.. ஒரு
பாதர் அல்லது சிஸ்டர் அட்வைஸ் என்று நீட்டி முழக்கி காட்சிகள் அமைத்து கிளிஷே
காட்சிகளாக மாற்றியதற்கு ஒரு சல்யூட்.
திருட்டுக்கான
காரணத்தை கூட போகின்ற போக்கில் டயலாக்கில் சொன்ன இடம் அருமை.. அதாவது... எங்க
முதலாளி ரொம்ப நல்லவர்... நாம கூட நல்லவங்கதான்னு சொல்லற சீன்... அற்புதம்.
டயலாக்கு
நன்றாக இருந்தது. முக்கியமா நான் என்னைக்காவது கேர்லஸ் ஆ இருந்து இருக்கேனா? என்று
கத்திக்கொண்டு இருக்க நான் பிரக்னன்ட் என்று சொல்லும் காட்சியில் தியேட்டரில்
சிரிப்பலை..
எந்த
விமர்சனத்தையும் படிக்கலை....ஓரளவுக்கு
யூகிக்க நினைச்சேன்... பட் முடியலை...சின்ன கெஸ் மட்டும் கரெக்ட்... நான் ரம்யாவோட டிராமான்னு நினைச்சேன்..ஆனா அதுல இருக்கும்
சின்ன டுவிஸ்ட் சான்சே இல்லை... படம் பார்க்க போறவங்க தயவு செய்து கதையை விமர்சனத்தை படிச்சிட்டு போகாதிங்க..
===================
படத்தோட
டிரைலர்..
=============
படக்குழுவினர்
விபரம்.
Directed by Karthik Subbaraj
Produced by C. V. Kumar
Screenplay by Karthik Subbaraj
Story by Karthik Subbaraj
Starring Vijay Sethupathi
Remya Nambeesan
Music by Santhosh Narayanan
Cinematography Gopi Amarnath
Editing by Leo John Paul
Studio Thirukumaran Entertainment
Release date(s) October 19th, 2012
Country India
Language Tamil
================
தியேட்டர்
டிஸ்கி..
ஏவிஎம் ராஜேஸ்வரியில் ரொம்ப நாளைக்கு பிறகு இரண்டாம் ஆட்டம்..
படம்
தொடங்கும் முன் நேஷனல் ஆந்தம் போட்டு எழுந்து
நிற்க்க வைக்கின்றார்கள்.. சாயம் போன ...தேசியகொடி பறந்துகொண்டே இருக்கின்றது.... பச்சைக்கு
பதில் கருநீலமாக தெரிகின்றது.. பெங்களுர் தியேட்டர்களில்ல் பரத்பாலா எடுத்த
தேசியகீதம் போடுகின்றார்கள்... பளிச்சென்று அருமையாக இருக்கின்றது...ஏவிஎம் நிர்வாகம் அவணசெய்யவேண்டும்.
மது குடித்தல்
உடல்நலத்துக்கு கேடு என்று சொல்லும் போது இருந்திட்டு போவட்டும் என்று பின்னால்
சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.
பேய் படம்
என்பதால் பயம் இருக்கும் என்பதால் பயத்தை விரட்ட ஆ உ என்று கத்தி தங்கள் பயத்தை போக்க கத்திக்கொண்டு
இருந்தார்கள்.. என் பின் சீட்டுகாரர்கள்...
குழந்தை அழும்
போது அதன் அருகில் போய் முகத்தை தொடும் போது அந்த அப்பா கேரக்டர் வாழ் என்று கத்தும் காட்சியில் நானும் பயந்து
தொலைத்தேன்...
==============
பைனல்கிக்..
என்னதான்
பொண்டாட்டி காணோம்னு கம்ளெயின்ட் கொடுத்தாலும் வெறும் கம்ளெயின்ட் லட்டர் மட்டும்
எந்த போலிஸ் ஏத்துக்கும், கண்டிப்பா போட்டோ கேட்பாங்க.
. ரம்யா தேடும் போது அவ
போட்டோவை காட்டுன்னு நெருங்கிய நண்பர்க்கூடவா போட்டோவை கேட்டு வாங்கி பார்த்துட்டு
தேட மாட்டாங்க? ஆனா படம் பார்க்கும் போது
இந்த கேள்விகள் ஏழாதவாறு திரைக்கதையை பரபரப்பையும் கையாண்டு இருக்கின்றார்..
கார்த்திக்... வாழ்த்துகள் கார்த்திக்..
இந்த படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு
விட்டது... காரணம்..13 ஆம் நம்பர் வீடு மற்றும் மைடியர் லிசா போன்ற
மொக்கை படங்களுக்கு பிறகு நல்ல திரில்லர், கிரைம் ஹாரர் ஜானரில் எந்த படமும் இவ்வளவு நீட்டாக வரவில்லை... இந்த படம் அந்த குறையை தீர்த்து இருக்கின்றது....பேய் படம்
என்றால் அதில் கவர்சிக்கு பஞ்சம் இருக்காது...
அதை அறவே தொடாமல் தன் திரைக்கதை மீது நம்மபிக்கை வைத்து இயக்கி இருக்கும் கார்த்திக்குக்கு ஒரு ரோஜா
பொக்கே பார்சல்...தமிழ்சினிமாவுக்கு ஒரு நாளைய நல்ல இயக்குனர் கிடைத்து இருக்கின்றார்....... குழந்தை குட்டிகளோடு இந்த ஹாரர் படத்தை பார்த்து வைக்கலாம்...இந்த படம் பார்த்தே தீரவேண்டிய படம்....
=====================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
பட விமர்சனத்தை விட ரம்யா விமர்சனம் தூக்கல்லாக இருக்கே :)
ReplyDeleteGood review!
ReplyDeleteWish u a happy married life!
Senthil, Doha
படத்த பார்த்துர வேண்டியதுதான்
ReplyDeleteகேரள தேங்காய் எண்ணெய் கொடுத்த வளமை கன்னத்தில் இருக்கும் சின்ன அழகான முகப்பருவில் இருந்து, அவர் போட்டு இருக்கும் பனியனை டைட்டாக மாற்றும் அளவுக்கு கழுத்துக்கு கீழே திரட்சி பொங்கி வழிந்து இருக்கின்றது...எப்பிடி சார் உங்களாள மட்டும் முடியுது...
ReplyDeletepadatha partha athana perayum maakan pannitanunga
ReplyDeletepadam partha atthunai nabargalayum maakkan pannitanga sir
ReplyDelete"குழந்தை அழும் போது அதன் அருகில் போய் முகத்தை தொடும் போது அந்த அப்பா கேரக்டர் வாழ் என்று கத்தும் காட்சியில் நானும் பயந்து தொலைத்தேன்..." Me too.
ReplyDelete" பட் பீட்சா படத்தின் போஸ்டர் டிசைன் படத்தினை பார்க்க ஒரு துண்டுகோலாக அமைந்தது என்று சொல்லுவேன்…" நானும் படம் பார்க்கும் முன்னரே போஸ்டர் எனக்குள் ஆவலை தூண்டியது.
"குழந்தை அழும் போது அதன் அருகில் போய் முகத்தை தொடும் போது அந்த அப்பா கேரக்டர் வாழ் என்று கத்தும் காட்சியில் நானும் பயந்து தொலைத்தேன்..." Me too.
ReplyDelete" பட் பீட்சா படத்தின் போஸ்டர் டிசைன் படத்தினை பார்க்க ஒரு துண்டுகோலாக அமைந்தது என்று சொல்லுவேன்…" நானும் படம் பார்க்கும் முன்னரே போஸ்டர் எனக்குள் ஆவலை தூண்டியது.
நானும் படம் பார்க்கும் முன்னரே போஸ்டர் எனக்குள் ஆவலை தூண்டியது.
ReplyDeleteநானும் படம் பார்க்கும் முன்னரே போஸ்டர் எனக்குள் ஆவலை தூண்டியது.
ReplyDeleteகெட் டுகெதெர் இல்ல பா அது லிவிங்க் டுகெதெர்
ReplyDeleteungaluku ellam vimarsanam eludha solli yaaru ya idea kuduthadhu.. :p
ReplyDelete