அன்புள்ள அம்மாவுக்கு,
நீண்ட நாட்கள் ஆகி விட்டன உனக்கு கடிதம் எழுதி…. நிறைய வேலைப்பளு…தினமும் காலையிலும்
மாலையிலும் யாழினியோடு நேரம் செலவிடுவதற்கே
நேரம் சரியாக இருக்கின்றது…
போனவாரம் புதன் கிழமை (25/09/2012)
உன் திதிக்கு ஊருக்கு வந்து
இருந்தேன்….. பக்கத்து வீட்டுக்காரர்கள் நல்ல
எண்ணத்தால் நமக்கு நிழல் கொடுத்த மாமரத்தை பட்டு போக செய்தார்கள்….
ரொம்பவும் காய்ந்து போய்
விட்டதால்..... நம் வீட்டில் அதை அடியோடு
வெட்டியும் விட்டார்கள்…
கூத்தப்பாக்கம்
மெயின் ரோட்டில் இருந்த முருகர் கோவிலை..... ஜீவா இருந்த
கோயில் மண்ணில் புலம் பெயர வைத்து விட்டார்கள்… இன்னும் சில மாதங்களில் முருகர் தன் புதிய இடத்தில் குடியேறுவார் என்று
கிராமத்து வாசிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்…
நான் சென்னையில் இருப்பதால் பெரியதாய் கும்பாபிஷேகத்துக்கு பொருளுதவி செய்ய சொல்லி இருக்கின்றார்கள்... கூத்தப்பாக்கம் முருகனுக்கு என் கஷ்டமும் என் கடனும் தெரியும்... இருந்தாலும் ஊர்க்காரங்களை வச்சி இப்படி ஒரு பிட்டை என் கிட்ட போட்டு இருக்கான்... அவனை என்ன செய்யலாம்...? ஊருக்கு போய் புதுசா கட்டற கோயிலை கூட கிட்டக்க போய் பார்க்கலை... பார்த்தா 20 மூட்டை சிமெண்ட் வாங்கி கொடு, ஜாக்கின்னு சொன்னா நான் எங்க போறது...? இன்னும் நிறைய கொடு... நான் நிறைய செய்யறேன்... முருகா...
நம்ம ஊரில்.....தானே புயல் சுவடுகள் முழுவதும் வியாபித்து
இருந்த கடலூர் தென்மரங்கள்.. தற்போதுதான் பழய நிலைக்கு வந்து இருக்கின்றன.
முன்னை போல அப்பா எதுவும் நக்கலாக பேசுவது
இல்லை… அல்லது பேசியது போதும்
என்று முடிவு எடுத்து
இருக்கலாம்....அதுவும் டிவி, பத்திரிக்கை போன்றவற்றில் என் பெயர் மற்றும் எனது போட்டோ
வருவதில் இருந்துதான் இந்த மாற்றம் என்பது எனக்கு
நன்றாக தெரியும்.... இனிமே அப்படியே பேசினாலும் நான் எதிர்த்து பேசபோவதில்லை.
யாழினி அவரிடம் வடமலே என்று அவர் பெயர் சொல்லி
அழைத்த போது அப்பா முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி…
வழக்கம் போல....சென்னைக்கு அப்பாவை வரச்சொல்லி அழைத்தேன்… நான் வர மாட்டேன் என்னால் பிள்ளைகளுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது
என்று பழைய பல்லவியை பாட ஆரம்பித்து விட்டார்…
நம்ம கடலூர் நிறையவே
மாறி இருக்கின்றது.. மக்கள் பரபரப்பாக இருக்கின்றார்கள்... கூத்தப்பாக்கத்தில் வயலும், பெரியவாய்க்ககாலும்
ஓடையாக போய் விட்டன…. அய்யனார் கோவிலை சுற்றி வீடுகள் வந்து விட்டன..அய்யனார் ஊருக்கு எல்லையில் தனியாக இருக்கின்றோமோ என்று அவர் பயம் கொள்ள தேவையில்லை...
கரெண்ட் ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை இரண்டு மணி நேரம் கட் பண்ணி,மொத்தம் 12
மணிநேரம் ஈவு இரக்கம் இல்லாமல் கட் பண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்….
சென்னையில் ஒருமணி நேரம் தான்…. அதுக்கே சென்னைவாசிகள் ரொம்ப சலித்துக்கொள்கின்றார்கள்….அனால் இரண்டு மணி நேரம்
கரெண்ட் ,இரண்டு மணி நேரம் இல்லை என்பதாகத்தான் கடலூர் வாசிகளின் வாழ்க்கை உள்ளது… இரவில் குழந்தையை வைத்துக்கொண்டு கடலூர்
வாசிகள் படும் அவஸ்த்தை சொல்லி மாளாது
என்று எல்லோரும் சொல்லி சொல்லி வருத்தப்படுகின்றார்கள்…
சென்னையில் ஒருமணிநேரம்தான் கரெண்ட் கட்
என்றேன்.... என்னை வித்தியாசமாக வேற்று
கிரகவாசி போல பார்த்தார்கள்... சென்னையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று சின்ன ஷாட் கட் கனவில் எல்லோரும் மிதந்தார்கள்..
என்னை பொறுத்தவரை
சென்னையிலும் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கரெண்ட் கட் பண்ணவேண்டும். அதுதான் சரி… எல்லோரும் சரி சமமாக இந்த விஷயத்தில் டிரீட்
பண்ண வேண்டும்… எல்லோரும்தான் வரி கட்டுகின்றார்கள்..
எல்லோரும் இன்னாட்டு மன்னர்கள்தான்....சென்னையில இருக்கறவன் நெய்யில பொறிச்சிவன்…. தென் மாவட்டத்துல இருக்கறவன்
எல்லாம் பீ யில பொறிச்சவன்களா? என்று நீ உயிரோடு இருந்து
இருந்தால் இப்படி சொல்லி சொல்லி பொறிந்து தள்ளி இருந்து இருப்பாய்....
இருக்கப்பட்டவன் அத்தனை
பேர் வீட்டுலயும் இன்வர்ட்ர் வாங்கிட்டாங்க… இல்லாத
பட்டவனுங்க கடனை உடனை வாங்கியாவது இன்வர்டர் வாங்கி போட்டு விட்டார்கள்.. பிள்ளைங்களை விட, அதுங்க தூக்கத்தை விட அப்படி என்ன பெரிய மயிறு பணம் என்று புலம்பி தீர்த்து விட்டார்கள்… எல்லாத்தை விட கொடுமை.. இன்வர்டர் சார்ஜ் ஆகறதுக்காகவாவது கரெண்ட் கொடுங்கய்யா என்று கெஞ்சும் அளவுக்கு வந்து விட்டார்கள்..
நம்ம
சித்ராக்கா பொண்ணு அஸ்வினி
லவ் பிரச்சனையில தூக்கு போட்டு
செத்துடுச்சி...உனக்கு வயிறு எரியும்...... என்ன பண்ணறது...?சித்ராக்கா உழைப்பு எல்லாம்
விழலுக்கு எறச்ச நீரா போயிடுச்சி....
அன்னைக்கு புல்லா நான் மூட் ஆப்.... அப்பாவுக்கு எல்லா பணிவிடையும்
செய்யும்....ஊருக்கு போனா சோப்பு ,சீக்கா,
எண்ணென்னு எது அவசரத்துக்கு
கேட்டாலும், ஜில்லாகத்திரியா ஓடிப்போயி
வாங்கி கொண்டு வரும்.... உயிர் என்ன அவ்வளவு
இலப்பமாவா போயிடுச்சி...
அப்பாதான் அஸ்பெட்டஸ்
ஷீட்ல இருந்து கஷ்டப்படறார்… மாமரம் வேற இப்ப
இல்லை… எப்படியும் இந்த மழை போய் அடுத்த மழைக்குள்ள எப்படியாவது
அப்பாவுக்கு- ஒரு ஏர்கூலர் வாங்கி கொடுத்துடனும்னு நினைச்சிகிட்டு இருக்கேன்….
பார்ப்போம்.
சுரங்க
பாதை போடறேன்னு தோண்டி வச்ச குழி
அப்படியேதான் இருக்கு.... எந்த மாற்றமும் இல்லை.. வழக்கமா திருவந்திபுரம் பெருமாள்
கோவிலுக்கும்... சிலவர் பீச்சுக்கும் போவேன்....இந்த முறை போக முடியலை...
என் சின்ன வயசுல.....நீயும் நானும் அதிக படம் பார்த்த முத்தையா தியேட்டர் இடிச்சி ,அதுல சென்னை போத்திஸ் துணிக்கடை வருதுன்னு பேசிக்கறாங்க…
அதை எப்படி போத்தீசுக்கு விக்கலாம்... பஸ் ஸ்டான்ட் விரிவாக்கத்துக்கு வேனும்னு ஏதோ
பிரச்சனை ஓடறதா பேசிக்கறாங்க...
கண்டக்காடு சித்தி வீட்டுக்கு போனேன்...
உப்பனாத்துக்கு மத்தியிலே பெரிய பாலம் எல்லாம் கட்டி கலக்கிட்டாங்க...கடலூரில்
இன்னும் மாறத கிராமங்களில் கண்டக்காடும் ஒன்னு...
நடந்து போயிக்கிட்டு இருக்கும் போது......சத்துணவுல வேலை பார்த்த சங்கு அம்மா என்னை
பார்த்தாங்க....ரொம்ப விசாரிச்சாங்க.. என்னமோ
அவுங்களை பார்த்ததும் உன் ஞாபகம்தான் எனக்கு வந்துச்சி....
சின்ன தங்கச்சிக்குதான் மாப்ளையும், நல்ல வேலையும்
இன்னும் அமையல... அதுக்கு ஏதாவது பார்த்து சீக்கரம் வழி பண்ணு...
தங்கச்சி பசங்க யாழினின்னு வீடே மழலை பட்டாளமா
மாறிப்போயிருந்துச்சி.. உனக்கு பேசிக்கா குழந்தைங்கன்னா உயிரு....பேரப்பிள்ளைங்க கூட பார்க்க வேணாம்... அட்லிஸ்ட் நீ பெத்து வளர்த்த 5
புள்ளைங்களில் ஒரு கல்யாணத்தையாவது பார்த்துட்டு போய் இருக்கலாம்.
உன் போட்டோவுக்கு தீபாராதனை காட்டியதும் உன் யாழினி பேத்தி உன் போட்டோவுக்கு நேரா விழுந்து கும்பிட்டா... உன் பேரை அழகா
சொன்னா...ஒரு வாரம் ஆயிடுச்சி... என்னவோ உன்னை
நினைச்சிக்கிட்டேன்...
நாலு பொம்பளை புள்ளைங்களை பெத்துட்டமே என்ற
கவலையை விட.. நான் எப்படி உருப்ட்டு
தொலைப்பேன் என்று எனக்காக நீ
வருத்தப்பட்டு பீல் பண்ணிய நாட்கள்தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது... அதுல நான் ரொம்ப கோவக்காரன் வேற.... உன் ஆசி எனக்கு இருக்கும் வரைக்கும் உன்
புள்ளை என்னைக்கு நான் தோக்கமாட்டேன்....
முந்தாநாள் அம்மாவின் கைபேசின்னு ஒரு படத்தோட
பிரஸ்மீட்டுக்கு சந்தியம் தியேட்டர் போனேன்...
நடிகை சுகாசினி அவிங்க அம்மாவோட மேடை ஏறினாங்க.... அந்த அம்மாவுக்கு தள்ளாடும் வயசு..
ஆனா முகத்துல ஒரு பெரிய பெருமை... அதுக்கு எல்லாம் பெரிய கொடுப்பனை வேண்டும் போல.....சுகாசினி கொடுத்து
வச்சவங்கதான்... அதெல்லாம் பார்க்கவும்.....என்னவோ உன் ஞாபகம் அதிகம் வந்துடுச்சி...கடைசி வரை எந்த
சந்தோஷத்தையும் அனுபவிக்காம எங்களை விட்டு விட்டு போயிட்டியேன்று நினைக்கும்
போது மனது ரொம்ப கஷ்டமா இருக்கு...
அம்மா
உன்னை ரொம்பவே மிஸ் பண்ணறேன்...ஐ லவ் யூ சோ மச்.......
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ஜாக்கி சார், எனக்கு உங்கள் அம்மா இழந்த துக்கம் அப்படியே உணர முடிகிறது
ReplyDeleteஎன் தந்தையை சிறு வயதில் இழந்ததால்.
நமது சின்ன சின்ன விஷயங்களுக்கும் பிரமித்து ஊக்கப்படுத்திய தந்தை
இன்று தன் பேரப் பிள்ளைகளின் சாதனைகளையும் அவர்கள் குழந்தைகளின் சில்மிஷங்களையும்
எவ்வளவு ரசித்து இருப்பார் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அந்த நினைவுகளை தூண்டி விட்டது உங்கள் இந்த பதிவு
அம்மா.....விவரிக்க வார்த்தை இல்லை..
ReplyDeleteபடிக்கும்போது கண்களில் கண்ணீர் , வேறு என்ன சொல்ல !
ReplyDeleteமனசை என்னவோ பண்ணுது சார் இந்தக் கடுதாசி :(
ReplyDeleteமுருகா, எல்லாரையும் நல்லபடி பாத்துக்கப்பா!
Heart wrenching writing. We value a relationship only after we lose them. In that context, father and mother occupy a prominent place. Let's not regret that we could have done this or done that etc. to our parents, after they pass away. When they are alive, let us strive to make them happy in whatever way possible, at at least, not hurt their feelings. The parents' sacrifice for upbringing their children with abundant love and care can never be measured.
ReplyDeleteஉறவுகள் ஒரு தொடர்கதை
ReplyDeleteஉங்கள் அம்மா உங்கள் மகளாய் இருக்கலாம்
அருமையா பதிவுகள் அண்ணே
வெளிப்படையான கடிதம் ஜாக்கி சார்
ReplyDeleteஇதர்க்கு முன்பு நீங்க எழுதிய கடிதங்க்அலையும் படித்து இருக்கிரேன்
உங்க்அ எழுத்துக்கு எதோ பவர் இருக்கு ..
உங்கள் அம்மா இழந்த துக்கம் உணர முடிகிறது
பகிர்வுக்கு நன்றி!
இப்படியாக மனதில் உள்ளதை கொட்டி எழுதுவதனால் நிச்சயம் ஆறுதல் கிடைக்குமெனில் நீங்கள் தொடர்ந்து எவ்வளவோ எழுதலாம்.
ReplyDeleteno words
ReplyDelete//கடைசி வரை எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காம எங்களை விட்டு விட்டு போயிட்டியேன்று நினைக்கும் போது மனது ரொம்ப கஷ்டமா இருக்கு...//
ReplyDeleteகண்ணீரை சமர்ப்பிபதைத் தவிர எனக்கும் ஒன்றும் தெரியவில்லை.என் அம்மாவைப் பற்றின நினைவுகள் அத்தனையும் இந்த வரிகளில் எனக்கு அழுகையை மட்டுமே தருகிறது.
excellent great No words to answer
ReplyDeleteDear Jackie,
ReplyDeleteI am Regualar reader of your blog.
indha oru postukkaga ungalai kattipudichi ala asaipadaren.Even i miss my mom very much. you reminded me. i am crying.
Kumar
Bangalore
மரித்த என் அம்மாவின் நினைவுகளோடு ..ஒவ்வொரு வரியையும் வாசிக்கும்போது அழுதுகொண்டே வாசித்தேன் சகோ ......
ReplyDeleteHEART WRENCHING POST . . .
ReplyDeleteKANNIL NEERAI VARA VAZAITHU VITEERGAL . ..
KANGALIL NEERODU . . .
ASHRAF ALI.S