நான் எப்போதுமே சொல்லுவேன் ஒரு நல்ல திரைப்படம் என்பது படம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் அந்த படம் பற்றிய தாக்கம் தமிழகத்தின் மின் வெட்டினால் ஏற்ப்பட்ட, அக்குள் வியற்வை கசகசப்பையும் கப்பையும் மீறி அந்த படம் உங்கள் மனதில் அசைப்போட்டுக்கொண்டு இருந்தால் அந்த படம் நல்லபடம் அல்லது பீல் குட் மூவி என்பது என் சித்தாந்தம்.
சென்னையில் நடந்த ஒன்பதாவது சர்வதேச உலகப்படவிழாவில் சத்தியத்தில் திரையிடப்பட்ட இந்த படத்தை பார்த்து விட்டு அடுத்த படத்தை பார்க்காமல் இந்த படத்தை பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தேன்..
தேன் மிட்டாய் சாப்பிடுவது என்றால் லபக் என்று உள்ளே தள்ளாமல் மெல்ல அதனை சின்னதாக கடித்து தேனை மட்டும் லைட்டாக உறிஞ்சிவிட்டு பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கொறிப்பதற்க்கு காரணம் என்ன?? அந்த உறியும் (சக்கரை பாகு)தேன் ருசி தொண்டையில் சில நொடிகள் இருக்க வேண்டும் என்று நினைப்போம் அல்லவா? அது போல இந்த படத்தின் சந்தோஷத்தை அடுத்து பார்க்கப்போகும் படம் கெடுத்து விடக்கூடாது என்பதுதான் மிக முக்கியகாரணம்...
அப்படி என்ன பெரிய மயிறு படம் நாங்க பார்க்காத படம் என்று சிலர் நினைக்கலாம்... அப்படி நினைப்பவர்கள் இந்த படத்தை பார்த்து விட்டு பேசலாம்...படம் முடிந்த பிறகு ஒரு சந்தோஷம் நிச்சயம் உங்கள் மனதில் ஒட்டி இருக்கும்.
=======================
Harisma (2010) படத்தின் ஒன்லைன் என்ன?
எதிர்எதிர் துருவங்கள் உள்ளஆண் பெண் இரண்டு பேர் சந்தித்தால் என்னவாகும்?- என்பதுதான் இந்த கரீஸ் படத்தின் கதை
===============
Harisma (2010) படத்தின் கதை என்ன??
30 வயதில் தன் எதிர்கால வாழ்க்கை என்ன என்று தெரியாமல் காலத்தை தள்ளும் இஸ்மினி, ஒரு பணக்கார வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலை...திருமணமான ஒருவனுடன் உறவு வைத்துக்கொண்டு காலம் தள்ளுகின்றாள்..இன்றைய வாழ்க்கை , இந்த நிமிடம் மட்டும் நிச்சயம் என்று வாழும் ஹரிஸ் எதை பத்தியும் கவலை கொள்ளாதவன்... வாழ்க்கை அனுபவத்து வாழ்பவன்... அவன் ஒரு பள்ளி கூடத்தில் வேன் டிரைவர்... எந்த பள்ளிக்கூடத்தில் வேன் டிரைவர்..இஸ்மினி எந்த குழந்தையை பார்த்துக்கொள்ளுகின்றாளோ? அந்த குழந்தை படிக்கும் பள்ளியில் வேன் டிரைவர்... இப்படி இரண்டு பேரும் சேரும் புள்ளியை சொல்லிட்டேன் அல்லவா? இனிமீதிக்கதையை வெண்திரையில் பார்த்து ரசியுங்கள்.
======================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
இந்த படம் கிரீஸ் நாட்டு படம்.. எற்கனவே நிறைய அந்நாட்டுபடஙகள் பார்த்து இருந்தாலும் சில படங்கள் நம்ம பொறுமையை ரொம்பவே சோதித்து அனுப்பும வல்லமை கொண்டவை.. பட் அப்படி நினைத்துதான் இந்த படத்தை பார்த்தேன்.. பட் மனதை விட்டு இந்த படம் அகல மறுக்கின்றது..
பொதுவாகவே உலகம் எங்கும் இருக்கும் பெண் இயக்குனர்கள் எடுக்கும் காதல் படங்கள் ரொம்ப மென்மையாகவும் பில்குட்டாகவும் இருக்கும்.. உதாரணமாக தமிழில் கண்டநாள் முதல் படத்தை நல்ல உதாரணமாக சொல்லாம் .. அது போல சாப்ட்டான கதை...
வாழ்க்கை மேல் உள்ள வெறுப்பில் இஸ்மினி குடித்து விட்டு கலாட்டா செய்ய ஹரிஸ் அவளோடு படுக்கையில் ஒன்றாக இருப்பதில் ஆரம்பிக்கின்றது காமெடி கலாட்டா
30 வயதில் ஒரு உருப்படியான ஆண் துணை இல்லை... நிரந்தர வேலை இல்லை... உணர்ச்சிவசப்படக்கூடிய பெண்ணாக இஸ்மினி பாத்திரத்தில் வாசோ பின்னி பெடலெடுத்து இருக்கின்றார்...
சில பெண்கள் தெரிந்தே படுகுழியில் விழுந்து தொலைப்பார்கள்.. இது போலதிருமணம் ஆன ஆணுடன் உறவு வைத்து இருப்பது அந்த ரகம்தான்.. காரணம் வேன் தேவைக்கு தன்னை யூஸ் செய்து கொள்ளுகின்றான் என்று தெரிந்தும் அவனை தவிர்க்க முடியாமல் இருக்கும் அவள் தனிமை...
படத்தில் உடலுறவுகாட்சிகள் மிக இயல்பாக இருக்கும்... உதாரணத்துக்கு திருமணம் ஆனவன் இஸ்மினியுடன் உறவு கொண்டு விட்டு, ஜஸ்ட் லைக்தட்டாக ஆண்குறியை வாஷ் பேஷனில் கழுவுவது என்று r சாதாரண தமிழ் ரசிகனுக்கு பக் என்று இருக்கும் காட்சிகள்.
ஏற்கனவே ஒருவனிடம் எமாந்தது போதும் என்று ஹரிஸ் வயிலய வந்து பழக்கம் வைத்துக்கொள்ள முயற்ச்சித்தாலும் அவள் விலகி செல்வதும்,தொடர்ந்து ஹரிஸ் அவளோடு நட்பு பாராட்ட மெனக்கெடும் காட்சிகள் நல்ல காதல் எபிசோட்.
ஹரிஸ் கேரக்டர் எப்படி பட்ட ஜாலியான வித்யாசமான கேரக்டர் என்பதை படத்தின் ஆரம்ப காட்சியில் உறவுக்கு வந்த பெண்ணிடம் உற்சாகமாக ஆடச்சொல்லும் இடம் ரசனை.
படத்தை இன்னும் ரசனையாக பார்க்க பெரிதும் உதவி இருப்பது இந்த படத்தின் பேக்ரவுண்ட் ஸ்கோர்.. மற்றும் ஒளிப்பதிவை குறிப்பிட்டு சொல்லலாம்...
படம் முடிந்து வரும் போது ஹரிஸ் போல எதுக்கும் கவலை கொள்ளாது உற்சாகமாக வாழ்க்கை எதிர்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கும் ஏற்படும் அதுதான் இந்த படத்தின் வெற்றி...
படத்தை இயக்கிய கிரிஸ்ட்டினா ஒரு சகலகலவள்ளி........ கேமராஉமன்,ரைட்டர், புரொட்யூசர்,டைரக்டர் என்று பல முகங்கள் கொண்டவர்..
==============
படத்தின் டிரைலர்
==========
படக்குழுவினர் விபரம்.
Director:
Christina IoakeimidiWriter:
Christina IoakeimidiStars:
Vasso Kavalieratou, Efthymis Papadimitriou andYannis Tsortekisபைனல்கிக்..
வாழ்க்கை ரொம்ப போர் அடிக்கின்றதா? இந்த படத்தை பாருங்கள் கொஞ்ச நேரத்துக்கு கவலை மறக்க உதவக்கூடிய படம்.. இந்த படம்.. பார்த்தே தீரவேண்டியபடம். சென்னை ஒன்பதாவது உலக திரைப்படவிழாவில் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றது...

சின்ன சின்ன மாற்றங்களுடன்.. ஒரு வாரத்துக்கு முன் பண்புடன் இணைய இதழில் இந்த படத்தின் விமர்சனம் வெளிவந்தது.. வாசிக்க இங்கே கிளிக்கவும்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

பீல் குட் படமா??? கட்டாயம் பார்த்து விடுகிறேன். அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteதமிழ்மணத்தில் சேர்த்தாச்சு.
நண்பரே!
ReplyDeleteமக்கள் இது போன்ற பீல் குட் மூவியை மிகவும் ரசித்து பார்ப்பார்கள்.
தொடர்ந்து இது போன்ற படங்களை அறிமுகப்படுத்துங்கள்.
nandri jackie anna
ReplyDeleteஇந்த படத்தோட English subtitle அனுப்புங்க language புரியல yazhiniananup@gmail.com
ReplyDelete