உப்புக்காத்து=2

 

எங்கள் திருமணம் காதல் திருமணம்கலப்பு திருமணமும் கூட..கலப்பு திருமணத்தில் ஒரு பெரிய பிரச்சனை பழக்க வழக்கங்கள் அப்படியே தலைகீழாக மாறும்...


நாம் ரொம்ப பெரிய விஷயமாக, மரியாதையாக நினைக்கும் பல விஷயங்கள் ஜஸ்ட் லைக்தட் ஆக கடந்து போவார்கள்.. உதாரணத்துக்கு எங்கள் பக்கம் சுபகாரியங்களுக்கு பத்திரிக்கை வைக்க வேண்டும் என்றால் வீட்டில் முக்கியமானவர் இருக்கும் சமயம் நேரில் சென்று  வெற்றிலை பாக்கு, பழம் எல்லாம் தாம்பூல தட்டில் வைத்து குடும்பத்துடன் விழாவுக்கு வந்து ஆசிர்வதியுங்கள்.  என்று  நேரில்  போய் அழைத்தால் மட்டுமே சுப காரியங்களுக்கு வருவார்கள்.

இன்னும் நெருங்கிய சொந்தங்களுக்கு ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களோடு வாழைப்பழம் வெற்றிலை பாக்கு வைத்து பத்திரிக்கை வைத்து அழைப்பதுதான் முறை...

அவன் வெளியூரில் இருந்தாலும் நேரில் சென்று மேற்ச்சொன்ன நடைமுறைப்படி அழைப்பதுதான் எங்கள் வழக்கம்...அப்படி அழைத்தால்தான் வருவார்கள்..

அப்படி நேரில் போய்  விளக்கெண்ணை வச்சி உருவாத குறையாக உருவிட்டு வந்தாலும்  நிறைய பேர் தலைகாட்ட மாட்னுங்க என்பது வேறு விஷயம்...

ஏன்டா கல்யாணத்துக்கு போகலை ?

முறைய கூப்பிடலை அதனால போகலை என்பதாய் சொல்லுவார்கள்..

ஆனால் என் மனைவி வீட்டில், பத்திரிக்கையில் மஞ்சள் தடவி சம்பந்தபட்டவர்களுக்கு போஸ்ட் செய்து விட்டால் போதும் அல்லது போனில் சொன்னாலோ,ஈமெயிலில் அனுப்பினாலோ குடும்பத்துடன் வந்து விடுவார்கள்.. எனக்கு இது பெருத்த ஆச்சர்யம்..ஆனால் எங்கள் சைடில் பெரிய சண்டையே இதுக்கு நடக்கும்....


என் திருமணத்தின் போது ரொம்ப நெருங்கிய நண்பனுக்கு பத்திரிக்கை வைக்க மறந்து விட்டேன்...திருமணத்துக்கு இரண்டு நாளைக்கு முன் ரோட்டில் பார்க்கும் போது அப்படியே ஓரங்கட்டி பத்திரிக்கை வைத்து விட்டு சென்று விட்டேன்.. நெருங்கிய நண்பன்தானே இதில் என்ன பார்மாலிட்டி என்று நினைத்துக்கொண்டேன்..


திருமணத்துக்கு  அவன் வரவில்லை...

என் திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு கன்னிக்கோவில் கென்னடி பாரில் உட்கார்ந்து கொண்டு...
ஏன்டா ஜாக்கி கல்யாணத்துக்கு வரலை என்ற நண்பர்களின் கேள்விக்கு,


ஓத்தா சென்னைக்கு போயிட்டா பெரிய பருப்பு மயிரா அவுரு?? நடுரோட்டுல நிறுத்தி பத்திரிக்கை வச்சான் மச்சி,அவ்வளவு வேலை மயிறு இருக்கறவன் நம்ம பேரையெல்லாம் லிஸ்ட் எடுத்து ஒரு மாசத்துக்கு முன்னையே வச்சிகிட்டு முறைப்படி பத்திரிக்கை வச்சி இருக்கனுமா இல்லையா? என்று போதையில் உளறியதை  செல்போனில் பதிவு செய்ததை நண்பர்கள் எனக்கு போட்டுகாட்டினார்கள்..


கடைசி நேரத்தில் போனில் சொன்ன நண்பர்களின் திருமணத்துக்கு நான் நிறைய போய் இருக்கின்றேன்..

எனக்கு வாகனம் ஓட்டும் போது ஸ்பீடா மீட்டர் கண்டிப்பாக ஓட வேண்டும்.. சென்னை போன்ற பெருநகரங்களில் வேகம் அறுபதை தாண்டும் போது  மண்டையில் மணி அடித்து குறைத்துக்கொள்ள அது உதவும் என்பது ஒரு முக்கிய காரணம்..அதனால் என்னவேகத்தில் செல்கின்றோம் என்று தெரிந்து வண்டி ஓட்டுவது எனக்கு பிடித்த விஷயம்.

சென்னை புதுப்பேட்டை  நேர்மையும் துரோகமும் நிறைந்த தொழில்பேட்டை அது....

பிரேக் டைட் வைங்க என்று சொன்னால் வைத்து விட்டு இருபது ரூபாய் கேட்பார்கள்..ஆயில் சேஞ் செய்து விட்டு 100 ரூபாய் யோசிக்காமல் கேட்பார்கள்...


என் வண்டிக்கு ஸ்பீடா மீட்டர் ஓடவில்லை.. புதுப் பேட்டையில்தான் சரி செய்து கொடுப்பார்கள் என்று  எனது ஆஸ்தான மெக்கானிக் சொல்லிவிட்டான்..

புதுப்பேட்டை எனும் கடலில் ஸ்பிடா மீட்டர் ரிப்பேர் செய்யும் கடையை கண்டுபிடித்தேன்..மென் ரோட்டில் இருந்து  சின்ன  சந்தில் ரோட்டின் ஓரமாக சின்ன பெட்டி கடைபோல் இருந்தது..  ஒருவர் ஸ்டுலில் உட்கார்ந்து கொண்டு எதையோ ராவிக்கொண்டு இருந்தார்...

வண்டியில் ஸ்பீடா மீட்டர் ஓடவில்லை என்றேன்..அரைமணி நேரத்துக்கு மேல் கடுமையான வேலை.. சின்ன பொருட்களை மாற்றினார்.. எப்படியும் 500ரூபாய் கேட்கபோகின்றார் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, 100ரூபாய் கேட்டார்..எனக்கு பெருத்த ஆச்சர்யம்..அவரிடம் 150ரூபாய் கொடுத்தேன்.. நிறைய கேட்டு இருக்கலாமே என்று அவரிடம் கேட்டேன்.. 

என்வேலைக்கு என்ன வாங்கினா நிலைக்கும்னு எனக்கு தெரியும் என்றார்.... அவர் பெயர் பஷீர்... அவர் வேலைசெய்துக்கொண்டு இருக்கும் போதே நிறைய குடும்ப விஷயங்கள் பகிர்ந்து கொண்டோம்..

என்னவோ அவருக்கு என்னையும் எனக்கு அவரையும் ரொம்பவே பிடித்து போய் விட்டது.. டீ  சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று அடம் பிடித்தார்..சாப்பிட்டோம்... என் மண்டையை பார்த்து விட்டு எத்தனை பிள்ளைகள் என்றார்..

நான்கு தங்கைகளுக்கு அண்ணன் என்பதும்  இப்போதுதான் திருமணம் செய்து கொள்ள போகின்றேன். என்றும் சொன்னேன்...
  பத்திரிக்கை இல்லை திரும்ப மவுண்ட் ரோடு வரும் போது பத்திரிக்கை எடுத்து  வந்து வைப்பேன்  கண்டிப்பாக வரவேண்டும் என்றேன்...நிச்சயம் என்றார்..

திரும்ப மவுண்ட் ரோடுக்கு நானும் என் காதலியும் பத்திரிக்கையோடு நண்பர்களுக்கு வைத்து விட்டு வரும் போது, சட் என மீட்டர்கடை  பஷீர் நினைவுக்கு வர, அங்கு செல்ல முடிவெடுத்தேன்..சேவல் பண்ணை போல இருக்கும்... என்று என் காதலியிடம் சொல்லி விட்டு புதுப்பேட்டை கிரிஸ் வாசத்துக்கு மத்தியில் நானும் என் காதலியும் நேரில் அவர் கடைக்கு நேரில் சென்றோம்..

எங்கள் திருமணத்துக்கு அவசியம் வர வேண்டும்  என்று பத்திரிக்கை வைத்தோம்.. பஷீர் நெகிழ்ந்து போனார்.. பணீர் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை..கண்கள் லேசாக கலங்கி போய் இருந்தது...
அக்டோபர் 19...2008...முதல் நாள் 18ஆம் தேதி கடலூர் முருகாலாயா திருமண மண்டபத்தில் ரிசப்ஷன். மறுநாள் திருமணம்..என்  நேரம்.. நல்ல மழை  தேமுதிக மாநாடு வேறு சென்னையில் இருந்த காரணத்தால் சென்னையில் இருந்து கடலூர் வரும் வழியில் எல்லாம் டிராபிக் ஜாம்..

எங்கள் ஊரில் பாதளசாக்கடைக்கு நடு ரோட்டில் குழி வெட்டி ரோட்டை படுத்தி எடுத்து இருந்தார்கள். இதில் மழை வேறு..திருமணத்துக்கு வந்தவர்கள் எல்லாம் படாத பாடு பட்டு வந்துக்கொண்டு இருந்தார்கள்.

19ஆம் தேதி....காலை
எட்டுமணிவாக்கில் மேடையில் நின்றுக்கொண்டு இருக்கும் போது பெருத்த ஆச்சர்யம் பஷீர் மேடையை நோக்கி நடந்து வந்துக்கொண்டு இருந்தார்..இப்போது எனது கண்கள் கலங்கியது...நெகிழ்சியில் எனக்கு என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை..

ஒரு ஸ்பீடா மீட்டர் ரிப்பேர் செய்யறவனுக்கு எனக்கும் என்ன சம்பந்தம்? ஸ்பீடா மீட்டர் வண்டிக்கு ஏர் செக் பண்ணறது போல தினமும் செய்யற வேலையா?

அரைமணிநேரம் பழகியவனின் திருமணத்துக்கு 175 கிலோமீட்டர் அடைமழையில் ஒருவரால் கிளம்பி வரமுடியயுமா? பஷீர் பாய் வந்தார்...

ஒரே ஒரு முறை சந்தித்த காரணத்துக்காக, அந்த அடை மழையில் 175 கிலோமீட்டர் பயணம் செய்து எனது திருமணத்துக்கு வந்து மொய் எழுதிவிட்டு போனவர் அவர்..அவரும் பெரிய  கை எல்லாம் இல்லை.. தினமும் மீட்டர் ரெடி செய்தால்தான் வாழ்க்கை ஓடும்...அப்படி பட்ட பொட்டிக்கடைவாசி என் திருமணத்துக்கு கடும் மழையில் வந்தது  பெரிய விஷயம்..

திருமணம் முடிந்து அவர் கடைக்கு போனேன்.. பெட்டிக்கடைக்கு பதில் சின்ன பத்துக்கு பத்துக்கு கடைக்கு மாறி இருந்தார் மகிழ்ந்தேன் வாழ்த்தினேன்.
அதன் பிறகு புதுப்பேட்டை பக்கம் போனால் அவரை போய் பார்க்காமல் அந்த இடத்தை கடப்பது இல்லை. அதே போல வண்டியில் எந்த பிரச்சனை என்றாலும் அந்த பக்கம் எடுத்து போனால் தன் நண்பர்களை வைத்து சரி செய்து கொடுக்காமல் விட்டதே இல்லை..

புத்தாண்டின் போது சரியாக 12 மணிக்கு வாழ்த்து சொல்ல நிறைய நண்பர்கள் போனில் வாழ்த்து செய்தியை தெரிவிப்பார்கள்..2012 அன்று 12 மணிக்கு முதல் போன் பஷீர் பாயிடம் இருந்து வந்தது.. வணக்கம் புத்தாண்டு வாழ்த்துகள் எல்லா நலமும் பெற்று வளமோடு வாழவேண்டும்.. என்று சொன்னார்.. நானும் வாழ்த்தினேன்...



ஓத்தா சென்னைக்கு போயிட்டா பெரிய பருப்பு மயிரா அவுரு?? நடுரோட்டுல நிறுத்தி பத்திரிக்கை வச்சான் மச்சி,அவ்வளவு வேலை மயிறு இருக்கறவன் நம்ம பேரையெல்லாம் லிஸ்ட் எடுத்து ஒரு மாசத்துக்கு முன்னையே வச்சிகிட்டு, முறைப்படி பத்திரிக்கை வச்சி இருக்கனுமா இல்லையா? என்று போதையில் உளறிய பால்ய நண்பனை விட பஷீர் பாய் என் மனிதில் நிரம்பிஇருக்கின்றார்..


முதல் முறை மீட்டர் ரெடி செய்து கொண்டு இருக்கும் போது அந்த அரைமணிநேரத்தில் அப்படி என்னதான்? பஷீர் பாயும் நானும் பேசினோம்? என்று எனக்கு தெரியவில்லை...சில நட்புகளின் பயணத்தின் தொடக்கத்தை அறிய முடியவில்லை..

குறிப்பு...

உங்கள் வாகனத்தின் ஸ்பீடா மீட்டர் ஓடவில்லை என்றால் புதுப்பேட்டை  பஷீர் பாய் நல்ல முறையில் சரி செய்து தருவார்...அவரது தொலைபேசி எண்.9380876629


==========


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

49 comments:

  1. மிகவும் நெகிழ்ந்தேன்

    எத்தனை நாள் பழக்கம் என்பதை விட எப்படி பழகினோம் என்பதே முக்கியம் ...

    என் நினைவுகள் பின்னோக்கி அசை போட துவங்கின ...

    ReplyDelete
  2. உங்கள் மனதில் மட்டுமல்ல இப்போது. பஷீர் பாய் என் மனிதிலிலும் நிரம்பிஇருக்கின்றார்..

    ReplyDelete
  3. அப்படி போடுங்க... அடுத்த லெவலுக்கு போகுது உங்களின் தளம். பாராவிற்கு சுட்டி கொடுங்கள்... படிக்காமல் விட்டுவிட போகிறார்.

    "ஸ்பீடா மீட்டர்" நல்ல குறியீடாகப்படுகிறது. 60ஸ்பீடெல்லாம் இத்தொடரில் பார்க்கமாட்டேன் என்று சொல்லாமல் சொல்றீங்க.

    ReplyDelete
  4. என்னோட வண்டியில ஸ்பீடா மீட்டர் ரிப்பேர் ஆகிடுச்சு. அதை ரிப்பேர் பண்ண எங்க போறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.. தகவலுக்கு நன்றி அண்ணா

    \\என் மண்டையை பார்த்து விட்டு எத்தனை பிள்ளைகள் என்றார்..//

    தக்காளி இந்த பிரச்சனைக்கு முடிவே இல்ல போல :)))

    ReplyDelete
  5. என்னா எழுத்துடா மக்கா! இதில் உள்ள values பற்றியெல்லாம் யோசித்துத் திட்டமிட்டு எழுதியிருக்க மாட்டீர்கள். ஆனால், என்னா values!

    1. மனிதனுக்காகத்தான் சடங்குகள், மரபுகள்; மரபுகளுக்காக மனிதன் இல்லை.

    2. சடங்கு சம்பிரதாயம் பார்ப்பவன் என்றால் அவன் என்ன நண்பன்!?

    3. பரஸ்பரம் புரிதல் உள்ளவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மழை, பணக்கஷ்டம், மதம் எல்லாம் ஒரு பொருட்டா என்ன?

    4. முன்னேறிய சமூகங்கள் சடங்கு சம்பிரதாயங்களைக் குறைத்ததினால்தான் முன்னேறி இருக்கின்றன.

    இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். Well said. Well written.

    ReplyDelete
  6. From now itself Basheer Bhai is my friend, i just spoken to him about my bike seepometer. Thanks Jacki

    ReplyDelete
  7. அருமையான பதிவு..... இந்த பதிவை பஷீர் பாய் படித்தால் இன்னும் நெகிழ்வாய் இருக்கும்......

    ReplyDelete
  8. வணக்கம் பாசு.. ரொம்ப நாளா உங்க சைட்டை படிச்சாலும் காமெண்ட் போட மட்டும் கொஞ்சம் பயம்..?! இப்ப பயம் கொஞ்சம் தெளிஞ்சிருச்சு..OK
    உப்புக்காத்து பேரு வைக்க பட்ட சிரமத்தை படிச்சதும் இது கொஞ்சம் ஓவரோன்னு தோனுச்சு.. ஆனா உ.கா.2 படிச்சதும், நெகிழ்ந்தப்ப நினைச்சேன்..பட்ட சிரமம் சரிதான்னு.. தொடர்ந்து கலக்க என் அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நன்றி ராஜசுந்தர்ராஜன்சார்.. எந்த திட்டமிடலும் இல்லாமல்தான் எழுதினேன்.
    உங்களை போன்றவர்கள் பாராட்டும் போது இன்னும் நன்றாக எழுதவேண்டும் என்ற மனதில் சொல்லிக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  10. நல்ல பதிவு ஜாக்கி! பதிவு முழுதும் உண்மைகள்!

    பஷீர் உயிர் நண்பன்!

    போதையில் உளறியவன் கூட கொஞ்சம் ஓகே நண்பன்!

    //என்று போதையில் உளறியதை செல்போனில் பதிவு செய்ததை நண்பர்கள் எனக்கு போட்டுகாட்டினார்கள்..//
    இந்த நண்பர்கள் கொஞ்சம் டேஞ்சர் ஆசாமிகள் போல படுகிறதே!

    ReplyDelete
  11. Good article Jackie. I am very happy that you gave his phone no at the end. It will reach many people & Basheer will be benefitted.

    ReplyDelete
  12. Anna,
    Really touching.

    Regards S.Sivaruban

    ReplyDelete
  13. ஜாக்கி சார், இதை படிக்கும்போது என் கண்கள் குளமாகின. நல்ல நெகிழ்ச்சியான ஒரு பதிவு...

    கடைசியில் உங்க டச் அப்படியே...

    ReplyDelete
  14. ஜாக்கி சார், இதை படிக்கும்போது என் கண்கள் குளமாகின. நல்ல நெகிழ்ச்சியான ஒரு பதிவு...

    கடைசியில் உங்க டச் அப்படியே..

    ReplyDelete
    Replies
    1. Jackie,, I am reading your blog for long time and this series of blog is the best one.. I strongly agree with you that we should value others only for what they are instead of what work they do, money etc.. Inspite of this competitive world, we have lot of good people around us.. keep going..

      They way you described the events made it even special...

      Delete
  15. உங்களுடைய பதிவுகள் பல படித்து இருக்கின்றேன். ஆனால் இதுவரை எதற்கும் பதிலோ அல்லது வாழ்த்துக்களோ எழுதியது இல்லை. அதற்காக என்னை மன்னிக்கவும். இந்த பதிவு என்னை மிகவும் பாதித்து. சில மனிதர்கள் பழகுவது சில நிமிடங்களே ஆனாலும் நம் மனதில் நீங்காத இடம் பிடிப்பார். சில மனிதர்களுடன் வருடக்கணக்கில் பழகினாலும் எந்த ஓட்டும் இருக்காது. நான் செய்த சிறு தவறால் ஒரு சிறந்த நண்பரை இழந்து இருக்கின்றேன். ஆனால் அது தெரிந்து செய்த தவறு அல்ல. என்னால் இன்று வரை அந்த இழந்த நட்பை பெறமுடியவில்லை. ஒருநாள் என்னுடைய நட்பை திரும்ப பெறுவேன் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன்.

    ReplyDelete
  16. Unga thalaila mudi mattum than illa ., athukku pathila moolaiya neriya koduthurukkan .,

    congrts jacki anna

    ReplyDelete
  17. சூப்பர்,
    ஆரம்பம் அம்மாவாக இருக்கும்னு நினைச்சேன்..
    அடிக்கடி எழுது

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  18. முதல் பந்திலேயே சிக்ஸரா!!!!!!!!!!!
    வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  19. நட்பை பற்றி யாரும் அதிகமாக கண்டுக்காத இந்த நாட்களில் அவரும், அவருக்கு உங்கள் மீது இத்தனை அபிமானம் வரக் காரணமாக இருக்கும் நீங்களும் வாழ்த்துக்கு உரியவர்கள்!

    உங்கள் இருவருக்கும் உயர்ந்த உள்ளங்கள்!

    ReplyDelete
  20. நட்பை பற்றி யாரும் அதிகமாக கண்டுக்காத இந்த காலத்தில், அவரும், அவரது மதிப்பை பெரும் வகையில் நடந்து கொள்ளும் நீங்களும் பாராட்டுக்குரியவர்கள்.

    ReplyDelete
  21. ஜாக்கி சார், நான் உங்கள் ப்ளாக் இரண்டு வருடமாக படித்து வருகிறேன் ஆனால் கமெண்ட்ஸ் ஏதும் போட்டது இல்லை. உங்களுடியே இந்த பதிவு என் கண்ணில் கண்ணீரை வரவளைத்துவிட்டது. மிகவும் அற்புதமான பதிவு.

    ReplyDelete
  22. பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  23. \\என் மண்டையை பார்த்து விட்டு எத்தனை பிள்ளைகள் என்றார்..// Repeat

    Same blood

    ReplyDelete
  24. என் என்று தெரியவில்லை படிக்கும் போது கண்கள் கலக்கின !

    ReplyDelete
  25. நல்ல பதிவு ஜாக்கி.

    பெரும்பாலும் சடங்குகள் தூணில் கட்டப்பட்ட பூனையாகத்தான் ஆகி வருகின்றன.
    புரிந்தவர்கள் ஒதுக்ங்கி முன்னேருகிறார்கள்.

    ReplyDelete
  26. நெகிழ்ச்சியான பகிர்வு.

    ReplyDelete
  27. வாவ்.. தொட‌ருக்கு ந‌ல்ல‌ துவ‌க்க‌ம் ஜாக்கி.. க‌ல்யாண‌ம் நிறைய‌ உற‌வுக‌ளை பிரிச்சிடுது, ப‌ல‌ புதிய‌ உற‌வுக‌ளை அடையாள‌ம் காட்டுது, ந‌ல்ல‌ ப‌திவு..

    ReplyDelete
  28. super Jaki.. chance illa... nalla sonninga.

    ReplyDelete
  29. Good Post Jackie.You have got an excellent Flow of the words.Keep going.

    Bala.

    ReplyDelete
  30. எந்தவொரு விகல்பமும் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே சொல்லிப்போகும் உங்களின் எழுத்துநடையும், உண்மையான மனநிலையுமே உங்களின் வெற்றிக்கு காரணம் என்பதை நன்றாக அறிந்துகொண்டோம். பகிர்ந்தவிதம் அருமை. பகிர்வுக்கு நன்றி திரு. ஜாக்கி சார்.!

    ReplyDelete
  31. கருத்திட்ட அத்தனை ந்ண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  32. ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?

    நம் சந்ததியினருக்கு அந்தப் பேரழிவுகளின் காரணங்கள் குறித்து எந்தவிதமான அறிதலை விட்டுச் சென்றிருக்கிறோம்? அவை யாரால் எதற்காக அழிக்கப் பட்டன என்ற உண்மையைச் சொல்லக் கூட நமக்கு அனுமதி இல்லை துணிவு இல்லை. ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற உண்மையை ஆனானப் பட்ட சுஜாதாவால் கூடச் சொல்ல முடியவில்லை.

    அபு சலீமையும், தாவூத் இப்ராஹிமையும், டேவிட் ஹெய்லியையும் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வக்கில்லாத நாம், நம்மிடம் பிடிபட்ட அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்க வக்கில்லாத நாம் இது போன்ற படங்களைப் பார்த்துப் பொறாமைப் படத்தான் முடியும். பொறாமையுடன் கூடவே ஒரு சிறிய பாடத்தையும் இந்த சினிமா நமக்குக் கற்றுக் கொடுக்கும். வரலாற்றுப் பழிவாங்கல்களையும் கொடுமைகளையும் கொள்ளைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது முடியாது. அவற்றை அறிவதினால் நாம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவை போன்ற படையெடுப்புகளில் இருந்தும் கொடூரமான கொலைகளில் இருந்தும் நம் சந்ததியினரைப் பாதுகாக்க நம் முன்னோர்களுக்கு என்ன நேர்ந்தது நம் நாடு எப்படி ஏன் சூறையாடப் பட்டது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் அவசியம் தேவை. அந்த அறிவு மட்டுமே நமக்கு எச்சரிக்கை உணர்வை அளிக்க வல்லது.

    அலாவுதீன் கில்ஜியும், அவுரங்க சீப்பும் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்டதினாலேயே ஒரு அப்சல் குருவையும், அபு சலீமையும், கசாபையும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.

    சொந்த புத்தி இல்லாவிட்டால் இஸ்ரேல் என்னும் ஒரு சிறிய நாட்டை அவர்களது செயல்பாடுகளைக் கண்டாவது நம் மக்கள் பாடம் பெற வேண்டாமா? தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்டீரீட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது!



    Part 1: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

    Part 2: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2

    .

    ReplyDelete
  33. அன்புள்ள ஜாக்கி அண்ணா, நான் ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்கள் அப்படி கோபித்தாலும் சந்தோஷ படுகிறேன், தயவு செய்து உங்கள் திருமணம் கலப்பு திருமணம் என்று சொல்லாதீர்கள், சீர்திருத்த திருமணம் என்று சொல்லுங்கள். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உங்களின் பதிவுகளை படித்து வருகிறேன். சந்திக்க ஆசை, ஆனால் இயலவில்லை. சில நண்பர்கள் அப்படிதான், உண்மை நட்பு எதும் எதிர் பார்க்காது (உங்கள் நண்பர் பஷீர் போல)

    ReplyDelete
  34. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் Mr.jakie
    வர வர சைனிங் ஆகிட்டே போகிறங்க (தலையும் சேர்த்துதான்)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner