அப்போதெல்லாம் எப்படி நகர்வு படங்களின் மேல் காதலாக தமிழ் சமுகம் இருந்ததோ அதே போல்தான் எனக்கும் அந்த நகர்வு படங்களின் மேல் ஒரு அலாதி பிரியம்..
என் அம்மா அந்த காலத்து பியுசி. தன் மகன் ரொம்பவும் ஒழுக்கம் உள்ளவனாக வளரவேண்டும் என்று பேராசைப்பட்டாள்.
என் அப்பாவுக்கு கைத்தொழில் என்று ஏதும் இல்லை. பிற்காலத்தில் என்நிலை குறித்து அப்போதே என் அம்மா கவலை பட்டாள். நான் என்னவோ அப்போது ஐஏஎஸ் பரிச்சைக்கு படிப்பது போல் எந்த சினிமாவுக்கு அழைத்து போக மாட்டாள்.
எப்போதாவது ரிலி்ஸ் ஆகும் கந்தன் கருனை, பக்த பிரகலாதா,சரஸ்வதிசபதம்,திருவிலையாடல் போன்ற படங்களுக்கு அழைத்து போய் என்னை பக்தி பழமாக ஆக்கினாள். ஆனால் அவள் மட்டும் எல்லா படங்களையும் பார்த்து விடுவாள். படம் பார்த்து விட்டு அந்த படத்தின் கதையை அரிசி கலையும் போது மிக அற்புதமாக சொல்லுவாள்.
“அப்புறம் அவன் கதவை திறந்து பார்த்தா அவ அந்த இடத்தில இருக்க மாட்டா, எங்க போயிருப்பா?”
அம்மா எங்கம்மா போயிருப்பா சொல்லும்மா? என்று கேள்வி கேட்டால் போய் அரை லிட்டர் கடலை எண்ணையும் கொஞ்சம் கொத்தமல்லிதழையும் வாங்கி வா அப்புறம் அம்மா கதை சொல்றேன்.
சீக்கரம் ஓடிபோய் வாங்கிவாட செல்லம் என்று சொல்லி அந்த கதையில் சஸ்பென்ஸ் வைத்து வீட்டு வேலைகளை வாங்கி கொள்ளும் சாகசகாரி.
எனக்கு படம் பார்க்காமலே ரஜினியும், கமலும், அம்பிகாவும் மனத்திரையில் காட்சிகளாக உருவெடுத்தார்கள். அந்த அளவுக்கு எனக்கு சினிமா ஆசை ஊட்டியது என் அம்மா எனலாம். ஆனால் எனக்கு சினிமா மீது அதிகமான மோகத்துக்கு காரணம் என் பாட்டி சத்யா என்றால் அது மிகை இல்லை.
என் பாட்டியை பற்றி சொல்ல வேண்டும். அவள் ஒரு எம்ஜியார் டபைத்தியம். ஏன் அவள் எம்ஜியார் பைத்தியமானால் என்பதற்க்கு ஒரு சிறிய பிளாஷ் பேக்...
என் தாத்தா சொக்கலிங்கத்துக்குமுதல் மனைவி என் அம்மாவை பெற்ற பாட்டி சத்யா அவர்கள்.
அந்த காலத்திலேயே கடின உழைப்பாளி எங்காவது கட்டிட வேலை நடந்தால் சாரத்தில் ஏத்து சத்யாவதியை என்று சொல்லுவார்களாம் ஏன் என்றால், அந்த அளவுக்கு ஆண்பிள்ளை போல் எந்த பயமும் இல்லாமல் சாரத்தில் நின்று வேலை செய்யும் பெண்மணி.
என்தாத்தா என் பாட்டியின் தங்கையை ஒரு சுபயோக சுப தினத்தில் படுக்கையில் வீழ்த்த என் பாட்டிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது... நான் உயிரோடு இருக்கறப்பவே உனக்கு என் சொந்த தங்கச்சி கேட்குதா? என்று கோபத்துடன்சேலை தலைப்பை உதறி தோளில் போட்டுக்கொண்டு அப்புறம் அதை இடுப்பிலும் செறுகிக் கொண்டு தன் ஒரே மகளான என் அம்மாவை தர தர என இழுத்துக்கொண்டு பண்ருட்டியில் இருந்து விழுப்புரத்துக்கு அழைத்து வந்து விட்டாள்.
அப்புறம் என் பாட்டி தெருத் தெருவாக ஜாக்கெட் பிட் வித்து ஒற்றை ஆளாக என் அம்மாவை பத்தாவது வரை படிக்க வைத்து எவனோடும் ஓடிப்போகாமல் கண்ணியமாக வளர்த்து என் அப்பாவுக்கு கட்டிக்கொடுததாள்.
அதன் பிறகு என் தாத்தாவை என் அம்மாவின் கல்யாணத்துக்கு பாத பூசை செய்வதற்க்காக, தாத்தாவோடு முகம் கொடுத்து என் பாட்டி பேசியதாக சொல்வார்கள். அது ஒரு உழைப்பின் கதை அதை அப்புறம் பார்க்கலாம்.
தான் இருக்கும் போதே தன் தங்கையை கட்டிலில் சாய்த்த என் தாத்தாவை நினைக்கும் போது என் பாட்டி எவ்வளவு மனதுக்குள் புழுங்கிபோயிருப்பாள்,அதே நேரத்தில் திரையில் பெண்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் வரிந்து கட்டி களம் இறங்கும் ஒரே தலைவர் அந்த காலத்தில் எம்ஜியார்தான். அதனாலே எம்ஜியார் என் பாட்டிக்கு ஆதர்ச புருசனாக திகழ்ந்தார்.

நான் காலண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு முடிந்த லீவு நாட்களில், என் பாட்டி வீட்டுக்கு செல்வேன். என் பாட்டி வீடு விழுப்புரத்தில் மந்தக்கரையில் உள்ள அமைச்சார் கோவில் வளாகத்தில் ஒரு ஒன்டு குடுத்தனத்தில் என் பாட்டியின் அண்ணன் தயவில் என் பாட்டி வாழ்ந்தார்.நாளெல்லாம் ஜாக்கெட் பிட் தெரு தெருவாக விற்று வந்த பெண்மனியின் சோர்வை போக்கியது எம்ஜியார் படங்கள்தான்.
அதனாலே அதிகமான எம்ஜியார் படங்களுக்கு நான் வலுக்கட்டாயமாக அழைத்து போக பட்டேன். அந்த படஙக்ள் அந்த காலத்தில் ரசிக்க தக்கவையாகவே இருந்தன.
கந்தன் கருணைக்கும் பக்த பிரகலாதாவுக்கும் இது எவ்வளவோ தேவலையாக இருந்ததது.
சிவாஜி நடிக்க தெரியதாவன் எம்ஜியார்தான் நன்றாக நடிப்பார் என்ற வன்மத்தை எனக்கு ஊட்டியவள் எனது பாட்டி, எம்ஜியார் படத்தின் வசனங்கள் என் பாட்டிக்கு அத்துபடி.
எம்ஜியார் திரையில் தோன்றியதும் தேங்காய் உடைத்து விசில் அடித்த பெண்மணி தமிழகத்தில் என் பாட்டியாகத்தான் இருப்பாள் என்பதில் சிறிதளவும் எனக்கு அவமானம் இல்லை. கடந்த கால வாழ்க்கையின் வலிகளையும், ரன ,மன வேதனைகளையும் என் பாட்டிக்கு அந்த காலத்தில் மற்க்க வைத்தது எம்ஜியார் படங்கள்தான்.
பொதுவாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எம்ஜியார் ரசிகர்கள் எல்லாம் விளிம்பு நிலை மனிதர்களாகவே இருப்பார்கள் அதற்க்கு காரணம் கொடுங்கோலனான வீட்டு உரிமையாளர் நம்பியார் சின்னத்தப்புக்கே சாட்டையை உருவி வேலைக்காரர்களை போட்டு உதைப்பார். அவரையே எம்ஜியார் போட்டு புரட்டி புரட்டி எடுப்பார், அது எல்லா வேலைக்காரர்களும் தன் முதலாளியை புரட்டி எடுப்பது போல் மனதில் உருவகப்படுத்தி கொள்வார்கள்.
எம்ஜியார் எல்லா தவறுகளையும் படங்களில் தட்டிக்கேட்டவன் அதனாலே அவன் எல்லோருக்கும் பிடித்து போனவனானன். அதே போல் அவர் ஏற்ற பாத்திரங்கள் அனைத்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை மையப்படுத்தியே இருக்கும். படகோட்டி ,ரிச்சாக்காரன் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.
அப்புறம் தொலைக்காட்சி வருகை, நான் தொலைக்ககாட்சியில் முதல் முதலாக பார்த்த படம் கே ஆர் விஜயா சிவாஜி நடித்த செல்வம் திரைப்படம்தான். அப்புறம் எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி என் ஆதர்ச நாயகனாக மாறினார்.அப்போது சிவாஜியை திட்டியது போல் இந்த முறை நான் கமலை திட்டினேன்.
நான் முதன் முதலாக தனியாக பார்த்த படம் ரஜினி நடித்த விடுதலை திரைப்படம் . அப்போது தங்கமணி ரங்கமணி வாமா நீ என்ற பாடல் என் தேசிய கீதம்.
அதன் பிறகு என்னை சலனப்படுத்திய படங்கள் நிறைய என்றாலும் என்னை நிமிர்ந்து உட்கார வைத்த தமிழ் சினிமா,
இன்றளவும் தமிழ் சினிமா மேல் காதலாக இருக்க வைத்த தமிழ் சினிமா,
இன்றளவும் சினிமா மீது பைத்தியமாக மாற வைத்த தமிழ் சினிமா,
தொடந்து 5 மாதங்கள் இரவு காட்சி பார்க்க வைத்த தமிழ் சினிமா,
சினிமாவில் ஏதாவது செய்ய வேண்டும என்ற உத்வேகத்தை ஏற்படுத்திய தமிழ் சினிமாக்களை பற்றி அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
குறிப்பு / எனக்கு சினிமா மீது காதல் ஏற்படக்காரணமான என் பாட்டி சத்யாவதியும், என் அம்மா ஜெயா என்கிற ஜெயலட்சுமியும் தற்போது உயிரோடு இல்லை.
நான் இயக்கிய குறும்படம் மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற போது அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள, என் அம்மாவை எலும்பு நொறுங்க அனைத்து மகிழ நினைத்தேன் ஆனால் என் அம்மா இப்போது உயிரோடு இல்லை.அவள் என்னை உச்சி முகர்ந்து நெற்றி முத்தம் கொடுத்த அந்த உதடுகள் இப்போது இல்லை.
என்ன செய்ய காசநோய் முதலில் என் பாட்டிக்கு வந்து அப்புறம் அது என் அம்மாவுக்கு தொற்றி இருவரும் இறந்து போனார்கள். கடைசி வரை சந்தோஷ காற்றை சுவாசிக்காமல் இருவரும்இறந்து போனார்கள்.சுதந்திர இந்தியாவில் காசநோயல் இருவர் மடிந்து போனார்கள் அப்போது அந்தளவுக்கு விழிப்புனர்வு இல்லை.
காச நோய் விளம்பரத்தில் சமுகப் பொறுப்புடன் கலந்து அந்த காச நோய் விளம்பர படங்களில் நடித்து, கிராமத்து மக்களிடம் காசநோய் பற்றி விழிப்புனர்வு இப்போதும் ஏற்படுத்தும் நடிக்ர் சூர்யா என்றென்றும் என் நன்றிக்கு உரியவர்.
சிவாஜிக்கு பிறகு என் அம்மாவுக்கு சாகும் வரையில் பிடித்த ஒரே நடிகர் கமலஹாசன்தான்
அன்புடன்/ ஜாக்கிசேகர்
எனக்கு சினிமாவை முதன் முதலில் சுவை பட அறிமுகப்படுத்தி ,சொல்லிதந்த குரு
என் தாய்.....திருமதி ஜெயலட்சுமிவடமலை அவர்கள்.
Very nice Jakki and touching mother sentiment.
ReplyDeleteand I am very much love your பாட்டி courage to live along.
Veera vannakam பாட்டி ku..
yours
Puduvai siva.
நன்றி புதுவை சிவா, பாட்டி போட்டோ எங்கு தேடியும் அவசரத்துக்கு கிடைக்க வில்லை.
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு.
ReplyDeleteஎங்க சார் ரொம்ப நாளா ஆளையே கானோம் நன்றி சின்ன பையன்
ReplyDeleteப்ரிய ஜாக்கி...
ReplyDeleteகலவையான உணர்வுக்குவியலாக இந்த பதிவு.
எங்க அம்மாவுக்கு கமலஹாசனையே பிடிக்காது. ஏனென்று தெரியவில்லை. உங்க பாட்டி கலக்கல் பாட்டிதான் போங்க.
வாழ்த்துக்கள்
அன்பு நித்யன்
என் அம்மா எனக்கு நல்ல நண்பியும் கூட
ReplyDeleteநன்றி நித்யா
touching!
ReplyDeleteஐயா ஜாக்கி
ReplyDeleteதலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியை தூக்கி பிடித்திருப்பதைப் போல கேமராவை தூக்கிப் பிடித்திருக்கிறீரே... பயமா இருக்குதுங்கய்யா
சுட்டுப்புடுவியலோ...
பயத்துடன் நித்யன்
நல்ல நினைவுகள் சேகர்.. இப்போதுதான் கொஞ்சம் வேலை குறைந்தது அதனால்தான் இத்தனை நாட்களாக வலைப்பக்கம் வரவே முடியவில்லை... உங்கள் தொடருக்காகக் காத்திருக்கிறேன்..
ReplyDeleteகலக்கலா எழுதறீங்க, அம்மா விசயம் நான் எதிர்பாட்க்கவேயில்லை.
ReplyDeleteநினைவுகள் நினைவுகளாக இருக்கட்டும் விளிம்பு நிலையில் இருந்து போராடி வெற்றி பெற்ற உங்களை பாராட்ட அப்பன் காசிலேயே பாதி காலம் வாழ்ந்த எனக்கு தகுதியிருக்கா?
ரீடர்ல போட்டுருக்கேன் தொடர்ந்து படிப்போம்ல இனி
எழுதிய விதம் மனதைக் கலக்க வைத்தது..
ReplyDeleteஉங்கள் வெற்றிகள் தொடரட்டும்...
//என் அம்மாவை எலும்பு நொறுங்க அனைத்து மகிழ நினைத்தேன் ஆனால் என் அம்மா இப்போது உயிரோடு இல்லை.அவள் என்னை உச்சி முகர்ந்து நெற்றி முத்தம் கொடுத்த அந்த உதடுகள் இப்போது இல்லை.//
ReplyDeleteதங்கள் வேதனையைப் புரிந்தேன். அனுபவத்தால்..
அவர் ஆசி உங்களுக்கு என்றுமிருக்கும்...
சுவை குன்றா எழுத்து...சோகமும் இழையோட
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்..
ReplyDeleteஎனது அம்மாவுக்கும் பிடித்தமானவர் எம்.ஜி.ஆர்தான்..
நினைத்துப் பார்த்தால் நம் இருவருக்குமே சினிமா வாழ்க்கையில் ஒரே ஒரு குருதான்..
உங்களுக்கு பாட்டி.. எனக்கு அம்மா..
இன்று இரவு சிவராத்திரிதான்..
நன்றி சர்வேசன் உங்கள் பாரட்டு மற்றும் ஊக்கத்திற்க்கும், தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்கனை சொல்லுங்கள்
ReplyDeleteசுடறஅளவுக்கு எல்லாம் தைரியம் இல்லை. நித்யா
ReplyDeleteவெண்பூ நீங்கள் இல்லாதது கை ஓடிந்தது போல் இருந்தது உங்கள் பிரச்சனைகள் மார்கழி மாச எட்டு மணி பனி போல் விலக இறைவனை வேண்டுகிறேன்
ReplyDeleteகுடுகுடுப்பை சார் அப்பன் காசுல வாழ்வது என்பது ஒரு கொடுப்பினை.
ReplyDeleteகஷ்டங்களை புரிந்து நடந்தால் அதுவே போதும் நண்பா
சந்தோசம் . நீங்களும் விழுப்புரம்தானா ? அப்போ உங்களுக்கு அனுமார் கோவில் தெரு தெரிஞ்சிருக்கும். நான் அந்த தெரு வாசிதான். மந்தகரையில் நடக்கும் அரசியல் கூட்டங்களுக்கு சின்ன வயசில் போனது நினைவில் இன்னும் இருக்கு. உங்கள் அம்மாவை பத்திய நினைவுகளை அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள் .
ReplyDeleteரேகா ராகவன்
அருமையான பதிவு..
ReplyDeleteபடித்து நெகிழ்ந்தேன்..
எல்லா பாட்டியும் இப்படிதானா..??
எம்.ஜி.ஆர் இறந்த அன்று என் பாட்டி அழுததும் தலைக்கு குளித்தததும் நினைவுக்கு வருகிறது..Really I miss her a lot..
பாட்டிக்கு ஒரு ஒ போட வேண்டும்.
‘ரேகா ராகவன் லட்ச தீப விழாவை மறக்க முடியுங்களா?
ReplyDeleteஎம்.ஜி.ஆர் இறந்த அன்று என் பாட்டி அழுததும் தலைக்கு குளித்தததும் நினைவுக்கு வருகிறது..Really I miss her a lot..
ReplyDeleteநன்றி தலைவா உங்கள் பாராட்டுக்கு வண்ணத்து பூச்சியார் உங்கள் பாட்டிக்கம் என் வந்தனங்கள்
நினைவுகள் தரும் சுகமே தனி!
ReplyDeleteஉங்கள் எழுத்துக்கள் சுவையாக உள்ளன !!
நினைவுகள் தரும் சுகமே தனி!
ReplyDeleteஉங்கள் எழுத்துக்கள் சுவையாக உள்ளன !!
நினைவுகள் தரும் சுகமே தனி!
ReplyDeleteஉங்கள் எழுத்துக்கள் சுவையாக உள்ளன !!
நன்றி கிரிஜா ராகவன் தாங்கள் ஒரு பத்திரிக்கையாளர் நீங்கள் சொல்லும் போது அது உண்மையாகத்தான் இருக்கும்.சில வருடஙக்ளுக்க முன் உங்கள் அசோக் நகர் வீட்டு இரண்டாம் தளம் என்று எண்ணுகிறேன் உங்களை பேட்டி கண்டு டிடியில் ஒளிபரப்புக்காக வந்து இருக்கிறேன். நான் அப்போது அஸிஸ்டன்ட் கேமராமேனாக வந்தேன்.
ReplyDelete