வாழ்வில் எவ்வளவோ படங்கள் பார்த்து இருக்கிறோம். ஆனால் எல்லா படங்களும் மனதில் நிற்பதில்லை. சின்ன வயதில் எனக்கு சிவாஜி படங்களை சுத்தமாக பிடிக்காது ஏனென்றால் அவர் எப்போதும் கண்ணீரும் கம்பலையுமாக இருப்பார், என் அம்மாவுக்கு சிவாஜி படங்கள்தான் பிடிக்கும். என் அம்மாவுக்கு சிவாஜி படம் பார்த்து புடவை தலைப்பில் மூக்கை சிந்த வில்லை என்றால் அன்றிரவு அவருக்கு தூக்கம் வராது.
என் பாட்டிக்கு கை தட்டி விசில் அடித்து குஜாலாக ஒரு படத்தை பார்க்க வேண்டும்... எம்ழிஆரிடம் நம்பியார் நாலு அடி வாங்கினால்தான் அன்னைக்கி ராத்திரிக்கு எங்க பாட்டிக்கு தூக்கம் வரும்.காரணம், என் பாட்டி நம்பியார் உதை வாங்கினால் என் தாத்தா உதை வாங்கியது போல் எண்ணி மகிழ்வாள். அவள் வாழ்க்கை அப்படி...
என் பாட்டிக்கு பரலோகத்தில் இடம் கிடைத்த உடன்.... படம் பார்க்க நானும் என் அம்மாவும் செல்லுவோம். ஒரு வகையில், நல்ல சினிமா பார்க்க கற்றுக்கொடுத்தது என் தாய் என்றால் அது மிகையில்லை.
முதல் மரியாதை படம் வந்த போது அந்த படத்தை என் அம்மாவும் என்சித்தியும் சிலாகித்து பேசி இருக்கிறார்கள்.அது எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும். அப்போது என் தானை தலைவன் நடிகர் ரஜினிதான். யாராவது ரஜினி பற்றி, அவர் படத்தை பற்றி, அவதூறாக பேசினால் அவ்வளவுதான் எதிராளி மூக்கு வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும். அந்த அளவுக்கு ரஜினி வெறி.... முதலில் எம்ஜியார் வெறி அப்புறம் ரஜினி.
1987ல் நாயகன் படம் வந்தது அந்த படம் என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த படம் கற்றது தமிழ் போல் ரொம்ப சோக மாக இருந்தது. அந்த வயதில் அந்த சோகத்தை தாங்கும் பக்குவம் என்னிடத்தில் இல்லை எனலாம்.
இன்று அந்த படத்தை கொண்டாடும் அளவுக்கு ,அந்த வயதில் அந்த படத்தை நான் கொண்டாட வில்லை. வாழ்க்கை அப்போது வறுமையை எனக்கு அறிமுகப்படுத்த வில்லை.
அடுத்த வருடம் அதாவது 1988ல் அந்த படம் ரிலிஸ் ஆகியது. அந்த படம் என்னை என் னுடைய 16ஆம் வயதில் வசீகரித்தது. அந்த படம் ஒருவெள்ளிக்கிழமை ரிலிஸ் ஆகியது . அந்த படம் கடலூரில் அப்போது ரமேஷ் இப்போது பாலாஜி என்றழைக்கபடும் தியேட்டரில் திரையிடப்பட்டது.
படத்தின் முதல் நாளே காலை காட்சியை என் அந்தை பையன் தாமோதரனும் சம்ட்டி என்பவரும் அந்த படத்தை பார்த்து விட்டு படம் ரொம்ப நல்ல இருக்கு அதுவும் சினிமா போட்டோகிராபி ரொம்ப நல்லா இருந்ததாக சொல்ல , கடலூர் கூத்தப்பாக்க கிராமத்தில் போட்டோகிராப்பி் நல்லா இருக்கு என்று முதல் டெக்னிக்கள் வார்த்தையை உபயோகப்படுத்தியது என் அத்தை மகன் தாமோதரன்தான் என்பேன்.
பொதுவான விஷயங்கள் அதிகம் கற்றுக்கொண்டது. என் அத்தைபையன் தாமோதரனிடம்தான். அவன் பார்த்து விட்டு போட்டோகிராப்பி படத்துல நல்லா இருக்கு என்று சொல்லிய பிறகு, நான் அந்த படத்தை பார்க்க வில்லை என்றால் என் பரம்பரைக்கே அவமானம் என்பதாலும், அந்த படத்தை நான் அடுத்த காட்சியான மதிய காட்சி பார்க்க தீர்மானித்தேன் . பையில் பரம்பைசா கிடையாது கடவுள் மனது வைக்க வேண்டும். கடவுள் மனது வைத்தார். கடவுள் என் அம்மா உருவில் என் பணத்தேவையை நிறைவேற்றினார்.
என் அம்மா அழைத்தார் அதுவும் எப்படி தனுசு ராஜா என்று , போய் கருப்பன் கடையில பத்துக்கிலோ அரிசி வாங்கி வாப்பா.. எங்கம்மாவுக்கு வேலை நடக்க வேண்டும் என்றால் ராஜா கூஜா என்றெல்லாம் என் பெயருடன் சேர்த்து என்னை வசியம் செய்வது உங்கள் எல்லோருக்கும் முன்பே தெரிந்து இருக்கும்.
ஒரு கிலோ அரிசி 5 ருபாய் பத்துக்கிலோ அரிசி 50 ரூபாய் அதற்க்கு மேல் என் அம்மாஒரு நையா பைசா கூட கொடுக்கமாட்டாள். பாவி மக 25 பைசா கொடுத்து தேன்மிட்டாய் வாங்கி சாப்பிட கூட கொடுக்கமாட்டாள். எனென்றால் ஒரே பையன் கெட்டுவிடுவேன் என்ற பயம்தான் காரணம்.
எனக்கு அப்போதுதான் சத்தியம் கம்ப்யூட்டர் ராஜூவை போல் என் மனம் வேலை செய்ய தொடங்கியது, நான் பத்துக்கிலோ அரிசிக்கு 9 கிலோ அரிசி வாங்கினேன் எனக்கு 5 ருபாய் கிடைத்தது. உலகில் எந்த அம்மாவாவது வாங்கிய அரிசியை அளந்து பார்க்க முடியுமா? கிராமத்து அம்மாக்கள் அந்த அளவுக்கு டேலன்ட் இல்லை. அதை விட பிள்ளை மேல் அவ்வளவு நம்பிக்கை.
நான் பரபரப்புட்ன் வேர்த்து விறு விறுக்க சைக்கிளில் தியேட்டர் சென்றேன் 2,50 டிக்கெட்வாங்கினேன். தியேட்டரில் படம் போடாததால் விசில் பறந்தது. அது நல்ல வெயில்காலம் சித்திரைமாதம்... . படத்தை போட்டார்கள் ஒரு சன்ரைஸ் காட்சி மேகத்தில் மறைந்து இருக்கும் சூரியன் மெல்ல மெல்ல வெயியே வந்து சுட்டு எரிக்கும் சூரியனாக மாறும் காட்சி. அதில்தான் படத்தின் டைட்டில் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர்கள் போடப்பட்டது.
சூரியன் மேகத்தில் மறைந்து இருக்கும் போது எந்த ஆடியோவும் இருக்காது.மெல்ல மெல்ல கதிர் பெரிதாக மாறும் போது நகரம் மெல்ல உறக்கம் கலைந்து எழுந்து பரபரப்பாக மாறுவதை மிக அற்புதமாக ஆடியோவில் வெயிப்படுததி இருப்பார்கள். முதலில் குருவி காக்கா போன்ற பறவைகள் சவுண்டும் பிறகு சைக்கிள் கார்ஹாரன் சவுண்டும் அதன் பிறகு டிராபிக்கில் ஏற்படும் வாகனத்தின் இரைச்சலும் அதன் பிறகு ரயில் விமானம் போன்ற சத்தங்கள் பெரிதாகும் பொது சூரியன் தன் உக்கிரத்தை நகர் முழுவதும் காட்டிக்கொண்டு இருப்பான்.
அந்த படம் ஆரம்பித்து 15 நிமிடத்தில் அந்த படத்தின் வித்யாசத்தை நான் உள்வாங்க ஆரம்பத்தேன். அந்த படம் வழக்கமான படங்க்ளில் வரும் கேரக்டர் போல் பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை. எல்லாம் இயல்பாக இருந்தது.
இன்டர் வீயுவில் தகராறு பண்ணிய மகனை அழைத்து ஆறுதல் சொல்கிறார் அடுத்த இன்டர்வியு நடக்கும் இடத்தை சொல்கிறார் அங்கு போய் ஒருவரை பார்க்க சொல்கிறார் அந்த இடத்தில்
நேற்று கிருஷ்ணனை பார்த்தேன், பிரேக்ஸ் இன்டியா பர்சனல் மேனஜர், அவங்க கம்பேனியில டிரெய்னிஸ் ரெக்ருமன்ட் எடுக்கறாங்களாம் உன்னை பத்தி அவுரு கிட்ட சொல்லி இருக்கேன் கம்பெனி பாடியில இருக்கு, உன்னை இன்னைக்கு 3 மணிக்கு வந்து பார்க்க சொன்னாரு, என்று சொல்ல வரேன் என்று கிளம்பும் மகனை அசோக் என அழைத்து அங்க கிருஷ்ணன்கிட்ட என் புள்ளன்னு சொல்லாத... அவுரு சுசீலா ரிலேஷனாம் அவுரு எங்கயாவது சொல்லி அது இங்க வந்து அன்னெசசரி காம்ளிகேஷன் பிராப்ளம் பாரு.... என்று ஒரு அப்பன் சொன்னால் எப்படி இருக்கும் ???
பெத்த தகப்பன் என்னை அப்பா என்று அடுத்தவனிடம் சொல்லாதே என்று சொல்லும் போது ஒரு பையனுக்கு எப்படி இருக்கும்.???
அதே போல் அப்பா சின்ன வீடு வைத்து இருப்பதால் தான் எல்லா இடத்திலும் அவமானப்படுவதால் பொருமும் பெரிய சம்சாரத்தின் மகன்.என்னை அப்பா என்று சொல்லாதே என்று அவமானப்படுததும் சின்ன சம்சாரத்தின் மகன் என்று இரு துருவங்களில் இருக்கும் வயதுக்கு வந்த மகன்களின் உணர்ச்சி போராட்டம்தான் அக்னி நட்சத்திரம் படத்தின் கதை.
ஒருவர் இரண்டு பொண்டாட்டி வைத்து இருப்பதால் ஏற்படும உறவு சிக்கல்களையும் உணர்ச்சி பிறவாகத்தையும் மிக அற்புதமாக அதன் அழகியல் மாறாமல் சொல்லி இருப்பார் இயக்குநர் மணி.
எழுத்தாளர் பலகுமாரனை போல் இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்துக் கொள்வது என்பது சாத்தியம் இல்லாத விஷயம். அது யாருக்காவது ஒருவருக்கும் கிடைக்கும் பாக்கியம். ரோட்டில் போகும் பெண்ணை பைக் ஓட்டும் போது திரும்பி பார்த்தாலே, போ அவ கூடவே போய் குடும்பம் நடத்து என்று முகம் திருப்பிக்கொள்வாள்.
அக்னி நட்சத்திரம் படத்தின் கதை இதுதான்.
இரண்டு பெண்டாட்டி வைத்து இருக்கும் விஸ்வநாதனுக்கு மூன்று பிள்ளைகள் முதல் தாரத்து மனைவிக்கு ஒரு பையனும் இரண்டாம் தாரத்து மனைவிக்கு ஒரு பையனும் ஒரு பெண் குழந்தையும் இருக்க... இரண்டு மனைவிகளின் ஆண் பிள்ளைகளும் அடித்துக்கொண்டு மங்கம்மாய்வதும்,விஸ்வநாதனுக்கு எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது அந்த இரண்டு பிள்ளைகளின் நிலைப்பாடு என்ன, அவர்கள் இருவருக்கும் ஏற்படும் காதல் என்று படத்தை படு சுவாரஸ்யமாக எடுத்து இருப்பார் இயக்குநர் மணிரத்னம்.
படத்தின் கேப்டன் மணி என்றாலும் அவரை தான்டி இரண்டு பேர் அப்போது கொண்டாட பட்டார்கள் அந்த இருவர் ஒன்று இசைஞானி இளையராஜா, மற்றவர் ஒளிப்பதிவாளர் பீசி ஸ்ரீராம்.
இந்த படம்தானா என்று கேட்கும் அத்தனை பதிவர்களுக்கும் ஒரு செய்தி. இந்த படம் வந்து 21 வருடங்கள் ஆகின்றன.அந்த படத்தை நீங்கள் ரசித்தவற்றிர்க்கும் நான் ரசித்த முறைக்கும் உள்ள வேறுபாடுங்கள், இந்த படம் அப்போது ஏற்படுத்திய தாக்கம் ரசனை போன்றவைகளை அலசுவதும் அதனால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை பார்த்தவர்களே அடுத்த முறை பார்க்க வைப்பதும் இதுவரை பார்க்காதவர்கள் இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டும் என்பதே என் நோக்கம்
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
நான் முதன் முதலாக அப்பா சரக்கு சாப்பிடும் போது பக்கத்தில் பெண் உட்காந்து கொண்டு அப்பா இதுதான் கடைசி ரவுண்டு என்றுசொல்லி அப்பாவை தடுக்கும் காட்சியை நான் மிகவும் ரசித்தேன். இது தமிழ் சினிமாவுக்கு புதியது.
அதே போல் இருபது வருடங்களுக்கு முன்பு மேல்தட்டு வர்கத்தில் பெண்கள் சிகரெட் பிடிப்பதை காட்டி அக்கால கல்லூரி மாணவிகளின் குறும்புகளை காட்டி இருப்பார். ஆனால் இப்போது நிரோஷா மாருதி காரில் ஐலவ்யூன்னு உதடு குவிச்சி சொல்லிட்டு போன பாத்தியன் சாலையில் நம்ம எதிரேயே ஜீன்ஸ் டி சர்ட் போட்ட பொண்ணுங்க..... நல்லா நிதானிச்சு தம்கட்டுது. அது கட்டற கட்டுக்கு.... நமக்கு இருமல் வந்து தொலைக்குது.
அஞ்சலி என்ற பெயரை ஒரு எலி ரெண்டு எலி என்று சொல்லி அஞ்சலி என்று அழகாக சொல்லியது இந்த படத்தில்தான்.
பொதுவாக கேமராவுக்கு வெளிச்சம் வந்தால் அதனை கிளார் என்று சொல்லி அதனை பிளாக் கிளாத் அல்லது கட்டர் போட்டு கட் செய்து படம் காலம் காலமாக எடுத்தார்கள். அந்த கட்டுப்பாட்டை இந்த படத்தில் உடைத்து இருப்பார் பிசி.
இந்த படம் தமிழ் திரை உலகில் ஒளிப்திவில் பிரேக்த ரூல்ஸ் மூவி என்றால் அது நூத்துக்கு நூறு உண்மையே.
படத்துக்க பெயர் அக்னி நட்சத்திரம் என்பதால் படம் முழுவதும் ஒரு அனல் வீசுவது போலவே காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். மிக முக்கியமாக கார்த்திக் முதல் அறிமுக காட்சி, கார்த்திக் மைதானத்தில் விளையாடும் போதுஅவர் தங்கை வந்து அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்பதை சொல்லும் காட்சிகளில் கானல் நீர் பறக்கும்.
இந்த படத்தின்இளமை துள்ளல்தான் இந்த படத்தின் பெரும் வெற்றிக்கு அடிப்படை .
வசனங்களும் பக்கம் பக்கமாக இல்லாமல் ரத்தின சுருக்கமாக இருக்கும், உதாரனத்துக்கு உடம்பு சரியில்லாத கார்த்தி்கின் அம்மா ஜெயசுதா படுத்து இருக்க கணவர் விஜயகுமார் பணிவிடை செய்து கொண்டு இருப்பார் அப்போது வரும் கார்த்திக் விஜயகுமாரிடம் நன்றி சொல்லுவார்...
தேக்ஸ்
எதுக்கு?
அம்மாவை பார்த்துகிட்டதுக்கு...
உனக்கு அவ அம்மாவா இருக்கிறதுக்கு முன்னாடி அவ எனக்கு பொண்டாட்டி, நான் நல்ல அப்பாவா இல்லாம இருக்கலாம்... ஆனா நல்ல புருசன என்னால இருக்க முடியும் என்பார்.
மியுஸியம் எதிரே நண்பர்களோடு உட்கார்ந்து இருக்கும் கார்த்திக்கிடம் உதடு குவித்து நிரோஷா லவ்யு சொல்லி காரில் வேகம் எடுக்கும் போது கார்த்திக்கும் நண்பர்களும் பைக் எடுத்து பறக்கும் போது அந்த உணர்ச்சி நம்மையும் தொற்றிக்கொள்ளும்.
பிரபு உடற்பயிற்ச்சி செய்யும் போது உங்க அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டியாமே? என்று கேள்வி கேட்டு வாங்கி கொள்ளும் அமலாவிடம் காதலை சொல்லி அதற்க்கு அமலா எல்லா இடத்திலும் தானே முத்தம் கேட்கும் இடம் இளமை குறும்பு.
நிரோஷாவீட்டை கண்டுபிடித்து கார்த்திக் உள்ளே செல்ல பகவான் இளையராஜா பின்னனி இசையுடன் மஞ்சள் துணி போர்த்தியபடி வந்து அந்த ஒப்புக்கு உடலை சுற்றிய மஞ்சள் துணியையும் எடுத்து தூர கடாசி விட்டு பொலக் என்று தண்ணீரில் குதித்தபோது தளும்பியது தண்ணி மட்டும் இல்ல அந்த காலத்து ஜாக்கியோட அந்த சின்ன , பச்ச மனசும்தான்.
பூங்காவனம் பாடலில் நிச்சல் குளத்தில் இருந்து வெயியே வந்து அந்த குளத்தை சுற்றி வந்து டைவிங்போர்டில் நின்று ரெண்டு குதி குதித்து பொலக் என்று தண்ணிரில் குதிக்கும் போது அப்போதும் இந்த ஜாக்கியோட மனசு பிலாயிடுச்சுபா....
பைக்கில் வந்து ஹெல்மட் கழட்டி பத்து ரூபாய்க்குதான் இந்த அளட்டளா? என்று கேட்க ???அந்த பணணத்தை விசிறி போல் விரிக்க அதன் பிறகு வரும் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடல் வரும் போது அப்போது தியேட்டரில் நடந்த கொண்டட்த்துக்கு அளவே இல்லை. தீயேட்டரே சாமியாட்டம் போட்டது.
மைதானத்தில் கார்த்திக்வெயிலில் படுத்து இருக்கும் போது மூச்சு இரைக்க ஓடி வந்து புது ஏசி வந்து இருக்கிறார் பேரு கெளதம் விஸ்வநாத் என்ற சொல்ல புது ஏசிக்கு விஷ் பண்ணிட்டு வரலாம் என்று கார்த்திக்கும் நண்பர்களும் ஓடும் போது ராஜா போட்ட பின்னனி இசை இன்னும் உற்சாக துள்ளல்தான்.
வாரன்ட் இல்லாமல் அரஸ்ட் பண்ண முடியாது என்று கார்த்திக் பேச பிரபு காக்கி சட்டையில் விறைப்புடன் நடந்து வந்து கார்த்திக்கை அரஸ்ட் செய்யும் காட்சியில் ராஜா ராஜாதான்.
கார்த்திக் பிரபு இருவரும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். பிரபு போலிஸ் விரைப்பை படம் முழுவதும் வெளிபடுத்தி இருப்பார்.
அதே போல் பிசி ராஜா ராஜாதி ராஜன் இந்த பாடலின் போது தண்டவாளத்தில் கார்த்திக் டான்ஸர் வரிசையாக நிற்க்க டாப் லைட் கொடுத்து ரிம் லைட் ஏபெக்ட் கொடுத்து இருப்பார். அதே போல் அந்த பாடலில் லோவ் ஆங்கிளில் ரயில் பெட்டியில் தாவும்காட்சியில் கடலூரில் உள்ள பாலாஜி தியேட்டரில் விசில் பறந்தது என்றால் யோசித்து பாருங்கள்.
படம் முழுவதும் இரவில் வாகனங்கள் வரும் போகும் காட்சிகளை ஸ்டார் பில்லடர் போட்டு ஏடுத்து இருப்பார். படத்தில் அந்த கிளைமாக்ஸ் ஆஸ்பிட்டல் கரண்ட் சார்ட் சர்க்கியுட் ஆன சீன் மாத்திரம் படத்தின் திருஷ்ட்டி எனலாம்.
படத்தின் நெகிழ வைத்த காட்சிகளாக, ஜெயசுதாஸ்டேஷனில் ஜாமினில் கையெழுத்து போடும் இடம், ரயில் கார்த்திக் தங்கையை என் தங்கை எனறு பிரபு சொல்வதும்,சிரியசாக இருக்கும் அப்பாவுக்கு பிரசாதம் எடுத்து ஓடி வரும் பெண்ணை தடுக்கும் போலிசை அவள் எங்க பொண்ணுதான் என்றும் சொல்லும் காட்சிகளில் என் கண்களில் நீர்த்திவலைகள்.
முதலும் கடைசியாக இந்த படத்தில் வில்லனாக நடித்த ஆனந் தியேட்டர் ஓனர் உமாபதி தோபார் ராஜா எற்றுஆரம்பித்து வசனம் பேசும் அழகே அழகு. விஜயகுமார் காப்பற்றுவிட்டார் என்று தெரிந்து ஏப்படிடா என்று கர்ஜனையாக உறுமுவதில் ஆகட்டும், தீக்குச்சி கிழித்து கிட்டே வரும் கார்த்திக்கை உப் பென்று ஊதி கை சுட்ற போவுது கண்ணா போய் உங்கப்பன காப்பாத்து என்ற காட்சிகளில் அவருக்கு அப்போது பறந்த விசில் இன்னும் என் செவிகளில்.
என்ன ஒரு சோகம் கால மாற்றத்தில் நடந்தது என்றால் அனந்தியேட்டரும் அதன் நிர்வாகிஉமாபதியும் மண்னோடு மண்ணாகி போனார்கள் ஆனால் அவர்களின் நினைவுகள் என்றும் நம்மிடம்.
விகே ராமசாமியும் ஜனகராஜும் காமெடி பண்ணாலும் அது தனி டிராக் அதிலும் அந்த பி்எப் படம் பார்க்கும் போது ஏற்படும் குறிக்கீடுகள் காமெடி என்றாலும் அது எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த நிகழ்வுகள்தான்.
ரோஜா பூ வாடி வந்தது, நிண்ஷக்கோரி வரனும் ராஜாதி ராஜா போன்ற பாடல்கள் அந்த காலத்து பென்டசி வகை என்றாலும் வாவா அன்னே அன்பே, தூங்காத விழிகள் ரெண்டு பாடல்களுக்கு ரசிக கண்மணிகள் எல்லோரும் தியேட்டர் விட்டு வெளியே போய் ஒரு தம் போட்டு வந்து உட்கார்ந்தார்கள்
இன்றைய பிரபுதேவா அன்று முதன் முதலாக பாடலில் தலைகாட்டிய இந்த படத்தில்தான்.
நான் சினிமாவை வெறித்தனமாக காதலிக்க ஆரம்பித்தது இந்த படத்தில் இருந்துதான் அதே போல் படத்தை படமாக பார்க்காமல் டெக்னிக்கலாக படம் பார்க்க கற்று கொண்டதும் இந்த படத்தில்தான்.
ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், போன்றவர்கள் தமிழ்சினிமாவை வெறுதளத்துக்க எடுத்து சென்றார்கள் என்றால் கதை சொல்லும் விதத்திலும் வசன உச்சரிப்பி்லும், தொழில் நுட்பத்திலும்
மணிரத்னம் தமிழ் சினிமாவை உலகலாவிய அளவுக்கு எடுத்து சென்றார் என்பதால் மணி எப்போதும் என் நன்றிக்கு உரியவர்.
இந்த படம் தமிழக அரசின் சிறந்த படம் விருதை பெற்றது.
எனக்கு தெரிந்து நான் எழுதியதில் பெரிய பதிவும் இதுதான்.
அன்புடன் /ஜாக்கிசேகர்

ரொம்ப அனுபவிச்சு பார்த்திருக்கீங்க... திரும்ப படம் பார்த்த அனுபவத்தை கொடுத்தது...
ReplyDeleteரசிச்சு ருசுச்சு எழுதிக்கிறீங்க....
ReplyDeleteஎல்லா சீனும் திரும்ப ஞாபகம் வந்திடுச்சு. கடையில போயி DVD வாங்கணும்.
அன்பு நித்யன்
அந்த வாலிப கோளாறில் எல்லாருக்கும் பிடித்த படம் தான் இது.
ReplyDeleteஏகப்பட்ட ஒட்டைகள் இருக்கு.
இந்த பழைய பதிவையும் பாருங்கள்
http://sugunadiwakar.blogspot.com/2006/12/blog-post_27.html
நல்ல மறு அறிமுகம்.../உடம்பு சரியில்லாத கார்த்தி்கின் அம்மா ஜெயசுதா//
ReplyDeleteஅவங்க ஜெயசுதா இல்ல ஜாக்கி....ஜெயசித்ரா!
ஜாக்கி சேகர் பதிவு பெரியதாக இருந்தாலும் உண்மையிலேயே சுவாரசியமாக படித்தேன்.
ReplyDeleteநமக்கு பிடித்த படத்தை சொல்வது பெரிதல்ல..அதை எப்படி கூறுகிறோம் என்பது தான் விஷயம். நீங்கள் கூறியதிலே இருந்து தெரிகிறது நீங்கள் படத்தை எப்படி ரசித்து இருக்கிறீர்கள் என்று :-) அதி மேதாவித்தனமாக இல்லாமல் ஒரு ரசிகனாக விளக்கி இருந்தது நன்றாக இருந்தது.
எனக்கும் இந்த படம் பிடித்த படம் தான்..எப்போது டிவி யில் பார்த்தாலும் இன்னும் ஒருமுறை பார்க்க சலிக்காத திரைக்கதை அமைப்பு.
இதை போல பல பதிவுகள் எழுத என் அன்பான வாழ்த்துக்கள்.
அற்புதமாக அனுபவித்திருக்கிறீர்கள்.. நானும் அந்தக் கால மணி ரத்னத்தின் ரசிகன் தான்.. இப்போது முன்பு மாதிரி ரசிக்கும் வகையில் அவர் படங்கள் இல்லை.. என் கருத்து இது..
ReplyDeleteநாயகன், மௌனராகம்,அஞ்சலி,தளபதி போன்ற படங்களிலும் மணியின் வெற்றியில் இளையராஜாவின் பங்கு அதிகம்.. ஸ்ரீராமினதும் தான்..
இந்தப் பதிவுக்காகவே மறுபடி இருந்து பார்தீங்களோ? நான் ரசித்த அநேகமான காட்சிகள் பற்றி நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்...
ஒரு சின்ன விஷயம்.. ஏராளமான எழுத்துப் பிழைகள் தெரிகின்றன.. கொஞ்சம் கவனிக்கவும்..
அக்னி நட்சத்திரம் படம் எத்தனைதடவை பார்த்தேன் என்று நினைவில்லை .மேலும் மேலும் பார்க்க தூண்டிய படம் .உங்கள் பதிவு படிக்க ரொம்ப INTERESTING
ReplyDeleteஆக இருந்தது .
தெரியவே செயாது சார் பாலகுமாரனுக்கு இரண்டு பெண்டாட்டி ,அதுஉம் ஒரே வீட்டில்
இருக்கிறார்கள் என்று .உண்மையாவா?
நன்றி சரவணகுமார் தொடந்து படித்து வரும் ஆதரவுக்கு என் நன்றிகள்
ReplyDeleteநன்றி நித்யன் மிக்க நன்றி
ReplyDeleteநன்றி வண்ணத்து பூச்சியார்ஆனால் சினிமா, கலை, ஓவியம் எல்லாம் பார்த்து ரசித்து எதாவது ஒரு வகையில்வெயிப்பட்டு ஆக வேண்டும். சினிமா எழுத்து எல்லாம் பார்த்து படித்துதான் வெறுவகையாக உறுமாரும். அந்த கான்செப்டை இயக்குநர் எப்படி கையாண்டு இருக்கிறார் என்பதே முக்கியம்.
ReplyDeleteநன்றி லோஷன் தங்கள் வருகைக்கு
ReplyDeleteராஜ் ஒத்துக்கொள்கிறேன் ஜெயசித்ராதான் அவசரத்தில் மாற்றி எழுதி விட்டேன்
ReplyDeleteநன்றி கிரி எப்போதும் கத்துக்கொள்ள தயாராக இருப்பவனுக்கு அதிமேதாவிதனம் வராது வந்து கருத்து கூறியமைக்கு நன்றி
ReplyDeleteநன்றி மலர் உங்கள் கேள்விக்கான பதில் ஆம்
ReplyDeleteதூள் ஜாக்கி.
ReplyDeleteஎனக்கும் மிக மிக பிடித்த படம் இது..
நான் அதிகமாக பார்த்த படங்களில் இதுவும் ஒன்று..
பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன்..
எனது அந்நாளைய கனவுக்கன்னி அமலாவுக்காகவே நான் 10 தடவை பார்த்தேன் என்பதை உங்களிடம் மட்டும் சொல்லிவிடுகிறேன் ஜாக்கி. யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.
இதேபோல் அனைத்துப் பதிவுகளையும் நீள, நீளமாக எழுதி அடியேனை காப்பாற்றவும்..
தோழமையுடன்
உண்மைத்தமிழன்
எழுத்தாளர் பலகுமாரனை போல் இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்துக் கொள்வது என்பது சாத்தியம் இல்லாத விஷயம். அது யாருக்காவது ஒருவருக்கும் கிடைக்கும் பாக்கியம்//
ReplyDeleteபாக்கியம் இல்லாட்டியும் அப்ப தனித்தனியா வெச்சுக்கலாமா?
அருமையா எழுதிருக்கீங்க நண்பரே.நானும் நிறைய முறை பாத்துட்டேன்.ராஜா பாட்டிலே உள்ள இளமை துள்ளல்...அருமைதான்
சூப்பரா எழுதியிருக்கீங்க.
ReplyDeleteநன்றி செல்வகுமார் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
ReplyDeleteஒரு மசாலா படம் உங்களை இந்த அளவு பாதிச்சிருக்கு ஜாக்கி... நிஜமாகவே மணிரத்னம் பாராட்டுக்குரியவர்தான்..
ReplyDelete