மீண்டும் தினமலரின் நக்கல்....

ஒரு இனம் அடிபட்டு செத்து சுண்ணாம்பாக வீழ்ந்து கொண்டு இருப்பதை பார்த்து ரசித்து ருசித்து அந்த இனத்து மொழியிலே செய்தி வெளியிட மிகவும் தைரியம் வேண்டும்.

அந்த தைரியம் தினமலர் பத்திரிக்கைக்கு உண்டு என்பேன்.


எம் மக்களை பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விடுங்கள் என்று சொல்லி நிராயுதபாணியாக வந்த மக்களை குண்டு விசி கொன்று குவித்து வருகிறது சிங்கள ராணுவம். அது பற்றி எந்த கேள்வியும் எழுப்பவில்லை. எழுப்பவும் மாட்டார்கள். ஏனென்றால் தமிழர்களுக்கு உள்ளே ஒற்றுமை இல்லை.

முல்லை தீவு பற்றிய உண்மையான நிலை இதுவரை தெரியவில்லை ஆனால் அதற்க்குள் முல்லை தீவு வீழ்ந்தது என்று தலைப்பு போட்டு விட்டார்கள்

இன்றைய எல்லாதமிழ் பத்திரிக்கைகளின் தலைப்பு செய்திகளையும் உலக தமிழ் மக்கள் முன் வைக்கிறேன்.
நீங்களே ஒரு நியாயம் சொல்லுங்கள்.





நான் முன்பே சொன்னது போல் தினமலர் பத்திரிக்கை சாய்பாபா, காசி ,ராமேஸ்வரம் செய்திகளை வெளியிட்டு நங்கநல்லூர், மாம்பலம்,மயிலாப்பூர் வாசிகளின் மனதில் இடம் பிடியங்கள். எம் தமிழ் மக்களுக்கு வேண்டாம்.

ஒரு வேண்டுகோள் அப்படியே முல்லைதீவு வீழ்ந்தாலும் அது பற்றி ஒரு இலவசஇனைப்பு போட்டுவிடாதீர்கள்....


அன்புடன்/ஜாக்கிசேகர்

17 comments:

  1. மீடியக்கள் யோகியதை மும்பை தாக்குதலின் போதே தெரிந்துவிட்டது..என்ன செய்ய முடியும் ஜாக்கி சார்

    ReplyDelete
  2. ஜாக்கி,

    சூடு, சொரணை அற்ற இனம் எது என்று யாராவது
    கேட்டால் இனிமேல் தைரியமாக சொல்லளாம்,தமிழினம்
    என்று.
    அதுவும் தினமலரின் தமிழின விரோத போக்கு மாறவேயில்லை.
    அவர்களுக்கு பாடம் புகட்ட ஒரே வழி.அந்த "அசிங்க தாளை"
    புறக்கணிப்பது தான்.எங்கள் வீட்டில் இப்போது வேறு நாளிதழ் வாங்க
    ஆரம்பித்து விட்டோம்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு... இன்னொரு விஷயம் தெரியுமா...எனது நண்பன் ஒரு பிரபல பத்திரிகையில் நிருபராக உள்ளான். அவன் சொன்னது....

    " குமுதம் ரிப்போர்ட்டர், ஜு.வி இரண்டிலும் ஈழம் பற்றி தொடர் எழுதும் எழுத்தாளர்களிடம் சிங்கள அரசு சார்பில் பேசுகிறோம் என்று ஒரு தொலைபேசி. எவ்வளவு வேண்டும்? புது வீடு வேண்டுமா? தொடரை நிறுத்துங்கள் என்று பேரம் பேசி இருக்கிறார்கள். பிறகு தொடர்பு கொண்டபோது யாரும் எடுக்கவில்லை.

    கல்மடு குளம் உடைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் எவளவு என்று தெரியவில்லை. அதை மறைபதற்கே சிங்கள அரசு பத்திரிகைகளையும் வளைத்துள்ளது. இலங்கையில் துப்பாக்கி காட்டி மிரட்டியும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் பணத்தை காட்டி கெஞ்சியும் புலி ஆதரவு அல்லது ஈழ தமிழர் ஆதரவு செய்திகளை போடக் கூடாது என்று கெஞ்சி உள்ளார்கள். தினமும் இலங்கை தூதரகத்தில் பத்திரிக்கை, அரசியல் வாதிகளுக்கு பார்ட்டி நடக்கிறது.

    மேலும் அந்த பாரம்பரிய என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிக்கை, டெலிகிராம் பத்திரிக்கை பற்றியும் ஒரு செய்தி சொன்னான். // திடீர் instruction from management. நேற்று வந்துள்ளது. அதாவது புலி ஆதரவாகவோ ஈழ தமிழர் ஆதரவாகவோ செய்தி எந்த தலைவர் அல்லது யார் கொடுத்தாலும் போடக் கூடாது என்பதாம். //

    அதனால் தான் இன்று எல்லா பத்திரிகையும் தமிழோசை தவிர அந்த செய்திகளை தவிர்த்துள்ளன.

    ReplyDelete
  4. இந்த நாய்கள் சிங்களன் காலை நக்கிக் குடிக்க கொழும்பில் உட்கார்ந்து குப்பை கொட்ட வேண்டியதுததானே... இங்கே இதுகளுக்கு என்ன வேலை...

    ReplyDelete
  5. தினமலர் ஆச்சு வடிவம் மற்றும் இணைய வடிவத்தை புறக்கணியுங்கள் என்று பல முறை பின்னூட்டம் எழுதி ஆயிற்று.

    இருந்தும், தினமலரிடம் பணம் வாங்கி கொண்டு தினமலர் பற்றியே பதிவு எழுதும் தினமலரின் ஏஜெண்டுகள் மைக், ஜாக்கி சேகர் போன்றோரை என்ன சொல்ல.

    இனிமேல் உங்களின் பதிவுகளை புறக்கணிப்பதை தவிர எமக்கு வேறு வழி இல்லை, மன்னிக்கவும்.

    குப்பன்_யாஹூ


    உண்மையாக தமிழர்க்கு உதவி செய்ய எண்ணம் இருந்தால் தினமலர் இணைய தளத்தை புறக்கணியுங்கள், அதன் மூலம் தினமலருக்கு பொருளாதார பின்னடைவு உண்டாகும்.

    ReplyDelete
  6. நான் எட்டாவது படிக்கும் போது அந்த பத்திரிக்கை வாசித்ததாக ஞாபகம். எங்கள் குமுறல்களை இப்படித்தான் காட்ட முடியும். இலங்கை மண்ணை நாங்கள் மிதித்தது கூட கிடையாது. ஆனால் அங்கு இருக்கும் தமிழர்கள் கூட ஏதும் பேசாமல் இதுவரை மௌனமாய் இருப்பது ஏன்.....


    நாங்களாவது எங்கள் கோபத்தை இந்த அளவுக்காக பதிவு செய்கிறோம் அதே மண்ணில் இருக்கும் தமிழர்கள்?????????????????

    குப்பன் உங்கள் கோபம் புரிகிறது.....

    ReplyDelete
  7. நன்றி ஜமால் தங்கள் வகைக்கு

    ReplyDelete
  8. அக்னி நீங்கள் சொல்வது போல் மீடியாக்கள் யோக்கியதை தெரிந்தது. ஒரு முன்னாள் பிரதமர் இறந்த செய்தி ஒரு வரி கூட சொல்லவில்லைதான்...

    ReplyDelete
  9. அதுவும் தினமலரின் தமிழின விரோத போக்கு மாறவேயில்லை.
    அவர்களுக்கு பாடம் புகட்ட ஒரே வழி.அந்த "அசிங்க தாளை"
    புறக்கணிப்பது தான்.எங்கள் வீட்டில் இப்போது வேறு நாளிதழ் வாங்க
    ஆரம்பித்து விட்டோம்.//

    நன்றி முகு நியாயமான கருத்து

    ReplyDelete
  10. மேலும் அந்த பாரம்பரிய என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிக்கை, டெலிகிராம் பத்திரிக்கை பற்றியும் ஒரு செய்தி சொன்னான். // திடீர் instruction from management. நேற்று வந்துள்ளது. அதாவது புலி ஆதரவாகவோ ஈழ தமிழர் ஆதரவாகவோ செய்தி எந்த தலைவர் அல்லது யார் கொடுத்தாலும் போடக் கூடாது என்பதாம். //




    சூரன் நீங்கள் சொல்வது போல் இந்த செய்தியை நானும் கேள்வி பட்டேன், என்ன கொடுமை சார் இது...

    ReplyDelete
  11. அரசியல் உங்கள் கோபம் புரிகிறது

    ReplyDelete
  12. தண்ணீரை மிச்சப்படுத்துங்கள். பிள்ளைகள் மலம் கழித்தால் தினமலர் கொண்டு துடையுங்கள். இதே வைத்தியம் இந்தியா டுடேவுக்கும் செய்யப்பட்டது. இன்னும் திருந்தியதாகத் தெரியவில்லை. ஆகவே வசதியுள்ளோர் இந்தியா டுடேவையும், சிக்கனமாக இருக்க விழைவோர் தினமலரையும் பிள்ளைகளின் மலம் துடைக்கப் பயன்படுத்துவீர். வாங்க இயலாதோருக்கு வாங்கி அளிப்பதும் கூட மிகப் பெரும் உபகாரமாகும்.

    ReplyDelete
  13. even i too start reduce reading dinamalar

    ReplyDelete
  14. oonly when we clean up dinamalar/The hindu&Thuglak,we can redeem Tamilnadu from bramin media! who will do it?

    ReplyDelete
  15. ஊடகங்களை புறக்கணிப்பு மட்டுமல்ல
    உணர மறுக்க வரை,
    உளறல்கள் எல்லாம்
    ஊர்வலம் வந்து கொண்டுதான் இருக்கும்

    ReplyDelete
  16. நான் முன்பே சொன்னது போல் தினமலர் பத்திரிக்கை சாய்பாபா, காசி ,ராமேஸ்வரம் செய்திகளை வெளியிட்டு நங்கநல்லூர், மாம்பலம்,மயிலாப்பூர் வாசிகளின் மனதில் இடம் பிடியங்கள். எம் தமிழ் மக்களுக்கு வேண்டாம்.///

    தினமலர் முக்கியமாக எதிர்மறை கருத்துகளை வெளியிட்டு வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் பத்திரிக்கை...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner