அவர் நேற்று எல்லா மனிதர்கள் போலவே அவருக்கும் தூக்கம் கலைந்து எழுந்தார். எழுந்தவுடன் நேராக யாருடைய உதவியும் இல்லாமல் நடந்து சென்றார், கண்ணாடியில் முகம் பார்த்தார் லேசாக கண்ணகள் சற்று வீங்கி இருந்தன.
தமிழ்நாட்டில் இருந்து இலங்கை பிரச்சனை, போர் நிறுத்தம் என்று ஏதாவது பிராது வந்தால் அதனை எப்படி எதிர் கொண்டு மசப்பலாம் என்று அவர் இரவு முழுக்க யோசித்தால்தான் அந்த கண்களில் வீக்கம்.
கண்களில் ஊலை கூட கொஞ்சம் தள்ளி இருந்தது. யாருடைய உதவியும் இல்லாமல் அவராகவே துடைத்து கொண்டார். தலையில் கட்டிய டர்பன் லேசாக கலைந்து இருந்தது.
பிறகு மனைவி கொடுத்த காபியை அவராகவே குடித்து விட்டு , காலை செய்திகனை எவர் துணையும் இன்றி அவராகவே படித்தார்,
நெஞ்சில் தீரம் உள்ள அவர் சற்றும் எதிர்பாராமல் பாத்ரூம் போய் எல்லாம் முடித்து அவராகவே கால் கழுவி கொண்டார்.
அவராகவே யோசித்தார் அன்று அவர் செய்ய வேண்டிய வேலைகளை நினைத்து பார்த்தார் ,
அப்புறம் யோசித்தார் யாரோ ஒரு அமெரிக்க நண்பர் ஓபாமா ரயிலில் போன விஷயத்தை போட்டுக்கொடுக்க இன்று தான் என்ன செய்வது என்று யோசித்தார்
பிறகு
தினகரன் நாளிதழில் வந்தது போல்அவர் ஆர்டிஓ அலுவலகத்துக்க நேரில் சென்றார்...
ங்கொய்யால நேர்ல ஆர்டிஓ ஆபிஸ் போனார்னா,இந்தனை வருஷம் மத்த வேலைகளை எல்லாம் எந்த கொய்யா பார்த்தது.
இபி பில் யார் கட்டியது,
பேங்கில பணம் யார் கட்டறது,
பாஸ்போர்ட் எடுக்க யார் போனது ,
அரிசி மளிகை காய்கறி எவன் வாங்கி வந்தது,
அவரென்ன தேவதூதரா?
இதையும் செய்தியாக்கும் இந்திய மீடியாக்கக்கு என் கண்டனம்...
அன்புடன்/ஜாக்கிசேகர்
\\இதையும் செய்தியாக்கும் இந்திய மீடியாக்கக்கு என் கண்டனம்...\\
ReplyDeleteவழிமொழிகிறேன் ...
நியாயமான கோபம் ஜாக்கி... ஆனா நம்ம ஆட்களை திருத்த முடியாது.
ReplyDeleteremba alagana kelvikal
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும் பல அரைவேக்காடு பிரபலங்கள் கூட உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே காரியம் சாதிக்கும் நாட்டில் ஒரு பிரதமர் ஆர்.டி.ஒ அலுவலகம் சென்று லைசென்ஸ் வாங்குவது ஒரு முக்கிய செய்தியாகி விடுகிறது.
ReplyDelete\\இதையும் செய்தியாக்கும் இந்திய மீடியாக்கக்கு என் கண்டனம்...\\
ReplyDelete--ரிப்பிட்டேய்ய்ய்ய்
நானும் வழி மொழிகிறேன்.
ReplyDeleteவணக்கம்!
கவித்தேநீர்
அருந்த வலைப்பக்கம்
வருக!!
தேவா..
இதன் அர்த்தம் அது அல்ல....
ReplyDeleteஇது சாதாரண மக்களுக்கு சொல்லும் அறவுரை...
பிரதமரே, கவரிலே ரூபாய் வைத்து டேபிலுக்கு கீழே கொடுக்கிறார்...
ம** நையாண்டி நைனா, நீலாம் அப்ப எவ்ளோ சாதாரணம் என்று சொல்லுகிறார்கள்.
\இதையும் செய்தியாக்கும் இந்திய மீடியாக்கக்கு என் கண்டனம்...\\
ReplyDelete:)
நன்றி ஜமால் தங்கள் வருகைக்கு
ReplyDeleteநன்றி வெண்பூ தங்கள் பிரச்சனைகள் காணாமல் போய்விட்டதா?
ReplyDeleteநன்றி கார்த்தி
ReplyDeleteமோகன் நீங்கன் சொல்வது ஏற்றுக்கொள்ள கூடியது என்றாலும் இது கொஞ்சம் டு மச்
ReplyDeleteஷாஜி நன்றி
ReplyDeleteதெவன்மயம் அவசியம் வருகிறேன்
ReplyDeleteநைனா அருமையான நக்கல்
ReplyDeleteநன்றி நவின்
ReplyDelete