( பாகம் / 2)கால ஓட்டத்தில் காணாமல்போனவைகள்.. (கோலங்கள்)





போன பதிவில் ஹரிக்கேன் விளக்கு பற்றி எழுதி இருந்தேன். நான் நினைத்துகூட பார்க்காத அளவில் அந்த மறு பதிவுக்கு பதிவர்கள் படித்து பின்னுட்டம் இட்டும் தமிலிஷ்ல் ஓட்டு போட்டும் என்னை திக்கு முக்காட வைத்து விட்டீர்கள்.அதை விட முக்கியம் இரண்டு முன்று பேர் தெளிந்த நிரோடை போன்றஎழுத்து என்று வேறு பாராட்டிவிட்டார்கள். இன்னும் தெளிந்ததாய் எழுத முயற்ச்சிக்கிறேன்.

இந்த இரண்டாம் பாகத்தி்ல் நாம் பார்க்க போவது கோலங்கள் கோலங்கள அழகான கோலங்கள் என்று சன்டிவியில் 5 வருடமாக ஒளிபரப்பாகி வரும் கோலங்கள் தொடரின் தலைப்பு பற்றியது இது.

கோலங்கள்

கோலம் பொதுவாக தமிழகத்தில் மார்கழி மாதம் மட்டும் ரொம்பவும் பர பரப்பபாக தமிழக பெண்கள் கோலம் போடுவார்கள். கார்த்திகை மாதமே மார்க்கெட்டில் கோலப்புத்தகம் , கோலக்கட்டியும் கன ஜோராக வியாபாரம் கலை கட்ட தொடங்கும்.கோலப்புத்தகம் வாங்கி கோலகட்டியால் முதலில் தரையில் சிக்கு கோலங்கள் மற்றும் ஊடு புள்ளி வரிசை கோலங்கள் போட்டு பழகுவார்கள்.

கோலப்புத்தகத்தை நம்பி சானி தெளித்து தெருவில் உட்கார்ந்தால் அலங்கோலம்தான். ஏனென்றால் நிறைய டிசைன் கோலங்கள் பிரின்ட் மிஸ்ட்டேக்கால் சரியாக வராது. அதே போல் சிக்கு கோலத்தை பொறுத்த வரை ஒரு முறை பேப்பரில் அல்லது தரையில் ஒரு முறை போட்டு பார்த்த பிறகே வாசலுக்கு வர வேண்டும். அப்போதுதான் தெருவில் மானம் கப்பல் ஏறாமல் தப்பிக்கும்.

பொதுவாக இந்த கோலம் என்பது மார்கழி குளிரில் பெண்கள் படுத்து ரெஸ்ட் எடுத்துவிடக்கூடாது என்பதற்க்காகவே உருவாக்கப்பட்ட ஒரு கஸ்டம் இது என்பேன். இது தெரியாத தமிழக பெண்டிர் யாரோ ஒருவர் உசுப்பி் விட்டதற்க்கு இன்றுவரை ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

பெண்களை பொறுத்தவரை அழகாக இருக்கிறது என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு எந்தளவுக்கு வேண்டுமானாலும் காரியத்தை சாதித்து கொள்ளலாம். வெளியே போய் விட்டு வீட்டுக்குள் போகும் போது வீட்டு ஆண் இந்த தெருவிலேயே உன் கோலம்தான் சூப்பரா இருக்கு, பக்கத்து விட்டு இந்துமதி போட்ட கோலம் உவ்வே....

கலரா அடிச்சு இருக்கா? அவ மூஞ்சி மாதிரியே இருக்கு என்று சொல்லும் போது நம் வீட்டு பெண்களுக்கு பக்கத்து வீட்டு இந்து மூஞ்சி அசிங்க படுத்தபட்டதில் அவ்வளவு ஒரு சந்தோஷம் இருக்கும்.

மறுநாள் நேற்றை விட இன்று கோலத்தில் கலர் அழகாக சிறிதும் பிசிர் தட்டாமல் இருக்கும். பக்கத்து வீட்டு இந்து மூஞ்சி நல்லா இல்லை என்று சொன்னவன் நம்ப மூஞ்சி நல்லா இல்லை சொல்லறதுக்கு ஒரு நொடி போதாது.. என்ற பயமே காரணமாக இருக்கும். கோலம் அற்புதமாக இருக்கும்.

எங்கள் தெருவில் என் அம்மாவுக்கு போட்டியே இல்லை, என் அம்மா மிக அழகாக கோலம் இடுவாள். நான் மெயின் ரோட்டில் இருக்கும் என் அத்தை வீட்டுக்கதான் செல்வேன் எங்கள் வீட்டு வாசல் ரொம்பவும் சின்னதாக என் அம்மாவின் கலை ஆர்வத்தை ஒருஅளவுக்கு மேல் வளர விடாமல் எதிர் வீட்டு சுவர் தடுத்தது.

என் அத்தை வீட்டில் கோலம் போட்டு கலர் கொடுத்து அப்புறம் சின்ன அத்தை வீட்டுக்கும் போய் கலர் கொடுத்து கோலத்தை நிறைவு செய்வோம்.சில நாட்களில் விடியல் 5 மணிக்கு ஆரம்பிக்கும் கோல புராஜக்ட் சில நாட்களில் காலை ஏழுமணிவரை இழுத்து செல்லும்.

கோலத்தை பொதுவாக விடியலில் போட்டு முடித்து விடுவது நலம் இல்லையென்றால் உங்கள் கோலக்கலையை பக்கத்து வீட்டு ஆட்கள் ஊத்த பல்லுடன் வந்து கலர் கொடுப்பதில் அட்வைஸ் செய்கிறேன் என்று உட்கார்ந்து, அந்த கோலத்தை அலங்கோலமாக்கி, இலங்கை பிரச்சனை போல இடியாப்ப சிக்கலாக்கி விடுவார்கள்.

கோல ஜீரம் போதுவாக மார்கழி மாதம் தொடங்கி தை மாதம் 3 நாட்கள் வரை தொடரும். அப்போது தமிழக பேண்கள் பொங்கலை வர வேற்க்க தங்கள் விட்டு வாசலில் கோலமிடுவர் அப்போது யாரும் போகி நல்வாழ்த்து பொங்கல் நல்வாழ்த்து என்று எழுதாமல் ஹேப்பி பொங்கல், ஹேப்பி மாட்டு பொங்கல் என்று எழுதுவார்கள் என்னவோ ஜார்ஜ் புஷ் கோலத்தை வந்து பார்க்கறப்ப புரியாம போயிடறாமாதிரி....

கோலத்துக்காக என் அம்மா முதல் நாள் சாயிந்திரமே தண்ணி தளும்ப தெளித்து தரையை வணக்கத்துக்கு எடுத்து வந்து மறுநாள் காலை பசு மாட்டுசானியை தண்ணீரில் கரைத்து வாசலில் தெளித்து ஒரு ஐந்து நிமிடம் கழித்து தென்னை துடப்பத்தால் பெருக்கி விட்டு அந்த தரையில் கோலமாவால் கோலம் போட்டால் அதன் அழகே தனிதான்.

அதே போல் போட்ட கோலத்துக்கு பார்டர் கட்டுவது என்பது ரொம்பவும் அழகான விஷயம் மட்டும் அல்ல கவர்ச்சியான விஷயமும் கூட....
எல்லார் வீட்டு கோலங்களையும் அலசி ஆராய்வோம் எந்த வீட்டு கோலம் ஆழகாக இருக்கிறது என்று... அதே போல் அட்டு பிகரா இருக்கும் அது போடற கோலத்தை யாராலயும் அடிச்சுக்க முடியாத படி ரொம்ப டாப்பா இருக்கும்

இப்போதெல்லாம் கிராமங்களில் கூட கோலம் போடும் பழக்கம் அரிதாகி வருகிறது. சென்னையில் பெண்கள் இரவு பத்து மணிக்கே வாசலில் கோலம் போட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி விட்டு உள்ளே அடுத்ததாக தன் கணவருக்கு சில திறமைகளை காட்ட எத்தனிக்கும் போதே டூ வீலர், கார்காரர்கள் கோலத்தின் மேல் ஏற்றி நாசப்படுத்தி விடுகிறார்கள்.

அதே போல் கோலம் போடும் போது எதிர் வீட்டு பசங்களை டாவு கட்டுவதும் நிறைய நடக்கும், போய் பால் வாங்கி வருவது போலவும், தண்ணி தூக்கி வருவது போலவும் இளவட்டங்கள் ஷோ காட்டுவார்கள். ஓ இவன் இந்தளவுக்கு குடும்ப பொறுப்பு உள்ளவனா? என்பது போல் நடந்து கொள்வார்கள்.


இப்போதெல்லாம் பெண்கள் மார்கழியில் எழுந்து கோலம் போடும் விகிதாச்சாரத்தின் அளவு குறைந்து கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் எழு மணியில் இருந்து எட்டு மணிக்கே துங்கப்போய்விடுவார்கள். இப்போது பத்து மணிக்கு டைட் போலிஸ் டிரஸ்சில் ராதிகா சரத் குமார் வந்து மிரட்டினாலும் தூங்க போக மாட்டேன் என்கிறார்கள்.

முன்பெல்லாம் மார்கழி மாசம் என்றால் விடியலில் குளிருக்கு இதமாக போர்வையில் சுருன்டு வெது வெதுப்பான சூட்டில் படுத்து இருக்கும் போது 4 மணிக்கு பறையடித்து செல்வார்கள், அடுத்தது மாரியம்மன் கோவிலில் எல் ஆர் ஈஸ்வரி கணீர் குரலில் செல்லாத்தா எங்க மாரியாத்தா என்று பாட அதே நேரத்தில் முருகன் கோவிலில், பார் வேந்தே என்னை பார் வேந்தே பாட்டுடன் வந்து இருக்கும் தருமியின் வணக்கம் என்ற திருவிளையாடல் ஒலிச்சி்த்திரம் ஓடத்தொடங்க, என் அம்மா மெல்ல எழுந்து புடவை சரி செய்து தலை முடியை வாரி கொண்டை இட்டு சானி தெளிக்க ஆரம்பிப்பாள்

பனி பெய்வதால் தலையில் ஒரு மங்கி குள்ளாய் போட்டுக்கொண்டு ,நேற்று இரவே தரையில் பயிற்ச்சி பெற்ற கோலம், ஹரி ஓம் என்று ஒரு புள்ளியில் ஆரம்பித்து மிக பெரிதாய் மிக அழகாய் விரியும்,
கலர் கொடுக்கிறேன் பேர்வழி என்று முழங்கை வரை கலர் அப்பிக்கொண்டு உதட்டருகே ஊறல் எடுக்க அந்த கையாலேயே சொரிந்து கொள்ள அது திடிர் மீசையாக காட்சி அளிக்க நக்கலும் நையான்டியாக அந்நாளைய மார்கழி பொழுதுகள் விடியும்.

கோலம் கூட பெண் வாழ்கை போன்றதுதான் மிக அழகாக போட்டவுடன் காட்சி அளிக்கும் கோலங்கள் கொஞ்ச நேரத்தில் அல்லது போகப் போக அதன் பொலிவுகளை இழந்து விடுகின்றன.

எங்காவது பணக்கார வீட்டின் போர்ட்டிக்கோவில் போட்ட கோலங்கள் மட்டுமே அன்று சயாந்திரம் வரை அதிகாரத்தால் தாக்கு பிடிக்கின்றன

இப்போதுள்ள வயது பெண்கள் அந்த சந்தோஷத்தை இழந்து விட்டார்கள். என் மனைவி கோலம் போடும் அழகே அழகு.....

ஒரு டம்ளரில் இருக்கும் தண்ணியை
படிக்கட்டுதான்டி தெளித்து அதில் கோலக்கட்டியை எடுத்து நாலே நாளு புள்ளியை வைத்து ஒரு இழுப்பு இழுத்து குளித்து வேளைக்கு கிளம்பிவிடுகிறாள்.

என் அம்மா வேலைக்கு போகாதவள் சந்து புள்ளி சிக்கு கோலம் மாண் கோலம் மயில் கோலம் எல்லாம் போடுவாள்,ஆனால் என் மனைவி?


அன்புடன் / ஜாக்கிசேகர்

8 comments:

  1. என்னங்கண்ணா இன்னும் ஜமாலை காணோம் ?

    ReplyDelete
  2. இப்பவேல்லாம் முதல் நாள் இரவை கோலத்தை போட்டு விட்டு தூங்கிடுறாங்க

    ReplyDelete
  3. ஜமால் ஏதோ வேலையாக இருக்கிறார் போல் கண்டிப்பாக அவர் விஜயம் செய்வார்

    ReplyDelete
  4. நாகை சிவா நன்றி.... தங்கள் வருகைக்கு.

    ReplyDelete
  5. /
    சென்னையில் பெண்கள் இரவு பத்து மணிக்கே வாசலில் கோலம் போட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி விட்டு உள்ளே அடுத்ததாக தன் கணவருக்கு சில திறமைகளை காட்ட எத்தனிக்கும் போதே டூ வீலர், கார்காரர்கள் கோலத்தின் மேல் ஏற்றி நாசப்படுத்தி விடுகிறார்கள்.
    /

    ஹா ஹா
    செம கிண்டல்!!

    ReplyDelete
  6. Thanks yaar !! got remembered of my school days !!! oru periya pootiyee nadakum.. pleasent memories...

    ReplyDelete
  7. 3 ம் படத்தில் "கலாச்சாரக் கன்றா"க ,நித்திரைக் கண்களுடன் கோலமிடும் சிறுமி கொள்ளை அழகு!
    இந்த கோலம் என்பது ஈழத்தில் பொங்கலுடன் தான் காணலாம். இப்படத்திலிருக்கும் கோலங்களுடன்
    ஒப்பிட்டால் அவை அலங்"கோலங்களே"...இக்கோலக் கலை நம் நாட்டில் வெகுகுறைவு.
    சில ஐயர் வீடுகளில் பழைய தலைமுறையினர் சின்னதாக கோலமெனும் பெயரில் நிலத்தில் கிறுக்கியிருப்பார்கள். நேர்த்தியானவை வெகுகுறைவு.
    நிற்க...இக்கோலமிடுவதன் தார்மீகக் கருத்தை தவறவிட்டுவிவிட்டோம்.
    கோலம் அரிசிமாவால் தான் போடுவது வழமை. காரணம் எறும்பு போன்ற ஜீவராசிகளுக்குத் தீனி இடுவதாக வாரியார் கூறக் கேட்டேன்.
    ஆனால் இப்போ அந்த தார்மீகம் கோலப்பொடியால் மறைந்து விட்டது.
    மனிதனுக்கே அரிசியில்லை ,எறும்புக்கா???
    கால ஓட்டத்தில் இன்னும் என்னென்ன காணாமல் போகுமோ??
    அருமையாக சுவையாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner