உண்மையை போட்டு உடைத்தார் செல்வி ஜெயலலிதா....


நேற்று செல்வி ஜெயலலிதா பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு உண்மையை பகிங்கரமாக போட்டு உடைத்தார்.

அவர் பின் வருமாறு பத்திரிக்கையாளர்களிடம் சொன்னார்...

இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும்.
போர் நிறுத்தப்பட வேண்டும் என்றால் விடுதலைபுலிகள் ஆயுதத்தை கீழே போட்டு சரணடைய வேண்டுமாம்

புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் போர் நின்று மக்கள் நிம்மதியாக வாழ்வார்களாம்

எவ்வளவு பெரிய உண்மையை மக்கள் மன்றத்தில் வைத்துள்ளார். அவர்கள் ஆயுதத்தை கீழே போட்டால் போர் நின்று விடுமாம்.

அதுதான் சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே.... அதை சொல்வதற்க்கு எதற்க்கு நீங்கள் எதிர்கட்சி தலைவி...

அந்த கருத்துக்களை நாங்களே சொல்லிவிடுவோமே....

அவர்கள் தனி அரசாங்கம் நடத்தியவர்கள், கட்டு கோப்புக்கு பெயர் போனவர்கள்.
அவர்கள் மட்டுமே தமிழர்கள் உதை பட்டார்கள் என்றால் உடன் எதிர்த்து கேள்வி கேட்பவர்கள்.

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற சட்டதிட்டத்தோடு வாழ்பவர்கள்.

அவர்கள் இதுவரை சொகுசு வாழ்க்கை வாழாதவர்கள். இலங்கை பிரச்சனையை இதுவரை பார்த்வர்கள் சிங்கள தமிழர் இனைந்து வாழ்வது என்றுமே சாத்தியமில்லை என்பதை அறிவார்கள். சில பல தவறுகள் அவர்கள் பக்கம் இருக்கலாம் னால் ஈழத்தமிழர்கள் புலிகள் இல்லாமல் அவர்கள் இல்லை.புலிகள் ஆயுதம் தூக்கியது பொழுது போக்குக்கு அல்ல.. தன் இனத்து மக்களுக்காக போராட...அதே போல் ஆயுதப்போராட்டத்தையும் அவர்கள் அயுதத்தை தூக்க வைத்ததும் சிங்கள பெரிணவாத அரசுதான் என்பதை உலக மக்கள் எல்லோருக்கும் தெரியும்

செல்வி சொல்வது போல் ஆயுதங்களை அவர்கள் தீழே போட்டு விட்டார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்,அடுத்து அங்கு நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் செல்வி பொறுப்பு ஏற்றுக்கொள்வாரா? இல்லை அடுத்தக்கட்ட அரசியல் தீர்வு ஏதாகினும் கைவசம் வைத்து இருக்கிறாரா?போரில் மக்கள் இறப்பது சகஜம் என்றவர், இப்போது நான் கூறிய கருத்தை மாற்றிக்கூறிவிட்டார்கள் என்றார்.


ராமேஸ்வரத்துக்கு பக்கத்தி்ல் கூப்பிடும் தூரத்தில் இருக்கும்இலங்கையில் நடக்கும் படுகொலையை கண்டிப்பதை விட்டு விட்டு காசாவில் போர் நிறுத்தம் வேண்டும் என்றவர்


டான்சி கேசில் கையெழுத்து என்னுடயதில்லை என்று பல்ட்டி அடிக்க நீதி மன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்.

நானும் மனுஷிதானே தவறு செய்வது இயல்பு என்றவர்...


இலங்கை பிரச்சனையை அவர் முழுதாக அறிந்து இருந்தால் அப்படி சொல்லி இருக்கமாட்டார்.

200 நாட்கள் கொடநாட்டில் தங்கி மக்கள் பிரச்சனைக்காக அறிக்கை போர் நடத்தியவர்.


சென்னைக்கு பக்கத்தில்50 கிலோ மீட்டரில் இருக்கும் திருவள்ளுரு ஊருக்கே ஹெலிகாப்படரில் சென்று அரசு பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்.


ஆமாம் அவருக்கு எப்படித்தெரியும்?
இழப்பின் வலியையும் இடப்பெயர்தலின் வேதனையும்.....அன்புடன்/ஜாக்கிசேகர்

10 comments:

 1. pro ltte.. you guys will not change.. u shoudl also be punished like how http://vayal-veli.blogspot.com was punished yesterday..!

  ReplyDelete
 2. கார் டயரை விழுந்து கும்பிடும் கபோதிகளைக் குறை சொல்ல வேண்டும்.
  நீங்கள் தமிழர்களா?
  உங்கள் உடம்பில் என்ன ஓடுகிறது?
  மானங்கெட்டவர்களே ஒரு நிமிடம்
  சிந்த்தித்துத் தொலையுங்களேன்.

  ReplyDelete
 3. //ஆமாம் அவருக்கு எப்படித்தெரியும்?
  இழப்பின் வலியையும் இடப்பெயர்தலின் வேதனையும்.....//

  உண்மைதான்!

  ReplyDelete
 4. உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமாயிருக்கு...

  ReplyDelete
 5. பின்வாசல் வழியாக வரும் அளவுக்கு உங்கள் வீரம் மெச்சதக்கது. உங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வெண்டிய அவசியம் இல்லை.பதிவர் நித்யகுமாரன் அளித்த பதில்தான் உங்களுக்கும், உங்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் நான் பிறக்கும் போது கர்ணனின் கவச குண்டலம் போல் பிளாக்கோடு பிறக்கவில்லை...

  ReplyDelete
 6. நித்யா, நீங்கள் பரமசிவன் கழுத்தில் உளள பாம்பு நீங்கள் இன்னம் பேசுவர்கள் இன்னமும் பேசுவீர்கள்.

  உங்களை நினைத்தால் அதைவிட பாவாமாய் இருக்கிறது.

  ReplyDelete
 7. அவர் இன்னொன்றையும் சொல்வார். தமிழ் நாட்டில் அ.தி.மு.க தவிர்த்து எந்த எதிர்க்கட்சியும் இல்லையென்றால், தேர்தல் கலவரங்கள் இருக்காது. மக்களும் சுபிட்சமாக வாழ்வார்கள். என்றும் சொல்வார்.

  ReplyDelete
 8. புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் போர் நின்று மக்கள் நிம்மதியாக வாழ்வார்களாம்
  எவ்வளவு பெரிய உண்மையை மக்கள் மன்றத்தில் வைத்துள்ளார். அவர்கள் ஆயுதத்தை கீழே போட்டால் போர் நின்று விடுமாம்.
  அதுதான் சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே.... அதை சொல்வதற்க்கு எதற்க்கு நீங்கள் எதிர்கட்சி தலைவி...

  jackiesekar,
  புலிகளை அதை செய்யும் படி தயவு செய்து சொல்லுங்க இலங்கை தமிழர் நிம்மதியாக இருக்கலாம்.

  ReplyDelete
 9. போட உன் அக்கா கற்பழிக்கபட்டல் நின்ரு வேடிக்கை பார்

  ReplyDelete
 10. அம்மாவை குறை சொல்லி என்ன பயன் அவர்களுடன் இருப்பவர்கள் அப்படி பட்டவர்கள் , தமிழ்நாட்டு மக்கள் அப்படித்தான் ஆனால் தமிழன் அப்படிஇல்லை , தமிழ்நாட்டில் வசித்தது தமிழ் பேசினால் மட்டும் , அவர் தமிழன் அல்ல, உணர்வாலும் உள்ளத்தாலும் ஒன்றி சிந்திபவனே தமிழன் அப்படிப்பட்ட தமிழன் தமிழ் நாட்டில் மிகக் குறைவு கரணம் வந்தவர்களை எல்லாம் வரவேற்று தமிழனாக்கிவிட்டு, தமிழன் தன்னையே அழித்து கொண்டு இருக்கிறன். இப்படியே போனால் தமிழ் மட்டுமல்ல தமிழனும் மெல்ல சாவான் ,

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner