இலங்கையில் (களை) பிடுங்க போகும் சிவசங்கர மேனனுக்கு வாழ்த்துக்கள்

எல்லாம் ஓய்ந்து போய் அனைத்து மக்களும் புலம் பெயர்ந்து முல்லை தீவுக்கு சென்று விட்ட நிலையில் இப்போது இலங்கையில் (களை) பிடுங்க போகும் செயலர் சிவசங்கர மேனனுக்கு வாழ்த்துக்கள்.

அவர் நேரே இலங்கை செல்லாமல் முதலில் டெல்லியில் இருந்து விமாம் முலம் சென்னை வந்து இங்கு, சென்னை டிராபிக் போலிஸிடம் அதுவும் ஸ்பொன்சர் அருகே டிராபிக் ஒழுங்கு படுத்தும் போலிஸிடம் கெஞ்சி கூத்தாடி ஸ்டாப் போர்டை வாங்கி கொண்டு அப்புறம்தான் இலங்கை செல்வதாக வெளியுறவுத்துறையின் நம்பதகுந்த வட்டாரங்கள் முலம் செய்திகள் கிடைத்த வண்ணம் உள்ளன.


இலங்கையில் போர் நிறுத்தம் என்று இந்தியா சொன்னால் இலங்கை மதிக்காது என்றும் அதனால் டிராபிக் போலிஸ் ஸ்டாப் போர்டு வாங்கி செல்வதாகவும் திரு மேனன் அறிவித்து இருக்கிறார்.


தமிழர் துயர் துடைப்பதற்க்காகதான் அவர் தன் பயணத்தல் மாறுதல் ஏற்படுத்தி சென்னையில் இறங்கி சென்னை டிராபிக் போலிஸிடம் ரவுண்டு தகரத்தில் சிவப்பு கலரில்ஸ்டாப் என்று எழுதி இருக்குமே அந்த போர்டை வாங்கி கொண்டு செல்கிறார் என்று நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் இந்த ஐடியா கொடுத்ததே உண்மை தமிழர்களான தமிழக காங்கிரஸ்காரர்கள்தானாம்...

வாழ்த்துக்கள் மேனன் உங்கள் பயனமும் உங்கள் சீரிய முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்


இனி இலங்கை தமிழர்கள் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம்.

நம் தமிழர்களை நினைத்து நொந்தபடியே....
அன்புடன்/ ஜாக்கிசேகர்

5 comments:

 1. :-))))

  'இலங்கையில் (களை) பிடுங்க போகும் செயலர் சிவசங்கர மேனனுக்கு வாழ்த்துக்கள்'

  flesh News......

  மேலும் சிவசங்கர மேனன்
  கேரள குழி பனிகாரம்
  இலங்கை அரசிடம் கொடுத்து போர் நிறுத்தம் செய்ய இயலும் என தங்கபலாலு பி.பி.சி செய்திக்கு அளித்துள்ளார். எந்த ஓரு காலத்திலும் இது போன்ற செய்தியை காங்கரசார் வெளிபடையாக சொன்னதில்லை இதன் காரணமாக இன்று தமிழகம் எங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

  Puduvai Siva

  ReplyDelete
 2. ஐய்யையோ அப்போ வெள்ளை புற வாங்கினு போலியா?

  ReplyDelete
 3. ஒரு கிலோ வெங்காயம் கூட வாங்கிட்டு போகலை தலைவா

  ReplyDelete
 4. மேலும் சிவசங்கர மேனன்
  கேரள குழி பனிகாரம்
  இலங்கை அரசிடம் கொடுத்து போர் நிறுத்தம் செய்ய இயலும் என தங்கபலாலு பி.பி.சி செய்திக்கு அளித்துள்ளார். எந்த ஓரு காலத்திலும் இது போன்ற செய்தியை காங்கரசார் வெளிபடையாக சொன்னதில்லை இதன் காரணமாக இன்று தமிழகம் எங்கும் பரபரப்பு ஏற்பட்டது//  மிக அற்புதம் புதுவை சிவா

  ReplyDelete
 5. ***/இலங்கையில் (களை) பிடுங்க போகும் செயலர் சிவசங்கர மேனனுக்கு..../***

  அதற்காகச் சிறப்புக் கையுறைகள் பத்து சோடி எடுத்துப்போவதை ஏன் குறிக்காமல் விட்டீர்கள்!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner