இயக்குநர் சீமான் என்ற பரிதாப மனிதர்....
சில மாதங்களுக்கு முன்பு எல்லோருமே இலங்கை பிரச்சனைக்காக குரல் கொடுத்தார்கள். அதில் கொஞ்சம் ஓங்கி குரல் கொடுததவர் இயக்குநர் சீமான் என்பது அனைவரும் அறிந்ததே.
முதலில் அவர் இயக்குநர் அமீ்ரோடு கைது செய்யப்பட்டு விடுவிக்கபட்டார் அவர் விடுவிக்கப்பட்டதும் எல்லா இயக்குநர்களும் சிறைசாலை வாசல் சென்றுஅவர்களை வரவேற்று வேட்டு போட்டு கொண்டாடினர்.
திரும்பவும் இலங்கையில் பக்சே பிரதர்ஸ் அவர்கள் புத்தியை காட்டவும், சீமான் வெகுண்டு எழுந்து பேசினார் அவ்வளவுதான் உடனே இங்கு உண்மை தமிழச்சிகளுக்கு பிறந்த காங்கிரஸ்காரர்கள் கோபத்தின் உச்சிக்கு சென்றனர் விளைவு கலைஞரை போய் பார்த்து கண்ணை கசக்கினர் அவ்வளவுதான். படப்பிடிப்பில் இருந்த இயக்குநர் சீமான் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டார். அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது.
அது பற்றி எந்த அமைப்பும் கவலை கொண்டதாக தெரியவில்லை, அவர் அங்கதத்தினராக இருக்கும் இயக்குநர் சங்கம் வாய் மூடி மௌனம் காக்கிறது. பத்து மைக்குகளுக்கு முன் பேட்டி கொடுத்த பாரதிராஜா இப்போதுவரை ஏதும் பேசவில்லை. சீமான் அப்போதும் இப்போதும் ஒரே மாதிரிதான் பேசினார், ஆனால் அவர் மேல் உன்ன ஆதரவு நிலைப்பாடு மட்டும் மாறி விட்டது.
சீமான் பேசினார் அதுவும் உணர்ச்சி வசப்பட்டு, அனால் அதை விட வேகமாகவும் வீரியமாகவும் தொல் திருமா பேசினார். அவரை இதுவரை கைது செய்யவில்லை. இப்போது கைது செய்து விடுவோம் என எச்சரித்து இருக்கிறது தமிழக அரசு அதுகூட தடையை மீறி உண்ணாவிரதம் இருந்தார் என்பதே காரணமாக இருக்கும்.
இருவருமே ஈழத்தமிழர் ஆதரவாளர்கள்தான். ஏன் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணையும் என்றுதான் கேட்கிறேன்.
திருமாவை கைது செய்தால் 20 கடைகள் உடைக்கபடும் , 4அரசுபேருந்து தீக்கிரையாக்கப்படும்.
இயக்குநர் சீமானை கைது செய்தால் யார் கேட்பார்கள்.??
சட்டம் தன் கடமையை செய்யும் என்பது இதுதானோ???
அன்புடன்/ஜாக்கிசேகர்
Labels:
செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
மத்தவங்க எல்லாம் பேசாம இருக்கும்போது எனக்கு வாய் இருக்கு. நான் பேசுவேன் என்று பேசினால் பலனை அனுபவித்தத்தான் ஆகணும்..
ReplyDeleteசட்டத்தை சட்டத்தால்தான் எதிர் கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசக்கூடாது என்பது விதிமுறை என்றால் அதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடுத்துதான் ஜெயிக்க வேண்டும்.
அதைவிடுத்து பொதுமேடைகளில் தொடர்ந்து அதேபோல் பேசி வந்தால் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள். இதுவும் சாதாரண குற்றம் போலத்தான்.. தொடர்ந்து, தொடர்ந்து திருட்டுத் தொழில் செய்தால் மொத்தமாக உள்ளே போடுவார்கள் பாருங்கள்.. அது போலத்தான் இதுவும்.
இது சீமானே இழுத்துக் கொண்டது..
என்னது..? "திருமாவை கைது செய்தால் 20 கடைகள் உடைக்கபடும் , 4 அரசு பேருந்து தீக்கிரையாக்கப்படும்.
இயக்குநர் சீமானை கைது செய்தால் யார் கேட்பார்கள்?"
இருக்கும்ல.. இருக்கும்.. எரிக்குறவங்களை அங்கேயே சுட்டுத் தள்ளிக் காண்பிச்சா நாளைக்கு எவனாவது பெட்ரோல் கேனை தூக்குவானா..? பொறுப்பற்ற அரசியல் கட்சிகள்.. கையாலாகத அரசுகள்.. பலியாவது சாதாரண பொதுஜனங்கள்தான்..
ஓட்டுப் போட்டவர்களைப் பற்றி இந்த ஓட்டுப் பொறுக்கிகளுக்கு என்ன கவலை..?
http://valaipadhivan.blogspot.com/2008/07/said.html
ReplyDeleteமேற்கண்ட தளத்திற்குச் சென்று தங்களுடைய தளத்தில் பின்னூட்டமிட்டவர்களின் பெயர்கள் தெரியும்படியாக செய்ய வேண்டிய வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு, அதன்படி செய்து தங்களது தளத்தினை மேம்படுத்துங்கள்.
நன்றி..
சனநாயக நாட்டுல இதெல்லாம் சகஜம் ஜாக்கி.....
ReplyDeleteகாங்கிரசுக்கோமாளீகள் வாழ்க.............
சனநாயக நாட்டுல இதெல்லாம் சகஜம் ஜாக்கி.....
ReplyDeleteகாங்கிரசுக்கோமாளீகள் வாழ்க.............“‘///
நன்றி அத்திரி என்ன செய்ய..
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு - தந்தை பெரியார்.
ReplyDeleteகுடும்பமும் பதவியும் நம் குலத்துக்கு அழகு - மு.க
தமிழா நீங்கள் சொல்லும் சட்டம் எனக்கும் தெரியும். முல்லை பெரியாற்றில் உச்ச நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை கேரளா மதித்ததா?
ReplyDeleteகாவிரி பிரச்சனையில் கொடுக்க சொல்லி சொன்ன 270 டிஎம்ஸி தண்ணியை கர்நாடகா அமுல் படுத்தியதா?
சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியும் ஏழைகளுக்கு ஒரு மாதிரியுத்தான் நடந்து கொள்கிறது,
சீமான் வாய் பற்றி நீங்கள் ஏதும் சொல்ல வேண்டாம் அது புலம் பெயர்ந்த வலி நிறைந்த ஒவ்வொறு ஈழத்மிழனுக்கும் தெரியும்
//அனால் அதை விட வேகமாகவும் வீரியமாகவும் தொல் திருமா பேசினார். அவரை இதுவரை கைது செய்யவில்லை. இப்போது கைது செய்து இருக்கிறது அதுகூட தடையை மீறி உண்ணாவிரதம் இருந்தார் என்பதே காரணம்.
ReplyDelete//
திருமா கைதா?
மேலதிகத் தகவல்கள் ப்ளீஸ்....
கைது இல்லை தொடந்து உண்ணாவிரதம் இருப்பின் கைது செய்யபடுவார் என தமிழக காவல் துறை எச்சரிக்கை செய்துள்ளது. ஜெக பிழை ஏற்ப்பட்டு விட்டது. சரி செய்து விட்டேன் மன்னிக்கவும்
ReplyDeleteஜாக்கிசேகர்
ReplyDeleteதோழர் சீமானைப்பற்றி யாருமே கவலைப்படவில்லையென்று வேதனைப்பட்டிருக்கிறீர்கள். தோழர் சீமான் மீது ஈழத்தமிழர் ஆழமான பற்று வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களே வெளிப்படையாக பேச முடியாதபடி வாய்ப்பூட்டுகள் போடப்பட்டிருப்பதனை நாம் அறிவோம். உணர்வுகள் எவரிடமும் மழுங்கவில்லை எல்லோரிடமும் இருக்கிறது.
//தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசக்கூடாது என்பது விதிமுறை//
ReplyDeleteஉண்மைத் தமிழன் அய்யா, விதிமுறை யாரு போட்டதய்யா? தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகத்தானய்யா அமெரிக்காவுல கேரன் பார்க்கர்லேருந்து புரூஸ் பெயின் வரைக்கும் சட்ட மேதைங்கள்லாம் பேசுறாங்க? அதுவும் ஜனநாயகந்தானே? யோசிக்கிற மக்களைப் பேச விடாம வைக்க, அல்லது பயமுறுத்தத்தானய்யா சட்டத்துல இல்லாத இந்த "விதிமுறை". அதுக்கு வக்காலத்து வாங்குறதவிடக் கேவலமான பிழைப்பு வேற இல்லை. விடுதலைக்கு எதிராகச் சொம்படித்து நக்கிப் பிழைப்பதைவிட நாண்டுக்கொண்டு சாகலாம், மானமிருந்தால்!
சீமான் ஈரோட்டில் பேசிய போது பார்வையாளர்கள் அனைவருக்கும் புல்லரித்தது உண்மை, ஆனால் இன்றைய நிலையில் தன் வாழ்க்கையை ஓட்டுவதே பெரும்பாடாக இருக்கும் தமிழன் இதற்கு குரல் கொடுக்க தயங்குகிறான்.
ReplyDeleteதமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களின் இரட்டை நிலை தான் கோபத்தை வரவழைக்கிறது
மானமிக்கத் தோழர் சீமான் காங்கிரசின் வாயை அடைப்பதற்காக உள்ளே அடைக்கப் பட்டுள்ளார்.
ReplyDeleteவெளியே வரத்தான் போகிறார்.வந்து அவர் தன்னுடைய உணமையான உணர்வுள்ள உழைப்பால் தலைமைக்குத் தள்ளப் படப் போகிறார்.
அவரது தலைமை இளைஞர்களுக்குத் தேவையான உணர்ச்சி வடிகாலாகத்,தமிழினத்தின் முன்னேற்ற நாற்றங்காலாக அமையப் போகிறது.
சகா உங்கள் கருக்கை வழி மொழிகிறேன் வருகைக்கு நன்றி
ReplyDelete