Ainthu Ainthu Ainthu/2013/ பெஸ்ட் திரில்லர். ஐந்து ஐந்து ஐந்து,சினிமா விமர்சனம்.

மெமரிஸ் ஆப் மர்டர், ஸ்டோக்கர், எட்ஜ்அப்  டார்க்னஸ், என்று பல திரில்லர் படங்களை பார்க்கும் போது
நம் ஊரில் ஏன் இப்படியான திரைப்படங்கள் வரவில்லை என்று யோசித்து பெருமூச்சி விட்டு இருக்கின்றேன்... அந்த பெரு மூச்சினை ஓரளவுக்கு நிவர்த்தி செய்ய வந்திருக்கும் படம்தான் ஐந்து ஐந்து ஐந்து,

இயக்குனர் சசிக்கு நான் ரசிகன்... அவர் இயக்கிய சொல்லாமலே திரைப்படத்தை நிறைய முறை பார்த்து இருக்கின்றேன்.... என் மனதுக்கு மிகவும்  நெருக்கமான படமும் கூட.

டிஸ்யூம் தமிழில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய படம்... லேடர் 49 படத்தின் மையக்கருவை  வைத்துக்கொண்டு  அழகாய் செய்த படம்....

பூ.. தமிழில் ஒரு உலகசினிமா நேர்த்திக்கு இருந்த படம்.... அந்த படத்தை எடுத்த சசி காலம் முழுவதும், காலரை  தூக்கி விட்டுக்கொள்ளலாம். அப்படி ஒரு அருமையான திரைப்படம்...

ஒரு இயக்குனர்.... ஓரே பாணியில் படம்  எடுப்பது அவர் விருப்பம்  அதை நாம் ஒன்றும்   சொல்ல முடியாது... ஆனால் ஒரு இயக்குனர்  பல தளங்களில் பயணிக்கவேண்டும்...

மெல்லிய மன உணர்வுகைளை  மிக நேர்த்தியாக தனது முந்தைய படங்களில் கையாண்‘ட இயக்குனர் சசி... இந்த முறை திரில்லர்,  கொலை, என்று தனத பயணத்தை வன்முறை தளத்துக்கு மாற்றி இருக்கின்றார்... என்னால் இந்த தளத்திலும் திறமையுடன் பயணிக்க முடியும் என்று  நிரூபித்து இருக்கின்றார்.
=========
ஐந்து ஐந்து ஐந்து படத்தின் ஒன்லைன்.


விபத்தில் அடிபட்ட நாயகன்...விபத்துக்கு முன் என்ன நடந்தது என்று அவனுக்கு சரியாக  நினைவில் இல்லை. தனக்கு காதலி இருந்தாள் என்கின்றான்.. ஆனால் உடன் இருக்கும் அவன் சொந்த அண்ணனே  அப்படி இல்லை என்கின்றான்.. காதலி அவனுக்கு இருந்தாளா? இல்லையா என்பதை  நாயகன் எப்படி தன்னை அறிகின்றான் ன்பதுதான் படத்தின் போர் லைன்.

=========

ஐந்து ஐந்து ஐந்து படத்தின் கதை என்ன?

பரத் (அரவிந்) பெரிய கார் விபத்தில் சிக்கி உடல் தேறி வந்தாலும் அவனுக்கு ஒரு காதலி இருந்தால்...ஆனால் அவனை சுற்றி இருக்கின்றவர்கள் அப்படி ஒரு காதலியே இல்லை என்று சொல்லி அவனை பைத்தியமாக்குகின்றார்கள்.. ஆனால் அவளுக்கு ஒரு காதலி இருந்தால் என்ற உண்மை புரிகின்றது.. ஏன் அப்படி மறைக்க வேண்டும் என்பதை வெண்திரையில் காணுங்கள்.

=================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..


இயக்குனர் சசிக்கு மட்டும் இன்னும்  பெரிய தயாரிப்பாளர் மாட்டி இருந்தால் இன்னும் இந்த படம்   மிகச்சிறப்பாக அமைந்து இருக்கும் என்பது என் எண்ணம்.

பரத் உடன் நடித்த  சித்தார்த் வளர்ச்சி எங்கோ போய் விட்டாலும்  நடிப்பில் சித்தார்த் பரத்திடம் தயாம்  வாங்க வேண்டும்... காதல் படம்  ஒன்று போதும்...ஆனால்  கூட சுற்றிய அல்லக்கைகள் பேச்சை   கேட்டு கமர்ஷியல் முகமூடி   மாட்டிக்கொண்டார்... எனக்கு தெரிந்து தனுஷ் நடித்த சுள்ளான் படத்தை பார்த்து இருப்பார் என்று நம்புகின்றேன்... தனுஷுக்கு அவங்க அண்ணன் மற்றும் பெரிய பேர்வுண்ட் இருக்கின்றது... ஆனால் பரத்துக்கு? திரும்ப சரியான கதை தேர்ந்து எடுத்து நடித்தால்  தமிழில் இன்னும் நீண்ட காலத்துக்கு தாக்கு பிடிக்க முடியும் என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.....


பரத் சிக்ஸ் பேக் உழைப்புக்கு ஒரு சல்யூட்...  அவருக்கு நன்றாக செட் ஆகி இருக்கின்றது...


 படத்தில் அசத்திய ஒரு விஷயம் பரத்தின் காதலி நாயகியாக நடத்து இருக்கும் பாயல்...  செம  கியூட்... சின்ன சின்ன  எக்ஸ்பிரஷ்ன்களில் அசத்தி காலி பண்ணுகின்றார்... எங்க புடிச்சாங்க என்று தெரியவில்லை... பின்னுகின்றார்.. நல்ல எதிர்காலம் இருக்கின்றது... இரண்டாவது காதலியும்  நன்றாகவே இருக்கின்றார்... நடனமும் சிறப்பாக வருகின்றது..


சநதானம் அடக்கி வாசித்து மர்கேயா ஆகின்றார்....

இசை புதியவர் என்றாலும் சஸ்பென்ஸ் காட்சிகளில் ரசிக்க வைக்கின்றார்....

எடிட்டிங் சுபாரக்... என்டிடிவி இந்துவில்  என்னோடு  வேலை பார்த்தவர் பரத் பாயல் சாங்கில் உடை மாறும் இந்த காட்சியில் மிக நன்றாகவே எடிட் செய்து இருக்கின்றார்... வடநாட்டு  காட்சிகள் மற்றும் சென்னை கல்லூரி காட்சிகளில் ஒளிப்பதிவு அருமை.

சறுக்கல்..

பாய்ல் வீட்டு காம்பவுண்ட் சுவர் மற்றும் வீட்டுக்கு ஷேர் ஆட்டோ  விட்டு ஓட்டி சம்பாதிக்கும் அளவுக்கு தூரம் அதிகம் என்றாலும் முதல் புளோரில் இருக்கும் பாயல் ஆண்டி கழுத்தில் கிடக்கும்  அந்த செயின் பரத் கண்ணுக்கு எப்படி தெரிந்தது...என்று எனக்கு தெரியவில்லை...? இயக்குனர் எனக்கு தெரிந்து லாக்காக சறுக்கிய இடம் அந்த இடம் என்பேன்..

=============
படத்தின் டிரைலர்.


=============
படக்குழுவினர் விபரம்.
 Directed by Sasi
Story by Aravind,
Suresh
Starring Bharath
Mirthika
Erica Fernandes
Music by Simon
Cinematography Saravanan Abimonyu
Editing by Subarak
Studio Chennai Cinema India [1]
Release date(s) 10 August 2013[2]
Running time 147 Minutes
Country India
Language Tamil

=============
பைனல்கிக்.


சசி இந்த படத்திலும் சோடை போகாமல் தன்னை  நிரூபித்து இருக்கின்றார்... எட்ஜாப் டார்க்னஸ் மெல்கிப்சன் படத்தில் இருந்து அந்த கார் ஆக்சிடென்ட் காட்சிகளை சுட்டு இருக்கின்றார்... பட்... இந்த படம் அப்படி இருக்காது என்று நம்பிகின்றேன்... இந்த படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்... திரில்லட் பட ரசிகர்கள் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம் என்பதை சொல்லிக்கொள்ளுகின்றேன்...

===================
படத்தின்  ரேட்டிங்.

பத்துக்கு ஏழு.

==========
பிரியங்களுடன்

ஜாக்கி சேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

12 comments:

 1. பார்க்கலாம்ன்னு சொல்லிட்டீங்க... பார்த்துட வேண்டியதுதான்.

  ReplyDelete
 2. You mentioned in your review that if Sasi has got a producer who can spend more money then Sasi would have made the movie still better in terms of making style. I strongly agree with you on that point. The love between Bharath and Liyana (Mirthika) is not impactful. In love portion, Sasi could have worked out more and presented it well.

  As the movie has got a lot of turns and twists it keeps audiences engaging.

  it can be seen certainly once.

  ReplyDelete
 3. சசியோட படத்துல ரோஜா கூட்டம் எனக்கு ரொம்ப புடிச்ச படம்.

  ReplyDelete
 4. கடின உழைப்புக்கு மரியாதை செலுத்துவோம்

  ReplyDelete
 5. Good Movie. Hats Off to Mr,Sasi and Bharat

  ReplyDelete
 6. விமர்சனம் அளவாகவும் நறுக்காகவும் இருந்தது நன்றி.

  ReplyDelete
 7. Do none of the directors of tamil films can take films without thefting the scenes from other movies? when that time will come?

  ReplyDelete
 8. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை.நேரம் போவது தெரியாமல் படித்து ரசிக்கலாம்.

  ReplyDelete
 9. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை.நேரம் போவது தெரியாமல் படித்து ரசிக்கலாம்.

  ReplyDelete
 10. பதிவு சூப்பர்

  ReplyDelete
 11. பதிவு சூப்பர்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner