MADRAS WEEK -2013 AND HINDU PAPER PHOTO CONTEST.

374 வருட சென்னை மாநகரத்தின் பிறந்தநாள் வாரத்துக்கான கொண்டாட்டமாக .... இந்து பத்திரிக்கை புகைப்பட போட்டியை அறிவித்து இருந்தது... புகைப்படங்கள்சென்னை வரலாற்றை ஏதாவது ஒரு வகையில் பிரதிபலக்கவேண்டும் என்றார்கள்... 

புகைப்படத்தில் இருப்பது சென்னை சென்டரல் அருகே இருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால்.

சென்னையின் முதல் கேளிக்கை அரங்கு... சலனபடத்தில் இருந்து எண்ணற்ற நாடகங்கள் பொழுது போக்குகள் நடைபெற்ற இடம்... இன்று கேட்பாரற்று கிடக்கின்றது.. ரிப்பன் பில்டிங்கை சீரமைக்கும் போழுதே இந்த பில்டிங்கையும் சீரமைக்காமல் காலம் கடத்தி வருகின்றார்கள்.. ஏன் என்ற தெரியவில்லை...??? எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுத்த இந்த விக்டோரியா பப்ளிக் ஹால் சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக சிறைபட்டு இருக்கின்றது... இப்படி ஒரு காட்சியையும் ஆக்காலத்திய சென்னை வாசிகள் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை... இங்கே நாடகங்கள் இரவு ஒன்பது மணிக்கு தொடங்கி மறுநாள் விடியற்க்காலை மூன்று மணிக்கு முடியும்... எப்படி விடிய விடிய நாடகம் பார்தது விட்டு மறு நாள் வேலைக்கு போய் இருக்க முடியும்?? இன்னைக்கு போல அன்னைக்கு சுவைப்பிங் கார்டு தேய்க்கற சமாச்சாரம் இருந்துச்சா? என்ன?,,

இரண்டு மாதத்துக்கு முன் எடுத்த கிளிக்... நன்றாக இருந்தால் நீங்களும், உங்கள் நண்பர்களும் ஷேர் செய்து ஓட்டுப்போடுங்கள்.....

VICTORIA HALL HOUSE ARREST BY METRO TRAIN BARRIERS- THE HALL WOULD NEVER IMAGINE THIS :-)
V Dhanasekaran as Jackiesekar

http://thne.ws/13PYbLa ஓட்டு போட லிங்க்.

===============

374 வருட சென்னை மாநகரத்தின் பிறந்தநாள் வாரத்துக்கான கொண்டாட்டமாக .... இந்து பத்திரிக்கை புகைப்பட போட்டியை அறிவித்து இருந்தது... புகைப்படங்கள்சென்னை வரலாற்றை ஏதாவது ஒரு வகையில் பிரதிபலக்கவேண்டும் என்றார்கள்... 

புகைப்படத்தில் இருப்பது ஒரு காலத்தில் பேங்க் ஆப் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு தற்போது ஸ்டேட் பேங்க் என்று அழைக்கப்படும் சென்னையின் முதல் பேங்க் கட்டிடம்.

சென்னையில் இன்று தெருவுக்கு தெரு வங்கிகள் வந்து விட்டன... எச்டிஎப்சி பேங்கின் ஏடிஎம்கள் தேருவுக்கு தெரு வந்து விட்டன.... ஆனால் சென்னையில் முதல் வங்கி எங்கு இருக்கின்றது தெரியுமா? பர்மா பஜார் எதிரே இருக்கும் இந்த இடத்தை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கி இருக்கின்றார்கள்.. மூன்று லட்சரூபாய் எஸ்ட்டிமேட்டில் கட்டியும் முடித்து விட்டார்கள்... முதல் உலக போரின் போது ஜெர்மனின் எம்டன் கப்பலை பார்த்த பெருமையும் இந்த கட்டிடத்துக்கு உண்டு... சென்னையில் பல ஆங்கிலேயே காலத்து கட்டிடங்களை கட்டிய நம்பெருமாள்செட்டி என்ற கட்டிட காண்ட்ராக்டர்தான் இந்த பேங்கின் முதல் டைரக்டர் என்பதும் வரலாறு.

இரண்டு நாட்களுக்கு முன் எடுத்த கிளிக்... நன்றாக இருந்தால் நீங்களும், உங்கள் நண்பர்களும் ஷேர் செய்து ஓட்டுப்போடுங்கள்.....

THE FIRST BANK OF CHENNAI - "THE BANK OF MADRAS" STANDING SUCCESS FOR 118 YEARS
V Dhanasekaran as Jackiesekar

http://thne.ws/17cjeq1   ஓட்டு போட....

========================

374 வருட சென்னை மாநகரத்தின் பிறந்தநாள் வாரத்துக்கான கொண்டாட்டமாக .... இந்து பத்திரிக்கை புகைப்பட போட்டியை அறிவித்து இருந்தது... புகைப்படங்கள்சென்னை வரலாற்றை ஏதாவது ஒரு வகையில் பிரதிபலக்கவேண்டும் என்றார்கள்... 

புகைப்படத்தில் இருப்பது சென்னை ஆர்ட் கேலரி...

சென்னையில் எனக்கு பிடித்த கட்டிடம்... திருடா திருடாவில் சந்திரலேகா படம் பார்த்த பிறகு இன்னும் பிடித்து போன கட்டிடம், சென்னையில் அக்பரின் பதேப்பூர் சிக்ரி ஸ்டைலில் முன்று வருடத்தில் ராணி விக்டோரியா நினைவாக கட்டிய கட்டிடம். ரெட்ஸ்டொன் கற்களை கொண்டு அழகிய வேலைபாடுகளுடன் கட்டப்பட்ட கட்டிடம்... பராமரிப்பு பண்டுக்காக தேமே என்று காத்து இருக்கின்றது...

சென்னையில் இன்று எத்தனையோ டெக்னிக்கல் இன்ஸ்டியூட் இருந்தாலும் தமிழ் நாட்டின் முதல் டெக்னிக்கல் இன்ஸ்டியூட் இதுதான்.. சுதந்தரம் பெற்ற பிறகு இங்கு இருந்த விக்டோரிய இண்ஸ்டியூட்.. ஸ்பெக்சர் பக்கத்தில் இடம் மாறி விட்டது...

மனசு சரியில்லைன்னா சென்னை மியூசியம் உள்ளே போய் இந்த கட்டிடத்தை பார்த்துக்கொண்டு இருங்கள்... நிறைய சேதி சொல்லிகொடுக்கும்....

இரண்டு நாட்களுக்கு முன் எடுத்த கிளிக்... நன்றாக இருந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து ஓட்டு போட சொல்லுங்கள்.....

NATIONAL ART GALLERY CHENNAI PADHEPURSIKRI - WAITING FOR RENOVATION
V Dhanasekaran as Jackiesekar

http://thne.ws/1deyEya   ஓட்டு போட...

===================

374 வருட சென்னை மாநகரத்தின் பிறந்தநாள் வாரத்துக்கான கொண்டாட்டமாக .... இந்து பத்திரிக்கை புகைப்பட போட்டியை அறிவித்து இருந்தது... புகைப்படங்கள்சென்னை வரலாற்றை ஏதாவது ஒரு வகையில் பிரதிபலக்கவேண்டும் என்றார்கள்... 

புகைப்படத்தில் இருப்பது மெட்ராஸ் யூனிவர்சிட்டி...

பல கோணங்களில் எடுத்து இருந்தாலும் 100 ஆண்டு களுக்கு புகழ்பெற்ற சென்னை பல்கலைகழகத்துக்கு பக்கத்தில் கூவம் ஒடுகின்றது ... கூவம் ஆற்று பார்வையில் சென்னை பல்கலைக்கழகம்.

இரண்டு நாட்களுக்கு முன் எடுத்த கிளிக்... நன்றாக இருந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து ஓட்டு போட சொல்லுங்கள்.....

THE GREAT MADRAS UNIVERSITY REFLECTION IN THE GREAT KOOVAM RIVER

V Dhanasekaran as Jackiesekar

http://thne.ws/1df8SuN ஓட்டு  போட...

===================
374 வருட சென்னை மாநகரத்தின் பிறந்தநாள் வாரத்துக்கான கொண்டாட்டமாக .... இந்து பத்திரிக்கை புகைப்பட போட்டியை அறிவித்து இருந்தது... புகைப்படங்கள்சென்னை வரலாற்றை ஏதாவது ஒரு வகையில் பிரதிபலக்கவேண்டும் என்றார்கள்...

புகைப்படத்தில் இருப்பது 1913 ஆம் வருடம் கட்டப்பட்ட சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்...

இந்த வருடம் 100 வது ஆண்டு விழாவை கொண்டாடபோகின்றது...சென்னை வாசிகள் இந்த கோணத்தில் ரிப்பன் பில்டிங் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை...ரிப்பன் பில்டிங் எதிரே இப்படி பெரிய மைதானம் போல இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் என்று ஒரு போதும் ரிப்பன் பில்டிங்கே இந்த 100 வருடத்தில் நினைத்து பார்த்து இருக்காது... முதலிரவுக்கு தயாராகும் புதுப்பெண்ணை போல தயாரகிக் கொண்டு இருக்கும் ரிப்பன் பில்டிங்....

இரண்டு மாதங்களுக்கு முன் எடுத்த கிளிக்... நன்றாக இருந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து ஓட்டு போட சொல்லுங்கள்.....

RIBBON RENEVATION FOR CELEBRATION OF 100 YEARS FOR NEW LOOK
V Dhanasekaran as Jackiesekar

http://thne.ws/1dEEDuY ஓட்டு போட.

==========================

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 
3 comments:

  1. ஜாக்கி அன்னே,முதல் படமும் மூன்றாவது மற்றும் நான்காவது படம் இயற்கையாக உள்ளது.அதிலும் குறிப்பாக மூன்றாவது படத்தின் கோணமும் தெளிவும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.வாழ்த்துக்கள்.

    வரவர படங்களின் தெளிவு மெருகேறுது என்ன கேமரா யூஸ் பண்ரீங்கண்ணா !

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner