MADRAS DAY @ CHENNAI DAY ( 374 YEARS)-PRESIDENCY COLLEGE HISTORY -மாநிலக்கல்லூரி வரலாறு...





தங்கர் பச்சான் இயக்கிய பள்ளிக்கூடம்
என்ற திரைப்படத்தின் கிளைமாகக்ஸ் இன்று பார்த்தாலும் நாம் படித்த பள்ளி , கல்லூரி பற்றி நினைவுகள் நம்மிடையே வியாபிக்கும்....சென்னை மெரினா கடற்கரை சாலையில் இருக்கும் மாநிலக்கல்லூரி சென்னையில் இருக்கும் கட்டிடங்களில் எனக்கு மிகவும்  பிடித்த  கட்டிடம்.. நான் அந்த கல்லூரியில் நான் படம் படித்ததில்லை... அந்த கல்லூரி மதில் சுவர் ஓரம் ஆறுமாதகாலம் வாழ்க்கையை ஓட்டி இருக்கின்றேன்.. 


ஒரு முறை  ஷுட்டிங் நடந்த போது உள்ளே சென்று இருக்கின்றேன்... அதற்கு பிறகு இந்த டாக்குமென்ட்ரி எடுக்க சென்றதுதான்...இந்த கல்லூரியில் நுழைந்த போது ஒரு சிலிர்ப்பு... இந்த கல்லூரியில் நாம் படிக்காமல் போய் விட்டோமே என்று மிகவும் வருந்தினேன்...ஆனால் இன்று இந்த கல்லூரியை பற்றி நல்ல தகவலகள் வருவதற்கு பதில் நெகட்டிவ் தகவல்கள்தான் அதிகம் வருகின்றன... இங்கே படித்து மென்மேலும் உயர்ந்த  சன்றோர்களுக்கு இந்த டாக்குமென்ட்ரி சமர்பிக்கின்றேன்...

இந்த கல்லூரியில் படித்து பெரிய பதவியில் இருக்கும் சான்றோர்கள் இந்த கல்லூரிக்கு  மாறு வாழ்வு கொடுத்து இன்னும் பீடு நடைபோட உதவிட வேண்டிக்கொள்கின்றேன்...

இந்த கல்லூரி இன்னும் பல தலைமுறை மாணவம்ணிகளுக்கு கல்வி  கண்ணை திறக்க வேண்டும்... இப்படி ஒரு கல்லூரி, அதன் அழகிய அமைவிடம், அதன் சிறப்பு என இந்தியா எங்கும்  தேடினாலும் கிடைக்காது...

சமர்பனம் .... ஈபி பவுல்.


============


 கட்டிடமும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் நாம் பார்க்க இருக்கும் கட்டிடம் சென்னை கடற்கறையில் கடல் அலைதாளாட்ட கம்பீரமாய் வீற்று இருக்கும் மாநிலக்கல்லூரி கட்டம்.


நிறை குடம் தலும்பாது என்று ஒரு பழமொழி தமிழகத்தில் உண்டு. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எது என்று கேட்டால் தரளமாக மாநிலக்ல்லூரி கட்டிடத்தை சுட்டிக்காட்டலாம். 


ஆம்   ஆயிரக்கனக்கான அறிஞர் பெருமக்களையும்,எழுத்தாளர்களையும் உருவாக்கிய கல்விக்கோவில்…இந்த பிரிசிடென்சி காலேஜ் என்று அழைக்கப்படும் மாநிலக்கல்லூரி.


பிரசிடென்சி கல்லூரி 1940 ஆண்டு முதலில்  எழும்பூரில்  பள்ளியாக தொடங்ப்பட்டது ,… அப்போது கல்கத்தா ஹூக்ளி கல்லூரியில் பணியாற்றிய கூப்பர் என்பர்   அவசரத்துக்கு முதல்வரானர்.. என்ன அவசரம் என்றால் ?  இந்த கல்லூரிக்கு முதல்வராக பொறுப்ப ஏற்க்க இங்கிலாந்து கேம்பிரிட்ஸ் பல்கலைகாகத்தில் கணிதத்தில் ஹானர்ஸ் தேர்ச்சி பெற்ற  ஈபி பவுல் என்பவரை  நியமித்தது… ஆனால் அவர் இங்கிலாந்தில் இருந்து பம்பாய்க்கு வந்து விட்டாலும்  சென்னைக்கு அவர் வர நான்கு வார காலம் ஆனாகாரணத்தால்  கல்கத்தாவில் இருந்த கூப்பரை தற்காலிக முதல்வராக்கினார்கள்…


 அதன்பின் ஒரு வருடத்திலேயே உயர் நிலைபள்ளியாக உயர்வு பெற்று எக்மோரில் இருந்து  பிரிசிடென்சி கல்லூரி பிராட்வேவுக்கு மாறியது. ஈபி பவுல் முதல்வரக பொறுப்பேற்றார்… எல்லோரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்டவராம். ஏற்ற  தாழ்வு இல்லாமல்  அனைத்து  மனிதர்களிடத்திலும் அன்பு  செலுத்துபவர் என்று நற்பெயரை பெற்று இருக்கின்றார்…


 அப்படி நல்ல பெயரை எடுத்த  காரணத்தினால் அவர் உருவச்சசிலையை   பிரிசிடென்சி கல்லூரி உள்ளே இப்போதும் வைத்து அவருக்கு  மரியாதை செய்து வருகின்றார்கள்…


‘1853 ஆம் ஆண்டு  பிரசிடென்சி உயர்நிலை பள்ளியாக  இருந்து  பிரிசிடென்சி கல்லூரியாக  மாற்றம்   பெற்றது…. கல்லூரி ஆனாதும் இடப்பற்றாக்குறை அதிகம்  இருந்தது… மெரினா  எதிரில் பிரமாண்ட கட்டிடத்தை  கட்ட பிரசிடென்சி நிர்வாகம் முடிவு செய்தது.


சிறப்பான கல்லூரி  கட்டிட வரைபடத்தை எவர் தயாரித்து கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு 3000 ரூபாய் பரிசு என்று அறிவித்தது வெள்ளை அரசு… 1864 ஆம் ஆண்டு 3000 ரூபாய் என்றால்  எவ்வளவு பெரிய பரிசு பணம் என்று கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்,.


 இங்கிலாந்தின் புகழ் பெற்ற கட்டிடக்கலை வல்லூரனா ராபர்ட் சிஸ்ஹோம் இந்த பரிசை தட்டி சென்றார்…இத்தாலி  கட்டிட கலை வடிவில் இந்த  பிரமாண்ட கட்டிடத்தின் வரைபடத்தை தயாரித்துக்கொடுத்தார்.


1867 ஆம் ஆண்டு மெட்ராஸ் ஆளுநாரான இருந்த லார்ட் நேப்பியர் அடிக்கல்  நாட்ட,1870 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி  இந்த   பிரமாண்ட பராம்பரியமிக்க இந்த கட்டிடத்தை  எடின்பர்க் கோமகன்  திறந்து  வைத்தார்.
இந்த பிரமாண்ட கட்டிடம் கட்ட மூன்று வருடங்கள்தான்  எடுத்துக்கொண்டன என்பது விந்தை மட்டுமல்ல.. ஆங்கிலேயர்களின் திட்டமிடல்  நேரம் தவறாமை போன்றவை இதன் மூலம்  நாம் அறிந்துகொள்ளலாம்.


1940 ஆம் ஆண்டு  இந்த கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  அதனை கொண்டாடும் வகையில் கூம்பு கோபுரம் அமைக்கப்பட்டு  நான்கு புறமும் கடிகாரம் அமைக்கப்பட்டு இன்று வடிர மெரினாவை கடக்கும் லட்சோப  லட்ச மக்களுக்கு நேர காட்டியாக செயல்பட்டு வருகின்றது..-.


 தமிழ் மொழியின் அறிய சுவடிகளை  நடந்தே  காப்பாற்றிக்கொடுத்த தமிழ்தாத்தா உவே சுவாமி நாத அய்யர் இந்த கல்லூரியில் ஆசிரியராக 16 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.


இதே கட்டிடத்தில்  நோபல் பரிசு பெற்ற சர்சிவி ராமன்,முதறிஞர் ராஜாஜி, சிந்தனை சிற்பி சிங்காரவேலர்,  என்று மெத்த  படித்த பண்டிதர்கள் கல்வி பயின்றது இந்த  கட்டத்தில்தான்…. அதுமட்டுமல்ல தந்போது  இந்தியாவுக்கே பட்ஜெட் போடும் ப சிதம்பரம் கல்வி பயின்றதும் இதே கட்டிடத்தில்தான்…


மனிதனின் ஆணவம்,அகம்பாவம், அழிச்சாட்டியம் எல்லாம் 60 வயது அல்லது 70 வயது வரைதான்…ஆனால் 150 வருடங்களை தொடப்போகும்  இந்த கட்டிடம் இன்னும் தன்னலாம் கருதாது எந்த எதிர்ப்பும் இன்றி, கல்வி பணியை தொடர்ந்து செய்து வருகின்றது… 


இதுவரை 40 கல்லூரி முதல்வர்களை பார்த்த இந்த செந்நிற மாநிலக்கல்லூரி கட்டிடம் சென்னையின் கம்பீரங்களில் இதுவும் ஒன்று…கடற்கரை சாலையில் பயணிக்கையில் அந்த கட்டத்துக்கு ஒரு சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துவிட்டு செல்வோம். 


================
 கானொளி வடிவில்.


History Kattidam Kathai Sollum by dm_5125efc68d872


குறைவான நேரத்தில் நிறைய ஷாட்டுகள் எடுத்து விரைவாக முடித்த  நிறைவான வேலை என்றாலும் எனக்கு பிடித்த மாதிரி ஷாட்டுகளை கேமராமேன்   தாமஸ்   விரைவாக வைத்து   ஒளிப்பதிவு செய்தார்....பேசிக்காக நான் கேமராமேன் என்பதாலும் எனக்கு  நிறைய டச் ஆங்கிள் பிடிக்கும் என்ற காரணத்தால் நான் ஷாட் ஆங்கிள் சொல்ல  சொல்ல...  வேகமாக காட்சிபடுத்தினார்... அதே போல வாய்ஸ் ஓவர் கொடுத்த சுப்பு மற்றும் எடிட்டர் பிரபுவுக்கு எனது நன்றிகள்.

==========


சென்னை தனது 374 வருட பிறந்த தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் குறுகிய காலத்தில் நான் செய்த இந்த பணிஎனக்கு  மிகவும் மன நிறைவை கொடுத்த பணி என்பேன்... நண்பர்கள் தங்கள் கருத்தையும்  இந்த செய்தியையும்  மற்றவர்களுக்கு சென்னை தினமான இன்று பகிர வேண்டிக்கொள்கின்றேன்.. அப்படியே உங்கள் கருத்துக்களையும் பின்னுட்டத்தில்...

சென்னை தின நல்வாழ்த்துகள்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. சிறப்பான உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner