சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (07/08/2013)


ஆல்பம்...


காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி நுழைந்து ஐந்த இந்திய ராணுவவீரர்களை சுட்டுக்கொண்டு இருக்கின்றது... இன்னும் சில மாதங்களில் தேர்தல் என்ற காரணத்தால் இந்த விஷயம் இன்னும் சூடு பிடித்து ஆடுகின்றது... பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றது... எவ்வளவு ஆடிச்சாலும் தாங்குவான் அப்படின்னு இருந்தா.. சீனாவும், பாக்கும்  வாலை ஆட்டிக்கிட்டுதான் இருப்பாங்க... இவ்வளவு ஏன் சீராட்டி பாராட்டி  வளர்த்த   துக்கடா நாடான இலங்கையே, நாளைக்கு  நம்ம  ஆர்மி  கப்பல்காரர்களை தமிழக  மீனவர்கள்ன்னு நினைச்சி சுட்டு விட்டோம் என்று சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.
===================

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம்  கோர்ட் கேட்கும் கிடுக்கிபிடி கேள்விகளில், கேரளா  தரப்பு திகைத்த போய் இருக்கின்றது என்றாலும், பேஸ்மென்ட்டில்  மலையாளிகளின் லாபி காரணமாக நியாயம் கிடைக்காமல் போய்  விடுமோ என்று யோசிக்க வைக்கின்றது. எதுவும் நடக்கலாம்..  காரணம்  அவர்கள் ஒற்றுமை அப்படி...

===================
பெண் ஐஏஎஸ் அதிகாரி துர்காவை உத்திரபிரதேசத்தில் பந்தாடி விட்டார்கள்...காரணம் அவர் மணல் கொள்ளையை தடுக்க போராடினார்... அதனால் அவர் மீது அபாண்டமாக பழி சுமத்தி அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டாகள் என்று பத்திரிக்கை செய்தி கூறுகின்றது. அதே போல தமிழகத்திலும் தூத்துக்குடியில்  மணல் கொள்ளையை ஆய்வு செய்திட்ட ஆஷிஷ்குமார்  நேற்று இரவோடு இரவாக பணி மாற்றம் செய்யப்பட்டார்... எல்லாமே  மக்கள்  நலனுக்காகவே என்பதை நம்மபுவோமாக..
===========
மிக்சர்.
போன ஆட்சியில கலைஞர் ரெண்டு மணி நேரம் பாராட்டு விழாவுக்கு போயிட்டாலோ அல்லது சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலோ தாம் தூம் என்று  குதித்த பத்திரிக்கைகள்... ஒரு மாதத்துக்கு மேல் ஊட்டியில் ஓய்வு எடுக்கும் முதல்வர் ஜெயை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை....  அவுங்க மேல அவ்வளவு பாசம். ஊட்டியை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபணிகள் நடக்கின்றன என்று  சொன்னாலும் சொல்லுவாங்க.. யார் கண்டா?

======
விஜய், நடித்த தலைவா படம் வரும் வெள்ளிக்கிழமை 2000 தியேட்டர்களில் வெளியிடுவதாக இருந்தது... சாலிகிராமம்  பங்கஜம் தியேட்டரில் விடியற்காலை 5 மணிக்கு எல்லாம் ஷோ போடுகின்றேன் என்று விளம்பர படுத்தி இருந்தார்கள்.... ஆனால் திடும் என்று திரைப்படம் திரையிடுவதில்  சிக்கல் என்று சொல்லி இருக்கின்றார்கள்.. அரசின்  ஒத்துழைப்பு இல்லாமல் படம் ரிலிஸ்  செய்ய மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தி இருக்கின்றார்கள். விஜயின் அப்பா சந்திரசேகர்... நான் அண்ணா என் பையன் எம்ஜியார் என்று  பேசியதற்கு இன்று  கண்டிப்பாக வருத்தப்பட்டு  இருப்பார்... கருப்பு எம்ஜியார்ன்னு சொன்ன கேப்டனையே  ஊருக்கு ஒரு வழக்கு போட்டு  அந்தஅம்மா அலைய வச்சிக்கிட்டு இருக்கு... என்னவோ போங்கப்பா...===============================
இயக்குனர் சேரன் மகளின் காதல் பிரச்சனைதான் ஒரு வாரமா தமிழகத்தின் ஹாட் டாபிக்கா இருந்தது.. இதோ தலைவா படம் வந்து அந்த விஷயத்தில் இருந்து டைவேர்ட் ஆகி விட்டது... என்னை பொறுத்தவரை ஒரு பொறுப்புள்ள தகப்பனாகத்தான் சேரன் நடந்து கொண்டு இருக்கின்றார்..  மகளிடம் கெஞ்சி விட்டார்... காலில்  விழுந்து  அழுதும் பார்த்தும் விட்டார்...காதலனை கைவிமாட்டேன் என்று சொல்லுகின்றார்..  முதலில் இந்த காதலை ஏற்றுக்கொண்ட  சேரன்....பையனை பற்றி  விசாரித்த போது பின்னனி  தகவல்கள்  சரியில்லை என்பதால்  இப்போது எதிர்க்கின்றார்.... இவ்வளவு தூரம் வந்து விட்ட பிறகு... அந்த  பெண்ணை எக்கேடாவது கெட்டு போ என்று சொல்லி விடலாம் என்று பலர் கருத்து சொல்லலாம்.. ஆனால் பெத்தமனது அப்படி இல்லை என்பதை சேரன் தொடர்ந்து போராடி வருகின்றார்.  இது ஓவர் டோஸ் ஆகிவிடும் வாய்ப்புகளும் உண்டு.

==========================
ஜேம்ஸ் வசந்தன் மீது எனக்கு நிறைய கருத்து வேறுபாட உண்டு... சின்ன பசங்களை நடுவாராக இருந்த போது ஏகத்துக்கு வசை பாடி இருக்கின்றார்.. ஆனால் 65 வயது பெண்மணிக்கு செக்ஸ் டார்ச்ர் கொடுத்தார் என்று பொய் வழக்கு புனைந்து இருக்கின்றார்கள்...  இங்க சென்னா ரெட்டியே சிக்கினவருதான்... என்ன செய்ய ?

======================


பேஸ்புக்கில் நான் பகிர்ந்து கொண்டவை.

============

நிழல் வாழ்க்கை வேறு... நிஜ வாழ்க்கை வேறு... என்பதை எவரும் புரிந்துகொள்வதில்லை... இரண்டையும் முடிச்சி போடுவதே அபத்தத்தின் உச்சம் என்பேன்....

காதலை ஆதரித்து படம் எடுத்த காரணத்தால் காதலை எதிர்க்கும் இயக்குனரை வசைபாடுகின்றோம்...அதே இயக்குனர் சீரியல் கில்லர் படம் எடுத்து விட்டு, படத்தில் காட்டியது போல இரண்டு கொடுரகொலைகளை அந்த இயக்குனர் செய்து விட்டால் அதை ஏற்றுக்கொள்முடியுமா???

படத்தில் காட்டியது போல இரண்டு கொலை செய்தேன் நிழலில் செய்தேன் அதை ஏற்றுக்கொண்டீர்கள்.. அதையே நிஜத்திலும் செய்தேன் என்று அந்த இயக்குனர் சொன்னால் உங்கள் நிலைப்பாடு என்ன??

செருப்பு கடிக்கும் வலி .....அதை அணிந்தவனுக்கு மட்டுமே தெரியும், புரியும்...

==================
நகரத்தில் தான் நாம் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கின்றோம் என்று, அவ்வப்போது உணர்ந்துகின்றன ஆம்புலன்ஸ் சைரன்களின் சத்தங்கள்.

==================
டியர் கலெக்ட்டர்ஸ்... உங்க யாருக்காவது நைட்டோட நைட்டா டிரான்ஸ்பர் வேணும்னா, அருகில் நடக்கும் மணல் கொள்ளையை தடுங்க போதும்... அட்லிஸ்ட் செக் பண்ணறது போல சீனாவது போடுங்க....உடனே கை மேல் பலன் கிடைக்கும்.

இப்படிக்கு
மக்கள் நல அரசு.

====================

பல வருடங்களாக இரவு பகல் பார்க்காமல் உழைத்த  நிறுவனம் அது... நண்பர் ஒருவருக்கு அங்கே வேலை ஆக வேண்டும்... நீங்க வந்தா நல்லா இருக்கும் என்றார்...பல வருடங்களுக்கு பிறகு  அந்த நிறுவனத்தில் நுழைகின்றேன்... டிரைவரில் இருந்து கடைநிலை ஊழியர்கள் வரை  பெயர் நியாபகம் வைத்து நலம் விசாரித்தார்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது நிறைய நண்பர்களை சம்பாதித்து வைத்து இருக்கின்றேன்... டைரக்டரை பார்க்கவேண்டும் என்ற விபரத்தை காரியதரிசியிடம் சொன்னேன்... எது பேசிவதாக  இருந்தாலும் ரைட்அப்பில்  கேட்கின்றார் என்றார்... ஒரு காலத்தில்  என் தோளில் கை போட்டு  காரியம் நடக்க  நட்பு பாராட்டியவர்தான்...ஆனால்  என்னை பார்க்கவில்லை... முதலாளி வர்கம்..ஆனால் எனக்கு பழகிய  சக மனிதனாய் அவர் இப்போது எப்படி இருப்பார்,-? என்று பார்க்கும் ஆவல் இருந்தது...
ஓ ...

பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்றால் என்ன? என்று இன்று தெரிந்துகொண்டேன்.... 

நாமதான் தப்பா வளர்ந்துட்டோம்.. மனிதம், மயிறு, மட்டைன்னு, சொல்லிக்கொடுத்து கெடுத்து வளர்த்துட்டாங்க. ச்சை.........


================
நான்வெஜ்18+

SIX Golden Rules for F***ing....
1) F***ing once a week is good for your health, but it is harmful if done everyday.
2) F***ing relaxes your mind & body,
3) F***ing refreashes you.
4) After F***ing don't eat too much go for more liquids,
5)Try F***ing in bed cause it can save your valuable energy.
6) F***ing can reduce your cholestrol level.SO REMEMBER ...."FASTING" is good for your health.

GOD BLESS YOUR DIRTY MINDS! 


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

12 comments:

 1. All topics in today's articles - excellent Jackie.

  ReplyDelete
 2. டைரக்டர் சேரன் மகள் காதல் விஷயம் படித்தவுடன் எனக்கு தோணினது " தலை வலியும், வயிறு வலியும் தனக்கு வந்தால் தான் வேதனை தெர்யும் "

  ReplyDelete
 3. நமது ராணுவ வீரர்களை பாகிஸ்தான் கொன்றதை வைத்து அரசியல் லாபம்தான் பார்கின்றனர் எனும்போது வேதனையாகத்தான் இருக்கு அண்ணே....!

  ReplyDelete
 4. நான்வெஜ்18+ னு போட்டுட்டு 'GOD BLESS YOUR DIRTY MINDS! ' னு போட்டா என்ன அர்த்தம்..? :-)

  ReplyDelete
 5. jackie anna பர பர சவுத் கொரியன் படம் பாத்து ரொம்ப நாள் ஆகுது.... ஒரு சூப்பர் detective crime படம் ஒன்னு தட்டி விடறது .......

  ReplyDelete
 6. நிழல் வாழ்க்கை வேறு... நிஜ வாழ்க்கை வேறு.realy true

  ReplyDelete
 7. Ungal ஹாலிவுட் நீலாம்பரிகள் ku naan thaan first comment!!! haha

  ReplyDelete
 8. Jackie..u wait for the guy ..your manager ,Now he will not bother friends, next relation , next wife ..family but once he loose power see the results...Pitchai eduppan saappattukkillai.. Oru friend kkaka

  ReplyDelete
 9. பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்...............

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner