என்னை ஏமாற்றிய சென்னை
, என்னை செக்யூரிட்டி டிரஸ்சில் அழகு பார்த்த சென்னை, ஒன்டிக்குடித்தனத்தை அறிமுகபடுத்திய சென்னை, பீடாகடையில் வேலைபார்க்கவைத்த சென்னை,பிளாக்கில் டிக்கெட் விற்று வயிற்றை கழுவ்வைத்த சென்னை,மெரினா பீச்சில் பிளாட்பாரத்தில் அடைக்கலம் கொடுத்த சென்னை, அடுத்தவேலை சோற்றை நினைத்து அதிகம் கவலை கொள்ளவைத்த சென்னை, ஓட்டலில் வேலை பார்க்க வைத்த சென்னை, சோற்றின் அருமை உணர்த்திய சென்னை,ஊதாரிதனத்தை கட்டுபத்திய சென்னை,எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அனுதினமும் பயமுறுத்தி பார்த்த சென்னை, என்னை கலங்க வைத்த சென்னை, என்னை எமாற்றிய சென்னை, கடல் அலை நடுவே என்னை ஓவென்று அழவைத்து என் அழுகை சத்தத்தை மறைத்த சென்னை,என் தன்னம்பிக்கையை குலைக்க சதி செய்த சென்னை....இப்படி என்னை அழ வைத்த சென்னைதான்... நெஞ்சில் குத்திய நபர்கள், துரோகிகள் என ரகவாரியாக அறிமுகபடுத்தி என்னை அலைக்கழித்ததும் இதே சென்னைதான்....
எனக்கு அதீத தன்னம்பிக்கை கொடுத்து இருக்கின்றது, வறுமையில் கஞ்சா விற்க ஒரு கும்பல் என்னை வற்புறுத்திய போதும், நேர்மையாக வாழ வழிகாட்டியதும் இதே சென்னைதான்..... ராதாகிருஷ்ணன் சாலையில் மகாநதி படம் பார்த்துவிட்டு கலங்கிய கண்களோடு நடந்து போகும் போது பைக்கில் என்னால் போகமுடியுமா? என்று யோசிக்க அதை சாத்தியபடுத்தி அழகு பார்த்ததும் இதே சென்னைதான்.. என் காதல் வளர இடம் கொடுத்து கவுரவித்ததும் இதே சென்னைதான்...எனக்கான வாழ்விடத்தையும்,குடும்பத்தையும், எனக்கான அங்கீகாரத்தையும் கொடுத்தது இதே சென்னைதான்...துரோகிகளை விட எனக்கான நல்ல மனிதர்களை இனம் கண்டு அறிமுகபடுத்தி அழகு பார்க்க வைத்ததும் இதே சென்னைதான்....
சென்னைக்கு இன்று 374வது பிறந்த நாள்.. எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்....
இன்னும் நான் நேசிக்கும் சென்னை போல... நானும் அசுர வளர்ச்சி அடைய எல்லாம் எல்ல பரம் பொருளை பிரார்திக்கின்றேன்.
பிரியங்களுடன்
ஜாக்கி சேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
EVER YOURS...
வளம்பெற வாழ்த்துகள்.
ReplyDeleteஎத்தனை தழும்புகள் .மன்னிக்க ,மறக்க ...
ReplyDeleteஅத்தனையும் சொல்லி அழகுற நேர்மறையில் முடித்த உங்கள் நினைவுக்கு ஒரு மலர் கொத்து .
எத்தனை தழும்புகளாய் நினைவுகள் ?..
ReplyDeleteமறந்து மன்னித்து ஏற்றுகொண்ட அற்புதமான நினைவுகூறல் ..
Wish you good luck
ReplyDelete