சென்னை புரதான கட்டிடங்களின் வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...?
தந்திடிவியில் பணி புரிந்த போது அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிட்டியது... சென்னையில் இருக்கும் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடங்கள் பின்னனியை புரட்டி பார்த்து, அதன் சுவாரஸ்யங்களை டாக்குமென்ட்ரியாக செய்தேன்...அதில் சென்னை பெண்கள் கிருஸ்த்துவ கல்லூரியும் ஒன்று.. புரதான கட்டிடங்களின் வரலாற்றை தேடி வரலாற்று தகவல்களை சேகரித்து ,தொகுத்து, ஸ்கிரிப்ட் எழுதி இயக்கியது என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒன்று. அது உங்கள் பார்வைக்கு...எழுத்தாகவும் வீடியோவாகவும்...பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்...
=================
ஒரு காலத்தில் பொட்டல் காடாக இருந்த சென்னை பட்டிணம் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையகமாக மாறிய பிறகு நகரத்துக்கான அங்கீகாரத்தை மெல்ல மெல்ல பெற்றுக்கொள்ளதுவங்கியது…
சென்னையில் ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற வரலாற்று சுவடுகள் எராளம்…வெளித்தோற்றத்துக்கு நவீனமாக காட்சியளித்தாலும்,சென்னை நுங்கம்பாக்கம் காலேஜ் ரோட்டில் உள்ள பெண்கள் கிருஸ்த்துவ கல்லூரி வளாகத்தில், 230 வருட பழமை வாய்ந்த பாராம்பரிய கட்டிடம் ஒன்று இருக்கின்றது என்பது நம்மில் பலர் அறிய வாய்ப்பில்லை.
230 வருடாமா என்று ஆச்சர்யத்தில் நம் கண்கள் அகல விரிந்தாலும் அந்த கட்டிடத்தின் வரலாற்றினை நாம் அனைவரும் தெரிந்துக்கொள்வோம்.
கூவம் நதிக்கரையோரம் நுங்கம்பாக்கம் கிராமத்த்தில் 1798 ஆம் ஆண்டு ஆங்கில உயர் அதிகாரிகள் தங்க ஒரு பிரமாண்டமான கட்டிடம் கட்டப்பட்டது.. இந்த கட்டிடத்தினை வடிவமைத்தவர் பெஞ்சமின் ரோபக்…
ஏறக்கூறைய 30 வருடங்கள் இந்த கட்டிடைத்துக்கு என்று எந்த பெயரும் இல்லை…ஆனால் 1837 ஆம் ஆண்டு லெப்ட்டினன்ட் ஜென்ட்ரல் ஜான் டவுட்டன் இந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கி குடியேறினார். அன்றில் இருந்து இந்த கட்டிடம் ஒரு நூற்றாண்டு காலத்துக்கு டவுட்டன் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது.
நிறைய ஆங்கில அதிகாரிகள் தங்கியதற்கு வரலாற்று சாட்சியாக இன்னும் இங்கு இருக்கும் நாற்காலிகள், உணவு மேஜைகள் தங்களின் பாரம்பரிய பழங்கதைகள் பேசி திரிகின்றன-.
இந்தியாவில் பெண் விடுதலைக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கு பெண் கல்வி இன்றியமையாதது என்று உணர்ந்த மிஸ் எலினா மெக்டுகல் சென்னையில் 1913 ஆம் ஆண்டு பெண்கள் கிருத்துவ கல்லூரியை தொடங்கினார். இந்த கட்டிடத்துக்கு 1915 ஆம் ஆண்டு பெண்கள் கிருஸ்த்துவ கல்லூரி ஒரு சுபயோக சுப தினத்தில் இந்த டவுட்டன் கட்டிடத்தில் குடிபுகுந்தது….
40 மாணவிகள் ஏழு ஆசிரியர்களோடு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி இன்று 3300 மாணவிகள் மற்றும் 180 ஆசிரியர்களோடு பரந்து விரிந்து கல்விபணியாற்றி வருகின்றது.
டிஜிபி லத்திகாசரன், நடிகைள் சரண்யா பொண்வன்னன்,ஹீரா ராஜகோபால், ஆண்ட்ரியா இந்த கல்லூரி முன்னாள் மாணவிகளே….
டவுட்டன் கட்டிடத்தில் தொடங்கப்பட்ட பெண்கள் கிருஸ்த்துவ கல்லூரி இன்னும் இரண்டு வருடத்தில் நுற்றாண்டு விழாவினை கொண்டாட தயாராகிக்கொண்டு வருகின்றது..,
வரலாற்றினை சிட்டுக்கட்டு போல கலைத்து போட்டு அழகு பார்ப்பதில் காலதேவனுக்கு கை வந்த கலை என்பதற்கு இந்த டவுட்டன் கட்டிடம் மிக சிறந்த உதாரணம்.
ஆங்கில ஏகாதிபத்தியத்தை மதிக்காத இந்திய குறுநில மன்னர்களை அடைத்து வைத்த சிறைச்சாலை இந்த கட்டிடம் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? நம்பி விடுங்கள் வரலாறு சொல்லும் சேதி அதுதான்,
30 வருடங்கள் பெயரற்று இருந்த இந்த கட்டிடம் ஒரு நூற்றாண்டுக்கு டவுட்டன் கட்டிடம் என்று அழைக்கப்பட்டது… அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு அதாவது இன்று பெண்கள் கிருஸ்த்துவ கல்லுரி என்றும் நுனி நாக்கு ஆங்கிலத்ததில் டபிள் யூ .சி. சி என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது…
மாற்றம் ஒன்று மட்டுமே மாறதது என்பதற்கு டவுட்டன் கட்டிடத்துக்கு வழங்கப்பட்ட பெயர்களை வேண்டுமானால் உதாரணமாக சொல்லாலம். ஆனால் இன்னும் தன் எழில் மாறாமல் 230 வருடங்களை கடந்து வரலாற்றுக்கு கம்பீர சாட்சியாக விளங்குகின்றது இந்த டவுட்டன் கட்டிடம்.

Kattidam Kathai Sollum by dm_5125efc68d872
நன்றி
தந்தி டிவி.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
தெரிந்து கொண்டோம்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ....
ReplyDeleteகுறுநில மன்னர்களை அடைத்து வைத்த சிறைச்சாலை இன்று பென்களின் மதியுக சுதந்திரத்திற்கு உதவுவது விந்தை.
ReplyDelete