Aadhalal Kadhal Seiveer-2013 /உலகசினிமா/இந்தியா/ஆதலால் காதல் செய்வீர். சினிமா விமர்சனம்.




1989 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வந்தது..


அது வழக்காமான தமிழ்சினிமா போல ஜிகினா கலக்காமல் உண்மை பேசியது... விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வினை அப்பட்டாமாக  பதிவு செய்தது.... எதைபற்றியும் கவலைபடாமல்  செவிட்டில் அறைந்து உண்மை பேசியது.... அந்த படத்தில் வந்த டயலாக் பற்றி ஊரே பரபரப்பாய்  பேசியது..  அது உண்மையை பேசிய காரணத்தாலே ஒரு சிலர் அந்த படத்தை பார்த்து  முகம் சுளித்தார்கள்... செம லோக்கலாக ஒரு படத்தை எடுத்து இருக்கின்றார்கள் என்று சொல்லி விட்டு பான்ட்ஸ் பவுடரை முகத்தில்   அப்பிக்கொண்டார்கள்.... அந்த படத்தின் பெயர் புதிய பாதை... அதை நடித்து எழுதி இயக்கியவர் பார்த்திபன்...

நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள்ன்னு   ரேடியோவிலும் டிவியிலும் கத்தறாங்களே? அதை வாங்கி பலூனாக்கி பறக்க விடறதுக்கா -? என்னை மாதிரி  அனாதைங்க உருவாகிவிடக்கூடாதுன்னுதான் என்று நாயகன் வசனம் பேசுவார்... 

அதை கேட்டு முகம்சுளிதாலும் அதில் உள்ள நியாயத்தை நம்பில்  பலர் புரிந்து கொள்ளாமல் நல்லவன் வேஷம் போட்டார்கள்..என்பதே அன்றைக்கு நான் கண்ட... உண்மை...

 புதியபாதை வந்து சரியாக 24 வருடங்கள் கழித்து செவிட்டிலும் நெற்றி பொட்டிலும் ஓங்கி ஒன்றரை டன் வெயிட் அடி கொடுத்து ,ஒரு படம்   வந்து இருக்கின்றது...இந்த 2013 ஆண்டு சுதந்திரதினத்தில் இருந்து  அந்த படம் வெளியாகி இருக்கின்றது.. அந்த படத்துக்கு பேர் ஆதலால் காதல்  செய்வீர்... இயக்கம் சுசீந்திரன்.. அவசியம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்....டோன்ட் மிஸ் இட்.

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை  போன்ற படங்களில் தன் முத்திரையை பதித்த இயக்குனர் சுசிந்திரன் இந்த படத்தில் மிரட்டி இருக்கின்றார்...

 ஜாக்கி சார்...

 என்னப்பா?-

 அவரு ராஜபாட்டைன்னு ஒரு படம் பண்ணி இருக்கின்றார்....

தம்பி நல்ல  விஷயத்தை பத்தி பேசும் போது, திருஷ்ட்டி பத்தி எல்லாம் பேசனுமா? தெரியாமதான் கேக்குறேன்...  அந்த படத்தை பத்தி  நான் பேசித்தான்  ஆகனுமா?

இல்லைன்னே...

அப்ப அப்படியே போயிடு..

செல்போன் வந்தஉடன் தகவல் எத்தளவுக்கு மிக வேகமாக பரவுகின்றதோ? அதே வேகத்தோடு காதலும் காம்மும் பின்னி பினைந்து வேகமாக பரவுகின்றன... என்பதைதான் இப்போது  நம் கண்ணால் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்...20 வருடத்துக்கு முன் காதலியின் வீட்டில் அப்பா , அம்மா இருக்காங்களா?  ஆட்டு குட்டி இருக்கின்றதா என்பது எல்லாம் தெரியாது... ஆனால் இப்போது   காதலி ஆய் போய் விட்டு கால் கழுவி விட்டு வருவதுவரை செய்திகள் உடனுக்குடன்  நொடிக்கு நொடி பகிர்ந்துகொள்ளுகின்றார்கள்... அப்படி பகிர்வதுகாரணமாக  எல்லாம் சலித்து அடுத்து உடல்வேட்கையை குறி வைத்து  தினவை  தீர்த்துக்கொள்ளுகின்றார்கள்... புத்திசாலிகள் பிழைத்துக்கொள்ளுகின்றார்கள்... சிலர் மாட்டிக்கொள்ளுகின்றார்கள்... மாட்டிக்கொண்டவர்களின் கதை இது.


சமுகத்தை  பிரதிபலிக்கும் திரைப்படங்கள்தான் என்னை பொறுத்தவரை  நல்ல  திரைப்படங்கள் என்பேன்.... அந்த வகையில் உலகசினிமா தரத்துக்கு ஒரு திரைப்படமாக இந்த திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கின்றது.

  சரி வழக்கம் போல பிரிச்சி மேஞ்சிடுவோமா?

==================


Aadhalal Kadhal Seiveer-2013 /உலகசினிமா/இந்தியா/ஆதலால் காதல் செய்வீர் படத்தின்  ஒன்லைன்...

புரிதலற்ற விடலை காதலில் பாதிக்கப்படுபவன் யார்? என்பதுதான் படத்தின் ஒன்லைன்

=====================
Aadhalal Kadhal Seiveer-2013 /உலகசினிமா/இந்தியா/ஆதலால் காதல் செய்வீர் படத்தின் கதை என்ன?


கார்த்திக் கல்லூரியில் படிக்கும் டீன் ஏஜ் பையன்...அதே கல்லூரியில் படிக்கும் அவள் தோழி சுவேதாவை லவ்வுகின்றான்.. அவளும் ஒரு கட்டத்தில் லவ்வுகின்றாள். இரண்டு பேரும் லவ்வி .. அவளுக்கு நாள் தள்ளி போகின்றது.... பிரக்லர் கார்ட் இரண்டு கோடுடன் இன்டர்வல்பிளாக்... படிக்கற இரண்டு பசங்களுக்கு இந்த மாதிரி நடந்து போச்சின்னா என்னவாகும்  மீதி படத்தை உங்க வீட்டுல இருக்க டீன்ஏஜ் பசங்களோட போய் இந்த படத்தை பாருங்க.

===========================
காதலின் அபத்ங்களையும்  காதலில்  உள்ள கரன்ட் டிரென்ட் செட்டர் எல்லாத்தையும் செல்லுலாய்டில் ஒரு ஆவனமாக பதியவைத்து  இருக்கின்றார்...இயக்குனர் சுசீந்திரன்.


அம்மாவுக்கு டவுட்  வந்துடுச்சி என்று  ஆட்டோவில் போகும் போது காதலன் போன் அடிக்கும் போது எடுத்து பேசாமல் அமைதி காக்கும் அந்த திருட்டுதனம்.. வீட்டில் காதலனோடு இருக்கும் போது , அம்மாவின் தோழி கடன் கேட்க வீடு  தேடி வரும் போது தப்பிக்கும் அந்த காட்சி  என இளசுகளின்  எல்வலா திருட்டு தனத்தையும் பதிவு செய்து இருக்கின்றார்.

படத்தில் டயலாக் எல்லாம் அற்புதம்... முக்கியமாக காதலில் உதவும் மாணவதலைவனாக வரும் அந்த  தாடி வாலா அடித்து விடும் டயலாக் காட்சிகள் அனைத்தும் அருமை...
உதாரணத்துக்கு காதலிக்கும் போது  உனக்கு எல்லாரும்  முட்டாளா தெரிவாங்க.. ஆனா நீ காதலில்  தோக்கும் போது, நீ மட்டும்தான் முட்டாளா உட்கார்ந்துகிட்டு இருப்பே.. போன்ற டயலாக்குகள் அசத்தல்.

ஒளிப்பதிவு எல்லாம்  கண்களில்  ஒற்றிக்கொள்ள வேண்டும் போல இருக்கின்றது... படத்துக்கு எனக்கு தெரிந்து அதிக  செலவில்லை... லயோலா காலேஜ்,  பெசன்ட்நகர்,ஈசிஆர் ரோட், நாயகன்,  நாயகி வீடு, சில ரெஸ்ட்டாரன்ட்கள் விக்டோரியா ஹாஸ்டல் அவ்வளவுதான்....


உண்மையை மிக அருகில் உட்கார்ந்து மிக அழகாக பதிவு  செய்து இருக்கின்றார்  இயக்குனர்..

இந்த படத்தில்  எல்லோருடைய நடிப்பையும்  தூக்கி சாப்பிட்டு விட்டார்.... நாயகியின் அம்மா கேரக்டர்... என்ன  உடல் மொழி, என்ன நடிப்பு, சான்சே இல்லை... ஜெயப்பிரகாஷையே தூக்கி சாப்பிட்டு விட்டார்... முக்கியமாக வாந்தி எடுத்ததில் இருந்து ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கு வந்து அழும் காட்சி வரை அவரின் நடிப்பு  அற்புதம்.

யுவன் பாடல்கள் அருமை....

சறுக்கல் என்றால்.... நாயகி பாத்திரம் போல்டாக அவன் வேண்டாம் என்று பாலகுமாரன் கதைநாயகிகள் போல  முடிவெடுத்து விட்டு மனக்கோலத்தில் அமர்வது நெருடல்.. குழந்தை இறந்தே பிறந்து விட்டது என்று பெற்றோர் மறைத்து  இருக்கலாம்...

கடைசியில் அந்த பிள்ளை  பாலோடு  மணலில் நடக்க  வெறும் காலில் நடந்தகாரணத்தால் சுடு  தாங்காமல் உட்கார்ந்து அழும் அந்த அழுகை படம் முடிந்து நம்மை  சூடுகின்றது.

=============
படத்தின் டிரைலர்.




==========
படக்குழுவினர் விபரம்.


Directed by Suseenthiran
Produced by Saravanan
Screenplay by Suseenthiran
Starring Santosh Ramesh
Manisha Yadav
Poornima Jayaram
Music by Yuvan Shankar Raja
Cinematography Soorya.A.R
Editing by Anthony
Studio Nallu Studios
Distributed by Red Giant Movies
Release date(s) August 15, 2013
Country India
Language Tamil

==================
பைனல்கிக்.

 இந்த படம் பார்த்தே தீரவேண்டிய படம்... இன்னும் பதினைந்து வருடம் கழிந்து காதல் பற்றி அபிப்பராயம் போன்றவைகளில் பெரியமாறுதல் வரும்...கற்பு என்ற பேத்தல் விஷயத்தை புறந்தள்ளிவிட்டு  இளையதலைமுறை கண்டிப்பாக  முன்னேறி செல்லுவார்கள்.. ஆனால் இப்போது நடக்கும்  இந்த காலக்கட்டம் இருக்கின்றதே...நடுவில் மாட்டிக்கொண்டு தவியாய் தவிக்கின்றது இளையதலைமுறை... தானே முடிவு எடுப்பதா? அல்லது பெற்றோருடன் கலந்து பேசி முடிவு எடுப்பதா? என்று குழம்பிக்கொண்டு இருக்கின்றது... அது   புரிபட இன்னும் கொஞ்சம் வருடம் ஆகும்...

இப்போது கண்டிப்பாக வயதுக்கு வந்த ஆண் பெண் பிள்ளைகள் வைத்து இருக்கும் அத்தனை பெற்றோரும் , டீன் ஏஜ் பிள்ளைகளும் இந்த படத்தை அவசியம் பார்க்கவேண்டும்... வாழ்வியல் பிரச்சனையை சொல்லிக்கொடுக்கும் படம்  என்பதால்.. அதே போல படம் முடியும் போது நீரோத் உபயோகியுங்கள் என்று ஒரு சிலைட் போட்டு இருக்கலாம்...  கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்.


================
படத்தோட ரேட்டிங்

பத்துக்கு எட்டு

===========
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

 

14 comments:

  1. நல்ல பட அறிமுகம்! நன்றி!

    ReplyDelete
  2. நம்ம ஊர் தியெட்டருக்கு இப்படம் வருமோ தெரியல ஆனால் எப்படியாவது பார்த்தே தீருவேன்

    ReplyDelete
  3. படம் பார்த்தே தீருவேன்

    ReplyDelete
  4. படம் பார்த்தே தீருவேன் நன்றி!

    ReplyDelete
  5. நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம்...
    ஆனா நம்ம ஊர்ல இந்த மாதிரி படங்களை ஓடவிடமாட்டாங்களே...

    ReplyDelete
  6. anna ippo than kamala theatre 2nd show padam parthuttu varen. padam super.

    ReplyDelete
  7. கதையின் சஸ்பென்ஸ் எல்லாம் இப்படி சொன்னால் பார்க்காதவர்களுக்கு எப்பிடி சார் இன்டரஸ்ட் வரும்..

    ReplyDelete
  8. விமர்சனத்துக்கு நன்றி.

    ReplyDelete

  9. கண்டிப்பா பார்க்கணும் ....

    ஆமா எதுக்கு கண்டிப்பாக வயதுக்கு வந்த ஆண் பெண் பிள்ளைகள் வைத்து இருக்கும் அத்தனை பெற்றோரும் , டீன் ஏஜ் பிள்ளைகளும் இந்த படத்தை அவசியம் பார்க்கவேண்டும்ன்னு சொல்றிங்க....

    விமர்சனம் பார்த்தா,படம் பார்த்த பெற்றோர்கள்க்கு வயிதில்ல சரக்கு மிக்ஸ் பண்ணாம விட்ட மாதிரி இருக்கும் போல ......


    வாழ்வியல் வேதனையை சீரியசா பேசிட்டு......... எப்படி....."நீரோத் உபயோகியுங்கள் என்று ஒரு சிலைட் போட்டு இருக்கலாம்"ன்னு காமெடி பண்ணி முடிக்கிறிங்க..... தல அங்க நின்னங்க நீங்க....

    ReplyDelete
  10. முழுகதையையும் சொவது நியாயமா?

    "ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்"

    http://arulgreen.blogspot.com/2013/08/AadhalalKadhalSeiveer.html

    ReplyDelete
  11. படம் பார்க்கும் இண்ட்ரஸ்டையே போக்க வைத்துவிட்டது உங்க விமர்சனம்..... தேவையில்லாமல் படித்து தொலைந்துவிட்டேன். இனிமேல் உங்க பக்கமே வரக்கூடாது விமர்சனம் படிக்க..... இப்படியா சஸ்பென்சை உடைப்பது. படத்தின் க்ளைமேக்சை உடைத்து உங்க அதிமேதாவி தனத்தை காட்டிவிட்டீர்கள்.

    ReplyDelete
  12. நான் படித்ததில் மிகவும் மோசமான விமர்சனம் இதுதான்.சஸ்பென்சை உடைத்த விதத்தில்

    ReplyDelete
  13. நல்ல விமர்சனம்...முழுகதையையும் சொவது நியாயமா?

    "ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்"

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner