MADRID-1987/உலக சினிமா/ஸ்பானிஷ்/ஸ்பானிஷ் ஷட்டர்/ சினிமா விமர்சனம்.சமீபகாலமாக தேடி தேடி மலையாள படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்....
உஸ்தாத் ஓட்டல், திருவேன்டரம் லாட்ஜ், சால்ட் அண்டு பெப்பர் , அன்னயும் ரசூலும்போன்ற படங்கள் மன நிறைவை தந்தாலும்.. ஆமேன், நெத்தோலி சிறிய மீனல்ல, ஷட்டர் போன்ற படங்கள் உலக படங்களில் இருந்து  உருவி இருக்கின்றார்கள்....

ஆக்ஷூவலா ஆமேன் மற்றும்  நெத்தோலி ஒரு சிறிய மீனல்ல போன்ற படங்கள்... அப்படியே உலகபடங்களில் இருந்து உருவி மானே தேனே பொண்மானே போட்டு  இருக்கின்றார்கள்.....  அதனால் அந்த படங்கள் மீது பெரிய ஆர்வம் இல்லை...அனால் மலையாள கரையோரத்துக்கு எற்றது படி மாற்றி இருக்கின்றார்கள்... ஆனால் ஷட்டர் திரைப்படம் முழுவதையும்  உருவாமல், கான்செப்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள்  மண்ணுக்கு ஏற்றது போல மாற்றிக்கொண்டு விட்டார்கள்... அந்த வகையில்  பார்த்தால் ஷட்டர் படம் ஒர்த்தான படம்தான்....

கடைகளை வாடகைக்கு விட்டு சம்பாதித்து குடும்பம் நடத்தும் லால்.... ஒரு கடையில் வாடகைக்கு யாரும் எடுக்கவில்லை என்பதால் அந்த கடையில் இரவு நண்பர்களுடன்
ஆப் ஷட்டர் திறந்து வைத்து தண்ணீர் அடித்து தினமும் கும்மாளம் அடிப்பார்... ஒரு நாள் இரவு சரக்கு பத்தாமல் போய், சரக்கு தேடி போகும் போது, ஒரு   விபச்சார பெண்ணை பார்த்து  சபலபட்டு,அதனை  சரக்கு அடித்து கும்மாளமிடும்  காலியான கடைக்கு அழைத்து வந்து   இரண்டு பேரும் உள்ளே போய் விடுவார்கள்..  அவரது ஆட்டோக்கார நண்பர் கடையை வெளிப்பக்கம் பூட்டி விட்டு  பரோட்டா வாங்க சென்று போலிசில் அகப்பட்டுக்கொள்ள ....கடையை திறக்காமல் உள்ளே இரண்டு நாட்கள்  இரண்டு பேரும் வெந்து சாவார்கள்... அவர்கள் எப்படி யாரிடமும் மாட்டாமல் வெளியே வந்தார்கள் என்பதுதான் மீதிக்கதை... அதுதான் ஷட்டர் மலையாள திரைப்படம்... பட் இந்த ஷட்டர் படத்தின் கான்செப்ட் பார்த்ததுமே ச்சே என்ன மாதிரியான படம் என்று  நானும் நினைத்தேன்... பட் கான்செப்ட் ஸ்பேனிஷ் படத்தில் இருந்து எடுத்து மிக அழகாக  திரைக்கதை அமைத்து இருக்கின்றார்கள்....

சரி நம்ம ஊர் கதை போதும்... இப்ப ஸ்பானிஷ் நாட்டு ஷட்டர் படத்தை என்னன்னு அலசி ஆராய்ஞ்சி காய போட்டு விடுவோமா?

==============
MADRID-1987/உலக சினிமா/ஸ்பானிஷ் படத்தின்   ஒன்லைன்  என்ன,-?

ஒரு வயதானவர் ஒரு இளம்பெண் நிர்வாணக்கோலத்தில் ஒரே ஒரு டவலுடன் ஒரு பாத்ரூமில் மாட்டிக்கொள்ளுவதே  கதை.

============
MADRID-1987/உலக சினிமா/ஸ்பானிஷ் படத்தின்  கதை என்ன,?

Miguel (José Sacristán) ஒரு  பேமசான ஜேர்னலிஸ்ட் அன்டு நாவலிஸ்ட்.. அவரிடம் மீடியா ஸ்டூடன்ட்  Angela (María Valverde) இன்டர்வியூ எடுக்க வருகின்றார்.... இருவரும்  காபி ஷாப்பில் மீட் செய்ய....  காபி ஷாப்புக்கு பக்கத்தில் இருக்கும் பெயிண்டிங் நண்பர் வீட்டில் கொஞ்ச நேரம் இன்டர்வியூ விஷயமாக பேசலாம் என்று போக... சில பல மேட்டர்கள் நடக்க ... இரண்டு பேரும் ஒரே பாத்ரூமில் குளிக்க போக.... ஒரே ஒரு  டவுலுடன் பாத்ரும் கதவு  லாக் ஆகி  விடுகின்றது...  கதவை திறக்கவே முடியவில்லை..

இரண்டு பேரும் வெண்டிலேஷன் வழியாக கத்தினாலும் யாரும் உதவிக்கு வரவில்லை.. வெளியே தெரிந்தால் கண்காது மூக்கு வைத்து மானத்தை வாங்கி விடுவார்கள்... இரண்டு நாள் லீவு வேறு... திங்கட்கிழமை தனது பெயிண்டர் நண்பர் வந்த கதவை திறந்தால்தான் உண்டு,.. இரண்டு பேரும்  பாத்ரூமில் என்ன  செய்தார்கள் என்பதை வெண்திரையில் பாருங்கள்..

================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.இரண்டே கேரக்டர்... ஒரு பாத்ரூம்..  ஒன்றரை மணி நேரம் உட்கார வைப்பது பெரிய விஷயம்... இரண்டு பேரும் முதலில் வேண்டா வெறுப்பாக சந்தித்து மெல்ல மெல்ல பேச்சின் மூலம் வசீகரிப்பதாக  மாறுவது அருமை.

பெரிய செலவு எல்லாம் இல்லை... ஒரு காப்பி ஷாப்  அதன் பிறகு பாத்ரூம்.. அவ்வளவுதான்...
எழுத்தாளர் மெல்ல மெல்ல அந்த பெண்ணிடம் தன் விருப்பதை சொல்லி அந்த பெண்ணை வலையில் வீழ்த்தி விட்டு பாத்ரூமில் மாட்டிக்கொண்டு கத்தும் இடம் செமை...

ஒரே ஒரு டவல்.. இரண்டு பேர் ,ஒரு முதியவர்,  ஒரு இளம் பெண்... அதுவும் அழகான இளம் பெண்... கான்சப்ட் யோசித்த ஸ்பானிஷ் இயக்குனர்  இருக்கும் திசை பார்த்து ஒரு கும்பிடு போடவேண்டும்.இந்த தலைமுறை எதுவும் தெரியாது என்று நினைத்தக்கொண்டு இருக்கும் போது ரைட்டர் படிக்கும்  அத்தனை விஷயங்களையும் அந்த பெண்ணும்  வாசித்து இருக்கும் போதுதான் அந்த பெண் மீது அவனுக்கு அதிகமான ஈடுபாடு வருவாதாக காட்சி அமைத்து இருப்பதும்.. முதலில் வெறுத்தாலும்  அதன் பிறகு லாஜிக் என்ன என்பதை உணர்ந்து அந்த பெண் மாறுவது கவிதை..ஒரே பாத்ரூம்.. ஒரே டவல்.. இரண்டு பேர்.... இரண்டு மணி  நேரம் படம்...,, பார்வையாளனை மறு பேச்சு பேசாமல் கட்டிப்போடவேண்டும் ..?, என்ன  செய்யலாம்... அழகான இளம் பெண்ணை போட்டுவிட்டால், ஒரு பயலும் வாய் திறக்கமாட்டான்.. என்று இயக்குனர் David Trueba நினைத்து இருக்கின்றார்... அது முழுக்கவே  நிறைவேறிவிட்டது...

==================
படத்தின் டிரைலர்..
================
படக்குழுவினர்  விபரம்


Director: David Trueba
Writer: David Trueba
Stars: José Sacristán, María Valverde, Ramon Fontserè 
Country: Spain
Language: Spanish
Release Date: 12 October 2012 (USA) See more »
Also Known As: Madryt, 1987 See more »
Filming Locations: Madrid, Spain
Company Credits
Production Co: Buenavida Producciones S.L. See more »
Show detailed company contact information on IMDbPro »
Technical Specs
Runtime: 105 min
Sound Mix: Dolby Digital


===============
பைனல் கிக்.
இந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம்... ஷட்டர் மலையாள படத்தில் இப்படி ஒரு  காட்சி வைத்தால் பொங்கி விடுவார்கள்  என்பதால் மிக அழகாக  மண்ணுக்கு ஏற்றது போல மாற்றி இருக்கின்றார்கள்...இரண்டு பேர் போர் அடிக்குமா ? என்றால் அவர்கள்  இரண்டு பேரும் பேசிக்கொள்ளும் பேச்சுகள் போர் அடிக்காத காரணத்தால்  இந்த படத்தை ரசித்து பார்க்க முடிகின்றது.. இரண்டு பேரின்  நிர்வாணத்தை எவ்வளவு நேரம் பார்த்துகொண்டு இருக்க முடியும்  சொல்லுங்கள்..??? அதனால் அவர்கள் பேச்சில் சுவாரஸ்யத்தை வைத்து  திரைக்கதை எழுதி இருக்கின்றார் இயக்குனர் David Trueba

==================
படத்தோட ரேட்டிங்

பத்துக்கு ஆறு...

==========================
பிரியங்களுடன்


ஜாக்கிசேகர்.நினைப்பது அல்ல நீ

 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

 1. இரண்டு பேரின் நிர்வாணத்தை எவ்வளவு நேரம் பார்த்துகொண்டு இருக்க முடியும் சொல்லுங்கள்..??? correct ah solliteenga....

  ReplyDelete
 2. இரண்டு பேரின் நிர்வாணத்தை எவ்வளவு நேரம் பார்த்துகொண்டு இருக்க முடியும் சொல்லுங்கள்..???
  Correct ah sonneenga!!!!!

  ReplyDelete
 3. அருமையான விமர்சன பார்வை......படம் பார்க்க ஆர்வமாகிறது !

  ReplyDelete
 4. அடைபட்டுத் திறப்புண்ட வாதில்
  _____________________________


  "இது யார் கண்ணாடி? அந்தப் பெண்ணுடையதா? கிட்டப்பார்வை! அதனாலதான் உன்கிட்ட விழுந்திருக்கா," என்பது எழுத்தாளரின் நண்பர் கடைசியில் பேசும் வசனம்.

  அடைபட்ட குளியலறைக்குள் அந்தப் பெண், அந்த எழுத்தாளரைக் குரல் உயர்த்தித் திட்டுகையில், "நான் பொறந்ததுலேர்ந்து எல்லாரும் எனக்குப் புத்திமதி சொல்றதெக் கேட்டுக்கேட்டு எனக்குப் புளிச்சுப் போச்சு. இப்பொ நீங்களும் போதிக்க ஆரம்பிச்சுட்டீங்க," என்று கத்துகிறாள். அவளது அப்பா ஒரு ராணுவ அதிகாரி என்பதும் அவளது மூத்த அக்காவுக்கும் அவளுக்கும் 17 வயது வித்தியாசம் என்பதும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.

  அவளே ஓரிடத்தில் சொல்கிறாள், "தான் பெரிய எழுத்தாளராகவும் தன்னைப் பிறர் பேட்டி காண்பதாகவும் கற்பனை செய்துகொள்வேன்," என்று.

  கிட்டப் பார்வையும், தான் வளரவேண்டும் என்னும் கனவும் உள்ள இளைஞர்களே மூத்த கலைஞர்களுக்கு ரசிகப்பலி ஆகிறார்கள். மூத்த கலைஞர்கள் அவர்களைத் தொட நேர்கையில், இளைஞர்களின் கிட்டப்பார்வையும் தாழ்வு மனப்பான்மையும் நீங்குகிறது. இங்கே கலவிக் காட்சி, உண்மையில், உடலுறவு அல்ல; அது ஒரு தொடர்பு, அவ்வளவுதான். (ஒப்புநோக்குக: “Titanic” படத்தின் கலவிக் காட்சி, கடவுளுக்கும் யூதர்களுக்குமான contact). “Madrid” படத்தின் அந்தக் கலவிக் காட்சியில், அவள் மேலே இருப்பாள்; அவளுடைய கால்களுக்கு ஊன்றி இயங்க ஒரு தளம் தட்டுப்பட்டு இருக்கும். இதற்கு அர்த்தம் இன்னதென்று தெளிகிறதுதானே?

  அந்தக் குளியலறைக்குள் எழுத்தாளர் சினிமாக் காட்டுவதாகச் சொல்கிற கதையிலும், உலகை அறிகையில் அந்தச் சிறுவன் விடுதலை அடைகிறான் என்று உணர்த்தப்படும்.

  "Madrid" ஒரு இன்டெலெக்ஷுவல் மூவி. (நல்லபடம் என்றால் மேற்கத்தியர்கள் படம் பெரும்பாலும் அப்படித்தானே இருக்கும்?) ஆனால், மலையாளப் படத்தின் “ஷட்டர்” தலைப்பு, தந்தைக்கும் மகளுக்குமான generation gap-கு குறியீடாக இருக்கிறது என்றாலும், இது அறிவார்த்த தளத்தில் இயங்கும் ஒரு படம் அல்ல.

  “ஷட்டர்” திரைக்கதை நம்நாட்டு வணிக வெற்றிக்குத் தக்க வகையில் குடும்பம், நட்பு, விலைமகளேயானாலும் அவளுக்குள்ளும் காதல் என்று சில உப்பு உரைப்புகளைச் சேர்த்து மிக அருமையாகப் பின்னப்பட்டு இருக்கிறது. அடைபட்ட ஷட்டரின் தாழ் யாரால் திறக்கப்படும் என்று நான் சில காட்சிகளுக்கு முன்பே யூகித்துவிட்டேன். ஆனால் அந்தக் கடைசிக் காட்சி என் கற்பனைக்கு எட்டாததாக இருந்தது!

  “ஷட்டர்” கட்டாயம் பார்க்கவேண்டிய படம். அதோடு “"Madrid 1987"-ஐ ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தால், நம் ஆட்கள் என்னமாய் திரைக்கதை டெவலப் செய்கிறார்கள் என்று நம்மால் வியக்காமல் இருக்க முடியாது. (இரண்டு படங்களும் நெட்டில் கிடைக்கின்றன.)

  ஆற்றுப்படுத்திய ஜாக்கி சேகருக்கு நன்றி!

  ReplyDelete
 5. hi jackie,

  very good making. if you can ready to direct the same plot with writer charunvetha and laxmi menon i am ready to produce.

  what do you say.

  seshan, dubai

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner