MUMBAI POLICE-2013/உலகசினிமா/ இந்தியா/மும்பை போலிஸ்/சினிமா விமர்சனம்.

அவன் பெயர் ஆன்டனி மோசஸ்( பிரித்விராஜ்) ராஸ்கல் மோசஸ் என்ற சொல்ல பெயரும் அவனுக்கு உண்டு....


நேர்மையான போலிஸ் ஆபிசர்....

நணபர்களுக்காக உயிரையும் கொடுப்பவன்...

தனது டிப்பார்ட்மென்டுக்கு  அவப்பெயர் என்றால் வாலன்டரியாக போய் என்ட்ரி போட்டு, பேர் கொடுத்து விட்டு  உடனுக்குடன் எதிரிகளுக்கு ஆப்பு வைத்து விட்டு வருபவன்.

 எந்த ஊர்ல போஸ்ட்டிங் போட்டாலும் அவன்தான் கிங்.

கிரிமினல்களை மிரளவைப்பதில் அவனுக்கு அப்படி ஒரு  சந்தோஷம்...

 அவன்  தொட்ட கேஸ் எதையும் விட்டதில்லை... ரிசலட் 100 சதவீதம் கேரண்ட்டி.

அவனுக்கு  எந்த பெண்ணோடும் காதல் இல்லை,...  பெண்ணோடு காதல் என்பதையே அசௌகர்யமாக கருதுபவன்...

அவன் உயிர் நண்பன் கொலையாகின்றான்...

அந்த கேஸ் அவனிடம் ஒப்படைக்க படுகின்றது....

அவன் நண்பன் சுட்டுக்கொள்ளப்பட்ட கேஸ்  எடுத்த   சில தினங்களில் உண்மை குற்றவாளியை கண்டு பிடித்து விட்டான்...

 நள்ளிரவில் கார் ஓட்டிக்கொண்டு  வருகின்றான்... ஒரு கையால் கார் ஓட்டியபடி உயரதிகாரிக்கு போன் செய்கின்றான்... கேஸ் குளோஸ்.... அந்த கல்பிரட்டை கண்டு பிடித்து விட்டேன் என்று... கொலையாளி  யார் என்று வாய் திறக்கும் போது ,எதிரில்  பேக்கர் அண்டு மூவர்ஸ்  லாரியில் ஒரு குடும்பத்தின் சாமான்கள் வீடு மாற்றி எடுத்துக்கொண்டு  போய்க்கொண்டு இருக்கின்றார்கள்... அதில்  இருக்கும் பொருட்களில்  கயிறு போட்டு நன்கு கட்டிய ஒரு பிரிட்ஜ், கயிற்றை அறுத்துக்கொண்டு  கார் எதிரில் விழ காரோடு அவன் விபத்துக்குள்ளாகின்றான்...


கஜினி  சூர்யா போல எல்லாம் மறந்து தொலைத்து  விடுகின்றான்...   அவனுக்கு விபத்து நடந்த விஷயத்தை யாருக்கும் தெரியாமல்  மறைக்கின்றான்.. அவன் மாமா பர்ஹான்(ரகுமான்)

 15 நான் கழித்து டூடியில் சேர்ந்து... அவனிடம் திரும்ப அவன் உயிர் நண்பன் சுட்டுக்கொல்லப்பட்ட கேஸ் அவனிடம் ஒப்படைக்கபட ,கஜினிசூர்யா மன நிலையில் இருக்கும் அவன் .......எப்படி அந்த கேஸ் பைலை முடித்து, கொலையாளியை கண்டு பிடித்தான் என்பதுதான்... படத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்... அது எப்படி என்பதை வெண்திரையில் பாருங்கள்.    அவசரத்துக்கு அலிபாய் கடையில் டிவிடியில் நல்ல பிரின்ட் வந்து இருக்கின்றது... வாங்கி  பாருங்கள்.

=========
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

 திரில்லர் படங்கள் நம்ம ஊரில் எடுக்க லாயக்கே இல்லை என்று சொல்லும் வாயை  இந்த படம் மூலம் மூஷ்ட்டிக்கொண்டு உடைத்து, வாயை மூட வைக்கலாம்...  அற்புதமான கிரைம் திரில்லர்...  சொந்தமா சிந்திச்சி இந்த படத்தை எடுத்து  இருந்தா ரொம்ப சந்தோஷம்... அப்படி இல்லைன்னா எல்லா படத்துல இருந்து ஊருவி நீட்டா பிரசன்ட் பண்ணி இருந்தாலும் சரி... பட் நீட் மேக்கிங்..

 நான் லீனியர்ல கதை சொல்லி இருக்காங்க....அற்புதமான ஸ் கீரின் பிளே.... சீட்டு விளையாடும் போது ஜோடி சேர்க்க கையில் சீட்டை எடுத்து சொருகுவுமே... அது போல மிக அழகா சீட்டை  சரியான எடுத்துல சொருகி அசத்தி இருக்காங்க...

மொதல்ல இந்த மாதிரி கேரக்டர்ல ஒரு  பிரபல நடிகர் நடிக்க  சம்மதிக்கனும்... பிரித்விராஜ் கேரளாவில் மாஸ் ஹீரோ... வாய்ப்பே இல்லை...  இப்படி  ஒரு  கேரக்டர்ல நடிக்கும் கட்சை.. தமிழில் பிரபலநடிகர்கள்  அவரிடம் கற்றுக்கொள்ளுங்கள்....ஹேட்ஸ் ஆப் பிரித்வி.


மூன்று மெயின் கதாபாத்திரங்கள் அவ்வளவுதான்... பர்ஹான்  கேரக்டர்ல நடிச்சி இருக்கும் ரகுமான் சேம சூப்பரா அன்டர்பிளே பள்ணி  இருக்கார்.. ராம் படத்துக்கு பிறகு  சரியான போலிஸ் ஆபிசர் வேடம்... நல்ல எக்ஸ்பிரஷன் மிகை இல்லாத நடிப்பு...  பின்னி எடுத்து இருக்கார்... ஏம்பா  அவரை தமிழ்லயும் யூஸ் பண்ணிகோங்கப்பா...


 அப்பார்ட்மென்ட்டில் முதல் சண்டைகாட்சி படமாக்கப்பட்ட விதம் அருமையாக இருந்தது. ஆக்ஷன் கட் எடிட்டிங் பெரிய பலம். அதே போல படத்தின் துவக்க விபத்தும் மிக அழகாக காட்சி படுத்திய,அடுத்த செகன்ட் டேபில் என்ன  நடந்தது என போட்டோவில்  விளக்குவது  நல்ல  உத்தி....

படத்தில் காதல் பாடல்கள் இல்லாதது.. பெரிய நிறை....  இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தை அரைமணிநேரம் கட் பண்ணி இன்னும் ஷார்ப்பாக கட் பண்ணி இருந்தால் இன்னும் கிரிஸ்ப்பாக இருந்து இருக்கும் என்பது என் ரசனை.

ஜெயசூர்யா நாளுக்கு நாள் மெருகு ஏறிக்கொண்டு போகின்றது... அந்த செல்போன் வீடியோ காட்சியை பார்க்கும் போது நமக்கே ஒரு மாதிரியாக இருக்கின்றது. கண் கலங்ககின்றது.

எப்பயும் ராணுவத்துக்கும் போலிசுக்கும் குடுமி பிடி சண்டை பல ஸ்டேட்டுகளில் நடக்கும்.. அந்த ஈகோவை காட்சிகளாக வைத்து வரலாற்றில் இடம் பிடித்து இருக்கின்றார்கள்.


படத்தின் ஒளிப்பதிவாளர்...  இயக்குனர் இழுத்த இழுப்புக்கு எல்லாம் சென்று இருப்பது காட்சிகளில் தெரிகின்றது... ஒளிப்பதிவாளர் ஆர் திவாகருக்கு வாழ்த்துகள்..

A Rosshan Andrrews பிலிம் என்று படம் முடியும் போது  டைட்டில் போடுகையில்  கைதட்ட வேண்டும் என்று தோன்றுகின்றது.. அதுதான் இயக்குனருக்கான வெற்றி.

படத்தின் சறுக்கல்... மறு நாள் விழாவின் போது  கொலை நடக்கும் கிரவுண்டில் ஒரு ஆள் போன்ற அட்டையை செட் செய்து, பச்சை கலர் லேசர் ஒளி எல்லாம் அடித்து... ஒத்திகை பார்ப்பது  எல்லாம் ஓவரோ ஓவர்... இது போல காட்சிகளில் நம்ம   ஆட்கள் ஏன்  கோட்டை விடுகின்றார்கள் என்று தெரியவில்லை.

===============
படத்தின் டிரைலர்..=============
படக்குழுவினர் விபரம்.


Directed by Rosshan Andrrews
Produced by Nisad Haneefa
Written by Bobby-Sanjay
Starring Prithviraj
Jayasurya
Rahman
Music by Gopi Sunder
Cinematography R. Diwakar
Editing by Mahesh Narayanan
Studio Nisad Haneefa Productions
Distributed by Central Pictures
Release date(s)
3 May 2013
Running time 145 minutes
Country India
Language Malayalam


=================
பைனல் கிக்..
இந்த படம் பார்த்தே தீரவேண்டியதிரைப்படம்... நல்ல சஸ்பென்ஸ் கிரைம் நான் வீனியர் ஸ்கீரின் பிளே திரில்லர்... டோன்ட் மிஸ் இட் .. எவ்வளவு சீக்கரம்  பார்க்கறிங்களோ.. அவ்வளவு சீக்கரம் பார்த்துடுங்க... இப்படி ஒரு கேரக்டர் ஏற்று நடிச்ச தைரியத்துக்கு நீங்க பிரித்விக்கு தனியா பாராட்டு விழா நடத்துவிங்க..

===================
படத்தின் ரேட்டிங்.
பத்துக்கு எட்டு

===============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

11 comments:

 1. சீட்டு விளையாடும் போது ஜோடி சேர்க்க கையில் சீட்டை எடுத்து சொருகுவுமே... அது போல மிக அழகா சீட்டை சரியான எடுத்துல சொருகி அசத்தி இருக்காங்க...//இது போன்ற இடைச்சொருகல்கள் படிக்கும் போது சுவாரஸ்யமாய் இருக்கிறது . அருமை..

  ReplyDelete
 2. மிக விறுவிறுப்பான படம்..

  ReplyDelete
 3. படம் பார்த்துட்டேன் ! ! ! நல்லதொரு த்ரில்லர்... கடைசியில் “WHY & HOW" விற்கு விடை தெரிய வர.... உண்மையிலேயே ப்ரிதிவியை எப்படி இந்த படத்தில் நடிக்க வைத்தார்கள் ! ! ஆச்சரியமே ! !

  ReplyDelete
 4. அட்டகாசமான படம் சார்.ப்ரித்விக்கு ஒரு சல்யுட் கிளைமாக்ஸ் சான்சே இல்ல அட்டகாசம்

  ReplyDelete
 5. அட்டகாசமான படம் சார்.ப்ரித்விக்கு ஒரு சல்யுட் கிளைமாக்ஸ் சான்சே இல்ல அட்டகாசம்

  ReplyDelete
 6. படம் சூப்பர் சார் ப்ரித்விக்கு கண்டிப்பா ஒரு சல்யுட் கிளைமாக்ஸ் அட்டகாசம்

  ReplyDelete
 7. my fav malayalam movies Indian rupee,Cocktail,Veruthe oru Bharya

  ReplyDelete
 8. //படத்தின் சறுக்கல்... மறு நாள் விழாவின் போது கொலை நடக்கும் கிரவுண்டில் ஒரு ஆள் போன்ற அட்டையை செட் செய்து, பச்சை கலர் லேசர் ஒளி எல்லாம் அடித்து... ஒத்திகை பார்ப்பது எல்லாம் ஓவரோ ஓவர்... இது போல காட்சிகளில் நம்ம ஆட்கள் ஏன் கோட்டை விடுகின்றார்கள் என்று தெரியவில்லை.// நானும் இதைதான் நினைத்தேன். இந்த இடம் தான் ரொம்ப செயற்கையாக இருந்தது. நல்ல விமர்சனம். பாராட்டுகள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner