Swamy Ra Ra-2013/உலகசினிமா/ இந்தியா/பத்துகோடி விநாயகர் சிலை.



சமீபகாலங்களில்  கவலையை மறந்து ரசிக்க  வைக்க சில  நல்ல படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன....
கிளிபோயி என்கின்ற மலையாள படம் பார்த்தேன்.... மிக அற்புதம் ஆரண்யகாண்டம்  படம் பார்த்துவிட்டு இப்படி ஒரு படம் மலையாளத்துல  இதே ஸ்டைலில்  எடுக்கின்றேன்... அதுவரை தாடியை ஷேவ் செய்ய மாட்டேன் என்று இயக்குனர் சபதம் போட்டு விட்டு அந்த படத்தை எடுத்து இருக்க வேண்டும்.. இருந்தாலும் படம் அருமை...

சமீபத்தில் சூது கவ்வும், நேரம், போன்ற படங்களில் திரைக்கதைகளில் ஒரு நீட் இருந்த்தை மறுக்க  முடியாது....  தெலுங்கில் ஷர்மி நடித்த அனுக்க குன்டோ ஒக்க ரோஜுக்கு பிறகு ஒரு நல்ல  சேசிங் படம் பார்த்த திருப்தி சுவாமி ராரா படத்தை பார்த்த போது  ஏற்ப்பட்டது... மிக நல்ல மேக்கிங்.... சூதுகவ்வும் திரைப்படம் போல இந்த திரைப்படமும் சேசிங் ஜேனர் படம்தான்... அதை அற்புதமான மேக்கிங்கில் அசந்தி இருக்கின்றார்கள்... சூது கவ்வும் திரைப்படம் எந்த படத்தில் இருந்து காட்சிகளை உருவினார்கள் என்று  தெரியும்.. இந்த படமும் விதிவிலக்கில்லை... ஆனாலும் மேக்கிங்கில்  மிரட்டி இருக்கின்றார்கள்... படத்தின் ஒப்பனிங் சீனிலேயே  மிரட்டி இருக்கின்றார்கள்... அதே போல இன்டர்வெல் காட்சியும் அசத்தல்... பிக்பாக்கெட் என்ற ஒரு கிளாசிக் படத்தை அவுட்லைனாக வைத்துக்கொண்டு  இந்த சேசிங் படத்தை பிரசன்ட் பண்ணி இருக்கின்றார்கள்...

================

Swamy Ra Ra-2013/உலகசினிமா/ இந்தியா படத்தின் ஒன்லைன்.
 அஞ்சிக்கும் பத்துக்கும் பிக்பாக்கெட்  அடிக்கும் கும்பலிடம் பத்து  கோடி ரூபாய்  மதிப்புள்ள விநாயகர் சிலை கிடைத்தால்.,..??

=================

Swamy Ra Ra-2013/உலகசினிமா/ இந்தியா படத்தின் கதை என்ன?
நிகில்( சூர்யா),பாணு (பூஜா) ரவி மூன்று பேரும் பிக்பாக்கெட் பேர்வழிகள்..ஒரு பிக்பாக்கெட் கேசில் நிகிலை  பொதுமக்கள் துரத்த அவன் சுவாதியின் புது மொபட்டை எடுத்துக்கொண்டு   செல்லுகின்றான்...  
இதன் மூலம் சுவாதிக்கும் நிகிலுக்கும் நட்பு ஏற்ப்படுகின்றது...

ஒரு கட்டத்தில் ஏதெச்சையாக  இவர்களிடம் பத்துக்கோடி ரூபாய் மதிப்பிள்ன்ன விநாயகர் சிலை கிடைக்கின்றது...  அதனால் பல பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள்... எப்படி இந்த  பிரச்சனையில் இருந்து அவர்கள் நால்வரும் வெளியே வந்தார்கள் என்பதை வெண்திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
==============
படத்தின் முதல் காட்சியில் இரண்டு பேர் சிலுக்ழுவின் வாழ்க்கையை பற்றி சிலாகித்து அப்புறம் டேர்ட்டி பிக்சர் படத்தை புகழ்ந்து விட்டு  அவர்கள் செய்யும்  செயல்கள் நம்மை புருவத்திலும் நிமிர்த்தியும் உட்கார வைக்கின்றன... இந்த ஓப்பனிங்காகவே இயக்குனர் சுதிர்வர்மாவுக்கு ஒரு பொக்கே பார்சல்...

சுவாதிக்கு வெளியே  நிகில்  வெயிட் செய்வது போல காட்சியின் டூவிஸ்ட்டில் இருந்து சின்ன  சின்ன காட்சிகளில் கூட சிரத்தை எடுத்து படத்தை  செதுக்கி இருக்கின்றார்கள்..
ஹேப்பி டேஸ் படத்தில் காமெடியனாக  அசத்திய நிகில் இந்த படத்தில் செம மெச்சூர்டாக  நடித்து இருக்கின்றார்.... புகைபிடிக்கும் காட்சிகளில் ஜும் லென்சில் ரசிக்க வைக்கின்றார்.


சுவாதி  ஆப் சாரியில் சுப்ரமணியபுரத்தில் அசத்தியவர்... தெலுங்குவாலாக்கல் அவரை  டீசன்டாக இந்த படத்தில் விட்டு வைத்து இருக்கின்றார்கள்.. இருந்தாலும் சின்ன பனியனும் டிரவுசருடன் தென் மாவட்டத்து இளைஞன் பார்த்தால் எப்படியும் அந்த படத்தை கட் பண்ணி சோறு போட்டு சுவற்றில் ஒட்டி வைத்து கனவில் மிதக்க வாய்ப்பு இருக்கின்றது...

எனக்கு படத்தில் பிடித்த பெண் எஸ் எஸ் மீயூசிக் பூஜாதான்... திருமணம் ஆகியும் அசத்து அசத்து என்று அசத்துகின்றார்.. வழியும் தாதாவிடம் கொஞ்சும் அந்த காட்சியும்  பிகினியில் நீச்சல் குளத்தில் தன் திறமையை  காட்சி  நம்மை கிறங்க வைக்கின்றார்.

மாலில் நடக்கும் பிக்பாக்கெட் காட்சிகளில் மேக்கிங்கில் ஸ்டைல் அசத்துகின்றது...  சூதுகவ்வும் படத்துக்கு எப்படி ஒரு நல்ல இசையமைப்பாளர்  கிடைத்தாரோ அது போல இந்த படத்துக்கு சன்னி அசத்தி இருக்கின்றார்...  முக்கியமாக  நால்வரும் உயர் பயத்துடன் ஓடும் காட்சிகளில்    பின்னனி இசையில்  அசத்தி இருக்கின்றார் இசையமைப்பாளர்.,

அதே  போல காட்சிக்கு காட்சி ஒளிப்பதிவளார் ரிச்சர்ட் அசத்தி இருக்கின்றார்... லோ பட்ஜெட் படம்தான்...ஆனால் செம ரிச்சாக  ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார்... அவருக்கு பக்கபலமாய் இருந்து இருக்கின்றார் எடிட்டர் கிருத்திகா சீனுவாஸ்.


எல்லா படத்திலும்  காமெடி கேரக்ட்ர் ரவி பாபு டான் கேரக்டரில்...  டான் போல உள்ளே போக நினைக்கும் போது தடியன் முறைப்பதில் இருந்து படம் நெடுக்க அசத்துகின்றார்...பிளாக்ஹூயூமர் படத்தில் மிக அற்புதமாக பயண்படுத்தபட்டு  இருக்கின்றது...

=============
படத்தின் டிரைலர்.




================
படக்குழுவினர் விபரம்.

 Directed by Sudhir Varma
Produced by Chakri Chigurupati
Story by Sudhir Varma
Starring Nikhil Siddharth
Swati Reddy
Music by Sunny M.R.
Cinematography Richard Prasad
Editing by Kartika Srinivas[1]
Studio Lakshmi Narasimha Entertainments
Distributed by Cinema5 (US) [2]
Release date(s)
March 23, 2013
Running time 120 minutes [2]
Country India
Language Telugu


=============
பைனல்கிக்.
ஒரு கடை திறப்பு  விழா... அதுக்கு ஒரு பிரபல நடிகை  அந்த கடையை திறந்து வைக்கின்றார்.. அவர் முகத்தை பட்ஜட் காரணமாக காட்டவில்லை... ஆனால்  அந்த நடிகை  புடவை அணிந்து இருக்கின்றார்.. ஆனால் தோள் பட்டைக்கு கீழே ஒரு நீமோ மீன் பளிச்சென்னு காணப்படுகின்றது..  அந்த காட்சிக்கு ஒரு  பொக்கே பார்சல்.   இப்படி படம் நெடுக்க சின்ன சின்ன விஷயங்களில் மிரட்டி இருக்கின்றார்கள்... கடைசி கிளைமாக்ஸ்காட்சியும் ரசிக்க வைக்கின்றார்கள்... அதனால் இந்த படத்தை பாத்தே தீரவேண்டிய திரைப்படம் என்று  பரிந்துரைக்கின்றேன்..

======
படத்தோட ரேட்டிங்


பத்துக்கு ஏழு...

============
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. விமர்சனம் அருமை...
    அதென்ன தென்மாவட்டத்து இளைஞன் மட்டும்தான் எச்சில் தொட்டு ஒட்டுவானா... வட மாவட்டத்துக்காரர்கள் எல்லாம் ரசிக்க மாட்டார்களா?

    படம் நல்லாயிருக்குங்கிறீங்க... டோரண்ட்ல வரட்டும்... இங்க தியேட்டருக்கு வராது....

    ReplyDelete
  2. "soothu kavvum" was a theft movie a? Oh God! i thought our tamil directors had improved their movie making skills and gave a good movie. thirundhave maataanga pola? jackie based on which movie does soothu kavvum made?

    ReplyDelete
  3. intha "swamy ra ra" movie neraya english padathoda copy...first scene copy from the movie"pulp fiction" ...Sodthu kavvum is not a copy movie...appadi copy na yentha movie ooda copy nu sollunga.?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner