ஆன்மீகத்தின் மீது பெரிய நாட்டம் எல்லாம் இல்லை..
அதீத கடவுள் நம்பிக்கை
கொண்டு பிரகாரம் சுற்றிக்கொண்டு இருந்ததில்லை. ஆனால் ஒரு சக்தி இருக்கின்றது..
அதுக்கு நமக்கு பிடித்தது போல அனுசரனையாக பெயர் வைத்துக்கொண்டு வழிபட்டுக்கொண்டு
இருக்கின்றோம் என்பது மட்டும் தெரியும்..
எனக்கு தெரிந்து கண்ணுக்கு தெரிந்த நீரூபிக்கபட்ட
சாமி... சூரியன் மட்டுமே.. அதுவே இந்த உலகத்தில் சகலமும் இயங்க முக்கியகாரணம் என்பது என்னை
பொருத்தவரை நிரூபிக்கபட்ட உண்மை.. அதனாலே
வெளியே போகும் போது சூரியனை பார்த்து சிநேகமாய் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு என்
வேலையை பார்த்துக்கொண்டு செல்லுபவன் நான்..
கடந்த ஆறுமாதமாக என்னை கடன் சுமை
அலைகழித்துக்கொண்டு இருக்கின்றது... இப்படி ஒரு சூழ்நிலையை நான் இதுவரை சந்தித்தது
இல்லை...இரண்டு மாதத்துக்கு முன்வேலையை விட்டு விட்டு வெளியே வந்தாகி விட்டது.
அதனால் இன்னும் பொருளாதார பிரச்சனைகள்....
எதிர்பார்க்கும் விஷயங்கள் கானல் நீராக காட்சி
அளிக்கின்றன. ஒரு முட்டு சந்தில் மாட்டிக்கொண்டு எந்த பக்கம் தப்பிப்பது என்று தெரியாமல் ரம்பிள் இன் த
புரோனக்ஸ் படத்தில் ஜாக்கி பீர்பாட்டில் அடி வாங்குவது போல அடி வாங்கி கொண்டு இருக்கின்றேன்...
நெருங்கிய நண்பர்கள் கூட ஆதரவாய் பேசி விட்டு அவர் பங்கிற்கு இரண்டு பீர் பாட்டிலை
என் வேதனை தெரியாமல் வயிற்றில் பாய்ச்சி
செல்கின்றார்...குடும்பம் என்று ஆன பிறகு
இப்படி ஒரு சூழ்நிலை என்னை வியப்பில் ஆழ்ந்துகின்றது...
தலைவரே நீங்க கன்னி ராசி... ஏழரை சனி நடக்குது...அப்படித்தான்
நடக்கும் , அமைதியாக யாரு நல்லவன், யாரு கெட்டவன் அப்படி தெரிஞ்சிக்க, உறவுகள் மற்றும் நண்பர்களின் சுயரூபம் தெரிய ....இப்படி
ஒரு இக்கட்டில் நீங்கள் மாட்டி இருக்கின்றீர்கள்... சந்தோஷ தருனத்தில் இப்படி இனம் காட்டினால்
உங்களுக்கு புரியாது.. ஆனா இப்ப நீங்க அந்த மனிதர்களை எளிதில் மறக்க மாட்டீர்கள் அல்லவா, ??அதுக்குதான்
இப்படி பகவான் விளையாடுகின்றார் என்றார் ஒரு ஆன்மீக
நண்பர்....
ஆனால் நான் அமைதியாக இருக்கின்றேன்... எனக்கு நான் செய்யும் சின்ன வேலையை கூட பிடித்து செய்கின்றேன்.... அதை இன்னும் உண்மையாக செய்து கொண்டு
இருக்கின்றேன்...மனப்பூர்வமாய செய்கின்றேன். பிரச்சனைகளை கவனித்து வருகின்றேன்..
என் எதிரிகளுக்காக நான் ஒரு துரும்பை கூட கிள்ளி போடுவதில்லை... அவர்களுக்காக நேரம் மெனக்கொடுவதில்லை....கெடுவான் கேடு
நினைப்பான்... வானத்தை நோக்கி அவன்க்கிட்ட பாரத்தை இறக்கிட்டு அடுத்த வேலையை பார்க்க போய் விடும் ரகம் நான்..
இன்றைய பொழுதை மிக சந்தோஷமாக கழிக்கின்றேன்... இன்ப துன்பங்களை எதிர்கொள்கின்றேன்...
அப்படி இருப்பது தவறோ? என்று
மனக்குழப்பங்கள் என்னுள்..
நண்பர் குறும்பழகனை பார்க்க சென்ற
போது... நிறைய பேசிக்கொண்டு இருந்தோம்...
இந்தாங்க இந்த புத்தகத்தை வாசிங்க.. ஒரு தெளிவு பிறக்கும்.. தெளிவு பிறக்குதோ
இல்லையோ? ஒரு சின்ன மாற்றத்தை இந்த
புத்தகம் கண்டிப்பா உங்களுக்கு
உருவாக்கும்...
ஞானகுரு என்று ஒரு புத்தகத்தை கொடுத்தார்..
என்னடா இது சாமியார் படம் போட்டு இருக்கு....? நமக்கு அதுக்கும் ரொம்ப
தூரமாச்சே.... என்று வாங்க யோசித்தேன்... சரி
படிக்காம நிறைய புக்கு செல்புல கெடக்குது.. அதுல இது ஒன்னா இருந்துட்டு
போவுதுன்னு வாங்கிட்டு வந்து வச்சிட்டேன்...
இரண்டு நாளைக்கு முன்ன மவுண்ட்ரோட்டுல ரிமோட்
வாங்கவும் யூபிஎஸ் சர்விஸ் கொடுக்கவும்
சுத்திக்கிட்டு இருந்தேன்... போர் அடிச்சா என்ன செய்யறதுன்னு நண்பர் குறும்பழகன் கொடுத்த இந்த புத்தகத்தை பைல எடுத்து போட்டுக்கிட்டு போனேன்... மதியத்துக்கு மேல வரச்சொன்னாங்க....
ராணிமெய்யம்மை ஹாலுக்கு எதிரில் இருக்கும்
பூங்காவில் போய் உட்கார்ந்து புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்... என்னை அந்த
புத்தகம் அதில் வந்த சாமானியராக இருக்கும் ஞானகுரு கேரக்டர்... வாழ்க்கையை பற்றி
பேசியது... இதுநாள் வரை என்னுள் குடைந்துகொண்டு இருந்த பல ஆன்மீக கேள்விகளுக்கு லாஜிக்காக உதாரணதோடு
பதில் சொல்லியது...
இந்த புத்தகத்தை வாசிக்கும் போது மனது லேசாகி
கொண்டு சென்றதை என்னால் உணர முடிந்தது. இரண்டு மாதகாலமாக தீவிர மன அழுத்ததில்
தற்கொலை ஏன் செய்து கொள்கின்றார்கள் எனும் அளவுக்கு யோசிக்க வைத்த மன அழுத்தத்தை
ஒரு நொடியில் இந்த புத்தகம் தூள் தூளாக்கியது... பாதி புத்தகம் படித்துக்கொண்டு இருக்கும் போதே குறும்பழகனுக்கு போன் செய்து நன்றி சொன்னேன்.
வாசிக்க, பக்கம் புரட்ட புரட்ட வாழ்வியலுக்கான அர்த்தத்தை கற்றுக்கொடுத்தது... நாய் குரைக்கின்றது என்று மூச்சி வாங்க ஒடுவதை காட்டிலும்... நாய் யாரை பார்த்து, எந்த திசை பார்த்து
குரைக்கின்றது என்பதை ஒரு கணம் நின்று பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கின்றது இந்த புத்தகம்..., ஆது ஏரியாவில் நுழைந்த
தெரு நாயை விரட்ட கூட அது குரைத்து
இருக்கும்... நமக்கு பிரச்சனை என்பதால் எதை பார்த்தாலும் நம்மை நோக்கி
குரைக்கின்றதோ என்று பயம் வரும் அல்லவா? அந்த பயத்தை இந்த புத்தகம் போக்குகின்றது.தியானம்,
காமம், காதல் போன்றவற்றை ஜஸ்ட் லைக்தட்டாக தொட்டு தெளிவுபடுத்துகின்றது....
இந்த
புத்தகத்தில் 130 மற்றும் 131
பக்கத்தில்....
“ஒருவனை நல்லவன் அல்லது கெட்டவன் என்று
முடிவு செய்வது காலம் மட்டுமே...ஒரு
திருடன் கத்தியை காட்டி மிரட்டும் போது, யாரமற்ற தெருவில் பணம் அனாதையாக கீழே கிடக்கும் போது,முகம் பார்க்கும் கண்ணாடி
நிறைந்த அறையில் தனியாக இருக்கும் போது,
மனிதர்கள் எப்படி எல்லாம் நடந்து
கொள்வார்கள் என்பதை அவர்கள் முன் கூட்டியே அறிய மாட்டார்கள்... வெளி உலகுக்கு
நல்லவனாக தெரியும் ஒருவன் வீட்டில் மனைவி குழந்தைகளை அடக்கி ஆளும் கொடுரனாக
இருக்கலாம்.. எல்லோரிடமும் வம்பு வளர்ந்துக்கொண்டு இருப்பவன் தனிமைக்கு பயந்து நடுக்குபவனாக இருக்கலாம்.
எல்லா மனிதர்களிடத்திலும் மிருக கணம்
அடிமனதில் உரவி கொண்டுதான் இருக்கும் சாட்சிக்கு யாருமில்லாத சந்தர்பத்தை எந்த
மனிதனும் தவறவிடுவதில்லை... தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தும், அதை செய்ய துணிவில்லாதவர்கள்
நல்லவர்கள் என்று சொல்வது சரியில்லை என்கின்றேன். அதனால் முன்னேறியவனை கெட்டவன் என்றும் கஷ்டப்படுபவனை நல்லவன்
என்ற பார்வையில் பார்க்காதே.
உன்னுடைய பார்வையில் மிக நல்லவனாக தெரியும்
ஒருவன்... அடுத்தவன் பார்வையில் மிக கெட்டவனாக தெரியலாம்.. பணக்காரன், வசதியானவன்,
இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று நீ
நினைத்துக்கொண்டு இருக்கும் ஒருவன், சேமித்திருக்கும் பணம் போதவில்லையே
என்று புலம்பிக்கொண்டு இருக்கலாம்.”
என்று
போகின்ற போக்கில் பல விஷயங்களை உதாரணத்தோடு அதுவும் லாஜிக்காக விளக்கி விட்டு போகின்றார் அந்த சாமான்ய
சாமியார்.....
உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை மீள முடியா
பிரச்சனை என்று நீங்கள் நினைத்துக்கொண்டு
இருக்கலாம்...மன அழுத்தத்தை குறைக்க ஒரு பாக்கெட் தம் அடித்து
தீர்க்கலாம், அல்லது சிக்கன்
சைடிஷோடு ஒரு ஆப் பாட்டிலை காலி செய்யலாம்... அல்லது வேசிக்கு பணம் கொடுத்து
விட்டு புணரும் சில கணங்களில் அந்த பிரச்சனைகளை
மறக்கலாம்... அல்லது என்னை போல ஒரு
பூங்காவில் எந்த இடையூரும் இல்லாமல் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்..
இந்த புத்தகம் சர்வரோக நிவாரணி அல்ல.. ஆனால் பிரச்சனைகளோடு இருக்கும் மனதை தெளிவாக்குகின்றது
என்பது முற்றிலும் உண்மை.
எஸ்கே முருகன் இந்த புத்தகத்தை எழுதி
இருக்கின்றார்... சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டு
இருக்கின்றது.280 பக்கங்கள்....விலை 175 ரூபாய்.தொலைபேசி.24342771... சென்னைவாசிகள் கே கே நகரில் இருக்கும் நண்பர் வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலசில் இந்த
புத்தகத்தை வாங்கி கொள்ளவும்.
நல்ல நேரத்தில் இந்த புத்தகத்தை பரிந்துரைத்து வாசிக்க
அளித்த நண்பர் குறும்பழகனுக்கு மிக்க நன்றி.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
\\கடந்த ஆறுமாதமாக என்னை கடன் சுமை அலைகழித்துக்கொண்டு இருக்கின்றது... இப்படி ஒரு சூழ்நிலையை நான் இதுவரை சந்தித்தது இல்லை..//
ReplyDelete\\எதிர்பார்க்கும் விஷயங்கள் கானல் நீராக காட்சி அளிக்கின்றன. ஒரு முட்டு சந்தில் மாட்டிக்கொண்டு எந்த பக்கம் தப்பிப்பது என்று தெரியாமல்//
\\தலைவரே நீங்க கன்னி ராசி... ஏழரை சனி நடக்குது...அப்படித்தான் நடக்கும் , அமைதியாக யாரு நல்லவன், யாரு கெட்டவன் அப்படி தெரிஞ்சிக்க, உறவுகள் மற்றும் நண்பர்களின் சுயரூபம் தெரிய ....இப்படி ஒரு இக்கட்டில் நீங்கள் மாட்டி இருக்கின்றீர்கள்... சந்தோஷ தருனத்தில் இப்படி இனம் காட்டினால் உங்களுக்கு புரியாது.. ஆனா இப்ப நீங்க அந்த மனிதர்களை எளிதில் மறக்க மாட்டீர்கள் அல்லவா//
ஜாக்கி உங்களைப்போலவேதான் நானும் நீங்கனாச்சும் ப்ரவாயில்ல 6 மாசம்தான் எனக்கு கடந்த 3 வருடமா இப்படிதான் இருக்கு ஏன்னா எனக்கு துலாம் ராசியாம் ஜென்ம சனியாம் எதிர்மறை விஷயங்கள்ளாம் அச்சு பிரழாமல் அப்படியே நடக்குது ஆனா நேர்மறை விஷயங்கள் உல்டாவா நடக்குது. எனக்கு ஒரே சர்வ நிவாரணி ஆண்மீக புத்தங்கள்தான்.
இந்த புத்தகம் சர்வரோக நிவாரணி அல்ல.. ஆனால் பிரச்சனைகளோடு இருக்கும் மனதை தெளிவாக்குகின்றது என்பது முற்றிலும் உண்மை.
ReplyDelete--------
அண்ணா... நானும் இப்போ கடன் பிரச்சினையில்தான் இருக்கிறேன்... சிம்மம் சீறும் என்றார்கள் இன்னும் சீறவில்லை... சில புத்தகங்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து படிக்கிறேன்.. இது இணையத்தில் கிட்டுமா? அபுதாபியில் இருப்பதால் கேட்கிறேன்.... இல்லையேல் வாங்கி வாசித்துவிடுவேன்...
Jackie,
ReplyDeleteThanks for sharing the book review.
Best wishes to you and Ravi to get over your debt burden.
Jackie,
ReplyDeleteThanks for the book review.
Best wishes to you and Ravi to come out of your debt burdens soon.
just now joint i like this message
ReplyDeleteUngal utharanankal rusikkavilai.anyway,my wishes to get wealth soon.
ReplyDeleteJackie anna, onlinela padikrathukku chance irukka ?
ReplyDeleteAnna, onlinela padikrathukku vali ethatchum irukka...
ReplyDelete