காலம் காலமாக கடிகாரம் வாங்கும் இடம் பீஆர்அண்டு சன்ஸ்
என்று ரேடியோ மட்டுமே கோலோச்சிக்கொண்டு இருந்த காலத்தில் ரேடியோவில் வந்த விளம்பர வாசகம் இது...... நான் என் ஊரில் ரேடியோவில் கேட்டு இருக்கின்றேன்... ஆனால் சென்னையில் அதே கட்டிடத்தை டாக்குமென்ட்ரி செய்வேன் என்று நினைக்கவில்லை
==================
இன்றைக்கு கட்டிடம் கதை சொல்லும் நிகழ்ச்சியில் நாம் பார்க்க இருக்கும் கட்டிடம் சென்னை அண்ணாசாலையில்…. காலம் காலமாக மக்கள் கடிகாரம் வாங்கும் இடம் பிஆர் ஆர் சன்ஸ் என்ற விளம்பர வாசகத்துக்கு சொந்தமான பிஆர் ஆர் அண்டு சன்ஸ் கட்டிடம்…
130 வருடங்களை கடந்து தன் பாராம்பரியத்தை பறை சாற்றியபடி இன்னும் கம்பீரமாய் அண்ணாசாலையில் நிற்கும் இந்த கட்டிடத்தின் வராலாற்றினை சற்றே புரட்டிப்பார்ப்போம்.
1843 ஆம் வருடம் ஸ்காட்லாந்தில் இருந்து சென்னைக்கு இரண்டு உழைப்பாளிகள் ஐஸ் வியாபரம் செய்ய வந்தார்கள்…. அவர்கள் பெயர்கள் முறையே பீட்டர் ஆர், அவரது சகோதரர் அலக்சான்டர் ஆர்………
பீட்டர் ஆர் கடிகாரம் தயாரிப்பதில் வல்லவர்,. அப்போது சென்னையில் பிராட்வேயில் இயங்கி வந்த ஜார்ஜ் கார்டன் அன்கோ என்ற கடிகார நிறுவணத்தில் சகோதரர்கள் இருவரும் வேலைக்கு சேர்ந்தார்கள்..இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கார்டன் என்பவரிடம் இருந்து இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கி கடுமையாக உழைத்தனர்…பீட்டர் மகன்கள் ஜேம்ஸ் மற்றும் ராபர்ட் இருவரும் கடிகாரத்துக்கு தாயகமான சுவிட்சர்லாந்துக்கு சென்று கடிகார தொழில் நுட்பம் பயின்று வந்தார்கள்.
இதில் பீட்டரின் மகனான ராபர்ட் வசம் இந்த நிறுவனம் வந்த உடன் கடுமையாக உழைத்து இந்த நிறுவனத்தின் புகழை உலகமெங்கும் பரப்பினார்…இப்படித்தான் பிஆர்ஆர் அண்டு சன்ஸ் சென்னையில் கால் பதித்தது.
1879ஆம் வருடம் வரை பிராட்வேயில் இருந்த இந்த நிறுவனம் வெள்ளைக்கார அரசின் முத்த கட்டிட கலை ஆலோசகரான ராபாட் சிஸ்கோம் அவர்களிடம் இப்போது நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் இந்த கட்டிடத்தினை வடிவமைத்து கட்ட வேண்டிய பொறுப்பினை ஒப்படைத்தார்கள்..
வழக்கம் போல இந்த கட்டிடத்தையும் ராபர்ட் சிஸ்கோம்… இந்திய. முகலாய,ரோம் கட்டிடக்கலையோடு காலே கால் கிலோ கேரளத்து ஸ்டைலயும் இதில் கலந்து இந்த கட்டிடத்தை எழுப்பினார். ராபர்ட் சிஸ்கோம்…
6000 ஆயிரம் சதுர அடிகொண்ட இந்த கட்டிடத்தின் உச்சியில் கிழக்கு தெற்கு வடக்கு என மூன்று திசைகளில் அன்றையை சென்னை நகரத்து மக்களுக்கு காலம் காட்டும் கடிகாரமாகவும் இன்றும் காலத்தை காட்டியபடி இந்த கடிகாரம் இன்றும் தன் பணியை இடையறாது செய்து வருகின்றது.
ஒரு காலத்தில் , வைரம் வைடுரியங்கள், வெள்ளி பொருட்கள்,விலை உயர்ந்த அணிகலன்கள் முற்க்கொண்டு இந்த இடத்தில் விற்பனை செய்து இருக்கின்றார்கள்… ஹைதரபாத் நிஜாமில் இருந்து இங்கிலாந்து வேல்ஸ் இளவரசர் வரை இங்கே பொருட்களை வாங்கி சென்று இருக்கின்றார்கள்..
சுவட்சர்லாந்தில் இருந்து கடிகார உதிரி பாகங்களை இறக்குமதி செய்து சென்னையில் அசெம்பிள் செய்து விற்ப்பனை செய்தனர்… 1934 ஆம் ஆண்டு 18 கேரட் கோல்ட் வாட்ச்198 ரூபாய்க்கு விற்று இருக்கின்றார்கள்..
இரண்டாம் உலக போரின் போது இந்த கட்டிடத்துக்கு பின்புறம் உள்ள பேக்ட்ரியில் துப்பாக்கி மற்றும் யுத்த தளவாடங்கள் தயாரித்து கொடுத்து இருக்கின்றார்கள்.
இந்த கட்டித்தின் தரைகளை பாருங்கள் இன்று டிசைன்கள் கம்யூட்டரில் வடிவமைத்து ஒரு சதுர அடியில் டிசைன் டைல்கள் வந்துவிட்டன. ஆனால் அந்த காலத்தில் சின்ன சின்ன பிஸ்களாக டைல் எடுத்து ஒட்டி 60 ஆடி நீளத்துக்கு டைல்ஸ் பதித்து தலை வேலைபாடுகளுடன் இந்த கட்டிடத்தின் தரைப்பகுதியை வடிவமைத்து இருக்கின்றார்கள்..
ஒரு காலத்தில் 3000 தொழிலாளர்கன் வேலை பார்த்த இந்த பாரம்பரிய கட்டிடத்தின் ஒரு பகுதி மெட்ரோ ரயில் பணிக்காக மெட்ரோ ரயில் தன் ஆக்ட்டோபஸ் கரங்களால்முக்கால் வாசி இடத்தை சுவாக செய்து விட்டது வருத்தமே,.,...
58 வயதுக்கு மேல் எந்த நிறுவனமும் தன் ஊழியர்களை தன்னோடு வைத்துக்கொண்டது இல்லை..12 வயதில் பிஆர் ஆர்சன்ஸசில் ஆபிஸ் பாயாக வேலைக்கு சேர்ந்த முருகேசனை கடிகார மெக்கானிக்கா மாற்றி அழகு பார்த்தோடு மட்டும் அல்லாமல் 84 வயதில் இன்றும் தன்னோடு கை கோர்த்து அழைத்து சென்றுக்கொண்டு இரு,க்கின்றது… இந்த கம்பீரமான பீஆர் ஆர் அண்டு சன்ஸ் கட்டிடம்….
பறக்கும் ரயில் பணி, புதியதலைமைசெயலக கட்டிடம், மெட்ரோ ரயில் என்று பிஆர் அர் சன்ஸ் கட்டிடத்தின் எதிரே நிறைய புதுமைகள் நடந்தாலும் 130 வருட வரலாற்று பெருமையோடு பல மாற்றங்களை பார்த்த படி அமைதியாக இருக்கின்றது சென்னையின் பழமையான அடையாளங்களில் ஒன்றான இந்த பிஆர் ஆர் அண்டு சன்ஸ் கட்டிடம்.
இதுவரை படித்தவை அனைத்து காட்சி வடிவில்... ரசிப்பீர்கள் என்று நம்புகின்றேன்...
காட்சிகள் எடுக்க உறுதுணையாக இருந்த கேமராமேன் தாமஸ் மற்றும் குரல் கொடுத்த புவனாவுக்கும் நன்றிகள்.
Kattidam Kathai Solgirathu by dm_5125efc68d872
சென்னை தனது 374 வருட பிறந்த தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் குறுகிய காலத்தில் நான் செய்த இந்த பணிஎனக்கு மிகவும் மன நிறைவை கொடுத்த பணி என்பேன்... நண்பர்கள் தங்கள் கருத்தையும் இந்த செய்தியையும் மற்றவர்களுக்கு சென்னை தினமான இன்று பகிர வேண்டிக்கொள்கின்றேன்.. அப்படியே உங்கள் கருத்துக்களையும் பின்னுட்டத்தில்...
சென்னை தின நல்வாழ்த்துகள்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Jackie,
ReplyDeleteThis is the first time I get to watch your work. Keep up the great job!
links for tamil novels pdf free download
ReplyDeleteenna anaa madars cafe pathiya newsya kanam? enna bayama?
ReplyDeleteenna anna madras cafe pathiya newsya kaanum? enna bayama? eppo eludungal parpom. teraikaveyatha pateri.
ReplyDeleteமிக அருமையாக இருந்தது ஜாக்கி நன்றி
ReplyDelete