MADRAS DAY @ CHENNAI DAY ( 374 YEARS)- Salt Cotaurs history-சால்ட் கோட்டர்ஸ் வரலாறு...

சால்ட் கோட்டர்ஸ்.




நீ சால்ட் கோட்டா...  
நான் சைதாப்பேட்டை நீ வறுத்தக்கறி என்று பெண்ணி மனதை தொட்டு படத்தில் வரும் பாடலை கேட்கும் போது, சென்னையில் 20 வருடம் குப்பை கொட்டிய என்னிடம் தொங்கி  நின்ற கேள்வி.... சால்ட் கோட்டா என்றால் என்ன? என்றுஆனால் அதன்  பிறகு சால்ட் கோட்டா என்றால் என்ன? என்று பதில்  தேடி அலையவில்லை....


ஆனால் தந்திடிவிக்கு கட்டிடம் கதை சொல்லும் நிகழ்ச்சிக்காக நண்பர் மணிவண்ணன் சொல்ல அந்த சால்ட் கோட்டா தேடி வால்ட்டாக்ஸ் சாலையில் அலைந்த போது கிடைத்த தகவல் மிக சிறப்பு வாய்ந்தவை.... தென்னக ரயில்வேயில் பணிபுரியும்  ஆசான் வாசு அவர்கள் கொடுத்த தகவல்கள் இன்னும்  சுவாரஸ்யத்தை கொடுத்தன... பிரிட்டிஷ்காரர்களின் திட்டமிடல்  என்னை இன்னும் வியக்க வைத்தது... போக்குவரத்துக்கும் சரக்கு கையாளவும் அவர்கள் குழப்பிக்கொள்ளவேயில்லை..... ஒரு காலத்தில் போர்க்களமாக ரத்தக்களரியாக காட்சி கொடுத்த இடம் இன்று சரக்கு  கையாளும் இடம்....  அதன் வரலாற்றை சற்றே தெரிந்துகொள்ளுங்கள்...இன்று சென்னைக்கு பிறந்த நாள்...374 வருடங்கள் கொண்டாடும் சென்னைக்கு எனது தேடலில்  நான் செய்த வேலையில் பெருமீதம் கொடுக்கும்  விஷயம் இதுவே...






வாந்தாரை வாழ வைக்கும் இந்த சென்னை பட்டிணத்தின்  நிலப்பரப்பில் பல வரலாற்று பின்னனி கொண்ட கட்டிடங்கள்  இருக்கின்றன அவற்றில் ஒன்றுதான் கருப்பர் நகரம் என்று  செல்லமாக அழைக்கப்படும் வட சென்னையில் இருக்கும்  சால்ட் கோட்டர்ஸ் கட்டிடம்.

சால்ட் கொட்டாய் என்று சென்னைத் தமிழில் இன்று தவறாக அழைக்கப்படுவதாக கருதி சால்ட் குவார்ட்டர்ஸ் என்று வழங்கப்படும்  இந்த இடம் வால்டாக்ஸ் சாலை யானை கவுனி சந்திப்பிலிருந்து மேற்காக திரும்பும் சாலையின் வலது புறம் அமைந்துள்ளது.

சால்ட் கொட்டாய் என்பதே சரியான தமிழ் வார்த்தை. ஆங்கிலத்தில் Salt cotaurs என்றழைக்கபடும். cotaurs என்பது தெலுங்கில் கொட்டாரு தமிழில் கொட்டாரம் என்பதிலிருந்து வந்திருக்கக் கூடும்.


பக்கிங்காம் கால்வாயில் படகுப் போக்குவரத்து மூலம் எண்ணூர் தாண்டிய உப்பளங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட உப்பு மூட்டைகள் வைத்திருக்கும் இடமாக இருந்ததால் இந்த இடத்திற்கு  சால்ட் கொட்டாய் என்று பெயர் வந்தது.
 1856 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள்  சென்னையில் ரயில் போக்குவரத்தை தொடங்கினார்கள்…பயணிகள் ரயில் நிலையங்களை அமைத்தாலும்  சரக்கை ஏற்றி இறக்க ஒரு விஸ்தாரமான இடம்  அவர்களுக்கு தேவைப்பட்டது….


கடல் மட்டத்தில் இருந்து 11 மீட்டர் உயரத்தில் இருக்கும்  இந்த சால்ட் கோட்டர்ஸ் இடத்தை சரக்கு முனையாமாக  ஆங்கிலேயர்கள் தேர்ந்து எடுத்தனர்,.ஹைதர் அலியின் படையெடுப்பின் போது ஆங்கிலேய படைகளும் ஹைதர் அலி படைகளும்  மோதிக்கொண்ட போது,  போர்க்களமாக பயண்படுத்தப்பட்ட இந்த 50ஏக்கர்  நிலப்பரப்பு. ரயிலில் வரும்  சரக்குகளை   ஏற்றி இறக்கும் முனையாமாக 1859 ஆம் ஆண்டு  ஆங்கிலேய அரசு மாற்றியது. இந்த இடத்திற்கு  பீப்பிள்ஸ் பார்க் என்ற பெயரும்  உண்டு…

 எட்டுக்கும் மேற்ப்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான  ரயில் பாதையோடு  அமைந்த சரக்கு  கொடவுன் இந்த சால்ட்  கோட்டர்ஸ் சரக்கு முனையத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றது..… சரக்குகளை ஏற்றி இறக்க கூடிய விஸ்தாரமான இடத்தோடும், பொருட்களை ஏற்றி செல்லும் சரக்கு  வாகனங்கள் எந்த   இடையுறும் இல்லாமல் சென்று வர  அகலமான பாதைகள் கொண்டாதாய் இந்த இடம் அமைக்ப்பட்டு இருக்கின்றது.


யானைக்கவுனி,பேசின் பிரிட்ஜ் மற்றும் வால்ட்டாக்ஸ் சாலையை சுற்றி இருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள்  சுமை தூக்கும் தொழிலாளர்களாய்   அவர்களுக்கு வேலை கொடுத்து பலரது குடும்பங்ககளை வறுமையில் பிடியில்  இருந்து மீட்க  வைத்த கட்டிடம் இந்த சால்ட் கோட்டர்ஸ் கட்டிடம்…

ஒரு காலத்தில்   ஆயிரக்கனக்கான தொழிலாளர்கள் இரவு பகலாய் பணி புரிந்த இந்த இடத்தில்   ஷிப்ட் நேரத்தை அறிவிக்க இங்கே கட்டி தொங்க விட்டு இருக்கும் மணியை அடித்து நேரத்தை அறிவிப்பார்களாம்….

 பல  கோடி மில்லியன் டன்  சரக்குகள் வட இந்தியாவில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு  இங்கே லாரிகளிலும் சரக்கு வாகனங்களிலும் ஏற்றப்பட்டு நகரின் பல பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு மக்களின் பசி போக்கிய கட்டிடம் இந்த சால்ட் கோட்டர்ஸ் கட்டடிடம்…

இங்கிலாந்தில் பிறந்து இங்கே சால்ட் கோட்டர்ஸ் வாளாகத்தில் வரலாற்றுக்கு சாட்சியாக  நிற்கும் இந்த கிரேன்,… 5 டன்  கிலோ எடையை அசால்ட்டாக கையாலும் திறன்   கொண்டது… அது மட்டும் அல்ல,  இயந்திரங்கள் உதவி இல்லாமல் கைககளால் இயக்கும் திறன் படைத்தது இந்த  கிரேன்.‘

சென்ட்ரல், எக்மோர் போல இந்த  சால்ட் கோட்டர்ஸ் கொடவுனை இன்னோரு ரயில் நிலைய முனையமாக  மாற்ற ஒரு  திட்டத்தினை தென்னக ரயில்வே  அறிவித்து இருக்கின்றது..

1772 ஆம் ஆண்டில் இந்த  இடம் ஆங்கிலேய  படையும் ஹைதர் அலி  படை என இரு தரப்பும் மோதிக்கொள்ளும் இடமாக இருந்த இந்த இடம்,1859 ஆம் ஆண்டில் பீப்பில்ஸ்  பார்க் என்றும் சால்ட கோட்டாய் என்று மாற்றம் கண்டு இன்று வரை மக்கள் அத்தியாவசிய  தேவைகளை தீர்க்கும்  கட்டிடமாக இந்த  சால்ட் கொட்டாய் கட்டிடம்  விளங்குகின்றது

தற்போது  சிமென்ட், கோதுமை, அரிசி போன்ற பொருட்கள் ரயில் மூலம் இங்கே கொண்டு வந்து சென்னைநகரத்தில் வினியோகிக்கப்படுகின்றது… 
நீங்கள் சென்னை சாலைகளில் பயணிக்கும் போது  ரேஷன் அரிசி அவசரம் என்ற   நோட்டிஸ் ஒட்டப்பட்ட   சரக்கு  லாரிகளை பார்ப்பீர்களேயானல் அது சால்ட் கோட்டர்ஸ் ரயில் கொடவுனில் இருந்து   உணவு  பொருட்களை ஏற்றி வருகின்றது என்று அர்த்தம்.
.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு போரில்  பினங்களையும் ரத்த வாடையையும் காணக்கிடைத்த இந்த இடத்தில், இன்று  சமாதான புறாக்கள் மற்றும் காகங்கள்  தங்கள் மாலை நேர சிற்றுண்டியை லாரிகளில் ஏற்றி செல்லும்  ரேஷன் அரசி மூலம்  தீர்த்துக் கொள்ளுகின்றன..

160 வருடங்கள் பழமை  வாய்ந்த இந்த கட்டிடம் சென்னையின் வரலாற்று சின்ன கட்டங்களில்  பெருமைக்குறிய ஒன்றாகும்.

இது வரை நீங்கள் வாசித்தவை வீடியோவாக...



Kattidam Kathai Solgirathu by dm_5125efc68d872


சென்னை தனது 374 வருட பிறந்த தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் குறுகிய காலத்தில் நான் செய்த இந்த பணிஎனக்கு  மிகவும் மன நிறைவை கொடுத்த பணி என்பேன்... நண்பர்கள் தங்கள் கருத்தையும்  இந்த செய்தியையும்  மற்றவர்களுக்கு சென்னை தினமான இன்று பகிர வேண்டிக்கொள்கின்றேன்.. அப்படியே உங்கள் கருத்துக்களையும் பின்னுட்டத்தில்...

சென்னை தின நல்வாழ்த்துகள்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

8 comments:

  1. சென்ட்ரல் ,எக்மோர், ஸ்பென்சர்ஸ் என எல்லா வருடமும் ஒரே மாதிரி கதை கேட்கும் என்னைப்போன்றவர்களுக்கு இது ஒரு வித்யாசமான தகவல் .நன்றி ஜாக்கி .

    ReplyDelete
  2. இந்தக் கட்டிடத்தைப் பார்த்திருக்கிறேன். எனக்கும் இது புதிய தகவல்தான். நன்றி!

    ReplyDelete
  3. நல்ல அருமையான வரலாற்று தகவல்கள். நமக்கு இன்னும் வரலாற்றை ஆவணப் படுத்தும் பழக்கம் இல்லாத காரணத்தால் தொலைத்து கொண்டிருக்கிறோம் நம்மை நம் வரலாற்றை. நன்றி.

    ReplyDelete
  4. புதிய தகவலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. அருமையான பதிவு ஜாக்கி சார். நானும் இன்று சென்னை வரலாற்றை பற்றி ஆங்கிலத்தில் எழுதிய எனது பதிவை மொழிபெயர்த்த போது ஒரு தேடலில் இங்கே வந்து சேர்ந்தேன். உங்களிடம் கேட்காமலே உங்கள் பதிவுக்கு லிங்க் கொடுத்து விட்டேன். மன்னிக்கவும். தப்பென்றால் லிங்க்கை நீக்கி விடுகிறேன்.

    ReplyDelete
  6. Very informative news jackie sir. Thanks for your effort...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner