A TEACHER-2013/உலகசினிமா/அமெரிக்கா/ டீச்சர் டயானா/ சினிமா விமர்சனம்

  

 பள்ளியில் படிக்கும் போது...
எத்தைனை பேர்  வகுப்பெடுத்த டீச்சரை லவ் பண்ணி இருக்கிங்க...? 100ல எப்படியும்  ஒரு  75 பர்சென்ட் பேராவது கண்டிப்பா கைதூக்கிவிங்கன்னு தெரியும்..  உங்களுக்கான படம்தான் இது...

 அம்மாவின் அன்பையும், காதலையும் ஏறக்கட்டிவிட்டு  ஆறு வயதில் அப்படியே சட்டென   ஸ்கூலுக்கு ஷிப்ட் ஆகின்றோம்...  முழுக்க முழுக்க அம்மாவால் கவனிக்கப்பட்டு நட் ஆற்றில் இறங்கியது போல பள்ளிக்கு செல்லும் போது ஆறுதலாய்  அரவனப்பாய் இருப்பவர்கள்  டீச்சர்கள்தான்...

கொஞ்சம் டீச்சர்கள் நம் மீது கேர் எடுத்துக்கொண்டாலே நமக்கு  ஜில்லிப்பாகி விடும்.... அவர்களை  கொண்டாடுவோம்... அம்மா தலையெழுத்து நம்ம மேல் கேர் எடுத்துக்கொண்டே ஆக வேண்டும்... ஆனால் ஒரு டீச்சர்... 45 பசங்க இருக்கற கிளாஸ்ல நம்மை கண்டு  கொண்டு கேர் எடுத்துக்கொண்டால் அவர்களை எப்படி மறக்க முடியும்-?


தமிழில் ஆசிரியர் மாணவர் உறவுகளை  சொல்லும் திரைப்படங்கள்.. மதிமேல் பூனையாக சேப்ட்டி டிராக்கில் பயணித்து இருக்கின்றன...  பள்ளியை பின்புலமாக வைத்து கடலோரகவிதைகள், பள்ளிக்கூடம்,முந்தானை முடிச்சி,சுந்தரகாண்டம், சாட்டை போன்ற  படங்கள் வந்தாலும் ரொம்ப ரொம்ப   சேப்ட்டி டிராக்கில் பயணித்து இருப்பார்கள்..ஆனால் பாலுமகேந்திரா தனது அழியாத கோலங்கள் திரைப்படம் மூலம் மிக அற்புதமாக டீச்சரின் மேல் மாணவனுக்கு  இருக்கும் மோகத்தை மிக அழகாக சொல்லி இருப்பார்... அதை மிக லைட்டாக தங்கர் தனது பள்ளிக்கூடம் திரைப்படத்தில் டச் பண்ணி இருப்பார்... ஆனால் அமெரிக்காவின்  இந்த டீச்சர் திரைப்படம்... விரிவாய் விசாலமாய்  அலசுகின்றது..
===========
A TEACHER-2013/உலகசினிமா திரைப்படத்தின் ஒன்லைன்.


 இளம் ஆசிரியை தன்னை விட வயது குறைவான டீன்ஏஜ் பையனிடம்  தொடர்பு கொண்டு  படும் பாடுதான் இந்த திரைப்படம்.
==========================

A TEACHER-2013/உலகசினிமா திரைப்படத்தின்  கதை என்ன?

 டயானா மேல்நிலைபள்ளி  இளம் ஆசிரியை... அவள் வகுப்பில் படிக்கும் எரிக் என்ற பையன் மீது  மையல் கொள்ளுகின்றாள்... எப்படி வந்தது? ஏன் வந்தது..? ரொம்ப விரிவாய் எல்லா இயக்குனர் நீட்டி முழங்க வில்லை. டயானா குடும்பகஷ்டத்தின் காரணமாக டீச்சராக இருக்கின்றாள்... தனிமை அவளை படுத்துகின்றது... அந்த இடத்தை எரிக் நீரம்ப காதலும் காமமும் பற்றி எரிகின்றது... முடிவு என்ன என்பதை வெண்திரையில் பாருங்கள்.

=========================

படத்தின்  இயக்குனர் பெண் என்பதால் கவித்துவமான காட்சிகள் ஏராளம்... விமர்சனங்களில் கூட முதல் பாதியில் பெரிய ஈர்ப்பு இல்லை என்று எழுதி இருக்கின்றார்கள்..ஆனால் உற்றுநோக்கினால் டயனா பாத்திரத்தின் பிரச்சனைகளை மெல்ல மெல்ல சொல்லி வருவார்.. அதனோடு அந்த ரிலேஷன் ஷிப்பின் தவிப்புகளையும் மிக அழகாக  காட்சி படுத்தி இருக்கின்றார் இயக்குனர்  Hannah Fidell


  Hannah Fidell மேலும்  பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ளுகையில் எனது கல்லூரி காலங்களில் இது போல அரசல் புரசலாக கதைகள் கேட்டு இருக்கின்றேன் ஆனால்  இந்த திரைப்படம் எந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையிலும் உருவாகவில்லை என்று சத்தியம் அடித்து சொல்லுகின்றார்... நாங்க நம்பிட்டோம் மேடம்.

சமீபகாலமாக  விடலைபையன்களிடம்  தனிமை காரணமாக நிறைய திருமணமான பெண்கள் சிக்கி கொள்ளுகின்றார்கள்..  சிலர் தப்பி விடுகின்றார்கள்.. சிலர் செல்போனில் நிர்வாணகோலத்தில் சிறைபிடிக்கப்பட்ட மிரட்டி மிரட்டி நண்பர்களுக்கு விக்கென்ட் விருந்து வைக்கின்றார்கள்... புதைக்குழி போல மாட்டிக்கொண்டு நடைபினமாய்  வாழ்ந்து வரும் பெண்கள் ஏராளம்...
பள்ளியில் டீச்சர்  மாணவன் போல யாருக்கும் சந்தேகம் இல்லாமல்  நடந்து கொள்ளும் காட்சிகள்... அருமை...

காதல் என்று வந்து விட்ட பின் வயது வித்தியாசம் எல்லாம் ஒரு  பிரச்சனையா என்ன? அவன் எஸ்எம்எஸ் அனுப்ப அனுப்ப தன் வயது ,பொசிஷன் எல்லாம் மறந்து அந்த பையன் பின்னே நாய்க்குட்டி போல சுற்ற வைக்க காரணம்... அவள் குடும்பமும் தனிமையும் என்பதை அவள் அண்ணனை  பாரில் மீட்  செய்யும் அந்த ஒரு காட்சி....


போட்டோ அனுப்பு என்று செய்தி அனுப்பியவுடன் தனது அரை நிர்வாண கோலத்தை போனில் எடுத்து அவனுக்கு அனுப்பும் வேகம் என்ன? அதனால் ஏற்ப்படும் பிரச்சனை பார்த்து மருன்டு விழிக்கும் இடமும் அந்த எக்ஸ்பிரஷனும் மிகவும் அருமை.

முதல்நாள் இரண்டு பேருக்கும்  மேட்டர் முடிந்து மறுநாள் பள்ளியில் அவன்  நினைவாக பேனாவை சுற்றியபடி செல்ல எதிரில் அவன் வரும் போது டயனா கேரக்டரில்  நடித்து இருக்கும் Lindsay Burdge கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் கவிதை...he is my men., he is my property,..... என்று சொல்ல வேண்டும் போல இருக்கும்.... இருந்தாலும் அவன் மாணவன்.. தான்  ஒரு டீச்சர்.. அந்த பண்டல் உடையாமல்  அந்த மகிழ்ச்சியை மெயின்டெயின் செய்ய வேண்டும்... அதை சிறப்பாக  செய்து இருக்கின்றார்..


காரில் டெக்சாஸ்  இருவரும் செல்ல.. அந்த பையன் சுற்றி வளைத்து  வாய் புணர்ச்சியில் ஈடுபட சொல்லும் போது , அதனை செய்ய காதலோடு டயானா சென்றாலும் பார்க்கும் பார்வையாளனாய் நமக்கு பரிதாபமே அந்த கேரக்டர் மீது பரிதாபமே  மேலிடுகின்றது.

இவளுக்குதான் அவன்.. ஆனால் அவனுக்கு நிறைய கேர்ள்பிரண்டுகள்... அதனை நேரில் பார்த்து  மருகுவதும்.. ரெஸ்ட் ரூமில் லிப்ஸ்டிக் போட்டு தன் நிலைத்து பொருமுவதும்.. அதே ருமில்  சற்று முன் தன் காதலன் மாணவனோடு முத்தமிட்ட பெண் அவள் பக்கத்தில் வந்து லிப்ஸ்டிக்  சரிசெய்யும் போது டயனா பார்க்கும் பார்வை வாவ்...


 ஈர்ப்பு வரக்கூடாது ஆனால் வந்து விட்டது......ஆசைக்கு   ரெண்டு மூன்று சந்திப்புகளில் முயங்கி விட்டு ,ஆட்டை மேய்த்தோமா? கோலைபோட்டோமா என்று நடையை கட்டி காலம் கடத்தும் ஆண் பெண்களை  நான் அறிவேன்.. ஆனால்  தன் நிலை அறியாமல்  எல்லை மீறி  சூழ்நிலை உணராமல் தன் பேரை கெடுத்து கொள்ளுபவர்களை தினத்தந்தி எளிதில் விட்டு வைப்பதில்லை... கட்டம் கட்டி  ஊருக்கு உரக்க சொல்லி விடும்...அப்படியான நிலை டயனாவுக்கும் ஏற்ப்படுகின்றது... இந்த  நிலை யாருக்கும் வரலாம். அந்த அழகை குற்ற உணர்ச்சி காமத்தில் தவித்த தவிப்பை விட கொடுமையானது.... அந்த பெட்ரூமில் அழும் காட்சி மனிதல் நிற்கும்..

கிளைமாக்ஸ் அருமை.. அவள் கதறம் கெஞ்சும் காட்சிகளில் நம் கண்களிலும் நீர்  கசியும்... காதல் வயப்பட்ட ,  உருகி உருகி காதலித்து தோற்றுபோன பெண்கள் அனைவரும் இந்ந திரைப்படத்தை பார்க்கவும்... தோற்றலின் வலியை உணர்வீர்கள்...
==========
படத்தின் டிரைலர்..



==============
படக்குழுவினர் விபரம்.

Directed by Hannah Fidell
Produced by Kim Sherman, Hannah Fidell
Written by Hannah Fidell
Starring Lindsay Burdge, Will Brittain, Jennifer Prediger, Jonny Mars, Julie Phillips, Chris Doubek
Music by Brian McOmber
Cinematography Andrew Droz Palermo
Editing by Sofi Marshall
Distributed by Oscilloscope Laboratories
Release date(s)
January 20, 2013 (Sundance Film Festival)
September 6, 2013 (United States)
Running time 75 minutes
Country United States
Language English 
==========
பைனல் கிக்.

எந்த ஆங்கில படத்திலும் நான்  பாடல் வரிகளை நான் கவனித்தது இல்லை... ஆனால் இந்த படத்தில்  ("If Loving You Is a Crime (I'll Always Be Guilty), பாடலும் டயானாவின் அழுகையும் என்னை கலங்கடித்து விட்டன....




இந்த பாடலை பாடிவர்கள் லீ மோசஸ்.. இந்த பாடல்  பிரேஞ்சு படமான ஹவுஸ் ஆப் பிளஷர் என்ற திரைப்படத்தில் இந்த பாடலை இயக்குர்  கேட்டு விட்டு  அதே பாடலை தனது படத்திலும் பயன்படுத்திக்கொண்டார் இயக்குனர்... கிளைமாக்சில் மிக பொருத்தமாய்  பொருந்தி போகின்றது... முழுக்க  முழுக்க
 காமம் படத்தில் இருக்கின்றது... ஆனால் சீன் இல்லை.. அப்படியே இருந்தாலும் இலைமறை காய்மறையாகத்தான் காட்டி இருக்கின்றார்..  பெண் இயக்குனர் Hannah Fidell நம்புங்கள் .. இது இவருக்கு முதல் படம்.


இந்த படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.....
==========
படக்குழுவினரோடு ஒரு உரையாடல்.



================
படத்தின் ரேட்டிங்....
பத்துக்கு  ஏழு.

==============

அப்படியே இன்னோரு டீச்சர், மாணவன் கதை.... இந்ததிரைப்படம் சென்னை உலகபடவிழாவில் திரையிடப்பட்டது... வாசிக்க.. 


===================
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner