ஆஇரத்தீள் ஓறுவன்.. (திரைஅலசல்)விழலுக்கு இரைத்த நீர்...????

ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்க வேண்டும் என்று மிக ஆவலாக இருந்தேன்...என் மனைவியின் பெருங்களத்தூர் அத்தை வீட்டில் கனு வைத்து விட்டு, சூரிய கிரகணம் என்பதால் அவர்கள் வீட்டில் சிறை வைக்கபட்டோம்.. மாலையில் வீட்டுக்கு கிளம்பி வந்து கொண்டு இருக்கும் போது... முதலில் வெற்றி தியேட்டரில் டிக்கெட் புல் ஆகி விட்டது... அடுத்து ஜோதி தியேட்டரில் டிக்கெட் கிடைத்தது...
ஒரு டிக்கெட் 100 ரூபாய்... 200 ரூபாய் கொடுத்து இரண்டு டிக்கெட் வாங்கி கொண்டு, பத்து ரூபாய்க்கு பார்க்கிங் டோக்கன் போட்டு விட்டு பால்கனியில் போய் உட்கார்ந்தோம்...

சோழர்களின் கடைசி அரசனை தேடி செல்வதாக சொல்லி விட்டு டைட்டில் கார்ட்டு போட்டு விட்டு அதன் பிறகு எடுத்த காட்சிகள் எல்லாம் என் சிற்றறிவுக்கு புரியாத காட்சிகள்...

எவ்வளவோ உலக சினிமா உள்ளுர் படங்களை விமர்சித்து நான் எழுதி இருந்தாலும் இந்த படத்தை நான் எந்த கேட்கிரியில் வைப்பது என்று எனக்கே புரியவில்லை அதனால்தான் திரை அலசலாக இந்த படத்தை டைப்புகின்றேன்...

ஆச்சர்யங்களும் புரியாத விஷயங்களும்...

35 கோடி பட்ஜெட்....
பல பேருடைய இரவு பகல் பாராத உழைப்பு....
கதாநாயகன் கார்த்தியின் இரண்டாவது படம்....
தொலைக்காட்சி பேட்டிகளில் சிலாகித்தது போல் படம் அப்படி ஒன்றும் இல்லையே...
இந்த படத்தை பார்த்து ஏ கிளாஸ் ஆடியன்சே குழம்பி போய் வெளியே வருவதுதான் கொடுமை...
படம் முடிந்து வெளியே வரும் போதே படத்தை பற்றிய பேச்சு தியேட்டர் படிகளில் இறங்கும் போதே ஆரம்பிக்கும்...
பாவி பய மக்க எந்த பயலும் படத்தை பத்தி பேசவே இல்லை...
எல்லோருமே படம் புரிந்த மாதிரி காட்டிக்கொண்டார்களா???....

வறுமையில் இருக்கும் மக்களுக்கு... கருப்பாக ஏன்சாயம் பூச வேண்டும்....?
மெஷின் கன் வைத்து இருப்பவர்கள் இது போல் வெட்ட வெளியில் போர் செய்வாங்களா?

விடுதலைபுலிகள், சிங்கள 4ம் கட்ட போரை விஷுவலாக பதிய நினைத்த முயற்ச்சியா?....

இந்த படத்தில் அமானுஷ்ய சக்தி போல் காட்டுகின்றீர்களே???

இது போல் படம் முழுக்க கேள்விகள் நிறைய.....


மாலைநேரம் பாடலே இல்லை... எடுத்து விட்டார்கள்...

இரண்டு நாளில் போன ரிசல்ட்டில் வைத்து படத்தை ரீ எடிட் பண்ணி ஓட விட்டது.. கோர்வை இல்லாத காட்சிகள் மூலம் தெரிகின்றது...

படத்தில் நான் ரொம்பவும் ரசித்தது.. ரீமா சென்னைதான்... எங்கள் ஊரில் வேர்கடலை விற்கும் கிழவி சட்டென மதில் ஓரம் போய் சிறுநீர் கழிப்பது போன்று ரீமாவும் இதில் சிறுநீர் கழிக்கின்றார்... இருப்பினும் இது போன்ற காட்சியில் நடிக்க ஒரு நடிகைக்கு துணிவு வேனும்... இது போன்ற காட்சிகள் காம சூத்திராவில் இருந்தாலும்.... அந்த காலத்து ராணிகள் ராஜாக்கள் இப்படித்தான் வாழ்ந்து இருக்க வேண்டும்....

ரீமா சென் படம் முழுக்க வருவதால் இந்த படத்துக்கு தண்டோரா சொல்வது போல் ஆயிரத்தில் ஒருத்தி என்று வைத்து இருக்கலாம்.... கப்பலில் உள்ள பாரில் ரீமா போடும் ஆட்டம் டைட்டானிக் கேத்தை நியாபக படுத்துகின்றது...

வறுமை என்பதை சொல்ல ஒரு பெண் கை குழந்தையுடன் வந்து தனது மார்பகத்தை அழுத்தி பாலுக்கு பதில் ரத்தம்தான் வருகின்றது என்று காட்டும அந்த காட்சிகள் தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய காட்சிகளாக இருந்தாலும்...ஓவரால் படத்தை பார்க்கும் போது ரசித்த காட்சிகளை விரல் விட்டு சொல்லி விடலாம்....

தமி்ழில் இந்த படம் புது முயற்ச்சி என்றாலும்.... ஆழமான திரைக்கதை இருந்து இருந்தால் இந்த படம் தமிழ் சினிமாவின் வேறு தளத்துக்கு பயணம் செய்து இருக்க வேண்டிய படம் இது...

ரீமாவுக்கு அடுத்த படியாக இந்த படத்தில் அதகளம் செய்பவர் பார்த்திபன்தான்....நன்றாக நடித்து இருக்கின்றார்...

பார்த்திபனின் அந்த டயலாக் எனக்கு பிடித்து இருந்தது... போர் காட்சியில், பாம் போடும் போது.... இது பற்றி என்னிடம் தாங்கள் சொல்லவில்லையே.... பயந்து விடுவோம் என்றா? என்ற நக்கல் பொருள் படும் படியாக சொல்லும் அந்த காட்சி...

இராணுவ வீரர்கள்... கறுப்பு பெண்களை கற்பழிக்கின்றார்கள்.... ஆண்டிரியாவை விட்டு வைத்து இருக்கின்றார்கள்... எனக்கு புரியலை...

ஆண்டிரியா உம்மேல ஆசைதான் பாடலில் லோ ஆங்கிளில் கேமரா பயணிக்க அவர் இடுப்பை அட்டும் இடத்தையும்.... அந்த டான்ஸ் மூவ் மென்ட்டையும் ரசித்தேன்...

எந்த ஒரு படைப்பாளியையும் நான் இதுவரை குற்றம் சொன்னது இல்லை... சிகரேட் பிடித்துக்கொண்டு நெற்றியில் கை வைத்துக்கொண்டு எழுதுவது போல் சினிமா எடுப்பது அவ்வளவு சாதாரன விஷயம் அல்ல....

அதே போல் மனதில் நினைத்த விஷயத்தை திரைக்கதையாக மாற்றும் வித்தையில் பல வெற்றிபட இயக்குனர்களே துடுமாறி இருக்கின்றார்கள்...பாராதிராஜாவின் பல படங்களை சொல்லலாம்...

ஆனால் இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு புரிந்த விஷயம்... எடுக்க நினைத்த படம் வேறு.. எடுத்து முடித்த படம் வேறு என்ற வகையில் மட்டும் தெரிகின்றது...

செல்வாவின் வாழ்க்கையில்... சோனியா, யுவன் சங்கர் ராஜா பிரிந்து போன படம் இது...

ஹாலிவுட்டில் எந்த படமாக இருந்தாலும்....60 நாட்கள் அல்லது 70 நாட்கள்....படபிடிப்பு நடக்கும்... சரி அவர்கள் படம் ஒன்றரை மணி நேரம் என்று சொல்கின்றீர்களா? நமது படம் இரண்டரை மணி நேரம் என்பதாலும் பாடல் காட்சி காடுகளில் பார்மிஷன் வாங்க என்ற எடுத்துக்கொள்ள இன்னும் 100 நாட்கள் கூட எடுத்துக்கொண்டாலும் 160 நாட்களில் இந்த படத்தை அதாவது முழு படத்தையும் எடுத்து விடலாம்.... ஆனால் ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை...

அதே போல் நாம் தமிழ் சினிமா எடுக்கின்றோம்... எந்த பக்கத்தில் வேண்டும் என்றாலும் பிரச்சனைகள் வந்து தொலைக்கும் அதையும் மீறிதான் தமிழ் படம் எடுக்க வேண்டும்... இது பற்றி செல்வா வாய் திறக்காமல் எதுவும் தெரிய போவதில்லை...சினிமாகாரர்கள், சினிமா ரசிகர்கள், எல்லாம் யூகங்களினுடேதான் பேசிக்கொள்கின்றார்கள்...

படம் முடிந்து வெளிவரும் போது 4 இளைஞர்கள் விளையாட்டுக்கு, ஒருவரை ஒருவர் முகம் பார்த்து சத்தமாக காரிதுப்பி விட்டு வெவ்வேறு திசைகளில் தத்தம் பைக்குகளில் பயணபட்டார்கள்....அதை பார்த்த சிலர் நமுட்டு சிரிப்புடன் சென்றார்கள்...

என் மனைவி படம் முடிந்து வரும் போது இப்படிதானே போரில் பொம்பளைங்க எல்லாரையும் நாஸ்த்தி செய்வானுங்க... சண்டாள பசங்க என்றாள்....எல்லா நாட்டு ராணுவமும் இப்படித்தான் என்றேன் நான்....

சோழன் பயணம் தொடரும் என்ற போது சிலிர்க்கும் உடம்பு.... பாண்டியர்களை மனசாட்சியே இல்லாதவர்கள் என்று காண்பிப்பது எந்தவகையில் நியாயம்???

என்னதான் இந்த படம் கற்பனை என்றாலும் நிறைய லாஜிக் மிஸ்சிங்....


படத்தின் பல காட்சிகளில் ஓயிட் பிளிச் அதிகம் இருந்தது... ஜோதி தியேட்டரில் க்யூபுல் படத்தை ஓட்டினார்கள்...படம் ஓயிட் பேலன்ஸ் சரி செய்யாத ஹேண்டி கேமில் எடுக்கபட்டது போல் வயிற்று எரிச்சலை கிளம்பியது... அல்லது தியேட்டரில் இருக்கும் ஆர்வ கோளாறு ஆப்பரேட்டர் எதையாவது நோண்டி வைத்ததா? என்று சந்தேகமும் எனக்குள்...
அதே போல் படம் முடியும் வரை.. ஒரே இரைச்சல்... டிடிஎஸ் சவுண்டில் கூட எதையாவது நோண்டி விட்டார்களோ? என்று சந்தேகமாக இருக்கின்றது...

ஒரு டிக்கெட் 100 ரூபாய் வாங்கி கொண்டு ஏசி போட வில்லை... இண்டர்வெல் முடிந்து கொஞ்சம் போட்டு ஆப் செய்து விட்டார்கள்... தியேட்டர் டிக்கெட்டே இரண்டு மடங்குகொள்ளை... அப்புறம் ஏன் திருட்டு விசிடி வாங்கி படம் பார்க்கமாட்டான்....


டிஸ்கி....படம் பார்க்க போகும் போது.. ஆயிரத்தில் ஒருவன் என்று தியேட்டர் போஸ்டரில் படித்த டைட்டில்.. படம் பாத்து வெளியே வரும் போது போஸ்டரில் இப்படித்தான் தெரிந்தது.... ஆஇரத்தீள் ஓறுவன்..

சாமி சத்தியமா நம்புங்க... நான் தண்ணி சாப்பிடலை...

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

19 comments:

  1. ஜாக்கி மாலை நேரம் சாங் ஷீட் பண்ணவேயில்லை.ராம்ஜி சொன்னார். மற்றபடி படம் ஒரு வித்தியாசமான முயற்சி.கொஞ்சம் சொதப்பல்தான். இருந்தாலும் ரசிக்கலாம்.

    ReplyDelete
  2. ரைட்டு தல... நீங்களும் உங்க பங்களிப்பை செஞ்சுடீங்க...
    :)
    எல்லார் விமர்சனத்தையும் படிச்சாச்சு. படம் பார்த்துட்டு சொல்றேன்
    ஆமா படம் பாக்கறதா வேண்டாமா ??

    ReplyDelete
  3. //ஒரு டிக்கெட் 100 ரூபாய் வாங்கி கொண்டு ஏசி போட வில்லை... இண்டர்வெல் முடிந்து கொஞ்சம் போட்டு ஆப் செய்து விட்டார்கள்... தியேட்டர் டிக்கெட்டே இரண்டு மடங்குகொள்ளை... அப்புறம் ஏன் திருட்டு விசிடி வாங்கி படம் பார்க்கமாட்டான்....
    //
    உங்க கோபம் புரியுது ..

    ReplyDelete
  4. - உங்களின் படத் தலைப்பை மாற்றி எழுதிய விஷயத்தை ரசித்தேன்.

    - கார்த்திக் பற்றி ஒரு வரி கூட எழுதாமல், அவரை விமர்சனம் செய்தது வித்தியாசமான முயற்சி.

    - படத்தயாரிப்பில், இவருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை, அதனால் கால தாமதம் என்று கேள்வி.

    - சோழர்களின் பக்கமாக கதை நகருவதால் பாண்டியர்களை வில்லன்களாக சித்தரிக்க வேண்டியிருந்திருக்கும்

    - எனக்கு செல்வா படங்களை தியேட்டரை விட டி.வியில் பார்ப்பது பிடிக்கும், 7G யும் அப்படித்தான் இருந்தது.

    - படம் பார்க்கும் தியேட்டரும் உங்களின் எரிச்சலை அதிகப்படுத்தியிருக்கிறது. படத்தை ரசிப்பதற்கு தியேட்டர் ரொம்ப முக்கியம்.

    ReplyDelete
  5. சில சொதப்பல்கள் எதிர்ப்பார்த்ததுதான். இதுபோன்ற முயற்சிகளை ஆதரித்தால்தான் இன்னும் பல வேட்டைக்காரன்கள் தமிழ்சினிமாவில் நுழைவதை தடுக்கமுடியும்... இதற்காகவே செல்வாவுக்கு ஒரு சல்யுட்

    ReplyDelete
  6. கார்த்திக்காக மட்டுமே இந்த படம் பார்க்க நினைத்திருந்தேன்.

    இப்படி இரண்டாவது படத்துலேயே அவர கவுத்துட்டாங்களே ...

    :(

    ReplyDelete
  7. அப்ப கேபிள் அங்கிள் சொன்னது உண்மை என்கிறீர்களா?

    ReplyDelete
  8. மனதில் பட்டதை மறைக்காமல் எழுதி இருக்கிறீர்கள்,என நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. ரீமா படம் டாப்....
    எனக்கு படம் ஓகே....


    பொங்கலுக்கு வந்ததில் என்னை பொருத்தவரை
    இது தான் தேவலை......

    ReplyDelete
  10. அண்ணே படம் இன்னும் பார்க்கலை
    ஓட்டுக்கள் போட்டாச்சி

    ReplyDelete
  11. "படத்தின் பல காட்சிகளில் ஓயிட் பிளிச் அதிகம் இருந்தது... ஜோதி தியேட்டரில் க்யூபுல் படத்தை ஓட்டினார்கள்...படம் ஓயிட் பேலன்ஸ் சரி செய்யாத ஹேண்டி கேமில் எடுக்கபட்டது போல் வயிற்று எரிச்சலை கிளம்பியது... அல்லது தியேட்டரில் இருக்கும் ஆர்வ கோளாறு ஆப்பரேட்டர் எதையாவது நோண்டி வைத்ததா? என்று சந்தேகமும் எனக்குள்...
    அதே போல் படம் முடியும் வரை.. ஒரே இரைச்சல்... டிடிஎஸ் சவுண்டில் கூட எதையாவது நோண்டி விட்டார்களோ? என்று சந்தேகமாக இருக்கின்றது..."

    வணக்கம் ஜாக்கி


    சற்று நேரத்து முன் கிடைத்த உளவு தகவல்

    ஜோதி தியேட்டர் ஆப்ரோட்டர் பாண்டிய வம்சத்தை சேர்ந்தவர் அதனால் தான் இத்தனை குளருபடி

    ReplyDelete
  12. ஆனால் இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு புரிந்த விஷயம்... எடுக்க நினைத்த படம் வேறு.. எடுத்து முடித்த படம் வேறு என்ற வகையில் மட்டும் தெரிகின்றது..//
    அப்படித்தான் இருக்கும் போல.

    //
    D.R.Ashok said...
    அப்ப கேபிள் அங்கிள் சொன்னது உண்மை என்கிறீர்களா?//

    அப்ப நீங்க..???!!!

    ReplyDelete
  13. தமிழ் மணத்தில் வெற்றி பெற்றதிற்கு வாழ்த்துக்கள் நண்பரே..:)

    ReplyDelete
  14. வறுமையில் இருக்கும் மக்களுக்கு... கருப்பாக ஏன்சாயம் பூச வேண்டும்....? //

    Romba naalaaga undergroundla irukkura makkal, azhukkaga thaan irupaargal.... Infact Selva has shown its a desert based land, naturally they would look black.... Infact tamilane karupputhaane....

    ReplyDelete
  15. முதலில் எழுத்து பிழையோ என்று நினைத்தேன்.படிச்சப்புறம்தான் உங்க கோபம் புரியுது.

    //ஒரு டிக்கெட் 100 ரூபாய் வாங்கி கொண்டு ஏசி போட வில்லை... இண்டர்வெல் முடிந்து கொஞ்சம் போட்டு ஆப் செய்து விட்டார்கள்... தியேட்டர் டிக்கெட்டே இரண்டு மடங்குகொள்ளை... அப்புறம் ஏன் திருட்டு விசிடி வாங்கி படம் பார்க்கமாட்டான்....//

    ரொம்ப சரி.
    நல்ல தியேட்டரில் மோசமான படத்தை பார்ப்பதை விட மோசமான தியேட்டரில் நல்ல படம் பார்ப்பது ரொம்ப கொடுமையானது.
    ரெண்டுமே கொடுமையா இருந்தா ?
    தேவுடுதான் காப்பாத்தணும்.

    அதனால்தான் நாங்கெல்லாம் வருஷத்துக்கு ரெண்டுதடவைதான் தியேட்டருக்கு
    ( மகதிரா, அவதார் மாதிரி வந்தால் மட்டும் )போறோம்.

    தமிழ்மணம் ஓட்டுபட்டை இல்லியே ?

    ReplyDelete
  16. 100 kodila sankar kelekaththa
    34 kodila selva senjathu sathanithan .padathin iruthi katchikal elam elam elam ..................())))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  17. படம் நன்றாக இருக்கிறது. ஆனால் எனது நண்பர் சிலர் எனக்கு புரியவில்லை என்று சொன்னார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த வரை புரியய வைத்தேன் . பிறகு இரண்டாவது தடவை சென்று பார்த்தார்கள் பிறகு எனக்கு கால் பண்ணி "மச்சான் தாங்க்ஸ் டா படம் சூப்பர் டா" என்று சொன்னார்கள். புரியாதவர்களுக்கு இந்த படம் சோதப்பல்.

    ReplyDelete
  18. இடுகையின் தலைப்பே மொத்தத்தையும் சொல்லிருச்சு.
    அப்புறமும் எதுக்கு மாங்குமாங்குன்னு எழுதி இருக்கீங்க?:-))))

    ReplyDelete
  19. நல்லவேளை நான் இன்னும் பாக்கலை. விமர்சனம் படிச்சதுக்கே டரியல் ஆகுது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner