( LITTLE SOLDIER ) உலகசினிமா/ டென்மார்க்...அப்பாவும் மகளும் செய்யகூடாத வேலை...

சமுகத்தில் கௌவரவ வாழ்க்கைக்கு எதையாவது செய்து தொலைத்துக்கொண்டுதான் இருக்கின்றோம்...சிலர் அந்த வரம்பை மீறாமல் முன்னேறுவார்கள்.. சிலர் எது செய்தால் என்ன? சமுகத்தில் ஒரு அந்தஸ்தான வாழ்க்கை கிடைத்தால் போதும் என்ற மனப்பாண்மை சிலருக்கு உண்டு...

அதே போல் சமுகத்தில் நடக்கும் பல விஷயங்கள் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும்... ஒரு அப்பா தனது மகளை 15 வருடம் வீட்டு சிறையில் அடைத்து வைத்து பாலியல் வன்முறை செய்து கொண்டு இருந்தான்... போனவருடம்தான் அந்த கொடுரனை பிடித்தார்கள்... இது எப்படி சாத்தியம்? என்று கேட்டு வைக்காதீர்கள்... உங்களுக்கு கிடைத்த அப்பா மிகவிம் நல்லவர் என்று எடு்த்துக்கொள்ளுங்கள்...

எனக்கு இது போல் நடக்கவில்லை எப்படி இது சாத்தியம் ?என்று மட்டும் யாரும் வாயில் பல் போட்டு கேட்க வேண்டாம் நண்பர்களே... உலகம் என்பது வித்யாசமான சிந்தனைகளின் கலவையால் அமைந்த கான்கிரிட் கட்டிடம் என்பதை மறவாதீர்...

LITTLE SOLDIER டென்மார்க் படத்தின் கதை இதுததான்....

Lotte ஒரு இளம் இராணுவ சிப்பாய் பெண்... பணியில் ஓய்வு பெற்று தனது சொந்த நகரத்துக்கு வருகின்றாள்... வந்த இடத்தில் அவளது அப்பாவை சந்திக்கின்றாள்.. அப்பா லில்லி என்ற நைஜீரிய பெண்ணை தனது கேர்ள்பிரண்ட் என்று அறிமுக படுத்த... அப்போதுதான்.. அவளுக்கு தனது அப்பா நிறைய பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்வது தெரிகின்றது.... தொழிலுக்கு அவன் அப்பாதான் லில்லி மற்றும் பல பெண்களை தன் காரில் அழைத்து சென்று கஸ்டமார்களுக்கு சப்ளை செய்வார்.... ஆனால் இப்போது ரொம்பவும் வயதாகி விட்டதால் கார் ஓட்ட ஆள் தேவைபட அந்த வேலையை தான் செய்வதாக லோட்டி ஒத்துக்கொள்கின்றாள்...

தினமும் லில்லியை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு சென்று கஸ்டமரிடம் அறிமுக படுத்தி, அவள் படுத்து எழுந்து வருவதற்க்கு மற்றும் வண்டி சத்தம் எல்லாம் வாங்கி கொண்டு வந்து லோட்டி, அவள் அப்பாவிடம் கொடுக்கும் போது... எல்லா பணத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு... மகளுக்கு பேட்டா மட்டும் கொடுத்து அனுப்புவார்....

முதலில் லில்லிக்கு லோட்டியை பிடிக்கவில்லை... நாளாக நாளாக அவளை மெல்ல பிடித்து போகின்றது... இருவரும் பர்சனல் பேசிக்கொண்டு ஒரே படுக்கையில் படுத்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கம் ஆகின்றனர்... லில்லி தன் பெண் நைஜிரியாவில் இருப்பதாகவும், அவளுக்காக வேண்டி இந்த தொழில் செய் வந்ததாகவும் சொல்ல... லில்லி செல்போனில் இருக்கும் வீடியோ கிளிப்பிங்சை லோட்டி பார்க்கின்றாள்... அதில் லில்லியின் சிறு பெண் ஒரு குடிசை பகுதியில் நின்று கொண்டு ரைம் பாட அந்த குழந்தை மீது லோட்டிக்கு பாசம் ஏற்படுகின்றது... லில்லிக்கு ஏதாவது செய்ய ஆசைபடுகின்றாள்...

லோட்டியின் அப்பாவுக்கு ஒரு நாள் நெஞ்வலி வர, லாக்கர் அடையாள எண்ணை தனது மகள் லோட்டிக்கு தெரிய படுத்த...லாக்கரில் இருக்கும் பணத்தை எடுத்து லில்லியை அவள் ஊருக்கு அனுப்பி, அவள் குழந்தையுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று, அவள் நல்ல மனதாக நினைத்து போட்ட திட்டம் நிறைவேறியதா? என்பதை . .. வெண்திரையில் காணவும்....

படத்தின் சுவாரஸ்யங்களிள் சில.....
லோட்டியாக நடித்த அந்த பெண் ஒரு இராணுவ பெண் போல, நடை உடை பாவனைகளில் வெளுத்து வாங்குகின்றார்... மிக முக்கியதாக அரக்கி அரக்கி நடப்பதில் ஒரு ஆண் தன்மையை நடிப்பில் வெளிக்கொண்டு வருவது சிறப்பு...

ஒரு விபச்சாரியை ஒரு மணி நேரத்துக்கு புக் செய்து விட்டு அவளை என்ன வெல்லாம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் மனித மிருகங்களிடம் இருந்து லில்லியை லோட்டி காப்பாற்றி கொண்டு வந்தால்.... என் கஸ்டமரை எப்படி அடிக்கலாம் என்று அந்த பெண்களே எதிர் கேள்வி கேட்பது பாலியல் தொழிலி்ன் நிதர்சன உண்மைகளை வெளிபடுத்தும் காட்சிகள்...


ஒரு சைக்கோ லில்லியிடம் துப்பாக்கி முனையில் விளையாட.... உள்ளே நுழைந்து அவனை பின்னி பெடலெடுக்கும் காட்சிகளில் லோட்டியின் நடிப்பு அபாரம்..

அப்பாவுக்கு மகளுக்குமான அந்த பாச காட்சிகள் விழித்திரையில் நீர் வரவழைக்கும் காட்சிகள்...

லோட்டிஅவள் அப்பாவுக்குமான கிளைமாக்சில்... லோட்டியின் நடிப்பு பொம்பளை கமல்தான் போங்கள்..

படத்தின் டிரைலர்


படக்குழுவினர் விபரம்


Director and Writer: Annette K. Olesen

Director: Annette K. Olesen

Producer: Ib Tardini

Scriptwriter: Annette K. Olesen , Kim Fupz Aakeson

Cinematographer: Camilla Hjelm Knudsen

Composer: Kare Bjerko

Editor: Jacob Thuesen

Main Cast: Finn Nielsen , Henrik Prip , Jens Jorn Spottag , Loma Brown , Rasmus Botoft , Thure Lindhardt , Trine Dyrtholm


வாசக நண்பர் பெரியார் மதி கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க ஒரு சினமா விமர்சன பதிவு....

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

9 comments:

 1. இந்து போன்ற படங்களை அறிமுகப்டுத்தும் தலைவர், அவர்களுக்கு எனது சங்கத்தின் சார்பில் நன்றி .................
  உறுப்பினர்கள் யார் ? என கேட்காதீர்கள் இங்கு எல்லாமே நான்தான் .............

  ReplyDelete
 2. பட விமர்சனமும், பதிவின் தொடக்கத்தில் தாங்கள் கூறியுள்ள கருத்துக்களும் அருமை நண்பரே.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அண்ணே ஓட்டுக்கள் போட்டாச்சு

  ReplyDelete
 4. இந்து போன்ற படங்களை அறிமுகப்டுத்தும் தலைவர், அவர்களுக்கு எனது சங்கத்தின் சார்பில் நன்றி .................
  உறுப்பினர்கள் யார் ? என கேட்காதீர்கள் இங்கு எல்லாமே நான்தான் .....//
  நன்றி ராஜகிரியன்..

  ReplyDelete
 5. பட விமர்சனமும், பதிவின் தொடக்கத்தில் தாங்கள் கூறியுள்ள கருத்துக்களும் அருமை நண்பரே.//
  நன்றி துபாய் ராஜா

  ReplyDelete
 6. அண்ணே ஓட்டுக்கள் போட்டாச்சு//
  நன்றி கார்த்தி

  ReplyDelete
 7. அண்ணே ஓட்டுக்கள் போட்டாச்சு//

  ReplyDelete
 8. நல்ல விமர்சனம். ஓட்டு போட்டாச்சு.

  ReplyDelete
 9. மிக்க நன்றி சேகர்.. :-)

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner