பொதுவாக எனக்கு கூட்டம் அதிகம் உள்ள இடங்களை பிடிக்காது... காரணம் பைக்கை பார்க் பண்ணுவதில் இருந்து... நடந்து போய் இடிபட்டு கால் மிதிபட்டு அல்லது அடுத்தவரை மிதித்து அவரிடம் அசடு வழிந்து மன்னிப்பு கேட்டு... எவ்வளவோ இருக்கின்றது ... அதனாலே... சென்னை திநகர் ரங்கநாதன் தெருவை வெறுப்புடன் பார்ப்பேன்....
“ ஏங்க கொஞ்சம் பர்சேஸ் பண்ணணும் திநகர் ரங்கநாதன் தெருவுக்கு போலாமா?”
என்று என் மனைவி என்னை அழைத்தால் எனக்கு வயிறு கலக்கும் அந்தளவுக்கு நான் வெறுக்கும் தளம் அது... மீறி நான் வருகின்றேன் என்று ஒத்துக்கொண்டால் ஜாலியாக பிகர் பார்த்தபடி நடக்கலாம்...
ஆனால் எவ்வளவு கூட்டம் என்றாலும் சென்னையில் வருடா வருடம் நடக்கும் புத்தக கண்காட்சியை பார்க்க... மன்னிக்கவும் விசிட் அடிக்க தவறுவதேயில்லை...
போன ஞாயிறு அன்று நானும் என் மனைவியும் புத்தக கண்காட்சிக்கு போனோம்... அன்று கமல் வேறு கருத்தரங்கத்தில் பேசுகின்றார் என்பதால் கூட்டம் நிறையவே வந்து இருந்தது... குடும்பஸ்தனாக இருப்பதில் பெரிய பிரச்சனை என்வென்றால்... சரியான நேரத்தில் சரியான இடத்துக்கு கிளம்பி விட முடியாது...
பேச்சிலராக இருக்கும் போது ஒரு சட்டையும் பேண்டையும் மாட்டிக்கொண்டு கிளம்பி விட முடியும்... இப்போது எல்லாம் அப்படி நினைத்த மாத்திரத்தில் கிளம்ப முடிவதில்லை... பானையில் சுருக்கி் வைத்த சட்டை போல் இருந்தாலும்.. சுருக்கத்துடன் போட்டுக்கொண்டு ஓடிய காலம் அது.... ஆனால் இப்போது... இப்படி சுருக்கமா டிரஸ் பண்ணா எந்த பொண்ணு உன்னை பார்ப்பா? என்று என் மனைவியே என்னை ஏற்றிவிடுவாள்....என் மனைவி எப்போதும் சொல்லுவாள்... ஸ்மார்ட்டா டிரஸ் செய்றதை விட நீட்டா டிரஸ் பண்ணு என்று செல்லமாக உத்தரவு போடுபவள்.. அதனால் உடைக்காக மெனெக்கெட வேண்டி இருக்கின்றது... பல நேரங்களில் அவள் சொல்வதை உதாசினபடுத்தி வந்த இருக்கின்றேன்... சில நேரங்களில் அவள் வெற்றி பெற்று இருக்கின்றாள்... ஆனால் உடை மாற்றம் ரொம்ப அற்புதமாக மாறி இருக்கின்றது...எல்லோரும் கல..கலக்கலான உடைகளில் பவனி வந்தார்கள்...
ஒரு திருமணம் ஆன பெண் கையில் வாங்கிய புத்தகங்களுடன் தனது கணவரின் கை பிடித்து நடந்து போய் கொண்டு இருந்தார்.. சிறுமிகள் அணியும் ஒரு வெள்ளை பனியனும் ஒரு பாவாடையும் அணிந்து வந்து இருந்தார்....சிறுமிகளே யோசிப்பார்கள் அந்த உடை அணிவதற்க்கு... என் பேங்க பேல்ன்ஸ் இவ்வளவுதான் இருக்கு என்று காட்டுவது போல் அப்பட்டமாக காட்டி சென்றார்.... சில அரும்பு மீசை பையன்கள் நமுட்டு சிரிப்புடன் அவர்கள் எங்கு சென்றாலும் பின்னாடியே சென்றார்கள்...அந்த பெண் என்ன நினைத்தாலோ அது இனிதே நடந்தது...
விழாவில் நடந்த கருத்தரங்கத்தில் கமல் பேசினார்... இந்த ஒன்றரை லட்ச சதுர அடியில் பல பொக்கிஷங்கள் கொட்டி கிடக்கின்றன... அவற்றை உங்களுக்கு பிடித்து போல் அள்ளிசெல்லுங்கள் என்று சொன்னார்... நல்ல சினிமா வர வேண்டும் என்றால் இது போல் ரசனை கூட்டம் தமிழகம் முழுவதும் பல்கி பெருக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்...இலக்கியவாதிகளை சினிமாவுக்கு அழைத்தார்... அப்படி அழைத்து வந்த சுஜாதாவை நாங்கள் மிக சரியாக கொண்டாடவில்லை... நிறைய காம்பரமைஸ் செய்து கொண்டோம் என்று சொன்னார்...
வாசகர்களுடன் ஒரு கலந்தாய்வு நடந்தது... அதில் மருதநாயகம் எப்போது வரும் என்று கேட்ட போது விலைவாசி உயரும் போது.. மருதநாயகத்தின் தயாரிப்பு செலவு அதிகரிப்பதையும் .. அனால் அது எப்படியும் வரும் என்று சொன்னார்...அன்பே சிவத்தை பற்றி கேட்கையில் அந்த படத்துக்கு தாமதமான அங்கீகாரத்தை ரசிகர்கள் கொடுத்து இருக்கின்றார்கள்.. என்றும் இன்றும் இணையத்தில் அந்த படத்தை பற்றி சிலாகித்து பேசுகின்றார்களோ? என்று சொன்னார்...
ஒரு பெண் உங்களுக்கு சயின்ஸ்மேல் எப்படி இந்தளவுக்கு ஆர்வம் என்று கேட்க??? தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று- வெறிதான் காரணம் என்று சொன்னார்...
நாங்கள் புத்தக அரங்கில் வந்து 2000 ஆயிரத்துக்கு புத்தகம் வாங்கினேன்... அதில் என் மனைவி 900 பக்கம் உள்ள தடிமனான பவத் கீதையை 100 ரூபாய்க்கு வாக்கிய போது.... திரும்பினால் என் குடும்ப நண்பர்... வாங்கிய பகவத் கீதை புத்தகத்தை நக்கலாக பார்த்து விட்டு, என்ன ரெண்டு பேரும் ரொம்ப திருந்திட்டிங்க போல? என்று கமென்ட் அடிக்க...
என் நண்பர் போனதும்...ஏன் ஜாக்கி? ஒரு கிருஸ்த்துவர் பைபிளை கையில் வைத்து இருந்தால் யாரும் எந்த கேள்வியும் கேட்பதில்லை? ஆனால் நம்ம பகவத் கீதையை வாங்கனா மட்டும் ஏன் இந்த நக்கல் பார்வை? ஏன் இந்த அபத்த கேள்விகள் ?என்று என் மனைவி என்னிடத்தில் கேள்வி கேட்ட போது... என்னிடம் பதில் இல்லை....
விழாவில் நீயா நானா கோபி வந்து இருந்தார்...ஒரு கணவனுடன் கைபிடித்து வந்த பெண் சட்டென கையை உதறி விட்டு, கோபியிடம் போய் நன்றாக நிகழ்ச்சி நடத்துவதாக பாராட்டி விட்டு , திரும்பவும் கணவன் கிளம்லாமா? என்ற மனைவியை கேட்க? இருங்க இன்னோரு முறை போய் நல்லா பார்த்து விட்டு வருகின்றேன் என்று கணவனிடம் வெள்ளந்தியாக சொல்லி விட்டு கோபியிடம் போய்... நீங்க எப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்கின்றீர்கள் என்று சொல்ல... கணவன் புத்தக சுமையுடனும்.... பொறாமை சுமையுடனும் நின்று இருந்தார்.. எப்படியும் அவர் அன்று இரவு கனவில் தெனாலி ஜெயராம் போல்... கோபியிடம் கட்டி பிடித்து சண்டை போட்டு இருப்பார் என்பது மட்டும் நிச்சயம்...
மனுஷபுத்திரன், எஸ்ராஅவர்களையும், நக்கீரன் கோபால் போன்றவர்களையும் பார்த்தோம்....
பதிவர்களில், பைத்தியக்காரன்,உழவன்,கேபிள் சங்கர் போன்றவர்களை சந்தித்தோம்...
போன ஆண்டு வாங்கிய பல புத்தகங்கள் உறை பிறிக்காமல் அலமாரியில்
தூங்குகின்றது என்றாலும் அது நேற்று வைத்த ரசம் போல் ஊசை அடிக்க போவதில்லை... அதனால் 2000க்கு புத்தகம் வாங்கினேன்.. நண்பர் கற்றது தமிழ் ராமி்ன் இனை இயக்குனர் சாமுக்கு 150 விலையுள்ள ஜெயமோகனின் புத்தகம் ஒன்றை வாங்கி பரிசளித்தேன்...அவர் விளையாட்டுக்கு கேட்டார்... அதை நிஜப்படுத்தினேன் இவ்வளவே...
நிறைய அழகான பெண்களை பார்க்க முடிந்தது.. அதே போல் காதலர்கள் அதிகம் தென்பட்டார்கள்..சென்னையில் ஸ்லீவ்லெஸ் கல்சர் வந்து விட்டதன் அறிகுறி புத்தக கண்காட்சியில் தெரிந்து விட்டது... பெண்கள் புடவை கட்டி வருவது குறைந்து போய் விட்டது.. எல்லோரும் சுடிதாருக்கு மாறிவிட்டார்கள் இந்த பொண்ணு நல்லாயிருக்கே என்று நினைப்பதற்க்குள் அம்மா என்று அப்பாவிடம் இருந்து ஒடி வரும் குழந்தைகள் எல்லாம் எனக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்......நிறைய குழந்தைகள் புத்தகங்களை வாங்கி குவித்து கொண்டு இருந்தார்கள்..
கண்காட்சிக்கு வந்த பெண்களில் நேர்த்தியாக புடவை கட்டிக்கொண்டு இருந்தது நல்லி சில்க்ஸ் விளம்பரத்தில் இருந்த பெண்தான்..பாருங்கள் எவ்வளவு நேர்த்தியாக புடவை கட்டி இருக்கின்றார்
பிளக்சில் இருந்த போட்டோக்களை எடுத்தேன்...
நம்புங்கள் இந்த படத்தை புடவையின் கலருக்காக எடுத்தேன்....
இந்த போட்டோக்களை ரொம்பவும் ரசித்து எடுத்து ,சிலாகித்த காரணத்தால் எனக்கு அன்று இரவு உணவு கிடைக்க தாமதமானது... சாம்பாரில் ஏன் உப்பு இல்லை என்று கேட்டால்?ரொம்ப சூப்பரா ஒருத்தி பொடவை கட்டிக்கினு நின்னாலே...அவகிட்ட கேட்க வேண்டியதுததானே.... என்று எல்லாத்துக்கும் அந்த மாடல் பெண்ணையே என் மனைவி வம்புக்கு இழுத்துக்கொண்டு இருக்கின்றாள்...
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
ஜாக்கி, நானும் கமல் பேச்டை கூட்டத்தில் இருந்தேன்.
ReplyDeleteபுகைப்ப்டங்கள் அருமை.
Sir,
ReplyDeleteGood review about Book fair . All snaps r classic.try to put movie review
இல்லறம் நல்லறமாக இன்றுபோல் என்றும் தொடர வாழ்த்துகள்........... வாங்கிய புத்தகங்களைப் போலவே என்றும் பொக்கிஷமாக போற்றப்படும் உங்கள் வாழ்வும் ...
ReplyDeleteநிறைய படங்கள் அங்கு சென்று வந்தது போல இருந்தது.
ReplyDeleteஎன்னென்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் ?
superb and great informations...
ReplyDeletekeep rocking
nice cover up on ur style
ReplyDelete:)
//நம்புங்கள் இந்த படத்தை புடவையின் கலருக்காக எடுத்தேன்....//
ReplyDeleteநம்பிட்டேன்.....
//குடும்பஸ்தனாக இருப்பதில் பெரிய பிரச்சனை என்வென்றால்... சரியான நேரத்தில் சரியான இடத்துக்கு கிளம்பி விட முடியாது...//
ReplyDeleteஆமா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க....
//பேச்சிலராக இருக்கும் போது ஒரு சட்டையும் பேண்டையும் மாட்டிக்கொண்டு கிளம்பி விட முடியும்... //
ReplyDeleteஎனக்கு தெரிஞ்சவரை... பிகர் மடிக்கப்போகும் போது மட்டும்... நீட்டா ட்ரஸ் போடுவாங்க....
//ஒரு கிருஸ்த்துவர் பைபிளை கையில் வைத்து இருந்தால் யாரும் எந்த கேள்வியும் கேட்பதில்லை? //
ReplyDeleteஅதான் நீங்களே கேட்டுட்டீங்களே...
//மீறி நான் வருகின்றேன் என்று ஒத்துக்கொண்டால் ஜாலியாக பிகர் பார்த்தபடி நடக்கலாம்...//
ReplyDeleteகொடுத்து வெச்சவங்க... நீங்க... ம்ம்ம்.....
//மருதநாயகம் எப்போது வரும் //
ReplyDeleteவரும்ம்ம்ம்ம்ம்..... ஆனா.. வர்ராராராராதுது...
//அது நேற்று வைத்த ரசம் போல் ஊசை அடிக்க போவதில்லை...//
ReplyDeleteசெல்லரிச்சிடிச்சினா என்ன பண்ணுவீங்க....
//பெண்கள் புடவை கட்டி வருவது குறைந்து போய் விட்டது... //
ReplyDeleteஐய்யய்யோ.... அப்புறம்.....
//எல்லோரும் சுடிதாருக்கு மாறிவிட்டார்கள்//
நல்லவேளை.....
//எல்லாத்துக்கும் அந்த மாடல் பெண்ணையே என் மனைவி வம்புக்கு இழுத்துக்கொண்டு இருக்கின்றாள்...//
ReplyDeleteஇப்பத்தான் மனசுக்கு குளு,குளுன்னு இருக்கு....hi..hi.hiiiiii !!!!!.
//எல்லாத்துக்கும் அந்த மாடல் பெண்ணையே என் மனைவி வம்புக்கு இழுத்துக்கொண்டு இருக்கின்றாள்...//
ReplyDeleteஇப்பத்தான் மனசுக்கு குளு,குளுன்னு இருக்கு....hi..hi.hiiiiii !!!!!.
just miss jackie...nanum sunday evening than book fair ponan...but Kamalhassan varathuku munndaiyae kilambitan!
ReplyDeleteகலக்கல் கவரேஜ் அண்ணே ...
ReplyDeleteரொம்ப ரசித்து படித்தேன் ஜாக்கி சார்::)) கலக்கிட்டீங்க.. கிளிக்ஸ் கலக்கல்..!
ReplyDeleteநல்லவேளை.. மாடல்ஸ் போட்டோ மட்டும் எடுத்ததால டின்னெர் லேட்டாவாவது கெடைச்சது..
ReplyDeleteஅந்த பொண்ணுங்களையே எடுத்திருந்தீங்க.. அவ்ளோதான் சோறே கெடைச்சிருக்காது..
:)
நான் செவ்வாய்கிழமை போலாமுன்னு நெனச்சேன்.. போக முடியல.. ஹ்ம்ம்.. பார்ப்போம்..
ரொம்பவே ரசித்து எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteரசனையின் மிதம் நன்றாக புரிகிறது.
வாழ்த்துக்கள்
நல்லி மாடலை விட புதிய தலைமுறை மாடல் சூப்பராக இருக்கிறார் :-)
ReplyDeleteபோட்டோக்கள் நன்றாக உள்ளது. (சேலை போட்டோ மட்டுமல்ல, அனைத்தும்தான்.)
ReplyDeleteசூப்பர் பதிவு படங்களும் அருமை உலகநாயகனை அருகில் இருந்து படம் எடுக்க முடியவில்லையா?
ReplyDeleteஅண்ணாச்சி அந்த சிலீவ் லெஸ் கலாச்சாரம் இப்போ உலகம் எங்கும் ஊறிவிட்டது.
நீலச் சேலைப் பெண் கலக்கல்.
என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்பதையும் சொல்லியிருக்கலாம்.
என்ஜாய்.. நானும், நெய்வேலியல் நடக்கும் புத்தக கண்காட்சிய ரொம்பவே மிஸ் பண்ணுறேன்!!
ReplyDelete//இப்படி சுருக்கமா டிரஸ் பண்ணா எந்த பொண்ணு உன்னை பார்ப்பா? என்று என் மனைவியே என்னை ஏற்றிவிடுவாள்....//
ReplyDeleteஇப்படி ஒரு சமாளிப்பா :))
நானும் அதே கூட்டத்தில் இருந்தேன், கமல் பேசினதுல இவ்வளவு புரிஞ்சுதா, நீங்க பெரிய ஆள்தான்
அனுபவத்தை அழகான படங்களுடன் போட்டதுதான் கூடுதல் சிறப்பே :-)
ReplyDeleteஃப்ளக்ஸை ஃபோட்டோ எடுத்ததுக்கே உப்புப் போடாத சாம்பாரா? நல்லவேளை நம்ம வீட்டுல அவ்ளோ கொடூரமான தண்டனையெல்லாம் இல்லை :-)
ReplyDeleteநல்லதொரு பகிர்வு.
ReplyDeleteவணக்கம் ஜாக்கி
ReplyDeleteபுத்தக கண்காட்சியை நேரில் பார்த்த உணர்வை தந்தது பதிவு.
படங்கள் அருமை...
& புத்தாண்டு வாழ்த்துகள் !
ஆணாதிக்க கருத்துடன் பதிவு எழுதி இருக்கின்றீர்கள். ஸ்லீவ் லெஸ் போட்டால் இந்தியாவின் மதிப்புக் குறைந்தா போய் விட்டது ஜாக்கி? புத்தகம் வாங்குவதும் படிப்பதும் பெரிய விஷயமில்லை. ஆனால் படித்ததை சமூகத்திற்கு எப்படி திருப்பிக் கொடுக்கிறோம் என்பதில் தான் படித்ததன் அர்த்தம் விளங்கும்.
ReplyDeleteபடித்தவர்கள் பலரும் அதைப் பற்றி யோசிக்கின்றார்களா என்பது கேள்விக்குறி.
அண்ணே அம்சமாயிருக்கு பதிவு
ReplyDeleteவாக்குகள் சேர்க்கப்பட்டன
can any one suggest how to reach the book fair from guindy by bus?
ReplyDeleteநன்றி பட்டர்பிளை சூர்யா...நான் லேட்டாக வந்த காரணத்தால் யாருக்கும் போன் செய்யவில்லை..
ReplyDeleteநன்றி பின்னோக்கி...புத்தகங்கள் எல்லாம் இலக்கிய தரமானவை அல்ல என்பதை மட்டும சொல்லி கொள்கின்றேன்..
நன்றி முத்து பாலகிருஷ்ணன்.. உங்கள் ஆசை றிறைவேறும் விரைவில்..
நன்றி இராஜ பிரியன்...
நன்றி ராஜன் மிக்க நன்றி செதுக்கி செதுக்கி பின்னுட்டம் இட்டு என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி என்னை சிரிக்க செய்து விட்டீர்கள்...
ReplyDeleteமிக்க நன்றி ராஜன்.. உங்கள் வேலை பளுவுக்கு மத்தியிலும்...
நன்றி ஜெட்லி...
ReplyDeleteநன்றி 23சீ
நன்றி பலா பட்டறை...மிக்க நன்றிகள் உங்கள் மூவருக்கும்.. உங்கள் பாராட்டுக்கும்
நன்றி யாசவி..
ReplyDeleteநன்றி வினோத்..
நல்லவேளை.. மாடல்ஸ் போட்டோ மட்டும் எடுத்ததால டின்னெர் லேட்டாவாவது கெடைச்சது..
ReplyDeleteஅந்த பொண்ணுங்களையே எடுத்திருந்தீங்க.. அவ்ளோதான் சோறே கெடைச்சிருக்காது..
:)//
உண்மைதான்.. மணி...
நல்லி மாடலை விட புதிய தலைமுறை மாடல் சூப்பராக இருக்கிறார் :-)//
ReplyDeleteலக்கி புதிய தலைமுறை புத்தகத்தை நீ நேசிப்பது எனக்கு புரிகின்றது..
ரொம்பவே ரசித்து எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteரசனையின் மிதம் நன்றாக புரிகிறது.
வாழ்த்துக்கள்//
நன்றி காவேரி கனேஷ்...மிக்க நன்றிகள்
போட்டோக்கள் நன்றாக உள்ளது. (சேலை போட்டோ மட்டுமல்ல, அனைத்தும்தான்.//
ReplyDeleteநன்றி சைவ கொ்த்து பரோட்டா...
சூப்பர் பதிவு படங்களும் அருமை உலகநாயகனை அருகில் இருந்து படம் எடுக்க முடியவில்லையா?
ReplyDeleteஅண்ணாச்சி அந்த சிலீவ் லெஸ் கலாச்சாரம் இப்போ உலகம் எங்கும் ஊறிவிட்டது.
நீலச் சேலைப் பெண் கலக்கல்.
என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்பதையும் சொல்லியிருக்கலாம்.//
நன்றி வந்தி உலக நாயகனை கான பெருத்த கூட்டம்... மனைவியை அழைத்து போனதால் கூட்டத்தில் விட்டு விட்டு செல்ல முடியவில்லை...புத்தகங்கள் எல்லாம் இலக்கிய வாசனை அற்ற சதாரான புத்தகங்கள்தான் வந்தி..
என்ஜாய்.. நானும், நெய்வேலியல் நடக்கும் புத்தக கண்காட்சிய ரொம்பவே மிஸ் பண்ணுறேன்!!///
ReplyDeleteநன்றி கலை நானும் அதில் இரண்டு முறை கலந்து கொண்டு இருக்கின்றேன்..
நானும் அதே கூட்டத்தில் இருந்தேன், கமல் பேசினதுல இவ்வளவு புரிஞ்சுதா, நீங்க பெரிய ஆள்தான்//
ReplyDeleteநன்றி சங்கர்..
ஆணாதிக்க கருத்துடன் பதிவு எழுதி இருக்கின்றீர்கள். ஸ்லீவ் லெஸ் போட்டால் இந்தியாவின் மதிப்புக் குறைந்தா போய் விட்டது ஜாக்கி? புத்தகம் வாங்குவதும் படிப்பதும் பெரிய விஷயமில்லை//
ReplyDeleteநன்றி பாலாகிருஷ்ணண்...உங்கள் கருத்துக்கு..
நான் ஸ்லி்வ் லெஸ் போடுவது குற்றம் என்று எங்கேயும் சொல்லவில்லை... அந்த கலாச்சாரம் வளர்ந்து கொண்டு இரக்கின்றது என்று சொல்கின்றேன்..
உடை அவரவர் விருப்பம்... அவ்வளவே,,.
நன்றி உழவன்..
ReplyDeleteநன்றி கேவி ஆர்
நன்றி புதுவை சிவா..
நன்றி.. துபாய் ராஜா..
நன்றி கார்த்தி..
நானும் அந்தக்கூட்டத்தில்தான் இருந்தேன்.
ReplyDeleteநீங்கள் சுழல் புத்தகங்களை படம் பிடிக்கும்போது மிக அருகில்தான் இருந்தேன்.
பேசி இருக்க வேண்டும்.அறீமுகம் இல்லாத காரணத்தால் சிறிது தயங்கி விட்டேன்.