2010ன் முதல் ஹிட் தமி்ழ்படம்தான்..(திரைவிமர்சனம்)
நண்பர்கள் இடத்தில் இருந்து குறுஞ்செய்தி மூலம் படம் நன்றாக இருப்பதாகவும்.. விழுந்து விழுந்து சி்ரித்து வயிறு புண்ணாகி விட்டதாகவும் செய்திகள் வர நான் இந்த படத்தை எப்படியும் பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்...கோவா படத்தையே மனைவியை விட்டு விட்டு பார்த்து விட்டதால் இந்த படத்தையும் தனியே பார்த்தால் வேறு சில பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருப்பதால் நேற்று இரவு இந்த படத்தை மனைவியோடு போய் பார்த்து விட்டேன்....
ஹாலிவுட்டில் ஒரு முழு படத்தையும் நக்கல் விட்டு படம் எடுப்பது ஒரு வகை.. சமீபத்தில் ஹாரிசன் போர்டு நடித்த த பியூஜீட்டிவ் படத்தை நக்கல் செய்து சமீபத்தில் ஒரு படம் வெளி வந்தது.. அந்த படத்தின் பெயர் தெரியவில்லை மறந்து விட்டேன்...
அதே போல் ஸ்கேரி மூவி... படங்கள் சமீபத்தில் திரைக்கு வந்த படங்களை பாரபட்சம் இல்லாமல் நக்கல் விடும் பழக்கம் ஹாலிவுட்டில் அதிகம்... நான் முதன் முதலில் அது போல் முழுதான நக்கல்படம் பார்த்து... ஹாட்ஷாட் என்ற ஆங்கில படம்தான்...ஆனால் இங்கு வெங்கட் பிரபு கோஷ்ட்டி வந்த பிறகுதான் தமிழ் சினிமாவை படம் நெடுக நக்கல் விட்டார்கள்..... இப்போது முழ நீள படத்தை நக்கல் செய்து ஒரு படம் வெளிவருவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன்....
தமிழ்படத்தின் கதை இதுதான்.....
படத்தின் கதை என்று எழுதினால் சத்தியமாக நீங்கள் உதைக்க வருவீர்கள்...தமிழில் இதுவரை நீங்கள் பார்த்த எதாவது ஒரு படத்தின் சாயல் இதில் இருக்கும்... இருப்பினும் கதை என்று பார்த்தால் பஞ்சாயத்து கட்டளை படி ஆண் பிள்ளைகளை கள்ளி பால் ஊற்றி கொல்லும் ஊரில் இருந்து தப்பிக்கும் ஒரு குழந்தை எப்படி தமிழகத்தின் விடிவெள்ளியாக மாறுகின்றது.. என்பது கதை... இதற்க்கு மேல் சொன்னால் அது சுவாரஸ்யத்தை குறைத்து விடும்... மீதி வெண்திரையில் காண்க...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
படம் ஆரம்பித்து முடியும் வரை எல்லோரும் சிரித்துக்கொண்டு இருந்தோம்...
விஜய் டிவியில் வந்த லொள்ளுசபா நிகழ்ச்சி மட்டும் வரவில்லை என்றால் இந்த படத்தின் வெற்றி என்பதை நினைத்து கூட பார்க்கமுடியாத வெற்றியாக இருந்து இருக்கும்...
ஒரு படத்தின் பாடல் காட்சியில் ரசிகர்கள் அனைவரும் அர்த்தம் புரிந்து விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள்... அந்த பாடல் ஓமகசீயா....
படத்தின் பெரிய பலமே சிவாதான் அவரின் பாடி லாங்வேஜ்தான் இந்த படத்தை அதிகம் தூக்கி நிறுத்துகின்றன....
வெண்ணிறஆடை மூர்த்தி சிவாவின் மச்சான் கேரக்டரில் போட்டு இருப்பதும்....எம் எஸ் பாஸ்கர் ஜட்டி தெரியவது போல் ஜீன்ஸ் பேண்ட் போட்டு இருப்பதும்... அந்த ஜட்டியில் சுடர்மணி என்று எழுதி இருப்பதும் மிக நுணுக்கமான நக்கல்கள்...
வெண்ணிறஆடை மூர்த்தி கேரம் போர்டில் இருக்கும் காய்களில் இந்த இரண்டு காயில் எந்த காயை ஆடிப்பது என்ற கேட்கும் போதே அவர் தலையில் ஒரு காக்கா வந்து கொத்தி விட்டு போக, அதன் பிறகு அவர் எப்போது டபுள் மீனிங் பேச... அதே போல் நடு இரவில் டபுள் மீனிங் பேச அப்போது அந்த காக்கா வருவது பகீர் சிரிப்பு....
இனி ஹீரோக்கல் ஒப்பனிங் சாங் வைக்க யோசிப்பார்கள் அதே போல் சண்டைகாட்சிகளிலும் கவனம் செலுத்தியாக வேண்டும்..
சரக்கு அடித்து விட்டு காக்க காக்க சூர்யா போல் ஆற்றின் ஓரம் வெள்ளை பனியனுடன் படுத்து கிடக்க... அப்போது கேமரா சுழன்று குளோசாக வர... அதிக தண்ணி அடிச்சதால என் தலை சுத்துகிட்டு இருக்குது.. மேலே கேமரா வச்சிக்கினு இவனுங்க வேற சுத்தறானுங்க என்று ஒட்டு மொத்த படக்குழுவையே நக்கல் விடுவது என படம் முழுவதும் காமெடி நெடி...
கதாநாயகி தேடலில் இன்னும் கொஞச்ம் கவனம் செலுத்தி இருக்கலாம்....ஜீப்கில் பாண்டிச்சேரி செல்லும் போது அழகாக இருக்கின்றார்....
இந்த படம் 50 பைசா இன்வெஸ்ட் பண்ணி 100ரூபாய் எடுக்கும் படமாக ஓப்பனிங்கிலேயே மாறி விட்டது தயாரிப்பு தரப்புக்கு வெற்றி.......
இந்த படம் பழைய படம் புது படம் என்ற இரு பிரிவுகளில் கலாய்கின்றது... புது படம் மட்டும் என்ற எடுத்து கொண்டு இருந்தால் இன்னும் சுவை கூட இருக்கலாம்...
படத்தின் டைட்டிலிலேயே நாம் என்ன மாதிரி படம் பார்க்கபோகின்றோம் என்பதை உணர்த்திய இயக்குனருக்கு பாராட்டுகள்....
என் மனைவி அயர்லாந்தில் இருக்கும் போது அவளது அயர்லாந்து நண்பி கேரன் என்பவள்...
ஏன் உங்கள் இந்திய சினிமாவில் சுடப்பட்ட அம்மாவை கதாநாயகன் கையில் பிடித்து கொண்டு அழுது கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கின்றானே தவிர, ஏன் உடனே...911க்கு போன் செய்து அவசர உதவி கேட்கவில்லை?? என்றும் பேசும், அழும் நேரத்துக்கு அம்புலன்ஸ் வந்த இருந்தால்... அவனின் அம்மா பிழைத்து இருப்பாள் என்று சொல்லும் அயர்லாந்து பெண்மணி... இந்திய சினிமாவை பற்றி நன்றாகவே புரிந்து வைத்து இருக்கின்றாள்... அந்த நிலை மாற வேண்டும்.... இந்த படத்தில் அது போலான காட்சிகளை சகட்டுக்கு நக்கல் விட்டு இருக்கின்றார்கள்...
படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா பாராட்டுக்குறியவர்... ஒரு லோபட்ஜட் படம் போல் இல்லாமல் பிரேமிங்கில் மற்றும் காட்சிகளில் காம்பரமைஸ் செய்து கொள்ளவில்லை....
அமைதிபடையில் சத்தியராஜ் கொடுக்கும் அல்வா வாங்கி சாப்பிட்டு காணாமல் போன கஸ்த்தூரி இந்த படத்தில் போதை தெளிந்து ஒரு குத்தாட்டம் போட்டு இருக்கின்றார்....
இந்த படம் ரெட்ஒன் கேமராவில் ஷுட் செய்து இருக்கின்றார்கள்...
இதனால் படத்தின் தயாரிப்பு செலவு பெரும் அளவில் குறைந்து இருக்கும்...
ஏற்கனவே உன்னை போல் ஒருவன் இந்த வகை கேமராவில் ஷுட் செய்து இருப்பதால் அதன் கதையின் காட்சி அமைப்புக்கு ஒரு வெறுமைதன்மை இருக்கும் ஆனால் இந்த படத்தில் பல கலர் புல் காட்சிகள் இருப்பதால் வேறு தளத்துக்கு தமிழ் சினிமா போய் இருக்கின்றது...
இந்த படத்தின் வெற்றி ரெட்ஒன்கேமரா பக்கம் தமிழ்சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும்... இது இப்போது இருக்கும் தமிழ்சினிமாவுக்கு நல்ல செய்தி....
ரெட் ஒன் கேமராவின் பெரும் பிரச்சனை டேலைட் அவுட்டோர் லைட் மேட்சிங் பிரச்சனை... அதனை கண்ரோல் செய்து எடுத்து இருக்கும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா பாராட்டுக்கு உரியவர்....
இயக்குனர் அமுதன் அடுத்த படத்துக்கு எந்த ஹீரோவிடம் போய் கதை சொல்லுவார் என்று தெரியவில்லை... இருப்பினும் முதல் முயற்ச்சி வெற்றிக்கு வாழ்த்துக்கள்...
தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி என்பதால் பல செட்டுகளை துணிந்த போட்டு இருக்கின்றார்கள்... இது முதல் நேரடி படம் என்று நினைக்கின்றேன்...
இரண்டு மணிநேர லொள்ளுசபா பார்த்த திருப்தி...
தியேட்டர் டிஸ்க்கி....
சனிக்கிழமை இரவு பத்து மணிகாட்சி படம் பார்பது என்று முடிவாகிவிட்டது... தினத்தந்தி மேய்ந்து தியேட்டர் குறித்துக்கொண்டேன்...டிக்கெட் புக் பண்ணவில்லை... மனைவி அழைத்துகொண்டு செல்வது என்று முடிவாகி விட்டது....
வளசரவாக்கத்தில் இருந்து முதலில் கமலா புதுப்பித்த தியேட்டருக்கு போனோம்..கேன்சல் டிக்கெட் ஏதாவது வருகின்றதா என்று பார்த்து கொண்டு இருந்தேன்...
எல்லோருமே யாஹுவின் டிக்கெட் புக் பண்ணிய பிரின்ட் அவுட் செய்த பேப்பரை கையில் வைத்துக்கொண்டு அலப்பரை செய்து கொண்டு இருந்தார்கள்...
சரி இனி கமலாவை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதால் சத்தியத்துக்கு இருவரும் போனோம்... அங்கு பத்து நிமிடம் நின்று சைட் அடித்து விட்டு சகஜநிலைக்கு வந்தால் இரண்டு ஷோதான் தமிழ்படம் என்று எனக்குபல்பு கிடைக்க...மாயஜலில் இரவு 11,30க்கு ஒரு காட்சி என்ற ஞாபகம் வர மாயாஜல் செல்ல முடிவெடுத்தேன்... சத்தியத்தில் இருந்து 27 கீலோ மீட்டர் மனைவியோடு பைக்கில் சாத்தியமா? என்றாலும் இரவு நேர பைக் சவாரி எனக்கு பிடித்தமானது...
இருப்பினும் அவ்வளவுதூரம் போய் டிக்கெட் இல்லை என்றால் அங்கு பெரிய பல்பு கிடைக்கும் என்பதால் முதன் முறையாக மாயாஜல் செல்வதால்... கானத்தூரில் இருக்கும் எனது கல்லூரி நண்பர் பிரபு அவர்களுக்கு போன் செய்ய...அவர் டிக்கெட் சொல்டு அவுட் ஆகிவிட்டது.... என்றும் இருப்பினும் மேனேஜரிடம் இரண்டு டிக்கெட் சொல்லி இருக்கின்றேன் போய் வாங்கி கொள்ளவும் என்ற சொல்ல தியேட்டர் போனால்...
அங்கே பதிவர் நிலாரசிகள் தன் நண்பர்களுடன் வந்து இருந்தார்....இரவு நேர வாழ்க்கை சென்னையில் எனக்கு புதுசு இல்லை என்றாலும் படம்... இன்று நடு இரவு 12 மணிக்கு படம் போடும் போது நிறைய குடும்பங்கள் வந்து இருந்தன...
இன்று அதி காலை 2,30க்கு படம் விட்டார்கள் நிலாவிடம் விடை பெற்றுக்கொண்டு சோழிங்கநல்லூரில் கட் செய்து ஆளில்லாத ஐடி ரோட்டில் மனைவியோடு குளிரில் பயணிக்கும் போது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இயல்பாக எழுந்தது...
விடியலில் பசி எடுக்க மத்திய கைலாஷ் ஹாட்சிப்ஸ் அருகே இருக்கும் ஒரு மலையாளத்து கடையில் பிரட் அம்லேட் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வரும் போது 4 மணி... தூக்கம் வரவில்லை... கடற்கரை விடியல் பார்ப்பது இருவருக்கும் பிடித்தமான ஒன்று...என் மனைவி மெரினாவுக்கு போலாமா? என்று கேட்க..நான் என் மனைவியை முறைத்தேன்....
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்....
Directed by C. S. Amudhan
Produced by Dhayanidhi Alagiri
Written by C. S. Amudhan
Chandru
Starring Shiva
Disha Pandey
Music by Kannan
Cinematography Nirav Shah
Editing by T. S. Suresh
Studio Cloud Nine Movies
Release date(s) 29 January 2010
Country India
Language Tamil
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
பார்க்க வேண்டியபடங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
i also enjoyed this movie..
ReplyDelete:)
///பஞ்சாயத்து கட்டளை படி ஆண் பிள்ளைகளை கள்ளி பால் ஊற்றி கொல்லும் ஊரில் இருந்து தப்பிக்கும் ஒரு குழந்தை எப்படி தமிழகத்தின் விடிவெள்ளியாக மாறுகின்றது.. என்பது கதை...///
ReplyDeleteஅதுவும் சாதாரண கள்ளி பால் இல்ல '' P.S.R. கள்ளி பால்''
(சுத்தமானது சுகாதாரமானது) ;;)
sir...awesome review...!
ReplyDeleteசத்யத்திலிருந்து மாயாஜாலுக்கு..?? 12 மணிக்கு ஷோ.. ஜாக்கி உங்க படம் பாக்கற விருப்பம் ரொம்ப ஆச்சரியம்..:))
ReplyDelete---
வீடும் காரும் அமைய வாழ்த்துக்கள்.
தலைவரே.. நீங்கள் சொல்வது போல அவுட் டோர் லைட்டிங் ப்ராப்ளம் ரெட் ஒன்னில் இல்லை. மற்ற் டிஜிட்டல் கேமராவில் இருக்கிறது.. என்று நம்பகமான இடத்திலிருந்து தகவல்:)
ReplyDeleteஅழகான விம்ர்சனம்
ReplyDelete//அந்த ஜட்டியில் சுடர்மணி //
ReplyDeleteஇவ்வளவு நுணுக்கமான அர்த்தம் கம்பனி பேர்ல இருக்குதா தல..,
நல்ல விமர்சனம்
ReplyDeleteஜாக்கி அருமையான விமர்சனம்
ReplyDeleteபடம் சூப்பர் ஹிட் என்று சொல்லுதே தமிழ்படம் .
உங்களுடைய சினிமா passionயை இந்த பதிவின் மூலம் புரிந்துக்கொள்ளமுடிகிறது. நிலா ரசிகன் ஐடி ரொடு climax நச் :)
ReplyDeleteஷங்கர் சொன்னது போல் இரண்டும் அமைய வாழ்த்துகள். (அப்படியே same to you வாழ்த்துகள் சொல்லிடுங்க.
வித்தியாசமான விமர்சனம் சொல்லும் முறை.வாழ்க!வளர்க!
ReplyDeleteஅருமையான விமர்சனம்... Got your blog thru Kathir's blog...
ReplyDeleteஅருமையான அழகான விமர்சனம் ஜாக்கி.
ReplyDeleteBy new reader of your blog..
விமர்சனம் கலக்கல் அதை விட நீங்க சொன்ன பயண அனுபவம் கலக்கல்
ReplyDeleteநல்ல விமர்சனம் ஜாக்கி சேகர், இரவு நேர OMR ரோடு பயணம் எனக்கும் பிடிக்கும், எனது அலுவலகம் அங்கே இருப்பதால் அடிக்கடி...
ReplyDeleteஇந்த ரோட்டில் பயம் இல்லை.. ஆனால் குளிர் தாக்கும்...
Fugitive படத்தை கிண்டல் பண்ணி வந்தப் படம் Wrongfully Accused. அது கூட 1998 வந்துடுச்சே ஜாக்கி.
ReplyDeleteசமீபத்தில்.. எதாவது படம் வந்திருக்கா என்ன???
--
தமிழ்ப்படத்தை பத்தி.. எல்லோரும்.. பயங்கரமா எழுதி.. என் ஆர்வத்தை அதிகமாக்குறீங்க.
over expectation இல்லாம பார்க்கணுங்கறதுதான்.. இப்போதைக்கு என்னோட கவலை.
எப்படியும் டிவிடி வர்றதுக்கு 5-6 மாசம் ஆகிடும். அதுக்குள்ள படத்து மேல இருக்கற இண்ட்ரஸ்ட் போய்டும். கொடுமை.
ரேவதி ஹோட்டல்ல விட்டுடிங்களே அண்ணே.....
ReplyDeleteகதையை (?) முழுதாக சொல்லாமல் அருமையா விமர்சனம் பண்ணிட்டிங்க.
ReplyDeleteசீக்கிரம் வீடு அமைய வாழ்த்துக்கள்.
என் மனைவி மெரினாவுக்கு போலாமா? என்று கேட்க..நான் என் மனைவியை முறைத்தேன்....//
ReplyDelete---->ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு!!!
எனக்குத் தெரிஞ்சு இந்தப் படத்துக்குத்தான் இவ்வளவு நல்ல விமர்சனம்.
ReplyDeleteஇங்க ரிலீஸ் ஆன மாதிரி தெரியல.
டிவிடி எப்ப வருமோ?!
சன் டிவி பேனரில் வருவதால் இந்தப் படத்தை யாரும் உதைக்காமல் விட்டார்கள் என்று சொல்லலாம். முழுத் திரையுலகும் கொஞ்சம் கொஞ்சமாக சன் கட்டுப்பாட்டிற்குள் வருவதால் திரை உலகினர் இதைக் கண்டிப்பதற்கு முடியாமல் திணறுகிறார்கள்.
ReplyDeleteகண்ணாடிவீட்டிற்குள் கல்.
i also enjoyed this movie..
ReplyDelete:)-
நன்றி எறும்பு...
///பஞ்சாயத்து கட்டளை படி ஆண் பிள்ளைகளை கள்ளி பால் ஊற்றி கொல்லும் ஊரில் இருந்து தப்பிக்கும் ஒரு குழந்தை எப்படி தமிழகத்தின் விடிவெள்ளியாக மாறுகின்றது.. என்பது கதை...///
ReplyDeleteஅதுவும் சாதாரண கள்ளி பால் இல்ல '' P.S.R. கள்ளி பால்''
(சுத்தமானது சுகாதாரமானது) ;;//
நன்றி ஜீவன் அதனை குறிப்பிட்டதற்க்கு..
sir...awesome review...!//
ReplyDeleteநன்றி சரண்...
சத்யத்திலிருந்து மாயாஜாலுக்கு..?? 12 மணிக்கு ஷோ.. ஜாக்கி உங்க படம் பாக்கற விருப்பம் ரொம்ப ஆச்சரியம்..:))
ReplyDelete---
வீடும் காரும் அமைய வாழ்த்துக்கள்.//
நன்றி ஷங்கர் கண்டிப்பா சினிமா மேலான என் காதல் அதிகம்..
தலைவரே.. நீங்கள் சொல்வது போல அவுட் டோர் லைட்டிங் ப்ராப்ளம் ரெட் ஒன்னில் இல்லை. மற்ற் டிஜிட்டல் கேமராவில் இருக்கிறது.. என்று நம்பகமான இடத்திலிருந்து தகவல்:)//
ReplyDeleteகேபிள் பிரச்சனை என்னென்னா? டே லைட் ஹெவியா இருந்தா கண்ரோல் பண்ண முடியாது... ஆதுதான் அதனோட பிரச்சனை... எப்படி கண்ரோல் பண்ணாலும் லைட்டா பிளிச் வருது... அதுதான்
அழகான விம்ர்சனம்//
ReplyDeleteநன்றி அத்திரி
//அந்த ஜட்டியில் சுடர்மணி //
ReplyDeleteஇவ்வளவு நுணுக்கமான அர்த்தம் கம்பனி பேர்ல இருக்குதா தல..,//
சுரேஷ் அந்த இடத்துல கூட அந்தளவுக்கு நக்கல்னு சொல்ல வந்தேன்..
நல்ல விமர்சனம்//
ReplyDeleteநன்றி அக்பர்..
ஜாக்கி அருமையான விமர்சனம்
ReplyDeleteபடம் சூப்பர் ஹிட் என்று சொல்லுதே தமிழ்படம் .//
நன்றி ஸ்டார்ஜன்..
உங்களுடைய சினிமா passionயை இந்த பதிவின் மூலம் புரிந்துக்கொள்ளமுடிகிறது. நிலா ரசிகன் ஐடி ரொடு climax நச் :)
ReplyDeleteஷங்கர் சொன்னது போல் இரண்டும் அமைய வாழ்த்துகள். (அப்படியே same to you வாழ்த்துகள் சொல்லிடுங்க.//
நன்றி அசோக் உங்கள் வாழ்த்துக்கள்...
வித்தியாசமான விமர்சனம் சொல்லும் முறை.வாழ்க!வளர்க!//
ReplyDeleteநன்றி ராஜ நடராஜன்..
அருமையான விமர்சனம்... Got your blog thru Kathir's blog...//
ReplyDeleteநன்றி வெங்கடேசன்...
அருமையான அழகான விமர்சனம் ஜாக்கி.
ReplyDeleteBy new reader of your blog..//
நன்றி வெங்கடேசன்..
விமர்சனம் கலக்கல் அதை விட நீங்க சொன்ன பயண அனுபவம் கலக்கல்//
ReplyDeleteமிக்க நன்றி செந்தில்....
நல்ல விமர்சனம் ஜாக்கி சேகர், இரவு நேர OMR ரோடு பயணம் எனக்கும் பிடிக்கும், எனது அலுவலகம் அங்கே இருப்பதால் அடிக்கடி...
ReplyDeleteஇந்த ரோட்டில் பயம் இல்லை.. ஆனால் குளிர் தாக்கும்...//
நன்றி கார்த்தி...ஒரு 5வருடம் அதே வழியிர் இந்துஸ்தான் கல்லூரிக்கு போய் வந்து கொண்டு இருந்தேன்..
Fugitive படத்தை கிண்டல் பண்ணி வந்தப் படம் Wrongfully Accused. அது கூட 1998 வந்துடுச்சே ஜாக்கி.
ReplyDeleteசமீபத்தில்.. எதாவது படம் வந்திருக்கா என்ன???
--அப்படி இல்ல பாலா.. நான்தான் தவறுதலா சமீபத்துல வந்ததுன்னு எழுதிட்டேன்... அதைநான் இப்பதான் பார்த்தேன்... அதான் கன்பியூஸ்*..
ரொம்ப எதிர்பார்த்து போனா ஏமாந்துடுவே...
ரேவதி ஹோட்டல்ல விட்டுடிங்களே அண்ணே.....//
ReplyDeleteடைம் இல்ல ஜெட்லி... அதான்...
கதையை (?) முழுதாக சொல்லாமல் அருமையா விமர்சனம் பண்ணிட்டிங்க.
ReplyDeleteசீக்கிரம் வீடு அமைய வாழ்த்துக்கள்.//
நன்றி கைலாஷ் நிச்சயம் உங்களை போன்ற நண்பர்கள் ஆசியுடன் விரைவில் அமையும் என்று எண்ணுகின்றேன்..
என் மனைவி மெரினாவுக்கு போலாமா? என்று கேட்க..நான் என் மனைவியை முறைத்தேன்....//
ReplyDelete---->ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு!!//
உன்ன செய்யறது பாலாஜி கொஙசமாவது தைரியமா இருக்க வேனாமா?
எனக்குத் தெரிஞ்சு இந்தப் படத்துக்குத்தான் இவ்வளவு நல்ல விமர்சனம்.
ReplyDeleteஇங்க ரிலீஸ் ஆன மாதிரி தெரியல.
டிவிடி எப்ப வருமோ?!//
மாயாவி பொறுமையா பாரு ரொம்ப எதிர்பார்த்து போகாதே...
வாழ்த்துக்கள்
ReplyDeletenice comment. i also enjoyed the movie very much.
ReplyDelete//எல்லோருமே யாஹுவின் டிக்கெட் புக் பண்ணிய பிரின்ட் அவுட் செய்த பேப்பரை கையில் வைத்துக்கொண்டு அலப்பரை செய்து கொண்டு இருந்தார்கள்...//
ReplyDeleteIs it possible to book movie tickets through Yahoo?
அடப்பாவிகளா...இந்த அளவுக்கா சிரமப்படுவது? கமலா,சத்யம் அப்புறம் மாயாஜால்...உங்கக் கடமை உணர்வு புல்லரிக்க வைக்குதுண்ணே!!
ReplyDeleteஇந்த படத்திற்க்கு ரெட் ஒன் கண்சல்டண்ட்டாக பணியாற்றியவர் நம்ம டெக்னானலஜி பதிவர் பாலாஜி அவர்கள்
ReplyDeleteஅவரின் பதிவுகளை படிக்க
http://www.indieshd.com
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
:)
ReplyDelete//Blogger kaartz said...
//எல்லோருமே யாஹுவின் டிக்கெட் புக் பண்ணிய பிரின்ட் அவுட் செய்த பேப்பரை கையில் வைத்துக்கொண்டு அலப்பரை செய்து கொண்டு இருந்தார்கள்...//
Is it possible to book movie tickets through Yahoo?//
எனக்கும் இதே கேள்விதான். இவ்வாறு டிக்கெட் புக் செய்யமுடியுமா?
தல, நான் கடைசியாக பார்த்த spoof "Meet the Spartans" 300 படத்தின் உல்டா...2 வருஷம் முன்னாடி...C.S.Amudhan லியோனி சாரின் மாப்பிள்ளை...இது எப்படி இருக்கு :)
ReplyDeleteஒளிப்பதிவு பற்றி ரொம்ப எழுதுகிறீர்கள் ...மற்றபடி விமர்சனம் நடுநிலையுடன் இருந்தது
ReplyDelete