(STATE OF PLAY)பதிவர்கள் மூலம் உண்மை சுடும்...


உலகில் அரசியல் படு கொலைகள் தினந்தோறும் ஏராளமாக நடக்கின்றது.. ஒரு சில மட்டுமே வெளியே வருகின்றது... அப்படி வெளியே வந்தாலும் பல இடங்களில் பணம் பாய்ந்து அந்த உண்மைகளை வெளியே வர விடாமல் தடுத்து விடுகின்றார்கள்.... அதிகார வர்கத்தினர்....

பல கொலைகள் நாட்டில் நடந்தாலும் ஒரு சில கொலை வழக்குகளில் மட்டுமே பத்திரிக்கையாளர்கள்...தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவார்கள்...தமிழகத்தில் உதாரணத்துக்கு எடு்த்துக்கொண்டால் சரவணபவன் ஹோட்டல் அதிபர் கொலை வழக்கொன்றில் சிக்க....தொடர்ந்து அவரை சில பத்திரிக்கைகள் விடாமல் துரத்தி துரத்தி செய்தி போட்டு கொண்டு இருந்தது... ஆனால் அதே போலான பிரச்சனை பலருக்கு இருந்தாலும் அந்த செய்தியை பலோ செய்து கொண்டே இருந்தனர்...

ஆனால் ஒரு சில பத்திரிக்கைகள்.... எல்லா பிரச்சனைகளையும் ஒரே மாதிரியாக முக்கியத்துவம் தரும்...உண்மைகளை ஒரு போதும் எந்த மிரட்டலுக்கு அடிபணியாமல் வெளிக்கொணர்ந்தே தீரும்.... அதற்க்கு முக்கியம் தன் நலம் பார்க்காமல் தன் தொழிலில் கொண்ட நேர்மையுடன் வாழும் பத்திரிக்கையாளர்கள்தான் காரணம் என்பேன்.....

STATE OF PLAY படத்தின் கதை இதுதான்......


படத்தின் முதல் காட்சியில் உயிர் பயத்துடன் ஓடும் ஒருவனை துரத்தி் சென்று நல்ல மழை பெய்து கொண்டு இருக்கும் போது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இருக்கின்றான்...அப்போது அந்த இடத்தை சைக்கிளில் கடக்கும் பிட்சா டெலிவரி பையன் இந்த காட்சியை பார்த்து விட்டு வேக வேகமாக சைக்கிள் மிதிக்க...அவனுக்கு இரண்டு புல்லட்டுகளை அன்பு பரிசாக வழங்குகின்றான் கொலைகாரன்... ஆனால் பிட்சா பையனுக்கு உயிர் இருக்க...அஸ்பத்திரியில் கோமாவில் இருக்கின்றான்...மறுநாள் கொலை நடந்த இடத்துக்கு வருகின்றான் பத்திரிக்கையாளன் Cal McAffrey (Crowe) வருகின்றான்...நடந்த கொலைகளை பற்றி செய்தி சேகரித்து கொண்டு இருக்க...Sonia Bakerஎன்ற இளம் பெண் சப்வே ரயிலில் எறுவதற்க்காக பிளாட்பாரத்தில் நின்று கொண்டு இருக்க, ரயில் அவள் அருகில் வரும் போது, அவளே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாளா? அல்லது யாராவது தள்ளிவிட்டார்களா? தெரியவில்லை....


பத்திரிக்கைகள்அவள் சூசைட் செய்து கொண்டு விட்டாள் என்று கட்டம் கட்டி செய்தி வெளியிட்டு மக்களை அந்த மனநிலைக்கு எடு்த்துக்கொண்டு போக...,Della Frye (McAdams) என்ற பத்திரிக்கையாளரும், பிளாக்கருமான அந்த பெண்தான் முதன் முதலில் ரயில் நிலையத்தில் அந்த பெண் இறந்த போது சப்வே பிளாட்பாரத்தில் இருந்த எந்த கேமாராவும் வேலை செய்யவில்லை என்பதை வெளிக்கொண்டு வர...இறந்து போன Sonia Baker பெண் வேலை செய்த நிறுவனத்தின் தலைவர்Stephen Collins (Affleck) ஒரு காலத்தில் பத்திரிக்கையாளன்Cal McAffrey (Crowe)ன் ரூம் மெட்...இதனால் இந்த தற்கொலையில் என் பெயர் தேவையில்லாம்ல் சந்தி சிரிப்பதால் உண்மையை எழுதும் படி தன் நண்பனை கேட்டுக்கொள்ள...

Dellaவுடன் சேர்ந்து இந்த விஷயத்தை புலன் விசாரனை செய்து உண்மை வெளிக்கொண்டு வர போராடுகின்றான்....கோமாவில் இருக்கும் பிட்சா பையன் மயக்கம் தெளிந்து இருப்பதாக செய்தி வர Della வை அனுப்பி அவனை விசாரித்துவிட்டு வர சொல்ல அங்கு அவனிடம் கேள்வி கேட்பதற்க்கு முன் ஸ்நைப்பர் ஷாட்டில் சுடப்பட்டு இருக்க... கொலையாளியை அடையாளம் தெரியாமல் அந்த கேஸ் இருக்க... எப்படி கொலைகாரனை கண்டுபி்டித்தார்கள் என்பதும் ...உண்மை சுடும் என்பதும் படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
இந்த படத்தில் ரயில் சப்வே தற்கொலை பற்றி முக்கியமான சில கேள்விகளை முன் வைப்பது பிரபல பெண் பதிவர் பாத்திரத்தி்ல் வரும்Della Frye (McAdams)... அமெரிக்காவில் பிளாக்கர்களின் பலத்தை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டியது என்பேன்...

இந்த படம் 2009ல் வெளியான அமெரிக்கன் பொலிட்டிக்கல் திரில்லர்...

இதே பெயரில் பிபிசி டெலிவிஷன் தொடரும் இருக்கின்றது...

கிளாடியேட்டருக்கு பிறகு ரஷல்குரோவை நான் ரசித்து பார்த்த படம் இது...
அவரின் ஹிப்பி ஸ்டைல் தலைமுடியுடன் ரோட்டில் நடக்கும் அழகே அழகு...

இந்த படத்தில் சற்றே வெயிட் போட்டு இருக்கின்றார்..

எல்லா ஊரிலும் பத்திரிக்கையாளர்கள் ஜோல்னா பையோடுதான் இருக்கின்றார்கள்...அமெரிக்க பத்திரிக்கையாளனும் அப்படித்தான்...

ரஷலுக்கும் அந்த பிளர்க்கர் பெண்ணுக்குமான நட்பு பூ பூக்கும் இடம் அழகு...

எல்லா உண்மைகளையும் கண்டு பிடித்து விட்டு, பத்திரிக்கை ஆபிசில் எல்லோரும் 4 மணி நேலரம் அந்த தலைப்பு செய்தி கட்டுரைக்கு வெயிட் செய்து கொண்டு இருக்க..ரஷல் டைப் அடித்து விட்ட சென்டு பட்டன் அமுக்காமல் எழுந்து Della Frye (McAdams) அமுக்க சொல்லி விட்டு நடந்து போகும் போது அந்த கம்பீர நடை சான்சே இல்லை...

அதே போல் அந்த செய்தி எப்படி அடுத்தகட்டத்துக்கு போகின்றது எப்படி நியிஸ் பேப்பராக மாறுகின்றது.. என்று காட்டி இருப்பது..அழகு...

படத்தின் பலம் என்னவென்றால் தொய்வு இல்லாத திரைக்கதைதான் படத்தின் பலம் என்பேன்
ஒரு பத்திரிக்கையாளனை சுற்றி எப்படி அவ்ன் மேஜை இருக்கும் என்பதை மிக அழகாக காட்டி இருப்பார்கள்...

கல காட்சிகள் ஸ்டெடிகேமில் எடுத்து இருப்பார்கள்.. குறிப்பாக பத்திரிக்கைஆபிசில் பேசிக்கொண்டே நடக்கும் காட்சிகள்...


இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியMatthew Michael Carnahanதான் த போர்ன் சூப்பர்மெர்சி படத்துக்கு திரைக்கதை எழுதியவர்...

இந்த படத்தில் ரஷலுக்கு பதில் பிராட்பிட் நடிப்பதாக இருந்தது...

படத்தின் டிரைலர்...

படக்குழுவினர் விபரம்...
Directed by Kevin Macdonald
Produced by Andrew Hauptman
Tim Bevan
Eric Fellner
Written by Matthew Michael Carnahan
Tony Gilroy
Peter Morgan
Billy Ray
Paul Abbott (series)
Starring Russell Crowe
Ben Affleck
Rachel McAdams
Viola Davis
Robin Wright Penn
Jason Bateman
with Jeff Daniels
and Helen Mirren
Music by Alex Heffes
Cinematography Rodrigo Prieto
Editing by Justine Wright
Studio Working Title Films
StudioCanal
Relativity Media
Andell Entertainment
Distributed by Universal Pictures
Release date(s) April 17, 2009 (US)
April 22, 2009 (UK)
May 28, 2009 (AUS)
Running time 127 minutes
Country United States
United Kingdom
Language English
Budget $60 million
Gross revenue $87,784,194

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

12 comments:

 1. நல்லதொரு படத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி தோழா

  ReplyDelete
 2. ஜாக்கி....

  //( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் //

  தமிழ்மணத்தில்.. இரண்டாம் பரிசு கிடைச்சிருக்கு!!! :) :)

  வாழ்த்துகள் ஜாக்கி!! :) :)

  ReplyDelete
 3. என்னை ரொம்ப பாதிக்கலை ஜாக்கி. படம் வந்தப்ப இருந்த மனநிலையா கூட இருக்கலாம் (அப்பதான் வேலை போயிருந்தது).

  ReplyDelete
 4. நல்ல அறிமுகம்.

  time pass படங்கள் பற்றிய பதிவு போட்டு ரொம்ம்ம்ம்ப நாள் ஆச்சு பாஸ்.. கொஞ்சம் பாருங்க

  ReplyDelete
 5. தமிழ்மணம் போட்டியில் வென்றதற்கு வாழ்த்துகள் சேகர் !

  ReplyDelete
 6. தமிழ்மண விருது வென்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 7. படம் நல்லா இருக்கும் போலிருக்கே.டவுன்லோட ஆரம்பிச்சிருவோம்.
  நம்ம ஊர்ல இப்படி 2 மந்திரிங்க கொல்லப்பட்டாங்களே .என்ன ஆச்சுன்னே தெரியலே.

  ReplyDelete
 8. nalla malayala padam irunthaal chollunga.

  ReplyDelete
 9. தமிழ்மணம் போட்டியில் வென்றதற்கு வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 10. விமர்சனமே சூப்பரா இருக்கே. கண்டிப்பா பார்த்துடுறேன்

  ReplyDelete
 11. நன்றி

  சுப தமிழினியன்...


  ஹாலிவுட் பாலா.. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.. ஒரு படத்தை ரசிக்க நல்ல மூட் நிச்சயம் வேனும்...  நன்றி பின்னோக்கி


  நன்றி கோவி கண்ணன்,வந்திய தேவன்...உங்கள் வாழ்த்துக்கு


  நன்றி கைலாஷ் ... என்னை மாட்டி உட பார்க்கிறியா???

  மலர் அப்படி எதாவது பார்த்தால் நிச்சயம் அறிமுக படுத்துகின்றேன்...

  நன்றி ரோமியோ...

  நன்றி கல்ப் தமிழன்..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner