ஆல்பம்...
வி்ஸ்க்கி
பிராண்டி
ரம்
பீர்
ஜின்
வோட்கா
ஸ்காட்ச்
ஒயின்
(குடி மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்..)
தெலுங்கான பிரச்சனை நீருபூத்த நெருப்பாக இருப்பதால் அது திடிர் திடிர் என்று பற்றிக்கொண்டு பேய் ஆட்டம் ஆடுகின்றது... எனக்கு தெரிந்து இந்த பிரச்சனையில் வாய் விட்டு மத்திய அரசு மாட்டிக்கொண்டுவிட்டது என்றே என்ன தோன்றுகின்றது.... காஷ்மீர் போல அவ்வப்பபோது பிரச்சனை என்றால் எப்படி நிம்மதியாக வாழ முடியும் என்று சொல்லுங்கள்...?????
மிக்சர்...
வீடு தேடி நான் என் மனைவியும் ஒரு தெருவில் நுழைந்தோம் அந்த தெருவில், பல அப்பார்ட்மென்ட்கள், தனி விடுகள், பங்களாக்கள் இருந்தன... ஒரு அப்பார்ட்மென்ட்டில் வெளியே நின்ற பெண்மணியிடம் இங்கு ஏதாவது செகண்ட் சேல்ஸ் பிளாட் ஏதாவது இருக்கின்றதா ? என்ற கேட்க அவள் இல்லை என்றாள்.... சரி அடு்த்த அப்பார்ட்மென்ட்டில் போய் கேட்கலாம் என்று நகரும் போது... அந்த பெண்மணி எங்கள் இருவரையும் அழைத்தால்.... நேரத்தை வீணாக்காதீர்கள்... இந்த தெருவில் உள்ள பத்து அப்பார்ட்மென்ட் 5 தனி விடு 3 பங்களா எல்லாத்துக்கும் ஒரே ஹவுஸ் ஓனர் என்று சொன்ன போது எனக்கு நெஞ்சு அடைத்துக்கொண்டது.......என் மனைவி என்னை கை தாங்கலாக அழைத்து போனாள்....
ஒரு சுவாரஸ்யமான குடும்ப சண்டை....
இரண்டு குழந்தைகள் உள்ள நடுத்தர குடும்பம் அது.... இரண்டு பேரும் ஒரே இடத்தில் பணி புரியும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்... இருவருமே திருமணத்துக்கு முன்பு எனக்கு தெரியம்... அதிலும் அந்த பெண் எனது பேச்சுக்கும் கமென்டுக்கும் விசிறி.... அவளது கணவனும் எனது நண்பன்தான்... அவன் நரசிம்மராவ் போல் அதிகம் பேசமாட்டான்.... இரவு சாப்பிட வந்தான்.... இரவு தோசைதான்.... தொட்டுக்கொள்ள சட்னி செய்யாமல் மதியம் வைத்த குழம்பையே சூடு படுத்தி வைத்து இருந்தாள்.... அவள் தோசைக்கு சட்னி வைத்தாள் எக்ஸ்ட்ரா செலவு ஆகும் என்ற காரணத்தால், குழம்பு வேஸ்ட் ஆக கூடாது என்ற நடுத்தர குடும்ப புத்தியில் அப்படி செய்து விட்டாள்...
அவன் பசியில் சாப்பிட உட்கார்ந்தான்...
அவன் தோசைக்கு குழம்பை பார்த்த உடன்....
அவன்.... சட்னி செய்றதுக்கு உனக்கு நேரம் கிடைக்கலையா? என்று நக்கலாக கேட்க...
அவள்... நான் எந்த வேலையும் செய்யாம தண்ட சனியனாதானே உட்கார்ந்து இருக்கேன் என்று சொல்ல....
அவன்.... இப்பெல்லாம் வாய் கொழுப்பு ரெண்டும் அதிகமாயிடுத்து என்று சொல்லி விட்டு 4 தோசை சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டான்... அவள் சாப்பிடாமல் அடுக்களையை கழுவி கொண்டு இருக்க...
இவன் மனைவியை பார்த்து நீ சாப்பிட வில்லையா? என்ற கேட்க??? நீங்கதானே சொன்னிங்க... கொழுப்பு அதிகமாயிடிச்சின்னு.. அது கரையிட்டும்னு சாப்பிடலை என்றாள்... அப்படியே பேச்சு அதிகமாகி... இப்போது ஒருவாரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை....இதில் செம காமெடி இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சரவணஸ்டோர், மற்றும் பெசன்ட் கர் பீச்சுக்கு எல்லாம் போய் வந்து இருக்கின்றார்கள்... இன்னும் இருவரும் சமாதானம் ஆகவில்லை... யாராவது நல்ல ஐடியா சொல்லுங்கப்பு.....
இந்த வார சலனபடம்....
27 செகன்டில் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பது நிச்சயம்....
விஷுவல் டெஸ்ட் (நான் எடுத்ததில் பிடித்தது....)
பெசன்ட் நகர் உடைந்த பாலம்... அருகில் உள்ள பில்டிங்...கீழ் உள்ள படமும் அதே.. ஆனால் அதில் சுவாரஸ்யம் இரண்டு மீனவர்கள் வலை விரித்து விட்டு சவாகாசமாக பேசிக்கொண்டு இருந்த போது கிளிக்....
சென்னை சங்கமத்தில் ஒரு நாட்டு புற கலைஞர் நிகழ்ச்சி முடித்து வியற்வையுடன்... சற்றே இறைப்புடன்...
இதுவும் சங்கம நிகழ்ச்சியின் போது... கிளிக்....
வாழ்த்துக்கள்...
தேசிய விருது வென்ற இயக்குனர்...பாலாவுக்கு
படித்ததில் பிடித்தது....
இந்த வார ஆனந்த விகடனில் கவிஞர் முத்துகுமாரின்...நான் முத்துகுமார் ஆனது எப்படி ???என்ற கட்டுரை...
யார் வேண்டுமானாலும்... பிள்ளை பெற்றுக்கொள்ளலாம்... ஆனால் பெற்ற பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரிய வேண்டும்.... எப்படி பிள்ளை வளர்க்க வேண்டும் என்பதற்க்கு முத்துக்குமாரின் தமி்ழ் ஆசிரியர் அப்பாவும் அந்த கட்டுரையும் சாட்சி... அந்த முகம் தெரியாத தமிழ் ஆசானுக்கு என் வந்தனங்கள்...
நான்வெஜ்...
ஜோக் 1
உலகத்தின் ஐ எஸ் ஓ 9002 சேப்டி செக்ஸ் எது தெரியுமா?....
கைமைதுனம் செய்யும் போது கூட ஆணுறை அணிந்து கொள்வதுதான்..
ஜோக்..2
என் லுல்லுவை சுற்றி ஒரு சிகப்பு வளையம் இருக்கின்றது டாக்டர்??? எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..... இந்த ஆயின்மென்ட்டை போடுங்கள்... மறுநாள் டாக்டர் அது போயிடுச்சி... என்ன அயின்மென்ட் அது??? லிப்ஸ்டிக் ரிமுவர்...
அன்புடன்
ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
புருஷன் பொன்சாதி சண்டை தீர்த்துவைக்கற அளவுக்கு நமக்கு பக்குவம் பத்ததாதுண்ணே...
ReplyDeleteஅந்த நாட்டுபுறகலைஞரின் பார்வையில் ஆயிரம் கேள்விகள் இருப்பது போல் தோன்றகிறது. அதிசயமாக கிடைக்கும் யதார்ததமான முகபாவனை அது.
லிப்ஸீட்டிக் ரிமுவர் டாப்பு - ரொம்ப குறும்புண்ணே உங்களுக்கு
புருஷன் பொன்சாதி சண்டை தீர்த்துவைக்கற அளவுக்கு நமக்கு பக்குவம் பத்ததாதுண்ணே...
ReplyDeleteஅந்த நாட்டுபுறகலைஞரின் பார்வையில் ஆயிரம் கேள்விகள் இருப்பது போல் தோன்றகிறது. அதிசயமாக கிடைக்கும் யதார்ததமான முகபாவனை அது.
லிப்ஸீட்டிக் ரிமுவர் டாப்பு - ரொம்ப குறும்புண்ணே உங்களுக்கு
video clip super...
ReplyDelete//கண் விழித்து டைப்பும் என்னை//
ReplyDeleteநைட்டு எத்தனை மணிக்கு இந்த வேலையெல்லாம் நடக்குது!
தற்பொழுதெல்லாம் பிரபலங்களை மட்டுமே பாலோ பண்ணுவிங்க போல!
ReplyDeleteஜோக் 2 , ஹா..ஹா..ஹ...
ReplyDeleteஆமா, அவ்வளவு கூராவா இருக்கு.... கண்ணு :))
வீடியோ கிளிப் போட்டோ கிளிக்ஸ் சூப்பர்ப்...தல...
ReplyDeleteஅருமை .........
ReplyDeletesir roja moviela desiya kodi-a yerikum podhu oru humming varumey antha ringtone enga kitaikum.sir pls
ReplyDeleteபுருஷன் பொன்சாதி சண்டை தீர்த்துவைக்கற அளவுக்கு நமக்கு பக்குவம் பத்ததாதுண்ணே...
ReplyDeleteஅந்த நாட்டுபுறகலைஞரின் பார்வையில் ஆயிரம் கேள்விகள் இருப்பது போல் தோன்றகிறது. அதிசயமாக கிடைக்கும் யதார்ததமான முகபாவனை அது.
லிப்ஸீட்டிக் ரிமுவர் டாப்பு - ரொம்ப குறும்புண்ணே உங்களுக்கு//
நன்றி நாஞ்சில் பிரதாப்... அந்த போட்டோ ஏதோ சொல்ல வந்ததை புரிந்து கொண்டதற்க்கு நன்றிகள்..
//கண் விழித்து டைப்பும் என்னை//
ReplyDeleteநைட்டு எத்தனை மணிக்கு இந்த வேலையெல்லாம் நடக்குது!//
சரியா பதினோறு மணிக்கு மேலே....
தற்பொழுதெல்லாம் பிரபலங்களை மட்டுமே பாலோ பண்ணுவிங்க போல!//
ReplyDeleteஅப்படி எல்லாம் இல்லை...
video clip super...//
ReplyDeleteநன்றி விஜய் ஆனந்
ஜோக் 2 , ஹா..ஹா..ஹ...
ReplyDeleteஆமா, அவ்வளவு கூராவா இருக்கு.... கண்ணு :))//
சைவம் வம்புல மாட்டி உடாதிங்கப்பு
வீடியோ கிளிப் போட்டோ கிளிக்ஸ் சூப்பர்ப்...தல...//
ReplyDeleteநன்றி பிரியமுடன் வசந்
நன்றி இராஜபிரியன் ..
ReplyDeleteபிள்ளைவால் அதை நீங்க எதாவது எடிட்டிங் சாப்ட்வேரில்தான் எடுக்க வேண்டும்,,
ReplyDeleteகலக்கல், வழக்கம்போலவே ... ! ;)
ReplyDeleteஅது என்னது ஆல்பம்-ன்னு போட்டு ஒரு லிஸ்ட் ஜாக்கி?
ReplyDelete--
லிப்ஸ்டிக் ஜோக் நல்லாயிருந்தது! :)
அந்த நாட்டுபுறகலைஞரின் பார்வையில் ஆயிரம் கேள்விகள் இருப்பது போல் தோன்றகிறது. அதிசயமாக கிடைக்கும் யதார்ததமான முகபாவனை அது.//
ReplyDeleteமிக்க சரி.. எளிதில் படம் எடுக்க கிடைக்காது..::)) படம் டாப்.:)
//நேரத்தை வீணாக்காதீர்கள்... இந்த தெருவில் உள்ள பத்து அப்பார்ட்மென்ட் 5 தனி விடு 3 பங்களா எல்லாத்துக்கும் ஒரே ஹவுஸ் ஓனர் என்று சொன்ன போது எனக்கு நெஞ்சு அடைத்துக்கொண்டது.......என் மனைவி என்னை கை தாங்கலாக அழைத்து போனாள்....//
ReplyDeleteஹா...ஹா..ஹா.
வாய்விட்டு சிரித்துவிட்டேன்.
அந்த பெசண்ட் நகர் போட்டோ லாங் ஷாட்டை விட குளோசப் ஷாட் அருமை ஜாக்கி.
ReplyDeleteசீக்கிரமே வீடு அமைய வாழ்த்துக்கள் ஜாக்கி..
ReplyDeleteபாலா said
//லிப்ஸ்டிக் ஜோக் நல்லாயிருந்தது!//
இது அரதப் பழசான ஜோக் பாலா - நீ இன்னும் நெறய வளரணும், காம்ப்ளான் குடிச்சிப் பாரேன்...
ஒடனே பதிவில எழுதிடுவியே- எனக்கு A ஜோக் பத்தி எதுவுமே தெரியாது, ஸ்ரீராம் சொல்லித் தரேன்னு சொல்லியிருக்கான்னு - அதுக்கு பப்பு வேற வந்து கருத்து சொல்வார் - அவனோட சேராதேன்னு :) :)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..
//நேரத்தை வீணாக்காதீர்கள்... இந்த தெருவில் உள்ள பத்து அப்பார்ட்மென்ட் 5 தனி விடு 3 பங்களா எல்லாத்துக்கும் ஒரே ஹவுஸ் ஓனர் என்று சொன்ன போது எனக்கு நெஞ்சு அடைத்துக்கொண்டது.......என் மனைவி என்னை கை தாங்கலாக அழைத்து போனாள்....//
ReplyDeleteமெய்யாலுமாவாஆஆஆஆஆ? :((((
லிப்ஸ்டிக் ஜோக் டாப்பு....
ஜாக்கி, வீடு கிடைச்சிருச்சா இல்லையா?!!
ReplyDeleteசிலவேளை இந்த குடும்ப சண்டையால அவங்களுக்கு இன்னொரு குழந்தை கிடைக்கிறதுக்கும் சந்தர்ப்பம் இருக்கு:)
Never know!!!
ஸ்ரீராம்..
ReplyDeleteபாவம் சொன்னது.. பப்பு இல்லை! :)
--
அப்புறம்.. லிப்ஸ்டிக் ஜோக்கை விடுங்க. நானு ஜாக்கி எல்லாம் இன்னும் சின்னப் பசங்க தானே!!
இன்னைக்கு நம்ம ஏரியாவில் இன்னொன்னை கத்துக்கலாம். ரெடியா இருங்க! :)
ஆஹா எப்படி இப்படியெல்லாம் பதிவு பொடுறீங்க . அருமை பகிர்வுக்கு நன்றி !
ReplyDelete