கோவா ஒரு பின்நவினத்துவ படம்(சினிமாவிமர்சனம்)
ஹாலிவுட்டில் ரோட்டிரிப் என்ற பெயரில் ஜாலி காமெடி வகை படங்கள் வெளிவந்து இருக்கின்றன... இந்த படங்களின் கதை அடிநாதம் எதாவது ஒரு ஊருக்கு எதன் பொருட்டாவது, நண்பர்கள் நண்பிகளுடன் சேர்ந்த பயணிப்பார்கள்... அப்படி பயணிக்கும் போது நடக்கும் சம்பவங்கள்தான் கதை.....அதே சாயலில் தமிழில் வந்த படம் கோவா...ஊரை விட்டு ஓடிய அனுபவம் உங்களில் யாருக்கு இருக்கின்றதோ இல்லையோ எனக்கு இருக்கின்றது... அது தனிக் கதை ...
ஒரு குருட்டு தைரியத்தை வைத்துக்கொண்டு ஒரு சிலரால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் டிராவல் செய்ய முடியும்... என் வாழ்க்கையில் நான் அது போல பல சம்பவங்களை பார்த்து இருக்கின்றேன்...
1993களில் அதாவது சிக்கு புக்கு ரயிலே ஜென்டில் மேன் படம் வந்த போது, இதே போல் மூன்று நண்பர்களுடன் ஒன்றரை லட்சம் பணமும் ஒன்றரை கிலோ பழைய நகையுடன் ஒரு நகை கடை நண்பன் காதலுக்கு உதவ, ஊரை விட்டு ஓடிப்போனோம்...நாங்கள் முதலில் சென்னை வந்து அதன் பிறகு ஊட்டி போய், அங்கிருந்து,, கோவை வந்து அதன் பிறகு மேங்களுர் போய் அதன் பிறகு கோவாவிற்க்கு போய் நன்றாக சுற்றிவி்ட்டு விடு திருப்பியது... என் நினைவுகளை இந்த படம் அசை போட வைத்து விட்டது..
கோவாவில் நாங்கள் போடாத ஆட்டம் இல்லை...நிறைய சுற்றி பார்த்தாகி விட்டது... அதுதான் எனது முதன் முதலில் வாழ்வில் வெகு தூரம் பயணப்பட்ட இடம்... அப்போதுதான் மதராசி என்றால் ஒரு துவேஷ பார்வையை வட இந்தியர்கள் பார்ப்பதை உணர்ந்தேன்...
சரி கோவா படத்தின் கதை என்ன?...
கோவா படம் ...ஒரு மூன்று கிராமத்து இளைஞர்கள் ஊர் கட்டுபாட்டை மீறிய காரணத்தாலும், கிராமத்தின் பஞ்சாயத்து, தெய்வகுத்தம், அடக்குமுறை,மூடபழக்கவழக்கம் போன்றவைகளை தாங்கிகொள்ளாமலும்.. அவர்கள் ஊரை விட்டு ஜாலியாக ஒரு வாரத்தினை கழிக்க மதுரைக்கு வருகின்றார்கள்... வந்த இடத்தில் அவர்களது நண்பனுக்கும் ஒரு வெள்ளைகார பெண்ணுக்கும் திருமணம் நடக்க... அது எப்படி சாத்தியம் என்று நண்பனிடம் கேட்க?, தான் கோவாவில் கைடாக இருக்கும் போது அந்த வெள்ளைக்கார பெண்ணுக்கும், தனக்கும் காதல் மலர்ந்து கல்யாணம் செய்து கொண்டு விட்டோம்... இதன் பிறகு முதல் இரவு ஸ்டார் ஓட்டலில் நடக்க போகின்றது என்றும்... தன் மனைவியுடன் வெளிநாடு செல்லபோவதாகவும் சொல்ல... நண்பர்கள் மூவரும் அதிர்ச்சியில் அட்டுபிகர் அவனுக்கே ஒரு பாரின் பொண்ணு கிடைக்கும் போது... நமக்கு கிடைக்காத? என்ற நம்பிக்கையில்
அந்த மூன்று பேரும் கோவா போய் ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகும் உயர்ந்த நோக்கத்துடன் கோவாவிற்க்கு செல்ல ....அங்கு இருக்கும் தமிழ்நாட்டு நபர்களுடன் இனைய படம் கல கல கல கல கல கல கல கொல கொல கொலவென ரொம்ப ஜாலியாக பயணிக்கின்றது... மீதி வெண்திரையில் காண்க..
படத்தின் சவாரஸ்யங்களில் பல....
படத்தின் கதை பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை என்பது படம் முழுக்க தெரிகின்றது...
படம் முழுவதும் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதால் அவர்கள் சிரியஸ் விஷயங்களை அதிகம் போட்டு குழப்பிக்கொள்ளவில்லை...
படத்தில் வேலை செய்த அனைவரும் ரொம்பவும் ஜாலியாக அரட்டை அடித்து படம் எடுத்த விளைவை... அந்த அரட்டையை படம் பார்க்கும் போது பார்வையாளன் அந்த ஜாலியை பல இடங்களில் உள்வாங்க முடிந்தது...
ஹோமே செக்ஸ் பற்றி மிகவும் தைரியமாக எடுத்து இருக்கின்றார்கள்.... அவர்களது காதலை ரொம்ப காமெடியாக சொல்லி இருக்கின்றார் இயக்குனர்... (அப்பாடி விமர்சன தலைப்புக்கான விஷயத்தை சொல்லியாகிவிட்டது...)
ஹோமோ கதாபாத்திரத்தில் இவ்வளவு தைரியமாக நடிக்க ஆட்கள் வேண்டும்....எல்லை மீறாத காட்சிகளுடன் புலம்பலின் மூலமே... அவர்கள் காதல் மற்றும் ஏக்கங்கள் சொல்ல படுகின்றது...
வசனத்தில் ஒரு வரி...
“ ஓம் சாந்தி ஓம் படத்துல அந்த சிக்ஸ் பேக் ஷாருக் ஒடம்பை பார்த்துட்டு ஷாருக்கை பார்த்து அவன் உருகி போனதாலதான்... அன்னைக்கு நான் இந்த உடம்பை சிக்ஸ் பேக் ஏத்த ஆரப்பிச்சேன்” என்று அரவிந் அழுது புலம்பும் அந்த ஒரு வரி வசனம்....நச்
இந்த படத்திலும் அரவிந்தை தண்ணி அடித்து விட்டு புலம்ப வைத்து இருக்கின்றார்கள்...6க்ஸ்பேக் உடம்பில் நன்றாகவே புலம்புகின்றார்....
சம்பத்குமார்... மற்றும் அரவிந்... பின்னி பெடலெடுத்து இருக்கின்றார்கள்..
மிக முக்கியமாக கோடான கோடி ஆட்டம் ஆடிய, சென்னை28 வில்லன் சம்பத்தை முற்றிலுமாக மாற்றி இருக்கின்றார்கள்... படத்தின் பல காட்சிகள் கடந்து போனதும்தான் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது..
வெள்ளைக்கார பெண்ணாக நடித்த மாலினிமேரிக்கு நலினம் நன்றாகவே வருகின்றது, வெட்கம் நன்றாகவே வருகின்றது... யாராவது அந்த பெண்ணுக்கு அடுத்த படத்துல சான்ஸ் கொடுங்கப்பு...
பிரேம்ஜிக்கு காதலியாக வரும் அந்த வெள்ளைக்கார பெண்...ஒரு வெள்ளைக்காரி ஆப் சாரி உடுத்தின இவ்வளவு அழகாக இருக்க முடியுமா? சான்சே இல்லை... வெங்கட் பிரபு ரசனைக்கு ஒரு ராயல் சல்யூட்..
அந்த வெள்ளைகார பெண்ணின் சிரிப்பும் அழகும்.. சான்சே இல்லை...மனைவியை ஆபிசில் விட்டு விட்டு படம் பார்த்த காரணத்தால் கிள்ளுகள் இன்றி ரொம்பவே ரசித்தேன்...
சினேகாவை பற்றி சொல்லவே வேண்டும்.....
சினேகா இந்த படத்தில் பனியனோடு வருகின்றார்.. கொஞ்சம் கவர்ச்சியாக தெரிகின்றார்... ஷவரில் குளிக்கின்றார்....
ஊரில் குளக்கரையில் பெண்கள் உள்பாவாடைய சற்று மேலேற்றி மார்பில் கட்டி குளிப்பார்களே... அது போலான மார்டன் உடையில் சினேக,நிறைய இடங்களில் வருகின்றார்...
யாரோ காஸ்ட்டியூமர் வாசுகி பாஸ்கரிடம்... ஜெய் இங்கிலிஷில்...இட்ஸ் பியூட்டிபுல் டிரஸ் என்று சொல்லி இருக்க வேண்டும்... அது போலான உடைகளில் சினேகா வந்து இருக்க வேண்டாம்....அவர் உடம்புக்கு நன்றாக இல்லை...
வைபவ் கொடுத்து வைத்தவர்.. எனக்கு தெரிந்து சினேகவுடன் கொஞ்சம் கலக்கல் காஸ்டியூமில் நெருக்கமாக நடித்தது இவர்தான் என்று நினைக்கின்றேன்...
மாடிபடியில் இருந்து இறங்கும் சினேகாவின் துள்ளல் சான்சே இல்லை...
சினேகாவை இவ்வளவு வெள்ளையாகவும், அழகான ஒரு வெள்ளைகாரி லுக் கொடுத்த மேக்கப் மேனுக்கும், ஒளிப்பதிவாளர் சக்திக்கும் பாராட்டுகள்...
இவ்வளவு வெள்ளையா எந்த படத்திலும் சினேகாவை நான் பார்த்தே இல்லை...
அடுத்து பிரேம்ஜி அமரன்...
வாயில் நாக்கை சுழற்றி 32 பல்லும் தெரிவது போல சிரிப்பதுதான் பிரேம்ஜி ஸ்பெஷல்... படத்தின் மொத்த எடையையும் தாங்குவது இவர்தான்..
பிரேமுக்கு அந்த வெள்ளைகாரிக்குமான காதல் காட்சிகளில் ஜீவன் இருக்கின்றது..
அதே போல் அந்த வெள்ளைக்கார பெண்ணிடம் தன்தான் கிராமத்து பிரேம் என்று சொல்ல அவர் எடுக்கும் அந்த பிரசன்ஸ் ஆப் மைன்டு ரசிக்க வைக்கின்றது...
பிரேம்ஜி பைட் போடும் காட்சிகளில் தியேட்டரில் விசில் பறக்கின்றது...
வெள்ளைக்கார பெண் காதலை சொல்லி ஏர் போர்ட்டில் நிற்க்க பிரேம்ஜி என்ன ரியாக்ஷன் கொடுப்பது என தெரியாமல் பக்கா பக்கா என முழிப்பதை தவிர்த்து இருக்கலாம்....
எல்லா இடத்திலும் காமெடியை பிரதானபடுத்தி எடுக்கும் இது போலான படங்களின் காட்சிகளில், சிரியஸ்காட்சிகளில் இப்படி கோட்டை விடுவது சகஐம் என்றாலும்... அந்த காதலின் ஜீவன் அந்த இடத்தில் சுத்தமாக இல்லை...
பிரேம்ஜிக்கும் அந்த வெள்ளைகார பெண்ணுக்கான கனவு பாடலில்...ராணி வேஷத்தில் வரும் அந்த பெண்ணுக்கு அந்த வெள்ளை தோலுக்கும் அந்த சிவப்புகலருக்கும்...ஆசிர்வாத் ஆட்டாவுக்கு(மைதா) டிரஸ் போட்டது போல் இருக்கின்றது...
ஜெய் காதலியாக வரும் பியா நன்றாக இருக்கின்றார்.. சிக்கென தொடை தெரிய உடை உடுத்தி வருகின்றார்... சில இடங்களில் நன்றாக நடிக்கவும் செய்கின்றார்... காதலுக்காக உருகி பாடும் அந்த பாடலில்...
ஜெய் இங்கிலிஷ் மற்றும் அவரது காமெடிகள் சில இடங்களில் நன்றாக எடுபடுகின்றது... மிக முக்கியதாக வைபவ் பாத்ரூமில் இருந்து கொண்டு ஜெய்யிடம், டவல் ஆங்கிலத்தில் கேட்கும் அந்த காட்சி மிகவும் ரசிக்க முடிகின்றது...
அதே போல் ஒரு வெள்ளைகார பெண்ணிடம் ஜெய் ஆக்டிவலி என்று ஆரம்பித்து அடுத்த வார்த்தை வராமல், சோ என்று அடுத்த வார்தையையும் போட்டு விட்டு பேய் முழி முழிக்கும் போது நல்ல சிரிப்பை வர வைக்கின்றார்...
நகுர்டதனா, திறனானனா... என்பது போன்ற மிட்நைட் மசலா மியூசிக் வரும்.. அந்த மியூசிக் டிராக் சின்னவிடா? அல்லது டிக் டிக் டிக்கா? என்று தெரியவில்லை...அந்த இசைக்கு ஒரு புது அர்த்தத்தை இந்த படம் கொடுத்து இருக்கின்றது...படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்....
படத்தின் எடிட்டிங்...கோவா பாடலில் வரும் எபெக்டுகள் பத்து வருடம் முன்பு கல்யாண ஸ்பாட் மிக்சிங் கவரெஜில் யூஸ் செய்தது போல் அடிக்கடி போடுவது அலுப்பை தட்டுகின்றது...
ஒளிப்பதிவாளர்... சக்திசரவணனி்ன் உழைப்பு இந்த படத்தில் அதிகம்... முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால்.... காதலின் துக்கத்தில், ஜெய் கடலில் உள்ள மர பாலத்தில் ஓடி வரும் அந்த காட்சி பில்டர் போட்டு எடுத்து இருந்தாலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய காட்சி அது... அதே போல் கோவா பாடலுக்கு வெள்ளைகாரிகள் மேல் ஊர்ந்து செல்லும் கேமராவும் ஆங்கிளும் அற்புதம்....
சின்ன மருவை கண்ணத்தில் ஓட்டியே டபுள் ஆக்ட் காட்டிய தமிழ் சினிமாவை நக்கல் விட...ஒரு கேரக்டருக்கு பெரிய மேக்கப் எல்லாம் போடாமல் முக்கிய காட்சிகளில் எல்லாம் அந்த கேரக்டரை உலவ விட்டு நக்கல் அடித்து இருப்பது...வெங்கட் பஞ்ச்..
இந்த கோவா படமும் தமி்ழ் படத்தை போல பல இடங்களில் தமிழ் சினிமாவை நக்கல் விட்டு இருக்கின்றார்கள்.. இன்னும் அதிகம் செய்தால் படத்துக்கு வேறு கலர் வந்து விடும் என்பதால் அடக்கி வாசித்து இருப்பது படம் முழுக்க தெரிகின்றது....
படத்தில் ஏழேழு தலைமுறைக்கு பாடல் தளம் போட வைக்கின்றன... மத்தது எல்லாம் இனிமேல் கேட்க கேட்க பி்டிக்குமோ என்னவோ?
படத்தில் பிரபலங்கள், சிம்பு, நயன்தாரா,பிரசன்னா என்று திடிர் அதிர்ச்சி கொடுத்தாலும் அவர்களை சேர்த்த காட்சிகள் ரசிக்கதக்க இடங்கள்... வெங்கட் பிரபுவின் நட்புக்கான மரியாதையை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன...
பல இடங்களில் தொய்வு இருந்தாலும்.. அடிக்கடி தென்படும் வெடிச்சிரிப்பால் படம் நகர்கின்றது...
சென்னை28ல் பார்த்த பல முகங்கள் சற்றே சதை பிடித்த கன்னத்துடன் இந்த படத்திலும் பார்க்க முடிகின்றது....
ரஜினிமகள் எடுத்து இருக்கும் ஜாலிபடம் இது....
ரோட்டிரிப் டைப் தமிழ் படத்தை பார்த்தது போல் இருந்தது....
தியேட்டர் டிஸ்க்கி....
எல்லா தியேட்டரிலும் டிக்கெட் இல்லை என்பதால் போரூர் கோபாலகிருஷ்ணன் தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன்...
தியேட்டரில் கியூப் சிஸ்டமும் டிடிஎஸ் சவுண்டும் செய்து சற்றே புதுப்பித்து இருக்கின்றார்கள்...
காலைகாட்சிக்கு இந்த தியேட்டரில் கோவா படமா என்பதை நம்பாத ரசிகர் காலை காட்சிக்கு தியேட்டரில்100 பேருக்கு மேல் இல்லை.... அதனால் லேட்டக படத்தை போட்டு மதிய காட்சியை 3 மணிக்கு போட்டு.. அதுவரை டிக்கெட் கொடுக்காமல் மணி ஆட்டிக்கொண்டு இருந்து விட்டு படம் விட்டு 5 நிமிடம் கழித்து டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருக்கும் போதே படத்தை போட்டுவிட்டார்கள்... குறைபிரசவ தியேட்டர் நிர்வாகிகள்...
அதே போல் படம் முடியும் போது டைட்டில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே... அதாவது ஜாக்கிசான் படம் போல் படத்தின் கமெடி காட்சிகள் போடும் போதே ஆப் செய்து விட்டார்கள்...
ஒரு படத்தை எப்படி ஆரப்பிக்க வேண்டும் எப்படி முடிக்க வேண்டும் என்று சத்யம்,தேவி தியேட்டரில் டிக்கெட் வாங்கி... பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்....
இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருந்தால்... நிச்சயம் இது போலானா தியேட்டரில் படம் பார்க்க ரசிகர்கள் யோசிப்பார்கள்...
அதே போல் டிடிஎஸ் சவுண்டில் சென்டர் ஸ்பீக்கரில் இரந்து வரும் ஒலி அளவு குறைந்தும் சைடு ஸ்பிக்கர் லெப்ட் ரைட்டில் காது கிழியும் சத்தம் வருவது படத்தின் பல வசனங்களை புரிய விடவில்லை
இந்த எழவுக்குதான் காசு போனாலும் மயிறா போச்சின்னு சத்தியத்துக்கு போலாமுன்னு நினைச்சா டிக்கெட் இல்லை...டிக்கெட் புக் பண்ணாம முத நாளே பார்ககனும்னு நினைச்சா? இந்த கொடுமையெல்லாம் தாங்கிதான் ஆகனும்....
ஒரே ஆறுதல் டிக்கெட் 40ரூபாய்.... ஆனால் ஒரு பெண்னை கூட அந்த காட்சியில் காணவில்லை...
படத்தின் முடிவின் போது கரண்ட கட்டாகி போக,விசில் அடித்து தியேட்டரின் ஆப்பரேட்டரின் அம்மாவின் கற்பை பலர் சந்தேகபட்டு கத்தினர்...
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்....
Directed by Venkat Prabhu
Produced by Soundarya Rajinikanth
Written by Venkat Prabhu
Starring Jai
Vaibhav Reddy
Premji Amaran
Aravind Akash
Sneha
Piaa Bajpai
Melanie Marie
Sampath Raj
Music by Yuvan Shankar Raja
Cinematography Sakthi Saravanan
Editing by K. L. Praveen,
N. B. Srikanth
Studio Ocher Studios
Distributed by Warner Bros. Pictures
DreamWorld Spotlight Motion Pictures
Release date(s) 29 January 2010
Country India
Language Tamil
Budget Rs. 10 crores
அன்புடன்
ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
டைம்பாஸ் படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
நீங்க சினேகா ரசிகரா :)
ReplyDelete//அந்த வெள்ளை தோலுக்கும் அந்த சிவப்புகலருக்கும்...ஆசிர்வாத் ஆட்டாவுக்கு(மைதா) டிரஸ் போட்டது போல் இருக்கின்றது...//
ReplyDeleteநல்ல வர்ணனை... :))
Yes. Truly ஒரு "பின்"நவினத்துவ படம :-)
ReplyDeleteநல்ல பதிவுங்க. பட விமர்சனத்தை விட படம் பார்த்த விமர்சனம் ஏ ஓன்..ங்கோ.
ReplyDeleteவித்தியாசமான விமர்சனம்..:))
ReplyDeleteஉங்க கதை தனி பதிவா போடுங்க ஜாக்கி..:))
நல்லது
ReplyDeleteஎன்னுடைய கோவா விமர்சனத்தை இங்கே பார்வையிடவும் http://yathum-oore.blogspot.com/2010/01/blog-post.html
ReplyDeleteபோதும்டா சாமிகளா..?
ReplyDeleteரொம்ப உருகாதீங்க..
ஒரு "ஏ" படத்தைப் பார்த்துட்டு இத்தனை அலம்பலா..?
அலையாதீங்கய்யா..!
//ஒரு "ஏ" படத்தைப் பார்த்துட்டு இத்தனை அலம்பலா..?
ReplyDeleteஅலையாதீங்கய்யா..!
//
உண்மை தமிழன் தலைவரே நீங்க காதல் கதை மற்றும்
மாதவி படம் பார்த்தது மறந்து போச்சா??
அப்புறம் தபு நடிச்ச ராஜலீலை படம் எப்படி இருக்கு??
மிகச்சிறப்பான விமர்சன முறை படத்தை பற்றிய தகவல்களுடன்
ReplyDeleteநன்றி
//சின்னவிடா? அல்லது டிக் டிக் டிக்கா//
ReplyDeletechinna veedu thala athu.... super vimarsanam...
நகுர்டதனா, திறனானனா... என்பது போன்ற மிட்நைட் மசலா மியூசிக் வரும்.. அந்த மியூசிக் டிராக் சின்னவிடா? அல்லது டிக் டிக் டிக்கா? என்று தெரியவில்லை...அந்த இசைக்கு ஒரு புது அர்த்தத்தை இந்த படம் கொடுத்து இருக்கின்றது...படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்....
ReplyDeleteidhu tikk tikk tikk padhula varum
nan guda romba nazha entha padhaulaiyim use panna matraglannu feel panni irukkaen venkat praphu likes fantacy and passion.
Jawahar
///ஜெட்லி said...
ReplyDelete//ஒரு "ஏ" படத்தைப் பார்த்துட்டு இத்தனை அலம்பலா..?
அலையாதீங்கய்யா..!//
உண்மை தமிழன் தலைவரே நீங்க காதல் கதை மற்றும் மாதவி படம் பார்த்தது மறந்து போச்சா??///
ஆமாம். எழுதினேன்.. என்ன எழுதினேன்னு போய் படிச்சுட்டு வாங்க ராசா..!
இவரை மாதிரியொண்ணும் ஆஹா, ஒஹோன்னுல்லாம் ரீல் விடலை..!
அப்புறம்.. மாதவி படம் பிட்டு படம் இல்லை.. அப்படியொரு போஸ் மட்டும் கொடுக்க வைச்சு யூஸ் பண்ணியிருக்காங்க..
///அப்புறம் தபு நடிச்ச ராஜலீலை படம் எப்படி இருக்கு??///
இதை எப்பவோ பார்த்தாச்சே.. வேஸ்ட்..!
நீங்க சினேகா ரசிகரா :)//
ReplyDeleteவெற்றி வம்புல மாட்டிவிடாதிங்க.. நைட்டு சோறு கிடைக்கனும்...
//அந்த வெள்ளை தோலுக்கும் அந்த சிவப்புகலருக்கும்...ஆசிர்வாத் ஆட்டாவுக்கு(மைதா) டிரஸ் போட்டது போல் இருக்கின்றது...//
ReplyDeleteநல்ல வர்ணனை... :))//
நன்றி சைவ கொத்துபாரோட்டா..
Yes. Truly ஒரு "பின்"நவினத்துவ படம :-)//
ReplyDeleteஉண்மைதான் ரவி...
நல்ல பதிவுங்க. பட விமர்சனத்தை விட படம் பார்த்த விமர்சனம் ஏ ஓன்..ங்கோ//
ReplyDeleteநன்றி தராபுரத்தான்...உங்கள் முதல் வருகைக்கு...
நல்லது//
ReplyDeleteநன்றி இராஜபிரியன்...
என்னுடைய கோவா விமர்சனத்தை இங்கே பார்வையிடவும் http://yathum-oore.blogspot.com/2010/01/blog-post.html//
ReplyDeleteஉங்கள் விமர்சனத்தை படித்தேன்....இந்திய சென்சார் போ்டு இந்த படத்துக்கு ஏ சன்றிதழ் வழங்கி் விட்ட பிறகு... எப்படி இப்படி ஒரு படம் எடுத்தார் என்றால்?... அது என்ன மில்க் படம் போல் முழுக்க ஹோமோ பிரச்சனையை சொல்லவில்லையே..
போதும்டா சாமிகளா..?
ReplyDeleteரொம்ப உருகாதீங்க..
ஒரு "ஏ" படத்தைப் பார்த்துட்டு இத்தனை அலம்பலா..?
அலையாதீங்கய்யா//
ஒழுக்கத்தின் விடிவெள்ளி உண்மை தமிழனுக்கு... சென்சார் போர்டு ஏ படம் ன்னு சொல்லிடிச்சு.. நீ வேற எதுக்கு ஏ படம்னு கத்திக்கினு இருக்குற...
மாதவி படத்தை எந்த அடிப்படையில பார்க்க போனிங்க...
மாதவி படத்தை பார்த்துட்டு நல்லாயில்லைன்னு நீங்க சொல்லிட்டா..நீங்க அலையிலன்னு ஆயிடுமா???
18 வயசுக்கு மேல அந்த படத்தை பார்க்கலாம்.. நான் பார்த்துட்டேன்...நீங்க எதுக்கு போனிங்க...
அதான் கொட்டை எழுத்துல ஏன்னு சர்டிபிகேட் கொடுத்து இருக்கானே...
//ஒரு "ஏ" படத்தைப் பார்த்துட்டு இத்தனை அலம்பலா..?
ReplyDeleteஅலையாதீங்கய்யா..!
//
உண்மை தமிழன் தலைவரே நீங்க காதல் கதை மற்றும்
மாதவி படம் பார்த்தது மறந்து போச்சா??
அப்புறம் தபு நடிச்ச ராஜலீலை படம் எப்படி இருக்கு??//
ஜெட்லி அவரு எல்லா படத்தையும் பார்த்துடுவாரு அதுக்கு அப்புறம் அது நல்லா இல்லைன்னு சொல்லி ஞானப்பழமா மாறிடுவாறு....
அதே போல இந்த படத்தை நான் டைம்பாஸ் படம்னுதான் லேபிள்ள குறிப்பிட்டு இருக்கேன்...
நான் என்னவோ இந்த படத்தை தி பெஸ்ட்னு எழுதுனதா சொல்லி இருக்கார்...
நன்றி ஜெட்லி..
மிகச்சிறப்பான விமர்சன முறை படத்தை பற்றிய தகவல்களுடன்
ReplyDeleteநன்றி==//
நன்றி சபரிநாத அர்த்தநாரி உஙக்ள் பாராட்டுக்கும் பின்னுட்டத்துக்கும்... மிக்க நன்றி...
//சின்னவிடா? அல்லது டிக் டிக் டிக்கா//
ReplyDeletechinna veedu thala athu.... super vimarsanam..//
நன்றி தன்ஸ் விளக்கியதற்க்கு...
idhu tikk tikk tikk padhula varum
ReplyDeletenan guda romba nazha entha padhaulaiyim use panna matraglannu feel panni irukkaen venkat praphu likes fantacy and passion.
Jawahar//
உண்மை அது அவரவர் ஸ்டைல்...
///ஜெட்லி said...
ReplyDelete//ஒரு "ஏ" படத்தைப் பார்த்துட்டு இத்தனை அலம்பலா..?
அலையாதீங்கய்யா..!//
உண்மை தமிழன் தலைவரே நீங்க காதல் கதை மற்றும் மாதவி படம் பார்த்தது மறந்து போச்சா??///
ஆமாம். எழுதினேன்.. என்ன எழுதினேன்னு போய் படிச்சுட்டு வாங்க ராசா..!
இவரை மாதிரியொண்ணும் ஆஹா, ஒஹோன்னுல்லாம் ரீல் விடலை..!
அப்புறம்.. மாதவி படம் பிட்டு படம் இல்லை.. அப்படியொரு போஸ் மட்டும் கொடுக்க வைச்சு யூஸ் பண்ணியிருக்காங்க..
///அப்புறம் தபு நடிச்ச ராஜலீலை படம் எப்படி இருக்கு??///
இதை எப்பவோ பார்த்தாச்சே.. வேஸ்ட்..//
மிஸ்டர் உண்மை தமிழன் எனக்கு அந்த படத்தில் இடம் பெற்ற சில விஷயங்களை நான் பகிர்ந்து கொண்டேன்...
நான் எதுக்கு ரீல் விட போறேன்....ஆபீஸ்ல வேலை இல்லையா???
விமர்சனம் ரொம்ப நல்லாருக்கு. நீங்க சொல்றத பாத்தா ஒரு தடவ பாக்கலாம் போலிருக்கு.
ReplyDeleteபாத்துடுவோம்.
ஜாக்கி, உங்க விமர்சனத்தை பார்த்தது ஒரு முறை படத்தை பார்க்கலாம் போல் இருக்கிறது.
ReplyDeleteபடத்தின் முடிவின் போது கரண்ட கட்டாகி போக,விசில் அடித்து தியேட்டரின் ஆப்பரேட்டரின் அம்மாவின் கற்பை பலர் சந்தேகபட்டு கத்தினர்...
ReplyDeletefunny
@உண்மை தமிழன்
ReplyDelete//ஆமாம். எழுதினேன்.. என்ன எழுதினேன்னு போய் படிச்சுட்டு வாங்க ராசா..!
இவரை மாதிரியொண்ணும் ஆஹா, ஒஹோன்னுல்லாம் ரீல் விடலை..!
//
தலைவரே.....காதல் கதை சூப்பர் அ(பி)ட்டு படம்.....
///அப்புறம் தபு நடிச்ச ராஜலீலை படம் எப்படி இருக்கு??///
இதை எப்பவோ பார்த்தாச்சே.. வேஸ்ட்..//
ஏன் அதை பத்தி ஒரு பதிவு போடல??
அதை பற்றி பதிவு போட்டிருந்தால் எங்களை
மாதிரி சிறுவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்....
:))
//மாதவி படத்தை பார்த்துட்டு நல்லாயில்லைன்னு நீங்க சொல்லிட்டா..நீங்க அலையிலன்னு ஆயிடுமா???
ReplyDelete//
valid point....
சரி சரி நாம மூணு பேரும் இதோட இந்த மேட்டரை ப்ரீயா விடுவோம்..........
neega kudukura 40 rubai ku ungalukku ponnuga vera varvangala?
ReplyDeleteneega kudukura 40 rubai ku ungalukku ponnuga vera varvangala?
ReplyDeleteneega kudukura 40 rubai ku ungalukku ponnuga vera varvangala?
ReplyDeleteneega kudukura 40 rubai ku ungalukku ponnuga vera varvangala?
ReplyDeleteneega kudukura 40 rubai ku ungalukku ponnuga vera varvangala?
ReplyDelete//ஒரு படத்தை எப்படி ஆரப்பிக்க வேண்டும் எப்படி முடிக்க வேண்டும் என்று சத்யம்,தேவி தியேட்டரில் டிக்கெட் வாங்கி... பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்...//
ReplyDeleteஇல்லை பாஸ் னீங்க சொல்றது தப்பு நான் சத்யம் தியேட்டர்ல தான் பார்த்தேன்,அங்கேயும் ஒரு கால் மணி நேரம் டிடிஎஸ் மிக்ஸ்சிங்ல பிராபளம்னு ஒரு அரைமணி நேரம் ரெண்டாவது இன்டர்வெல் விட்டாங்க.அதே சத்யம் தியேட்டர்ல சிம்புவோட படம் பாக்க போனப்ப மூணு இண்டர்வெல் விட்டாங்க.தொழில்நுட்பம் முன்னாடி சத்யமாவது,தேவியாவது.
//ஹோமே செக்ஸ் பற்றி மிகவும் தைரியமாக எடுத்து இருக்கின்றார்கள்.//
ReplyDeleteவேட்டையாடு விளையாடு படத்திலேயே தைரியமா எடுத்திட்டாங்களே.. அப்புறமா வடிவேலு கூட ஹோமே செக்ஸ் பத்தி காமெடில காட்டியிருப்பாரு.. (அவனா நீயி...!)..
/படத்தின் முடிவின் போது கரண்ட கட்டாகி போக,விசில் அடித்து தியேட்டரின் ஆப்பரேட்டரின் அம்மாவின் கற்பை பலர் சந்தேகபட்டு கத்தினர்.../
ReplyDeleteTHIS IS TOOO MUCH
that music from the movie ""chinna veedu ..
ReplyDeleteNalla vimarsanam.. ungal sevai thodarnthu thevai. :)
ReplyDelete