(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் தியேட்டர்...
நாம் கலீஜ் என்று முகம் சுளிக்கும் இடத்தில்தான் பல பேர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்... அவர்களும் மனிதர்கள்தான்... அவர்களும் நம்மை போலவே இந்த பூமியில் வாழ வந்தவர்கள்...பிறப்பின் பின் புலத்தால் அந்த இடத்தில் வாழ்கின்றார்கள்...இந்த உலகில் எதுவுமே கலீஜ் இல்லை... முகம் சுளித்தால் எங்கும் வாழ முடியாது....உயிர் வாழ தகுதியுடையவனாக தன்னை மாற்றிக்கொள்ள எந்த இடத்திலும் எது செய்தாவது வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய கதை இது....
எங்கள் ஊர் கடலூரில் முத்தையா என்று ஒரு தியேட்டர்... அந்த தியேட்டர் டிவி வருகைக்கு முன் சக்கை போடு போட்டது... அந்த தியேட்டரில் பல படங்கள் குடும்பத்துடன் பார்த்து இருக்கின்றோம்...ஒரு கட்டத்தில் அந்த தியேட்டர் தன்னை புதுப்பித்துக்கொள்ள தவறிய காரணத்தால், அது பொலிவிழந்து போனது... அப்புறம் அந்த தியேட்டரில் பலான படங்கள் ஓடத்துவங்கியது....அதே போல் சென்னையில் பாடி பக்கத்தில் சாந்தி என்று ஒரு தியேட்டர் இருந்தது... இப்போது இருக்கின்றதா? என்று தெரியவில்லை... இருப்பினும் வடபழனியில் இருந்து பாடி பிரிட்டானியா பஸ் ஸ்டாப்பில் இறங்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்தால் அந்த தியேட்டர் வரும்....
எழே காலுக்கு படம் போட்டு இன்டர்வெல்லையும் சேர்த்து எட்டேகாலுக்கு படம் விடும் ஒரே தியேட்டர் அந்த தியேட்டர்தான்... படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் தமிழ், மற்றும் மலையாள படங்களின் பிட் ஓடும்... இன்டர்வெல் பத்து நிமிடம்... அதன் பிறகு ஆங்கில படங்களின் பிட் காட்சிகள் ஓடும்....மொழிக்கு ஓர வஞ்சனை செய்யாத ஒரே தியேட்டர் அதுதான்....
அதே போல் பரங்கிமலை ஜோதி.... ஆனால் தற்போது இந்த தியேட்டர் தன்னை புதுப்பித்துக்கொண்டு இப்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெற்றி நடை போட வைக்க போராடி வருகின்றது...
இது போன்ற தியேட்டர்களில் வரும் பார்வையாளர்களில் ஒரு 20 சதவீதம் பேர் கஞ்சா புகைத்துக்கொண்டு இருப்பார்கள்...ஹோமோசெக்சும் இந்த இடங்களில் சங்கதே குறிகளாக பறிமாற்றம் செய்து கொள்ளபடும்... பட்டைசரக்கு அடித்து விட்டு அதாவது சராயம் அடித்து விட்டு வரும் குடிமகன்கள் ஏராளம்... இது போல் பலான படம் ஓடும் தியேட்டர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் அதில் ஒரு விஷயம் நிச்சயம் புலப்படும்.. பார்ட்னர்கள் இருப்பதால் யார் மெயின்டெயின் செய்வது என்ற போட்டியிலேயே... பாதி தியேட்டர் கல்யாண மண்டபங்களாகி போய் விட்டது... அப்படி ஒரு பலான படம் ஓடும் பிலிப்பைன்சில் உள்ள ஒரு தியேட்டரின் கதையைதான் இதில் பார்க்க போகின்றீர்கள்....
(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ் படத்தின் கதை இதுதான்...
அந்த பலான படம் ஓடும் தியேட்டர் பெயர் பேமிலி.......Nanay Flor தான் அந்த தியேட்டரின் ஓனர் பெண்மணி...அவருக்கும் அவர் கணவருக்கும் சொத்து பிரச்சனையில் அந்த தியேட்டர் இருக்கின்றது.... இதனால் அந்த தியேட்டர் புதுப்பிக்காமல் இருப்பதை வைத்து அந்த தியேட்டரை ஓட்டுகின்றனர்... பலான படங்கள்தான் அந்த தியேட்டரின் வருமானத்துக்கு ஒரே வழி...Nanay Flor ன் பெண்Nayda மற்றும் அவள் குழந்தை அவள் கணவன் எல்லோரும் அந்த தியேட்டரிலேயே ஒரு பகுதியில் தங்கி இருக்கின்றனர்....டிக்கெட் கொடுக்க வேண்டும் என்றாள் அவள் மகள் கொடுப்பாள்... கேன்டின அவளது மருமகன் பார்த்து கொள்ள... இப்படி அந்த தியேட்டரையும் ரன் செய்து கொண்டு, குடும்பத்தோடு அந்த தியேட்டரில் தங்கி.... அந்த தியேட்டரை தன் கணவனிடம் இருந்து பெற கோர்ட் படிகட்டுகளில் Nanay Florபோராடுகின்றாள்....அந்த தியேட்டரில் அனைத்து சட்ட விரோதமான காரியங்களும் நடக்கின்றன...இரண்டு டிக்கெட் வாங்கி கொண்டு விலைமாதர்களுடன் தியேட்டரின் உள்ளே புணர்தலில் இருந்து,ஹோமோசெக்ஸ்வரை கொடிகட்டி பறக்கின்றது... இது எல்லாம் தியேட்டர் பெண்மணிக்கு தெரிந்தாலும் வருமாணம் வேண்டும் என்பதால் எல்லா வற்றையும் செய்கின்றார்கள்...
Alan அதே தியேட்டரில் வரும் பலான படங்களுக்கு தினசரி 4 காட்சிகள், இப்படம் இன்றே கடைசி போன்ற, சின்ன சின்ன வரை பணியில் இருந்து பெரிய பெரிய கவர்ச்சி படம் வரைவது எல்லாம் இவன் வேலைதான்.... ஆலன் அவன் கேர்ள்பிரண்டை தியேட்டர்வளாகத்தில் ஒரு அறையில் வைத்து காரியம் முடிக்க அவள் கற்பமாகின்றாள்.....Nanay Flor தன் கணவனுக்கு எதிராக சொத்துக்காக போராடினாலும் பெற்ற மகனே அப்பா பக்கம் சாட்சி சொல்ல கேசில் தோற்று போகின்றாள்... முடிவு என்ன என்பதையும் அந்த தியேட்டரை நம்பி உள்ள குடும்பமும் அதன் உறுப்பினர்களும் என்ன ஆனார்கள்? வழக்கம் போல் வெண்திரையில்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
இது கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கான படம்.....
இந்த படம் பிலிப்பைன்ஸ் நாட்டின் சினிமா பாரடைசோ என்றால் மிகையாகாது...
இந்த படத்தை அப்பட்டமாக ரியாலிட்டியாக எடுத்து இருக்கும் இயக்குனர்Brillante Mendoza பாராட்டுக்குறியவர்...தியேட்டர் பாத்ரூமில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் மஞ்சள் கலரில் கனுக்கால் அளவு நிற்க்க அதனை கதாநாயகன் சுத்தபடுத்தும் அந்த காட்சி மேட்டுகுடி மக்கள் பார்த்தால் கண்டிப்பாக முகம் சுளிப்பார்கள்... அல்லது வாந்தி எடுத்து வைக்கும் காட்சி அது...
அந்த தியேட்டரில் ஆடு ஓடும்... திருடன் ஓடுவான், அவனை பிடிப்பார்கள்... விலைமாதர்கள் வரிசையாக நின்று ஆள் பிடிப்பார்கள்... இந்த சூழலில் ஒரு சிறுவன் பள்ளிக்கு போய் விட்டு வருவான்...
ஆலனும் அவன் காதலியும் புணரும் அந்த காட்சியும்... ஆலனின் பட்டைக்சில் இருக்கும் பழுத்த கட்டியை ஒரு பாட்டிலை எடுத்து அதன் வாய் புறத்தை அந்த கட்டியின் மேல் வைத்து அந்த பாட்டிலை ஒரு அடி் அடிக்க அந்த கட்டி பிய்த்துக்கொண்டு... ரத்தமும் சீழுமாக பாட்டிலில் பீய்ச்சி அடிக்கும் அந்த காட்சி உங்கள் மனதில் விட்டு அகல நெடுநாள் பிடிக்கும்...
இந்த படம் பார்க்கும் போது இப்படி எல்லாம் தியேட்டர் இருக்குமா? என்று நீங்கள் கேள்வி கேட்டால் அது உங்கள் அறியாமை என்றே சொல்ல வேண்டும்....
படம் முடிந்து பல மணிநேரம் அந்த தியேட்டர் பற்றிய நினைவு நம்முடனே இருக்கும்...
அந்த தியேட்டரின் ஒரு பகுதியில் ஹேமோசெக்ஸ் கொடி கட்டி பறக்கின்றது... ஹோமேசெக்சின் சக்கேத குறியீடு ஆங்கிலத்தில் சர்விஸ் என்ற பெயர் அதையே இந்த படத்துக்கு தலைப்பாகவும் வைத்து விட்டார்கள்...
இந்த படம் சென்னை 6வது உலக திரைப்படவிழாவில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிடபட்டது...
இந்த படம் கேன்ஸ் திரைபடவிழாவில் நாமினேட்டேட் செய்யபட்டது...
பாங்காக் உலக திரைபடவிழாவில் விருத பெற்றது...மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுதந்தது....
ஆலன் காதலியுடன் படுத்துக்கொண்டு உடைந்த கட்டியை பார்க்கும் காட்சிக்கு இங்கு கிளிக்கவும் 18++
படத்தின் டிரைலர்....
படக்குழுவினர் விபரம்...
Directed by Brillante "Dante" Mendoza
Produced by Ferdie Lapuz
Written by Armando Lao
Starring Gina Pareño
Coco Martin
Jaclyn Jose
Music by Gian Gianan
Cinematography Odyssey Flores
Editing by Claire Villa-real
Release date(s) 2008
Running time 1 hour, 33 minutes, 29 seconds minutes
Country Flag of the PhilippinesPhilippines
Language English
Tagalog
Filipino
அன்புடன்
ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
என்ன.. ஜாக்கி..
ReplyDeleteமுழுசா படம் பார்க்க முடியுமா? ரத்தம், சீழ்-ன்னு... இங்க பெரிய ‘Saw Series' ஓடும் போல இருக்கே! :)
Included in Netflix queue..they dont have it now its seems.. I have to thank you for introducing wonderful movies.. and I like your approach of relating any movie to our life first and then move into the story ..and notably not cracking the plot..
ReplyDeleteSince you have lot of knowledge on movies..a question தமிழில் உலக தரம் வாய்ந்த படம் என்ரு எதை நினைக்கிரீர்கல் ?
இந்த படத்தை,மிக நன்றாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் அயல் மொழி படங்களை பற்றிய உங்கள் விமர்சன அறிமுகம், உடனடியாக அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற் ஆவல தூண்டுவது உண்மை. சேகரிக்கப்பட வேண்டிய DVDs பட்டியலில் உள்ளது, எப்போது கைக்கு கிட்டுமோ!
ReplyDeleteஅண்ணே ரொம்ப அருமையா எழுதினீங்க
ReplyDeleteநாங்க இங்க நிறைய பிலிப்பினோக்கள் கூட வேலை பாக்குறோம்,இந்த படம் பற்றி சொல்லி கேட்டுபாக்குறேன்.
ஓட்டுக்கள் போட்டாச்சி
http://stagevu.com/video/hzzinpqggekt
ReplyDeleteசாதரணமா தவற விடும் சில நிகழ்வுகளின் ஆழமும், வலியும் நல்லா படம் பிடிச்சிடுறாங்க,
ReplyDeleteவழக்கம்போல உங்க நடையில் அசத்தல் விமர்சனம்.. நன்றி ஜாக்கி.
[[[இந்த படம் பிலிப்பைன்ஸ் நாட்டின் சினிமா பாரடைசோ என்றால் மிகையாகாது.]]]
ReplyDeleteஇதெல்லாம் ரொம்ப ஓவர் மிஸ்டர் ஜாக்கி..!
இந்தப் படம் கிளப்பியது வெறும் காம உணர்ச்சிகளைத்தான்..! வேறொன்றுமில்லை..!
ஆனால் சினிமா பாரடைஸோ..!!!???
யோசிம்மா..! யோசி..!
நல்ல பகிர்வு ................
ReplyDeleteநல்ல படம்
ReplyDeleteஉண்மையில் எனக்கு இது புதிய அறிமுகங்கனா... தாங்ஸ்ங்கண்ணா
ReplyDeleteநல்ல படம். வழக்கம்போல அருமையான ஆழமான விமர்சனம்.
ReplyDeleteமுழுசா படம் பார்க்க முடியுமா? ரத்தம், சீழ்-ன்னு... இங்க பெரிய ‘Saw Series' ஓடும் போல இருக்கே! :)--/
ReplyDeleteஅப்படி இல்லை பாலா படம் ரொம்ப இயல்பா எடுத்து இருப்பாங்க.. நிச்சயம் இது பார்க்கவேண்டிய படம்...
Included in Netflix queue..they dont have it now its seems.. I have to thank you for introducing wonderful movies.. and I like your approach of relating any movie to our life first and then move into the story ..and notably not cracking the plot..
ReplyDeleteSince you have lot of knowledge on movies..a question தமிழில் உலக தரம் வாய்ந்த படம் என்ரு எதை நினைக்கிரீர்கல் ?//
சம காலத்தில் வந்த மொழி மற்றும் பருத்தி வீரனை சொல்லலாம்.. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கர்னா..
இந்த படத்தை,மிக நன்றாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் அயல் மொழி படங்களை பற்றிய உங்கள் விமர்சன அறிமுகம், உடனடியாக அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற் ஆவல தூண்டுவது உண்மை. சேகரிக்கப்பட வேண்டிய DVDs பட்டியலில் உள்ளது, எப்போது கைக்கு கிட்டுமோ!//
ReplyDeleteநன்றி ராஜ் எங்க ரொம்ப நாளா ஆளையே கானோம்..???
அண்ணே ரொம்ப அருமையா எழுதினீங்க
ReplyDeleteநாங்க இங்க நிறைய பிலிப்பினோக்கள் கூட வேலை பாக்குறோம்,இந்த படம் பற்றி சொல்லி கேட்டுபாக்குறேன்.
ஓட்டுக்கள் போட்டாச்சி//
கார்த்தி அந்த படத்தை பாரு நல்லா இருக்கும்...
நன்றி கார்த்தி
சாதரணமா தவற விடும் சில நிகழ்வுகளின் ஆழமும், வலியும் நல்லா படம் பிடிச்சிடுறாங்க,
ReplyDeleteவழக்கம்போல உங்க நடையில் அசத்தல் விமர்சனம்.. நன்றி ஜாக்கி.//
நன்றி பலா.. தொடர் பின்னுட்டத்துக்கு
இந்தப் படம் கிளப்பியது வெறும் காம உணர்ச்சிகளைத்தான்..! வேறொன்றுமில்லை..!
ReplyDeleteஆனால் சினிமா பாரடைஸோ..!!!???
யோசிம்மா..! யோசி..!//
அப்படி ஒரு வட்டத்துக்குள் இந்த படத்தை எடுத்துக்கொண்டு வந்து விட முடியாது மிஸ்டர் உண்மை தமிழன்... காமும் பகுதியே அன்றி முழு படத்தையும் அப்படி புறக்கனிக்க முடியாது.. அதே படத்தை அப்படி எடுத்தால் அதற்க்கு பெயர் காப்பி அல்லவா???
நன்றி
ReplyDeleteராஜபிரியன்...
நன்றி டாக்டர் அசோக்...
நன்றி கைலாஷ் மிக்க நன்றி..
[[[அப்படி ஒரு வட்டத்துக்குள் இந்த படத்தை எடுத்துக்கொண்டு வந்துவிட முடியாது மிஸ்டர் உண்மை தமிழன்... காமும் பகுதியே அன்றி முழு படத்தையும் அப்படி புறக்கனிக்க முடியாது.. அதே படத்தை அப்படி எடுத்தால் அதற்க்கு பெயர் காப்பி அல்லவா???]]]
ReplyDeleteகாமம் பிரதானமாக இன்றி வேறென்ன இருக்கிறது அதில்..?
அதிலும் அந்த அம்மா கேரக்டரும் குளிப்பதை முழுக்கக் காட்டுகிறார்களே.. தேவையா..?
டிரிபிள் எக்ஸ் படத்தில் இது ஒரு வகை.. அவ்வளவுதான்..
சினிமா பாரடைஸோ படத்துடன் எந்தவிதத்திலும் ஒப்பிடவே முடியாது..
அந்த மாடிப்படிகளில் மேலேயும், கீழேயுமாக நடந்து கொண்டேயிருப்பதை வைத்து இது கலைப்படம்னு சொல்றீங்களோ மிஸ்டர் ஜாக்கிசேகர்..?
உங்களின் அனைத்து விமர்சனத்திலும் ஒரு நேட்டிவிட்டி தெரிகிறது. முத்தையா தியேட்டர், ஜகதாம்பிகா தியேட்டர், கூத்தப்பாக்கம். ஆனால் நீங்கள் கூத்தபாக்கத்தை ஒரு கிராமம் என்று கூறுவது தான் என்னால் ஒத்து கொள்ள முடியவில்லை. நானும் அந்த ஏரியா என்பதாலோ என்னவோ.
ReplyDeleteடிரிபிள் எக்ஸ் படத்தில் இது ஒரு வகை.. அவ்வளவுதான்..
ReplyDeleteசினிமா பாரடைஸோ படத்துடன் எந்தவிதத்திலும் ஒப்பிடவே முடியாது..
அந்த மாடிப்படிகளில் மேலேயும், கீழேயுமாக நடந்து கொண்டேயிருப்பதை வைத்து இது கலைப்படம்னு சொல்றீங்களோ மிஸ்டர் ஜாக்கிசேகர்..?--//
அப்படி இல்லை குளிப்பதை காட்டினால் அது கலைப்படமாக இருக்க கூடாதா?
அது கலைபடமாக தேர்ந்து எடுக்க பட்ட காரணம்மால்தான் அது கேன்சில் இந்த படம் அவார்டு வாங்கியது... அதே போல் சர்ச்சைகளையும் உருவாக்கியது..
உங்களின் அனைத்து விமர்சனத்திலும் ஒரு நேட்டிவிட்டி தெரிகிறது. முத்தையா தியேட்டர், ஜகதாம்பிகா தியேட்டர், கூத்தப்பாக்கம். ஆனால் நீங்கள் கூத்தபாக்கத்தை ஒரு கிராமம் என்று கூறுவது தான் என்னால் ஒத்து கொள்ள முடியவில்லை. நானும் அந்த ஏரியா என்பதாலோ என்னவோ.//
ReplyDeleteஇப்போதும் அது கிராமம்தான் நாம் மாறி இருக்கலாம் ஆனால் அரசு இன்னும் மாற்றவில்லை..
என் ஏரியாவில் இருந்து ஒரு பின்னுட்டம் சந்தோஷமாக இருக்கின்து.....