தமிழ்மண விருதுகள், இரண்டாம் பரிசு, சில சந்தோஷபகிர்வுகள்....

தமிழ்மணம் அறிவித்த இரண்டு பிரிவுகளுக்கு எனது இரண்டு படைப்புகளை இணைத்தேன்... இரண்டையுமே முதல் கட்டத்துக்கு கொண்டு வந்த வாசக நண்பர்கள் சக பதிவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்...

இந்த முதல் கட்ட வெற்றியையே என்னால் நம்ப முடியவில்லை....அந்த முதல் கட்ட வெற்றியை சாத்தியமாக்கிய அன்பு வாசக,பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றிகள்...

இப்போது திரை விமர்சன்ம் பகுதியில் மகாநதி கமலின் மாஸ்டர் பீஸ் என்ற எனது படைப்பை இரண்டாம் பரிசுக்கு உரியதாய் தேர்ந்து எடுக்க உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்...

இந்த சந்தோஷத்தோடு உங்களோடு ஒரு உண்மையையும் பகிர்ந்து கொள்ள இந்த தருணத்தில் ஆசைபடுகின்றேன்...

இந்த படத்தை பார்த்து விட்டு வரும் போது.... எனது 34 வயதில் நான் சினிமா துறைக்கு வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை...

சினிமா என்பது... எனது கனவுகளில் ஒன்றான விஷயம்.... அதை சாத்தியபடுத்திய எனது நெடுநாளைய நண்பர்...எழுத்தாளர் (சுபா) பாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

சூர்யா நடித்த அயன் படம் முடிந்த நேரம்.... ஏழுத்தாளர் சுபாவிடம் பேசிக்கொண்டு இருந்த போது அப்போது ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு பற்றி பேச்சு வந்த போது... அவரிடம் உதவியளாராக சேர எனது ஆசையை நான் வெளிப்படுத்த... அதை சாத்தியமாக்கினார்.. எழுத்தாளர் சுபா அவர்கள்...

அதன் பிறகு எம் எஸ் பிரபு அவர்களை சந்தித்து பேசிய போது,சினிமா பற்றி அதிகம் தெரியாத என்னை, யாதொரும் கேள்வியும் கேட்காமல் என்னை சுவிகரித்து கொண்டார்....இப்போது இயக்குனர் பார்த்திபன் எழுதி இயக்கும், வித்தகன் படத்தில் ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு அவர்களுடன் நான் பணி புரிந்துகொண்டுஇருக்கின்றேன்....


ஒளிப்பதிவாளர்பிசிஸ்ரீராமிடம் இருந்து வெளியே வந்தவுடன் எனது குரு எம் எஸ் பிரபு அவர்கள் ஒளிப்பதிவாளாராக பணி புரிந்த படம் கமலின் மகாநதி..... திரைப்படம்தான்...அதன் பிறகு பூவெல்லாம் கேட்டபார், ரமணா,பிரிவோம் சந்திப்போம், அம்முவாகியநான்,தவமாய்தவமிருந்து,கூடல்நகர், அயன் படம் வரை பல படங்களில் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார்....

எனது குருநாதரின் முதல்படமான மகாநதி படத்துக்கு, அவர் சிஷ்யன் நான் எழுதிய விமர்சன கட்டுரைக்கு, எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தமைக்கு எனது நன்றிகள்.. தேர்வு பெற வைத்த வாசக நண்பர்களுக்கும் பதிவுலக நண்பர்களுக்கும்....வெளிநாடு மற்றும், உள்ளுர் தொலைபேசி மூலமும், பின்னுட்டம் மூலமும்..... வாழ்த்து தெரிவித்த எனது நண்பர்களுக்கு எனது நன்றிகள்...

சற்றே யோசித்து பார்க்கின்றேன்... 1994ம் வருடம்.. இதே போல் 94ம் வருட பொங்கல் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு சென்னை ஆனந் தியேட்டரில் மகாநதி பார்த்து விட்டு கையில் காசு இல்லாமல் விழி முழுவதும் நீரை வைத்து கலங்கிய கண்களுடன்... இதே சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் நடந்து போனது எனக்கு நினைவுக்கு வருகின்றது... இன்று அந்த படத்தின் ஒளிப்பதிவாளருடன் வேலை பார்க்கின்றேன்...
வாழ்க்கை எப்படி எல்லாம் புரட்டி போடுகின்றது மனிதர்களை....

இந்த நிலைக்கும் இன்னும் மென்மேலும் நான் வளர உறுதுணையாய் இருக்கும் எல்லாம் வல்ல பரம் பொருளுக்கும் என் நன்றிகள்..

இன்றைக்கு எனக்கு நல்ல நினைவுகூறலுக்கு வழி வகுத்த தமிழ்மணகுழுவினருக்கும் என்னை தேர்ந்து எடுத்த வாசக அன்பர்களுக்கும் என் நன்றிகள்...

குறிப்பு....
தயவு செய்து நான் வேலை செய்யும் படங்கள் நிலை குறித்து ,எந்த கேள்வியும் தயவு செய்து என்னிடம் கேட்பதை தவிருங்கள், அதே போல் நான் எழுதும் எழுத்துக்கோ, நான் பணி பரியும் படத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை...
அது வேறு இது வேறு......

நன்றியுடன்

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

31 comments:

 1. வாழ்த்துக்கள் அண்ணே.....

  ReplyDelete
 2. தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பா.

  உங்களின் அடுத்த கட்ட முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. "தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
  தமிழ்மணம் ஓட்டுபட்டை இல்லியே ?

  ReplyDelete
 4. வாழ்த்துகள் .. நீங்கள் உங்கள் லட்சியத்தில் மிக பெரிய உயரத்தை அடைவீர்கள் ஜாக்கி

  ReplyDelete
 5. தமிழ் மணத்தில் வெற்றி பெற்றதிற்கு வாழ்த்துக்கள் ஜாக்கி

  ReplyDelete
 6. தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. வாழ்த்துகள் ஜாக்கி !

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் அண்ணாத்த.. சீக்கிரம் வெள்ளித்திரையில் உங்கள் பெயரை எதிர்பார்க்கிறேன்.. :)

  ReplyDelete
 9. வாழ்த்துகள் ஜாக்கி

  ReplyDelete
 10. வாழ்த்துகள் ஜாக்கி

  ReplyDelete
 11. வாங்கிய விருதிற்கும், வாங்கப் போகும் விருதுகளுக்கும் வாழ்த்துக்கள் ஜாக்கி.

  ReplyDelete
 12. அண்ணே ரொம்ப சந்தோசமா இருக்கு. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. மேன்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் ஜாக்கி. (ஓல்ட் இஸ் கோல்ட்:ஹா..ஹா..ஹா...)

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள்......

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்......

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்......

  ReplyDelete
 17. வாழ்த்துகள் தலைவரே ................ மேலும் பல நல்லவினைகள் உங்களை ஆளும் ............. இப்படி பல நல்லசெய்திகள் தந்து, எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதற்கு நன்றி ..........

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்.. நீங்கள் எழுதிய விஷயம் நெகிழ்ச்சியாக இருந்தது.

  ReplyDelete
 19. விருது பெற்றதற்கும் மேன்மேலும் விருதுகள் பெறவும், வாழ்க்கையில் மேலும் மேலும் உயரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 21. வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்...

  ReplyDelete
 22. எனது நன்றிகள்...

  ஜெட்லி....

  வந்தியதேவன்...

  கைலாஷ்

  நட்புடன் ஜமால்...

  ஜீவன் பென்னி...

  டிவி ராதாகிருஷ்ணன்...

  மீன் துளியான்....

  புதுவை சிவா..

  பின்னோக்கி...

  தனா...

  டிஆர் அசோக்... டீரிட் முதல் பரிசு வாங்கும் போது...

  நன்றி

  சங்கரராம்...

  சைவ கொத்து பரோட்டா...

  தூபாய் ராஜா...

  ரோமியோ...

  நன்றி..
  டாக்டர் ருத்ரன்...

  பாஸ்க்கி..

  மோகன் குமார்...

  இராஜபிரியன்..

  வரதராஜிலு

  முத்து லட்சுமி...

  ReplyDelete
 23. வாழ்த்துகள் ஜாக்கி சேகர்.விரைவில் உங்கள் பெயரை வெள்ளித்திரையில் காண ஆவலுடன் இருக்கிறோம்.

  ReplyDelete
 24. வாழ்த்துகள் அண்ணா

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner