தமிழகத்தில் 17 நிகர் நிலை பல்கலைகழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது... அப்ப இத்தனை நாட்கள் இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்.. என்பதுதான் என் கேள்வி??? அவர்கள் குறிப்பிட்ட பல கல்வி நிறுவணங்கள் பேர் போனவை போல தன்னை விளம்பர படுத்திக்கொண்டவை... அதில் பல லட்சங்களை கொட்டி படித்த மாணவர்கள் நிலை என்ன? இதெல்லாம் யோசிச்சா வாயில நல்லா வந்து தொலைக்குது....
ஜோதி பாசு இறந்து விட்டார்... நான் இந்தியாவில் கலைஞர்தான் அரசியலில் ரொம்ப சினியர் என்று எண்ணி இருந்தேன்....90 வயசுக்கு மேல் என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று...அதை விட அவரின் உடலை தானம் செய்தது... பாராட்டுக்குறிய ஒன்று....
மிக்சர்...
சென்னை செய்திதாளில் இரண்டு செய்திகளை வாசிக்க நேர்ந்தது... எல்லாம் கல்யாணம் ரெடி செய்து... கல்யாணத்தின் போது பிரச்சனை... ஒரு செய்தியில் திருமணத்துக்கு முதல் நாள் அந்த பெண் தன்னை கடத்தி விட்டார்கள் என்று நாடகம் போட்டு தனது காதலனுடன் வெளியூரில் இருப்பது இப்போது அம்பலமாகி உள்ளது... அதே போல் இரண்டாவது கதை முதலில் ஒரு காதலனை காதலித்து அவ திருமணத்துக்கு எல்லா ஏற்பாடும் செய்து விட்ட நிலையில் இரண்டாவது காதலனை கைபிடிக்க அவள் சில தகிடு திட்டங்கள் போட்டது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது... கல்யாணம் மண்டபம் வரைக்கும் இருக்கும் பயம் அதுக்கப்புறம் எப்படி தைரியம் வருதுன்னு தெரியலை... இந்த மாதிரி கல்யாண மண்டபம் வரை வந்து பல்டி அடிக்கும் பையனையும், பொண்ணுங்களை எல்லாம் நிக்க வச்சி சுடனும்.......
வாழ்த்துக்கள்.....
தமிழ் மண விருதுகள் பெற்ற பதிவர்கள்....தீபச்செல்வன், பா, ராஜாராம், கலகம் ,இளவஞ்சி, முத்துசரம் ராமலட்சுமி,விணவு , செங்கொடி, புருனோ, தமிழ்நதி, கோவி. கண்ணன், உண்மை தமிழன் , வந்தியதேவன், தமிழ்சசி, சந்தன முல்லை,லிவிங்ஸ்மைல், குருத்து, பொன்னுசாமி, சாய்ராம், ஹேமா,முனைவர் இ.ரா. குணசீலன், சுனா பானா,குசும்பன்,நான் ஆதவன்,நர்சிம் , பீர்,சிங்க குட்டி, கிளியனூர் இஸ்மத்,டிவிஎஸ்50, ஊர்சுற்றி,லோஷன் போன்றவர்களுக்கும் ஒன்றுக்குமே ற்பட்ட விருதுகள் வாங்கிய புருனோ,முத்துசரம் ராமலட்சமி, வினவு, தமிழ் சசி போன்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....
ஏஆர் ரகுமான் இசையமைத்த கப்புல்ஸ் டிரிட் படத்தின், பாடல் ஒன்று இந்த முறையும் ஆஸ்கார் போட்டி பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றது...
கோல்டன் விருது பெற்ற... இயக்குனத் , ஜேம்ஸ்கேமரோன், கேத் வின்செல்ட்,சாண்டரா புல்லக் போண்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
மயிலாடுதுறையில் கண்மணி இல்லத்தில் குடி புகும்...எனது அமெரிக்க வாசக நண்பர் ஹாரிராஜ கோபாலனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்...ஹரி நேரில் வர முடியாமைக்கு வருந்துகின்றேன்...
அதே போல் நேற்று கடலூரி்ல் திருமணம் செய்து கொண்ட,பதிவுலக நண்பர் ஏகான்த லிங்கம், லாவன்யா தம்பதிகளுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
நன்றிகள்...
தமிழ்மண விருது பெற்றதும் நேரிலும் தொலைபேசியிலும், மெயிலிலும் வாழ்த்து
தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..
சென்னை சங்கம நிகழ்ச்சியில் நீங்க ஜாக்கிதானே? என்று சொல்லி தன்னை அறிமுகபடுத்திக்கொண்டு நமது தளத்தை பாராட்டிய தரமணியில் பொட்டி தட்டும் வேலை பார்க்கும் வாசகர் அருனுக்கு என் நன்றிகள்..
விஷுவல் டேஸ்ட்.....நான் எடுத்ததில் பிடித்தது...
சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் உடைந்த பாலத்துக்கு மேலே நின்று எடுத்து...
படங்களை கிளிக்கி பார்க்கவும்.............
படித்ததில் பிடித்தது...
பாதி குடித்தககொண்டு இருக்கையில்
சண்டை வலுத்து விட்டது
மேஜை நடுவிலிருந்த தட்டில்
உறைந்த விழிகளால்
வெறித்து வேடிக்கை பார்க்கின்றன
இன்னும் பில் போடப்படாத
வறுத்த மீன்கள்.
எஸ் பாபு.....(நன்றி ஆனந்த விகடன்...)
நான்வெஜ்....
ஜோக்... 1
உலகத்திலேயே கடவுள் அதிக படிய டென்ஷன் ஆவறது எப்ப தெரியுமா?
கல்யாணத்துக்கு முன்னையே கர்பமான தனது மகளின் வயிற்றை பார்த்து,
ஓ கடவுளே, உனக்கு மனசாட்சி இருக்கா? இப்படி பண்ணிட்டியே என்ற தாய் வயிற்றில் அடித்துக்கொண்டு அழும் போது...
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
தமிழ்-மணத்தில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஜோக் சூப்பரு..! :)
படங்கள் சூப்பர்....அந்த
ReplyDeleteஆறு படம் எங்கே எடுத்தது??
படங்கள் அருமை அண்ணே
ReplyDeleteசாண்ட்வெஜ் நல்ல ருசி ஜாக்கி.
ReplyDelete//இந்த மாதிரி கல்யாண மண்டபம் வரை வந்து பல்டி அடிக்கும் பையனையும், பொண்ணுங்களை எல்லாம் நிக்க வச்சி சுடனும்.......//
ReplyDeleteதிருமணம் மண்டபத்துக் காரர்களாவது பிழைக்கட்டுமே. இவர்கள் கந்தல் காதல் திருமண மண்டப்பத்துக்கு வருமானம் தருது. :)
தலைப்பு செய்திதான் செம்ம காமெடிங்க
ReplyDeleteபடங்கள் அருமை, மிக்சர் பத்தி நானும் ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்..
ReplyDeleteஜோக்..::))
ஜோக் சூப்பர்
ReplyDelete//சென்னை சங்கம நிகழ்ச்சியில் நீங்க ஜாக்கிதானே? என்று சொல்லி தன்னை அறிமுகபடுத்திக்கொண்டு நமது தளத்தை பாராட்டிய தரமணியில் பொட்டி தட்டும் வேலை பார்க்கும் வாசகர் அருனுக்கு என் நன்றிகள்.. //
ReplyDeleteThanks for remembering me
இதனால் மாணவர்களுக்கு நன்மைன்னுதாங்க நினைக்கிறேன்.. அவர்களுடைய பட்டங்கள் வேறுவொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் கீழ் வழங்கப்படும்.
ReplyDeleteகட்டண வசூல் குறையலாம். 44ல் தமிழகத்திலிருந்து 15 நிறுவனங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ரொம்பவே சூடான சாண்ட்வெஜ்.
ReplyDeleteவிருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
படங்கள் நல்லா இருக்கு அண்ணே
ReplyDeleteஇந்த மாதிரி கல்யாண மண்டபம் வரை வந்து பல்டி அடிக்கும் பையனையும், பொண்ணுங்களை எல்லாம் நிக்க வச்சி சுடனும்.......
ReplyDeletehahahahahahaha
நல்ல சுவை ............
ReplyDeleteரொம்ப நாளைக்கு அப்புறம், சான்வி்ட்ச் வாசித்தேன்,
ReplyDeleteவிளம்பரம் பார்த்து கடைசியில் தான் விளங்கிக்கொண்டேன், அந்த கணவர் அப்படியானவரோ?
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் ஜாக்கி.
ReplyDeleteநன்றி
ReplyDeleteஅன்டன் மணிகண்டன்..
துபாய் ராஜா
ராம் திருப்பூர்
ரோமியோ
டிஆர் அசோக்...
சைவ கொத்து பாரோட்டா..
அன்பு
இராஜபிரியன்
பட்டர்பிளை சூர்யா
படங்கள் சூப்பர்....அந்த
ReplyDeleteஆறு படம் எங்கே எடுத்தது??//
ஜெட்லி அந்த ஆறு படம் கடலூரில் உள்ள திருவந்திபுரம் கோவில் பக்கத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் எடுத்தது...
//இந்த மாதிரி கல்யாண மண்டபம் வரை வந்து பல்டி அடிக்கும் பையனையும், பொண்ணுங்களை எல்லாம் நிக்க வச்சி சுடனும்.......//
ReplyDeleteதிருமணம் மண்டபத்துக் காரர்களாவது பிழைக்கட்டுமே. இவர்கள் கந்தல் காதல் திருமண மண்டப்பத்துக்கு வருமானம் தருது. :)//
நன்றி கோவி நிறைய பேரு பொழைப்பாங்க என்பது உண்மைதான்... ஆனால் பல்யாணம் என்பது பல வீடுகளில் கடன் வாங்கி செய்வது...
படங்கள் அருமை, மிக்சர் பத்தி நானும் ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்..
ReplyDeleteஜோக்..::))//
நன்றி பலாபட்டறை
தாராளமா செய்யுங்க...
இதனால் மாணவர்களுக்கு நன்மைன்னுதாங்க நினைக்கிறேன்.. அவர்களுடைய பட்டங்கள் வேறுவொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் கீழ் வழங்கப்படும்.
ReplyDeleteகட்டண வசூல் குறையலாம். 44ல் தமிழகத்திலிருந்து 15 நிறுவனங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.//
இருக்கலாம் நல்லது நடந்தால் சரி நன்றி கையேடு...
இந்த மாதிரி கல்யாண மண்டபம் வரை வந்து பல்டி அடிக்கும் பையனையும், பொண்ணுங்களை எல்லாம் நிக்க வச்சி சுடனும்.......
ReplyDeletehahahahahahaha//
ஹா ஹா எல்லாம் இருக்கட்டும் எங்க இத்தனை நாளா ஆளையே கானோம்.... எங்க போனிங்க... சரி ஓட்டாவது போடுங்க.. பின்னுட்டம்தான் இடமாட்டேங்கறிங்க.....
தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள்
ReplyDeleteellam supero super
தமிழ்-மணத்தில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லா இருக்கு... சூப்பர்.
Entertaining post and nice snaps.
ReplyDeleteThanks for sharing.
வாவ். படங்கள் மிகவும் அருமை.
ReplyDeleteவிளக்கு ஒளி, ஸ்டார் போன்று வர எதுவும் பில்ட்டர் போட வேண்டுமா? டிப்ஸ் ப்ளீஸ்.
its a surprise to see ur wishes in the post...thank you very much jackie!!!
ReplyDelete