சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(05/01/10)

ஆல்பம்....

இது இரண்டாயிரத்து பத்தாவது ஆண்டின் முதல் சாண்வெஜ் அண்டு நான்வெஜ்.. கடைசி சாண்ட்வெஜ் நான்வெஜ் போனவாரம் எவ்வளவோ எழுத முயற்சித்தும்.. வேலை பளு காரணமாக அது சாத்தியம் இல்லாமல் போய் விட்டது...


தனி தெலுங்கான பிரச்சனை இன்னும் பற்றி எறிந்து கொண்டு இருக்கின்றது... பல கோடி ரூபாய் சொத்து நாசம்...பல பேருடைய மாத வருமானம் கோவிந்தா கோவிந்தா.... யோசித்து பாருங்கள் பல குடும்பங்களின் மாத வருமானம்
கேள்வி குறியாக இருக்கின்றது....

இப்போதே ஹைதராபாத்தில் இருந்து ரவி பிரசாத் யூனிட் லைட்மேன்கள் பல பேர் சென்னையில் முகாமிட்டு சினிமா வேலைகள் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.. குடும்பத்தையும், பிள்ளைகளின் கல்வி செலவையும் சற்றே யோசித்து பாருங்கள்... அவர்கள் என்ன செய்வார்கள்.... பாவம்..? பல கோடி ரூபாய்.. முடங்கி இருக்கின்றது... பல தொழில்கள் நசமாகி போய் உள்ளார்கள்... சற்றே குறி்த்து வைத்துக்கொள்ளுங்கள்...

தெலுங்கான பிரச்சனை முடிந்ததும் பல தற்கொலைகள் ஆந்திராவில் அரங்கேரும்.... அரசியல் லாபத்துக்காக இந்த பிரச்சனையை கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றது.. மத்திய அரசு...

ஆஸ்த்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவரை நேற்று கொலை செய்யபட்டு இருக்கின்றார்... வழக்கம் போல் மத்திய சர்கார் கண்டனத்தை பதிவு செய்து இருக்கின்றது...

==========================
புத்தாண்டு....2010

பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னை வெஸ்ட் மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ வித்யா அப்பார்ட்மெண்ட்டில் வருடா வருடம் போட்டோ எடுப்பேன்... அது எனக்கு ரொம்பவும் மகிழ்வை கொடுக்கும் விஷயம் அது... சிறுவர்களும் சிறுமிகளும் லேட்டஸ்ட் ஹிட் பாடலுக்கு ஆடி கலக்குவார்கள்...

இது கடந்த 5 வருடங்களாக தொடர்ந்த நிகழ்வு அது... போன வருடத்தில் இருந்து அது வேறு ஒரு போட்டோகிராபரின் கைக்கு அந்த நிகழ்ச்சி போய்விட்டது... புதிய நிர்வாகிகள்... அவர்களுக்கு பிடித்த போட்டோகிராபரை வைத்துக்கொண்டார்கள்...அதனால் இந்த வருடம் நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு எனது மடிப்பாக்கம் அக்கா வீட்டுக்கு போனேன் அவர்கள் அங்கு இல்லை... எனது அக்கா பையன் சபரி மலைக்கு மாலை போட்டு இருப்பதால் சைதாபேட்டை தாண்டல் நகரில் பூஜை வைத்து இருந்தார்கள்.. அதில் கலந்து கொண்டேன்...இதுவே நான் கலந்து கொண்ட முதல் ஐயப்பபூஜை... அங்கு நான் எடுத்த படங்கள்....
===================
மிக்சர்..நன்றிகள்...

இலங்கை பதிவர் வந்திய தேவன் எனது பதிவை சிறந்த பதிவர்கள் லிஸ்ட்டில் சேர்த்தமைக்கு...


தினமணி நாளிதழ் சக வலைபதிவர்களை பெருமைபடித்தியதற்கு...


இந்த வார கலக்கல் விளம்பரம்....
விளம்பரத்தல வர பொண்ணு ரொம்ப சோக்கா இருக்குது...


================
சென்னை 33 வது புத்தக கண்காட்சிக்கு கடந்த ஞாயிறு அன்று குடும்பத்துடன் போனேன்.... கீழே நான் எடுத்த புகை படம்... அது பற்றிய விரிவான பதிவு விரைவில்...

ஆயிரத்தில் ஒருவன்...

ஆயிரத்தில் ஒரு வன் படம் பற்றி பல செய்திகள் என் காதில் விழுந்த வண்ணம் உள்ளது... சினிமாவில் அசிஸ்டென்ட் கேமராமேனாக இருப்பதால் பல படங்களில் பணி புரிந்தவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைப்பதால்... ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றிய பல சுவாரஸ்ய செய்திகள் தெரிந்தாலும் அதனை பகிர்ந்து கொள்ளும் நபர் நான் அல்ல... இருப்பினும் இந்த படத்தின் பல காட்சிகள் சென்சாரில் அனுமதி பெற்று படமெடுக்கபட்டவை என்பதை மட்டும் தெரிவித்து கொள்கின்றேன்...பல காட்சிகள் எப்படி இது தமிழ் சினிமாவில் சாத்தியம் என மூக்கில் விரல் வைப்பீர்கள் என்பது மட்டும் நிச்சயம்..
===============================


வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கும் போது கண்ணில் பட்ட போஸ்டர்... பார்த்து ரசிக்க...

படங்களை கிளிக்கி பார்க்கவும்..
=========================================

நான்வெஜ்....

ஜோக்..1

ஒரு பேச்சிலர் வீட்டின் அறிவிப்பு பலகையில் இப்படி எழுதி இருந்தது...
உள்ளே வா... இல்லையென்றால் நாம் இருவரும் காய்ந்து போய் கிடப்போம்...

ஜோக்...2

தலமை அதிகாரிகளுக்கும் ...விந்து அணுக்களுக்கான ஒற்றுமை என்ன?...

3மில்லியன்ல ஒன்னுதான் மனுஷனா இருக்க வாய்ப்பு உள்ளது...


=======================================

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

23 comments:

 1. ஹண்டர் போட்டோ.. நாஸ்தி!!! :) :) :)

  ReplyDelete
 2. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜாக்கி..

  ஹண்டர் படத்துக்கு போறது தற்கொலைக்குச் சமம்னு சொல்லிக்கறாங்க, இத்த எவன் திருட்டு விசிடி போடப் போறான்?

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 3. வேட்டைக்காரன் போட்டோ நானும் எடுத்து வைத்திருந்தேன். அதுக்குள்ள.. அப்புறம் பாலா எங்க் ஆளையே காணம்.?

  ReplyDelete
 4. படங்கள் எல்லாம் நல்ல இருக்கு ஜாக்கி!

  ReplyDelete
 5. விளம்பரம் சோக்கா கீது. ரூம் போட்டு யோசிப்பாங்களோ

  ReplyDelete
 6. வழக்கம் போல் சாண்ட்வெஜ் கலக்கல். ஒரு சந்தேகம் தெலுங்கானாப் பிரச்சனைக்கு 2 நாட்களில் முடிவு காணப்படும் என இந்தியாவின் பிரதமராக அமர்ந்திருப்பவர் பல நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இன்னும் அவரின் எஜமானியிடம் இருந்து முடிவு வரவில்லையா?

  ஐயப்பன் பூஜைப் படங்கள் நன்றாக இருக்கின்றது.

  சான்ட்வெஜ்ஜில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றிகள். உங்களின் ரசிகன் நான்.

  இந்த விளம்பரம் பல நாட்களுக்கு முன்னர் பார்த்தது. அந்தப் பெண் கலக்கலோ கலக்கல், அதனை விட பிரிண்டில் வருவதைப் பார்த்து அந்த ஆண் திகைப்பது சூப்பர்.

  ஆயிரத்தில் ஒருவன் ட்ரையிலரே படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டுகின்றது. எப்போ வெளிவருமம்? வேட்டைக்காரன் நோ காமெண்ட்ஸ்.

  நான்வெஜ் பெரிதாக காரமில்லை.

  ReplyDelete
 7. நல்லாயிருக்கு... ஆயிரத்தில் ஒருவனுக்காக வெயிட்டிங்!!

  ReplyDelete
 8. விளம்பரம் சூப்பர் ................ நன்றி தல

  ReplyDelete
 9. விளம்பரம் சூப்பர் ................ நன்றி தல

  ReplyDelete
 10. ஹண்டர் போஸ்டர் ஒரே தமாஷ் போங்க...

  ReplyDelete
 11. ஆயிரத்தில் ஒருவனை பற்றி ராம்ஜியும் நிறைய தகவல்கள் சொன்னார்.மிக சுவாரசியம்.படம் மிக,மிக எக்சைட்டிங்காக இருக்கும்.அநேகமாக பிரிவியூ பார்ப்பேன்.

  ReplyDelete
 12. வேட்டை
  காமெடி
  சூப்பர்

  ReplyDelete
 13. gud.

  regards

  www.hayyram.blogspot.com

  ReplyDelete
 14. http://en.tackfilm.se/?id=1262701858389RA95

  click the above link to see my blog world hero.

  it will take some time to load, have some patience.

  Rajkumar
  www.zero2infiniti.blogspot.com

  ReplyDelete
 15. hello sir ur great... ellameaaa superrrrrrrr

  ReplyDelete
 16. நன்றி ஹாலிவும் பாலா.

  நன்றி பாஸ்டன் ஸ்ரீராம்... மிக்க நன்றிகள்

  ReplyDelete
 17. நன்றி கேபிள் சங்கர்..

  நன்றி ஆர் ஆர்

  நன்றி துபாய் ராஜா...

  நன்றி சைவ கொத்து பரோட்டா..

  ReplyDelete
 18. ஐயப்பன் பூஜைப் படங்கள் நன்றாக இருக்கின்றது.

  சான்ட்வெஜ்ஜில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றிகள். உங்களின் ரசிகன் நான்.
  //

  நன்றி வந்திய தேவன்... மிக்க நன்றி...

  ReplyDelete
 19. நன்றி கலையரசன்..

  நன்றி இராஜபிரியன்

  நன்றி ஜெட்லி..

  நன்றி தண்டோரா... டிக்கெட் கெடெச்சா சொல்லுங்க..

  நன்றி மணப்பாக்கம்

  ReplyDelete
 20. நன்றி ராஜ்குமார்..

  நன்றி வினோத்..

  நன்றி ராம் திருப்பூர்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner