உலகின் மிகப்பெரிய பாவம்...(ஒரு உண்மை காதல் கதை...)



கதையின் கதாபாத்திரங்கள் தேவைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு எழுதி இருக்கின்றேன்,அது ஒரு பெண் வாழ்க்கை சம்பந்த பட்டது என்பதால்....

உலகின் மிகப்பெரிய பாவம்

ராஜகோபால் ரங்கநாதன் தெருவில் நடந்து போனால் அவ்வளவு கூட்டத்தில் அவனை கடந்து போகும் பெண்களில் ஒரு 15 பேராவது இவன் நம் காதலன் ஆனால்,இவன் நம் வருங்கால கணவன் ஆனால், என்று பாரதிராஜாபடம் போல் ஃபரீஸ் ஆகி, பலவாறு யோசித்து அந்த இடம் விட்டு நகர்வார்கள், இந்த உலகத்தில் அவனால் மட்டுமே கள்ளமில்லாமல் சிரிக்க முடியும். ராஜு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான். தினமும் பத்து நண்பர்களுடன், சத்யம் ,மாயஜால் தியேட்டர்களுக்கு காரில் சென்று படம் பார்க்கும் அளவுக்கு மாதா மாதம் சம்பாதிக்கின்றான்.


ராஜுவின் எதிர் பிளாட்டில் வசிப்பவள்தான் சித்ரா சுமாரான அழகு என்றாலும் படிப்பிலும் பொது அறிவிலும் கெட்டிக்காரி, அவளின் கலகலப்பான பேச்சு எவரையும் எளிதில் கவர்ந்து விடும் தன்மை உள்ளது,ராஜு அவளின் அறிவுக்கூர்மைக்கு கலகலப்புக்காகவே, ராஜு சித்ரா மேல் காதல் வயப்பட்டான்...
சித்ரா புறநகர் கல்லூரியில் எம்,எஸ்,சி மைக்ரோபாயாலஜீ படித்து வருகின்றாள் அவள் படிப்பில் கெட்டிக்காரி, அவளின் கனவு அவளது துறையில் பெரியவிஞ்ஞானியாக வர வேண்டும் என்பதுதான்...

ராஜுபெற்றோரும் சித்ரா பெற்றோரும் எதிர் எதிர் வீடு என்பதால் நண்பர்கள், அதனால் அவளோடு பழகும் வாய்ப்பு அவனுக்கு அதிகம் கிடைத்தது.

ராஜகோபால் சிறுவயதில் இருந்தே அதிக புத்தகங்கள் படித்து வளர்ந்ததால் இந்த காதல் கத்தி்ரிக்காய் எல்லாம் நம்மை தாக்காது என்று கம்பீரமாக நகர் வலம் வந்தான், காதல்வயப்பட்ட நண்பர்களை பரிகாசம் செய்தான். காதல் என்பது கண்ணம்மா பேட்டை சூடுகாடுகிட்ட இருக்கிற ஆலமரத்துக்கு கீழே பீடி வளிச்சிக்குனு இருக்கறவனுக்குதான் காதல் வரும் என்ற ராஜகோபல் எண்ணத்தை தவிட பொடி ஆக்கிவிட்டாள், சித்ரா. சித்ராவின் அறிவுக்கூர்மை அவள்மேல் அவனை காதல் கொள்ள செய்தது.

வாயில் பிரஷ்உடன் யோசிப்பது,பத்து நிமித்தில் கழிவறை விட்டு வெளியே வர வேண்டியவன் ஒருமணிநேரம் கழித்து யோசித்துக்கொண்டே வெளி வருவது, காதல்பாடல் வரிகளின் போதைக்கு அடிமையாவது,மியுசிக் சேனல்களுக்கு,

“ ஐ லவ் சித்ரா,அவள் என் மனைவி ”என்று எஸ் எம் எஸ் செய்து காசை கரியாக்குவது,விக்கெண்ட் பார்ட்டியில் எல்லாரும் முழு போதையில் இருக்க, இவன் மட்டும் ரசிக்க தக்க போதையில் கற்பனையில் சித்ரா அயன் பண்ணி போட்டு வந்த சுடிதாரை ஈவு இரக்கம் இல்லாமல் கசக்கி அனுப்புவது என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் தற்போது காதல் போதையில் செய்யும் எல்லா வேலைகளையும் செய்தான்.



ராஜகோபால் மனதில் இருக்கும் காதலை இதயம் முரளி போல்சித்ராவிடம் ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. அதற்கு காரணம் சித்ரா வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்? பிளாட்டி்ல் சித்ரா சட்டென வடிவேலு போல் சீன் போட்டு பாத்துட்டான் பாத்துட்டான் என்று கூச்சல்போட வெண்ணிற ஆடை மூர்த்தி போல் தான் பதறக்கூடாது என்பதாலேயே தன் காதலை ராஜகோபால் மனதுள் புதைத்து வைத்தான் , நாடளுமன்றத்தில் தேர்தலில் ஏழு இடத்திலும் அடிவாங்கிய பிரபல கட்சி போல மனதுக்குள் தினம் தினம் அழுதுக்கொண்டான்.

சித்ரா எப்போதும் போல் கலகலப்பாக பழகினாள் பைக்கில் உட்காரும் போது இயல்பாய் மார்பு உரசி உட்கார்ந்தாள், ராஜகோபாலுக்கு காதல் தீயோடு காமத்தீயும் பற்றி எரிந்தது.

அந்த வாரக்கடைசியில் நண்பர்களிடம் சத்தியம் செய்தான் கல்யாணம் பண்ணா சித்ராவைதான் கல்யாணம் பண்ணுவேன் என்று....

சில மாதங்களில் கழித்து கல்யாண பத்திரிக்கையோடு ராஜு வந்தான் பெண்பெயர் இடத்தில் சித்ரா பெயர் இல்லை, அதிர்ந்து காரணம் கேட்ட போது..

மூனுமாசத்துக்கு முன்ன அவகிட்ட என் காதலை சொல்லபோனேன், உன் எதிர்காலம்பற்றி கேள்வி கேட்ட போது அவ சொன்ன,
எல்லாரு மாதிரியும் கல்யாணம், புள்ளகுட்டி, மளிகைசாமான் என்று என்னால் வாழ முடியாது, எனக்கு மைக்ரோபயாலாஜீயில் அடுத்து பிஹெச்டி பண்ணனும்,ஸ்காலர்ஷிப் கிடைச்சி ஸ்டேட்ஸ் போய் , பெரிய சயிண்டிஸ்ட் ஆகனும். கீரின் கார்டு கிடைச்சி அங்கேயே செட்டில் ஆகாம என்தாய் நாட்டுக்கு வந்து என் மக்களுக்காக உழைக்கனும் என்று சொன்னாள் என்று சொன்னேன்.

நண்பர்கள் கேட்டார்கள் அப்ப நீ பட்ட வலி, வேதனை, அவ மேல வச்சிருந்த உயிருக்குயிரான காதல் என்று எதையுமே அவகிட்டசொல்லலையா??? என்று சட்டை பிடித்து கேள்வி கேட்டார்கள்


நான் நிதானமாக நண்பர்களிடத்தில் சொன்னேன்...

உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக இருக்கும் மனதை குழப்புவதுதான் என்றேன்.

அன்புடன்/ஜாக்கிசேகர்


போன வருடத்தில் எழுதிய ஒரு ஆர்வர்க்கோளறு கதை இது... நிறைய வேலை இருப்பதால் மீள்பதிவாக இன்று உங்கள் முன்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

34 comments:

  1. நிதர்சணம்.

    குழப்பம் ஏற்படுத்துவது பெரும் பாவம் தான்.

    ReplyDelete
  2. மனச உடச்சுட்டீங்க தல...!

    ப்ச்..

    சூப்பர்ப்...ரைட்டிங்...

    ReplyDelete
  3. jackie..கதையின் தொனியில் ஆங்காங்கே மாறுதல் இருக்கிறது.. பாருங்கள்.

    ReplyDelete
  4. காதலியின் லட்சியத்திற்காக தன் காதலை துறந்த ராஜூ உண்மையில் நல்ல மனிதன். விருதுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சித்ராவின் இலட்சியம் நிறைவேற எனது வாழ்த்துகள் ...... ராஜகோபாலுக்கும் எனது வாழ்த்துகள் .............

    ReplyDelete
  6. சித்ராவின் இலட்சியம் நிறைவேற எனது வாழ்த்துகள் ...... ராஜகோபாலுக்கும் எனது வாழ்த்துகள் .............

    ReplyDelete
  7. //உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக இருக்கும் மனதை குழப்புவதுதான் என்றேன்.//

    சரியாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete
  8. //நாடளுமன்றத்தில் தேர்தலில் ஏழு இடத்திலும் அடிவாங்கிய பிரபல கட்சி போல மனதுக்குள் தினம் தினம் அழுதுக்கொண்டான்.//

    nalla yosichi example solreenga...

    gud..

    ReplyDelete
  9. சூப்பர், இந்த கதைய நீங்கள் படமாகவே எடுக்கலாமே.

    "சேர்ந்து வாழ்வது மட்டும் அல்ல காதல்"

    "உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக இருக்கும் மனதை குழப்புவதுதான் என்றேன்"
    ராஜகோபால் (நீங்கள்) சரியாகவே முடிவு எடுத்து இருக்கிறார்

    ReplyDelete
  10. //உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக இருக்கும் மனதை குழப்புவதுதான்//
    ஆயிரத்தில் ஒரு வசனம் ஜாக்கி!!!

    ReplyDelete
  11. நல்ல மனம் வாழ்க.

    ReplyDelete
  12. //உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக இருக்கும் மனதை குழப்புவதுதான் என்றேன்.//

    அந்த நபர் (இந்த கதையின் ஹீரோ) நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்.

    ReplyDelete
  13. துள்ளலான எழுத்து நடையில், கருத்துள்ள ஒரு கதை.

    ராஜகோபால், டக்கென்று ராஜீ ஆனது மட்டும் கொஞ்சம் குழப்பம்.

    ReplyDelete
  14. //சட்டென வடிவேலு
    கவுண்டமணி

    ReplyDelete
  15. உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக இருக்கும் மனதை குழப்புவதுதான்

    punch

    ReplyDelete
  16. நல்ல கருத்துள்ள கதை. தொடர்ந்து சிறுகதைகளையும் அவ்வப்போது எழுதுங்கள் அண்ணா.

    ReplyDelete
  17. கதை சுருக்கமா 'சுருக்' என்று ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  18. // உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக இருக்கும் மனதை குழப்புவதுதான் என்றேன். //

    Its true.....

    ReplyDelete
  19. மிக பெரிய பாவம் தெளிவான மனதை குழப்புவது ! அருமை நண்பரே !

    ReplyDelete
  20. மிக பெரிய பாவம் தெளிவான மனதை குழப்புவது ! அருமை நண்பரே !

    ReplyDelete
  21. மிக பெரிய பாவம் தெளிவான மனதை குழப்புவது ! அருமை நண்பரே !

    ReplyDelete
  22. very good! I appreciate both the characters.

    ReplyDelete
  23. நன்றி

    நட்புடன் ஜமால்...

    பிரியமுடன் வசந்,

    கண்ணகி்....

    ReplyDelete
  24. ackie..கதையின் தொனியில் ஆங்காங்கே மாறுதல் இருக்கிறது.. பாருங்கள்.//

    நன்றி கேபிள்

    கண்டிப்பாக திருத்துகின்றேன்...

    ReplyDelete
  25. நன்றி

    ராஜ பிரியன்..

    சங்கவி

    அஜித்

    சிவா

    சைவ கொத்து பாரோட்டா..

    ReplyDelete
  26. //நாடளுமன்றத்தில் தேர்தலில் ஏழு இடத்திலும் அடிவாங்கிய பிரபல கட்சி போல மனதுக்குள் தினம் தினம் அழுதுக்கொண்டான்.//

    nalla yosichi example solreenga...

    gud..//
    நன்றி சஞ்சனா...

    ReplyDelete
  27. சூப்பர், இந்த கதைய நீங்கள் படமாகவே எடுக்கலாமே.

    "சேர்ந்து வாழ்வது மட்டும் அல்ல காதல்"

    "உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக இருக்கும் மனதை குழப்புவதுதான் என்றேன்"
    ராஜகோபால் (நீங்கள்) சரியாகவே முடிவு எடுத்து இருக்கிறார்//

    இதை குறும்படமாக எடுக்க ஐடியா இருக்கின்றது மகாராஜ்

    ReplyDelete
  28. துள்ளலான எழுத்து நடையில், கருத்துள்ள ஒரு கதை.

    ராஜகோபால், டக்கென்று ராஜீ ஆனது மட்டும் கொஞ்சம் குழப்பம்.//

    நன்றி பின்னோக்கி ராஜ கோபாலை ராஜி என்று சுருங்க அழைப்பர்... அதை சொல்லி இருக்க வேண்டும்...

    ReplyDelete
  29. நன்றி

    கிள்ளிவளவன்
    ஏஞசல்

    மைதீன்
    அர்ஜுனன்
    கைலாஷ்
    செ சரவணகுமார்
    ஷன்மு

    எல்லோருக்குத் என் நன்றிகள்..
    ராதா
    ரவி

    ReplyDelete
  30. நல்ல இருக்கு .. அப்புறம் ..
    அது வடிவேலு இல்ல கவுண்டமணி

    ReplyDelete
  31. nice i guess its helpful to understand myself

    ReplyDelete
  32. This line is good "உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக இருக்கும் மனதை குழப்புவதுதான் என்றேன்"

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner