நேற்று கலைஞர் டிவியில் பசங்க படத்தை பார்த்து இருப்பீர்கள்.. அதில் அந்த வில்லன பையனாக நடித்த ஜீவாவும் அவனுடைய அடிப்பொடிகளும்... ஒரு சைக்கிளில் அந்த பக்கோடா பையன் சைக்கிள் மிதித்து கொண்டு மூவரும் போவது போல் ஒரு ஷாட் எடுத்து இருப்பார்கள்... அது ஒரு நல்ல ஷாட்... அது ஒரு பெரிய ஷாட் இரண்டு நிமிடம் வருவது போல் இருக்கும்...அதுவும் சின்ன பசங்களை வைத்து நல்ல ரிகர்சல் பண்ணி அந்த காட்சியை எடுத்து இருப்பார்கள்...
காரணம் ஆயிரம் என்ற பதிவர் ஒரு கேள்வி கேட்டு இருந்தார்... ஒரே ஷாட்டாக எடுத்தால் அதில் சுவாரஸ்யம் எதும் இருக்காது என்பது அவர் கருத்தாக வைத்து இருந்தார்...
உண்மைதான்... ஆனால் அது எந்த இடத்தில்? எப்படிபட்ட காட்சிக்கு,அந்த லென்தி ஷாட் எடுக்கின்றார்கள் என்பதை பொறுத்துதான் அதன் சுவாரஸ்யம் இருக்கும்....
பொதுவாக எல்லா கேமராமேன்களுக்கு ஒரு ஆவல் இருக்கும்.. ஒரு நல்ல லென்தி ஷாட் எடுகக வேண்டும் என்று... அதற்க்கு காரணம் அதுதான் சவால்... அது ஒரு கூட்டு முயற்ச்சி.... சினிமாவில் வேலை செய்யும் பல டிப்பார்ட்மென்ட்கள் பருப்பு இறைந்து வேலை செய்யும் இடம்... இது போன்ற லென்தி ஷாட் எடுக்கும் இடங்கள் எனலாம்....
ஆனால் அது போலான காட்சிகள் எடுப்பதில் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால் அது போல காட்சிகள் எடுக்க காலவிரயம் ஆகும்.. நிறைய பொருட்செலவுகள் அகும் உதாரணத்துக்கு... அந்த காட்சி ஒன்மோர் போய் விட்டது என்றால்.... எடுத்த பிலிம் உழைப்பு எல்லாம் வீண்....மிக முக்கிய காரணம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்... என்பதே..
சினிமாவின் காதலன் இயக்குனர் ஸ்டேன்லி க்யூப்ரிக் எடுக்கும் பல காட்சினள் எல்லாம் லென்தி ஷாட் வகையை சார்ந்தவை.. அவரின் ஷைனிங் படத்தில் பல காட்சிகள் அப்படி எடுக்கபட்டவைதான்....
உதாரணத்துக்கு ஒரு லென்தி ஷாட்
கியூப்ரிக் அது போல லென்தி ஷாட் எடுக்க மிக முக்கியமான காரணம்.. பார்வையாளனின் கவனத்தை சிறிதும் சிதறாமல்...அவன் முழுகவனமும் கதாபாத்திரத்தின் மேலும் கதையின் உள்ளே செல்ல அது போலான லென்தி ஷாட்கள் உதவுகின்றன....
சமீபத்தில் சுப்ரமணியபுரம் படம் பார்த்து இருப்பீர்கள்....கிளைமாக்ஸ்
காட்சியில் கஞ்சா கருப்பு சசிகுமாரை காட்டி கொடுத்து விட, அந்த இடத்தில் இருந்து கஞ்சா கருப்பு ஆற்றங்கரை ஓரம் நடந்து வந்து ஒரு கிலோ மீட்டர் கல்லில் உட்கார்ந்து பீடி பிடிப்பது வரை ஒரே காட்சி...
இந்த காட்சியில் கஞ்சா கருப்பின் பதற்றமும்... பின்புலத்தில் சசிகுமாரை கண்டந்துண்டமாக வெட்டியபடியே இருப்பார்கள்... அந்த காட்சியும் இந்த காட்சியும் கேமரா டிராவல் ஆகும் போது மிக அழகாக கம்போசிஷன் செய்து இருப்பார்கள்... அது ஒரு அற்புதமான லென்தி ஷாட்டுக்கு உதாரணம்...
சரி இது போலான காட்சிகள் எல்லா இயக்குனருக்கும் ஒரு சவால் பிரேக்கிங் நியுஸ்ன்னு ஒரு படம் அதுல ஒரு ஓப்பனிங் சீன் அதை அப்படியே ஒரு ஷாட்டா எடுத்து இருப்பாங்க..
கஞ்சா கருப்பு நடந்து வந்து உட்காரும் லென்தி ஷாட் நம் தமிழ் சினிமாவுக்கு ஓகே பட் ஒரு காட்சியை ரொம்ப லென்தியா எடுக்க எவ்வளவு கஷ்டபடனும் தெரியுமா??? பிரேக்கிங் நியுஸ் படத்துல ஓப்பனிங் சீன்... மொத்தம் 6 நிமிஷம் 58 செகன்டு ஓரே ஷாட்... இதுல கவனிக்க படவேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் இதுல ஆக்ஷன் காட்சிகள் வேறு... ஒரு 40பிட் கிரேன்லதான் கேமரா வச்சி படம் பிடித்து இருக்க வேண்டும்... இதுல ரொம்ப கஷ்டம் எல்லாருக்கும்தான்.... கிரேன் தள்ளறதுல இருந்து ,போகஸ் பண்ணற கேமரா அசிஸ்டென்ட்ல இருந்து, கேமராமேன்ல இருந்து, கன் பார்ட்டியில இருந்து, லைட் மேன்ல இருந்து நிச்சயம் பயிறு இறைஞ்சி போயிருக்கும்.....
ஷாட்டை பார்த்துட்டு ஆச்சர்ய படாம பின்னுட்டம் மற்றும் ஓட்டு போடுங்க.. அதே போல ஒரு படத்தை இதே போல பத்து லென்தி ஷாட்ல எடுத்த டைரக்கடரும் படமும் அடுத்த ஷாட் பகுதியில்....
ஷாட்டை பத்தியே அதிகம் எழுதிக்கினு இருக்கேன் இது இப்படியே ஒரு ஓரமா போய்கிட்டு இருக்கட்டும்... பட் நடுவுல நடுவுல வெற சில சினிமா சுவாரஸ்யங்களையும் சொல்லறதா இருக்கேன்... அது அடுத்த பாகத்தில்...
குறிப்பு..
நான் பார்த்த, கேட்ட, படித்த, விஷயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்... இப்படி எழுதுவதை எல்லாம் வைத்து எதோ விஷயம் அதிகம் தெரிந்தவன் என்று நீங்கள் என்னை நினைத்தால் அது உங்களின் தவறாக மட்டுமே இருக்க முடியும்...
புகைபடங்க்ள் நன்றி சவுத் டிரீம்ஸ்
அன்புடன்
ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
சுப்ரமணியபுரம் நான் பார்த்து ரசித்த ஒரு காட்சி அது, ரசித்தேன் ஜாக்கி.. படம் எடுக்த்தலின் சில நுனுக்கமான விஷயங்கள் பகிருங்கள் ஜாக்கி..
ReplyDeleteநன்றி,:)
/////நான் பார்த்த, கேட்ட, படித்த, விஷயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்... இப்படி எழுதுவதை எல்லாம் வைத்து எதோ விஷயம் அதிகம் தெரிந்தவன் என்று நீங்கள் என்னை நினைத்தால் அது உங்களின் தவறாக மட்டுமே இருக்க முடியும்... /////
ReplyDeleteபொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்களே. இந்த மாதிரி டிஸ்கி போடலன்னாதான் வளர முடியும். ;)
உங்கள் பனி தொடர என் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ....... தொடருங்கள்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அண்ணே....
ReplyDeleteஹாய் ஜாக்கி,
ReplyDeleteஉங்கள் பதிவு அருமையாக உள்ளது.
நான் மென்பொருள் துறையில் வேலை செய்கிறேன். எனக்கு இப்பொழுது போட்டோ எடுப்பதில் சிறிது ஆர்வம் அதிகம் ஆகிஉள்ளது.
எனக்கு நீங்கள் சில ஐடியாகள் கொடுக்க முடியுமா?
எந்த மாதிரியான இடத்தில் எப்படி போட்டோ எடுக்கணும். பிளாஷ் லைட் எங்க உஸ் பண்ணனும். லாங் சாட் எப்படி எடுக்கணும்.
முடிந்தால் அதை ஒரு பதிவா போடுங்க. எல்லோருக்கும் உதவும்
இப்படிக்கு
சதீஸ் குமார்
nalla pathivu boss.... nenga en taste la eluthuringa.. i think this is the first time na ungaluku reply panrathu.. hats off to ur work !!
ReplyDelete//கிரேன் தள்ளறதுல இருந்து ,போகஸ் பண்ணற கேமரா அசிஸ்டென்ட்ல இருந்து, கேமராமேன்ல இருந்து, கன் பார்ட்டியில இருந்து, லைட் மேன்ல இருந்து நிச்சயம் பயிறு இறைஞ்சி போயிருக்கும்.....//
ReplyDeleteபாவம்தான் இவர்கள்.
சினிமா எதிர்வினை விமர்சனம்,பின்னூட்டம் போட்டு முடிச்சுக்கிறோம்.அதற்கான காரணங்களாய் கதை சறுக்கல்,யதார்த்தமின்மை,அரைச்ச மாவு,கொட்டாவி போட வைப்பது போன்றவையாக இருக்கலாம்.
ReplyDeleteபொதுவாக இந்த மாதிரி தொழில்நுட்ப விசயங்களையெல்லாம் நேர்காணல்,மார்க்கெட்டிங்க் விசயத்துல கோட்டை விட்டுட்டு நாயக,நாயகியின் புன்முறுவலை மட்டும் முன்னிலைப் படுத்துவதால் வரும் வினைகள்.
உதாரணத்துக்கு ஜாக்கி சான் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.படம் முழுதும் சிரிப்புக் காட்டினாலும் இறுதியில் எழுத்துக்களுடன் அவரோட உழைப்பும் தெரியும் படி கிளிப்ஸ் போடுவார்கள்.
தகவல்களுக்கு நன்றி.
pls write more and more this kind of information oriented, wishes!
ReplyDeleteபதிவு செம சூப்பர் தல.. அந்த சன் மியூசிக் ஃபிகர் மாதிரியே... ;)
ReplyDeleteபசங்க, சுப்ரமணிய புரம் படங்களில் நீங்கள் சொன்ன காட்சிகள் அருமையாக இருக்கும். பசங்க படத்தில், சைக்கிள் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து அருமை.
ReplyDeleteகுணா படத்தில் வரும் அந்த பெரிய வசனம் பேசும் ஷாட்டும் ஒன்று தானா ?
எல்லா லாங்க் ஷார்ட்டும் சலிப்புத் தட்டுவதில்லை...உதாரணமாக,
ReplyDeleteபம்பாய் படத்தில் வரும் உயிரே பாடலின் கடைசி சரணம் முடியும் வரையில் ஒரே ஷாட். அது போல, அவ்வை ஷண்முகியில் கமல்,மணிவண்ணன் பேசிக் கொண்டு வரும் காட்சியும் அப்படியே. இவை போன்ற காட்சிகள் சலிப்பு ஏற்படுத்துவதில்லை.
ஆனால், அரவிந்த் சாமி, இஷா கோபிகர் நடித்த என் சுவாசக் காற்றே படத்தில் பல இடங்களில் லாங்க் ஷாட் மாதிரி இருக்கும். ஆனா சம கடுப்பா இருக்கும். கேமராவை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, கேமராமேன் டீ சாப்பிட போய்விடுவார் போல, ஒரு அசைவு கூட இருக்காது. நடிகர்கள் மட்டும் அசைந்து கொண்டிருப்பார்கள். இப்படி இருந்தால் லாங்க் ஷார்ட் மட்டும் இல்லை, நார்மல் ஷார்ட்டும் போர் தாங்க...
எல்லா லாங்க் ஷார்ட்டும் சலிப்புத் தட்டுவதில்லை...உதாரணமாக,
ReplyDeleteபம்பாய் படத்தில் வரும் உயிரே பாடலின் கடைசி சரணம் முடியும் வரையில் ஒரே ஷாட். அது போல, அவ்வை ஷண்முகியில் கமல்,மணிவண்ணன் பேசிக் கொண்டு வரும் காட்சியும் அப்படியே. இவை போன்ற காட்சிகள் சலிப்பு ஏற்படுத்துவதில்லை.
ஆனால், அரவிந்த் சாமி, இஷா கோபிகர் நடித்த என் சுவாசக் காற்றே படத்தில் பல இடங்களில் லாங்க் ஷாட் மாதிரி இருக்கும். ஆனா சம கடுப்பா இருக்கும். கேமராவை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, கேமராமேன் டீ சாப்பிட போய்விடுவார் போல, ஒரு அசைவு கூட இருக்காது. நடிகர்கள் மட்டும் அசைந்து கொண்டிருப்பார்கள். இப்படி இருந்தால் லாங்க் ஷார்ட் மட்டும் இல்லை, நார்மல் ஷார்ட்டும் போர் தாங்க...
எல்லா லாங்க் ஷார்ட்டும் சலிப்புத் தட்டுவதில்லை...உதாரணமாக,
ReplyDeleteபம்பாய் படத்தில் வரும் உயிரே பாடலின் கடைசி சரணம் முடியும் வரையில் ஒரே ஷாட். அது போல, அவ்வை ஷண்முகியில் கமல்,மணிவண்ணன் பேசிக் கொண்டு வரும் காட்சியும் அப்படியே. இவை போன்ற காட்சிகள் சலிப்பு ஏற்படுத்துவதில்லை.
ஆனால், அரவிந்த் சாமி, இஷா கோபிகர் நடித்த என் சுவாசக் காற்றே படத்தில் பல இடங்களில் லாங்க் ஷாட் மாதிரி இருக்கும். ஆனா சம கடுப்பா இருக்கும். கேமராவை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, கேமராமேன் டீ சாப்பிட போய்விடுவார் போல, ஒரு அசைவு கூட இருக்காது. நடிகர்கள் மட்டும் அசைந்து கொண்டிருப்பார்கள். இப்படி இருந்தால் லாங்க் ஷார்ட் மட்டும் இல்லை, நார்மல் ஷார்ட்டும் போர் தாங்க...
ஜாக்கி
ReplyDeleteஇப்பதிவில் டிஸ்கியின் அவசியம் என்ன?
ஓவர் செண்டி மட்டுமல்ல, ஓவர் தன்னடக்கமும் ஒடம்புக்காகாது
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நல்ல சுவாரசியமான பதிவு...சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'ஆஹா' என்ற படத்தில் நிறைய நடிகர்கள் தோன்றும் இது போன்ற நீளமான, அருமையான காட்சிகளை பார்த்ததாக ஞாபகம். 'குணா' வின் ஆரம்பக் காட்சியும் நினைவுக்கு வருகிறது. இவையெல்லாம் நீங்கள் குறிப்பிடும் வகையை சார்ந்தவை தானா?
ReplyDelete//அந்த காட்சி ஒன்மோர் போய் விட்டது என்றால்.... எடுத்த பிலிம் உழைப்பு எல்லாம் வீண்....மிக முக்கிய காரணம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்... என்பதே..//
ReplyDeleteஉண்மையான காரணம் இதுதான்.
அலைபாயுதே படத்தில், யாரோ, யாரோடீ... பாடலில், இதே போல் நீளமான ஷாட்களை வைத்திருப்பார்கள். எத்தனை என்று நினைவில்லை. மொத்தம் 10-11 காட்சிகளில் பாடலே முடிந்து விடும். அதே போல், ஹிந்தி "Rab ne bana de jodi" படத்தில் வரும் ஒரு பாடலிலும் நீள காட்சிகள் வரும். "Making of Rab ne bana de Jodi" காட்டினார்கள். Camera man எவ்வளவு உழைக்கிரார் என்பது தெரிந்தது.
ReplyDeleteஇவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறதா? நல்ல தகவல்கள். நன்றி ஜாக்கி அண்ணா
ReplyDeleteஎமிலி படத்தில் கதாநாயகன் தன் ஆல்பத்தை தவறவிடுவதும் அதை எமிலி எடுத்து பார்க்கிற வரையிலான லாங்ஷாட் ரொம்ப பிடித்த ஒன்று. நடனத்திறமையை காட்டுவதற்காக தமிழ்பாடல் காட்சிகளிலும் செய்வார்கள். அதில் பிடித்தது சிவகாசி படத்தில் வாடா வாடா பாட்டில் இளைய தளபதியின் அட்டகாசம். அட்டகாசத்தில் தலயும் உனக்கென்ன உனக்கென்ன என்று அமர்களம் செய்திருப்பார்.
ReplyDelete/*
ReplyDeleteகாரணம் ஆயிரம் என்ற பதிவர் ஒரு கேள்வி கேட்டு இருந்தார்... ஒரே ஷாட்டாக எடுத்தால் அதில் சுவாரஸ்யம் எதும் இருக்காது என்பது அவர் கருத்தாக வைத்து இருந்தார்...
*/
நன்றிங்க என் கருத்தை இங்கே குறிப்பிட்டமைக்கு!
படம்விட்டு வந்தவுடன் பெரும்பாலான காட்சிகள் மறந்துவிடுகின்றன (விதிவிலக்கு:மகாநதி).. இதுபோன்ற ஒரே ஷாட் காட்சிகள் திரும்ப பார்க்கும் வாய்ப்பு டிவியிலோ அல்லது டிவிடியிலோ பார்க்கக்கிடைக்கும்போது, ஒரே ஷாட் என்கிற விஷயம் மறந்துபோய்விட்டிருக்கும்.. அப்படித்தான் பசங்க காட்சியும்.
அன்புடன்,
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com
சுப்ரமணியபுரம் நான் பார்த்து ரசித்த ஒரு காட்சி அது, ரசித்தேன் ஜாக்கி.. படம் எடுக்த்தலின் சில நுனுக்கமான விஷயங்கள் பகிருங்கள் ஜாக்கி..
ReplyDeleteநன்றி,:)//
நன்றி பலா பட்டறை... வருகைக்கும் பின்னுட்டத்துக்கும்..
பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்களே. இந்த மாதிரி டிஸ்கி போடலன்னாதான் வளர முடியும். ;)=//
ReplyDeleteநன்றி சர்வேசன்...
நன்றி
ReplyDeleteநாகமன்
ஜெட்லி
இராஜபிரியன்..
உங்கள் பதிவு அருமையாக உள்ளது.
ReplyDeleteநான் மென்பொருள் துறையில் வேலை செய்கிறேன். எனக்கு இப்பொழுது போட்டோ எடுப்பதில் சிறிது ஆர்வம் அதிகம் ஆகிஉள்ளது.
எனக்கு நீங்கள் சில ஐடியாகள் கொடுக்க முடியுமா?
எந்த மாதிரியான இடத்தில் எப்படி போட்டோ எடுக்கணும். பிளாஷ் லைட் எங்க உஸ் பண்ணனும். லாங் சாட் எப்படி எடுக்கணும்.
முடிந்தால் அதை ஒரு பதிவா போடுங்க. எல்லோருக்கும் உதவும்
இப்படிக்கு
சதீஸ் குமார்//
நன்றி சதிஸ்குமார்... படம் எப்படி எடுப்பது அதனை எப்படி கம்போஸ் செய்வது போன்ற போட்டோவுக்கு விளக்கமாக சொல்லி கொடுக்க நிறைய தளங்கள் உள்ளன.. அதில் குறிப்பாக இந்த தளத்திற்க்கு போய் பார்க்கவும்..http://photography-in-tamil.blogspot.com/
nalla pathivu boss.... nenga en taste la eluthuringa.. i think this is the first time na ungaluku reply panrathu.. hats off to ur work !!/
ReplyDeleteநன்றி கார்த்திக் உங்கள் பாராட்டுக்கு தொடர்ந்து பின்னுட்டம் இட்டு ஓட்டு போடுங்கள் இன்னும் பலர் படிக்க உதவி செய்யுங்கள்..
//கிரேன் தள்ளறதுல இருந்து ,போகஸ் பண்ணற கேமரா அசிஸ்டென்ட்ல இருந்து, கேமராமேன்ல இருந்து, கன் பார்ட்டியில இருந்து, லைட் மேன்ல இருந்து நிச்சயம் பயிறு இறைஞ்சி போயிருக்கும்.....//
ReplyDeleteபாவம்தான் இவர்கள்.//
நன்றி சைவ கொத்து பரோட்டா... நேரில் இவர்களுடன் வேலை செய்யும் போது அவர்கள் எவ்வளவு கடுமையாக உழைக்கின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியும்..
உதாரணத்துக்கு ஜாக்கி சான் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.படம் முழுதும் சிரிப்புக் காட்டினாலும் இறுதியில் எழுத்துக்களுடன் அவரோட உழைப்பும் தெரியும் படி கிளிப்ஸ் போடுவார்கள்.
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி.//
நன்றி ராஜ நடராஜன் மிக சிறப்பாக சொன்னீர்கள்...
pls write more and more this kind of information oriented, wishes!//
ReplyDeleteநன்றி வெள்ளி நிலா..
பதிவு செம சூப்பர் தல.. அந்த சன் மியூசிக் ஃபிகர் மாதிரியே... ;)//
ReplyDeleteஎலேய் இன்னும் அந்த புள்ளைய மறக்கலையா? நீ
பசங்க, சுப்ரமணிய புரம் படங்களில் நீங்கள் சொன்ன காட்சிகள் அருமையாக இருக்கும். பசங்க படத்தில், சைக்கிள் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து அருமை.
ReplyDeleteகுணா படத்தில் வரும் அந்த பெரிய வசனம் பேசும் ஷாட்டும் ஒன்று தானா ?//
பின்னோக்கி குனா படத்தில் முதல் காட்சியிலேயே அது போல ஷாட் ஒன்று இருக்கு...
ஆனால், அரவிந்த் சாமி, இஷா கோபிகர் நடித்த என் சுவாசக் காற்றே படத்தில் பல இடங்களில் லாங்க் ஷாட் மாதிரி இருக்கும். ஆனா சம கடுப்பா இருக்கும். கேமராவை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, கேமராமேன் டீ சாப்பிட போய்விடுவார் போல, ஒரு அசைவு கூட இருக்காது. நடிகர்கள் மட்டும் அசைந்து கொண்டிருப்பார்கள். இப்படி இருந்தால் லாங்க் ஷார்ட் மட்டும் இல்லை, நார்மல் ஷார்ட்டும் போர் தாங்க...//
ReplyDeleteநன்றி கபிலன் விரிவாய் இன்டிரெஸ்ட்டாக சொல்லியதற்க்கும் பகிர்தலுக்கும்..
ஜாக்கி
ReplyDeleteஇப்பதிவில் டிஸ்கியின் அவசியம் என்ன?
ஓவர் செண்டி மட்டுமல்ல, ஓவர் தன்னடக்கமும் ஒடம்புக்காகாது
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஸ்ரீ அவசியம் என்னவென்றால் என்கிட்ட போட்டோகிராபி சம்பந்த பட்ட நோட்ஸ்ல் இருந்து சினிமாவில் சேர்த்து விடுவது வரை பல மெயில்களும் போனும் வந்து கொன்டு இருக்கின்றன... அதுதான் காரணம்..
நல்ல சுவாரசியமான பதிவு...சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'ஆஹா' என்ற படத்தில் நிறைய நடிகர்கள் தோன்றும் இது போன்ற நீளமான, அருமையான காட்சிகளை பார்த்ததாக ஞாபகம். 'குணா' வின் ஆரம்பக் காட்சியும் நினைவுக்கு வருகிறது. இவையெல்லாம் நீங்கள் குறிப்பிடும் வகையை சார்ந்தவை தானா?//
ReplyDeleteஆம் முக்கோனம் அது போலான காட்சிகள்தான் அவைகள்...
/அந்த காட்சி ஒன்மோர் போய் விட்டது என்றால்.... எடுத்த பிலிம் உழைப்பு எல்லாம் வீண்....மிக முக்கிய காரணம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்... என்பதே..//
ReplyDeleteஉண்மையான காரணம் இதுதான்.//நன்றி மாயாவி..
அலைபாயுதே படத்தில், யாரோ, யாரோடீ... பாடலில், இதே போல் நீளமான ஷாட்களை வைத்திருப்பார்கள். எத்தனை என்று நினைவில்லை. மொத்தம் 10-11 காட்சிகளில் பாடலே முடிந்து விடும். அதே போல், ஹிந்தி "Rab ne bana de jodi" படத்தில் வரும் ஒரு பாடலிலும் நீள காட்சிகள் வரும். "Making of Rab ne bana de Jodi" காட்டினார்கள். Camera man எவ்வளவு உழைக்கிரார் என்பது தெரிந்தது.//
ReplyDeleteநன்றி இப்படிக்கு அன்புடன் உங்கள் பிகிர்தலுக்கு ஹிந்தி படம் பார்க்க முயற்ச்சிக்கின்றேன்...
இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறதா? நல்ல தகவல்கள். நன்றி ஜாக்கி அண்ணா//
ReplyDeleteஇன்னும் நிறைய புலிகேசி.. அது வரும் வாரங்களில்...
எமிலி படத்தில் கதாநாயகன் தன் ஆல்பத்தை தவறவிடுவதும் அதை எமிலி எடுத்து பார்க்கிற வரையிலான லாங்ஷாட் ரொம்ப பிடித்த ஒன்று. நடனத்திறமையை காட்டுவதற்காக தமிழ்பாடல் காட்சிகளிலும் செய்வார்கள். அதில் பிடித்தது சிவகாசி படத்தில் வாடா வாடா பாட்டில் இளைய தளபதியின் அட்டகாசம். அட்டகாசத்தில் தலயும் உனக்கென்ன உனக்கென்ன என்று அமர்களம் செய்திருப்பார்.//
ReplyDeleteசரியாக சொன்னிங்க செல்வன்... இது போல பலதும் பகிர்ந்து கொள்ள ஆசையாக இருக்கிக்கின்றது..
படம்விட்டு வந்தவுடன் பெரும்பாலான காட்சிகள் மறந்துவிடுகின்றன (விதிவிலக்கு:மகாநதி).. இதுபோன்ற ஒரே ஷாட் காட்சிகள் திரும்ப பார்க்கும் வாய்ப்பு டிவியிலோ அல்லது டிவிடியிலோ பார்க்கக்கிடைக்கும்போது, ஒரே ஷாட் என்கிற விஷயம் மறந்துபோய்விட்டிருக்கும்.. அப்படித்தான் பசங்க காட்சியும்.
ReplyDeleteஅன்புடன்,
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com//
நன்றி கார்த்தி மிக்க நன்றி பகிர்தலுக்கு
எனக்கு மிகவும் பிடித்த ஷாட் இது நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்
ReplyDeleteஇல்லையென்றால் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும்
நன்றி
இனியன் பாலாஜி
Children of Men tracking shot
http://www.youtube.com/watch?v=en16i8BY4hI&feature=related