எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்து விடுவதில்லை... ஒரு சிலருக்கு வாழ்க்கை சட்டென புரட்டி போட்டு நினைத்து கூட பார்க்க முடியாத வாழ்க்கையை அது வாழ வைக்கும்... அது நல்லா வாழ்க்கையாகவும் இருக்கலாலம்.. அல்லது கெட்ட வாழ்க்கையாகவும் இருக்கலாம்...
உதாரணத்துக்கு தாவாணி கனவுகள் பாக்கியராஜ் போல் வளர்ந்தவனும் இருக்கான்... மகாநதி கமல் போல் அழிஞ்சவனும் இங்க இருக்கான்... ஆனால் இளம் வயதில் வறுமையும்...ஏற்றுக்கொள்ள கூடாத குடும்ப சூழலும் ஒரு சிறுவனை எப்படி எல்லாம் அலைகழிக்கும்...
வறுமையாக கூட இருக்கலாம் ஆனால் நல்ல பெற்றோர் வாய்ப்து என்பது பெரிய விஷயம்... தன் அம்மா இன்னோருவனுடன் படுத்து புரள்வதை எந்த பையன் ஒத்துக்கொள்வான்...
அதே போல் சொந்த மண்ணை விட்டு விட்டு வேற்று மண்ணில் வாழ்வது என்பது... ரொம்ப கொடுமையானது... என்னதான் சேப்டி வாழ்க்கை என்றாலும்... அது பிரச்சனைக்குறிய வாழ்க்கை...சட்டென குரல் உயர்த்தி எந்த கேள்வியும் கேட்டு விட் முடியாது... இன்னும் அதிகார பலம் பொருந்திய இராணுவ கட்டுபாட்டில் இருக்கும் நாடுகளில் இன்னும் எதுவும் பேந முடியாது... காலம் காலமாக எம்மக்கள் இலைங்கையில் வாழ்ந்து குடியுறுமை பெற்ற போதும் அந்த நாடும் அந்த நாட்டு மக்களும் எம்மக்களை வேற்று கிரகவாசிகள் போலவே வழி நடத்தினார்கள்....
இது போலான வாழ்க்கை பிரச்சனையும்,இடப்பெயர்வு பிரச்சனை கொண்ட ஒரு சிறுவன் தனது அப்பாவைதேடி போவதுதான் இந்த படத்தின் கதை...
The Other Bank (Gagma Napiri) படத்தின் கதை இதுதான்....
12வயது டிடோவின் அப்பா... Republic of Abkhazia நாட்டு விடுதலைக்காக போருக்கு போய் இருக்க.. அதனை ஜார்ஜியா நாடு இராணுவம் எளிதில் வீ்ழ்த்தினாலும் இன்னும் போர் முடியவில்லை... டிடோ அம்மா இன்னோருவனுடம் படுக்கையில் பார்க்க அம்மாவை வெறுத்து அப்பாவிடம் செல்ல முடிவெடுக்கின்றான்...டிடோ சின்ன சின்ன திருட்டு வேளைகளில் ஈடுபடுகின்றான்... அவன் அப்பாவை தேடி Republic of Abkhazia செல்ல முடிவெடுக்கின்றான்... அப்படி போவது ஒன்றும் சதாரான விஷயம் இல்லை இரு நாட்டு எல்லைகளை கடந்து அவன் செல்ல வேண்டும்... அப்படி சொல்ல அவன் நண்பன் ஒரு ஐடியா கொடுக்கின்றான்... நீ பேசினால் உன் பாஷையை வைத்து கண்டு பிடித்து விடுவார்கள்... நீ ஊமை போல் நடித்து விடு என்ற சொல்ல.. அவனும் அவ்வறே செய்து பல தமைகளை தாண்டி சொந்த மண்ணுக்கு போய் சேருகின்றான்... அங்கே அவன் அப்பாவை பார்த்தானா? இல்லையா? என்பதை வெண்திரையில் காண்க...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
இந்த படம் சென்னை எழாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட்டு ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றது என்பேன்...
இந்த படத்தின் இயக்குனருக்கு இதுவே முதல் படம்...
இந்த படம் 17 விருதுகளை வென்ற படம்...
முதல் படத்தில் இது போலான வெயிட்டான சப்ஜெக்ட்டை எடுத்துக்கொள்ள நிரம்ப தைரியம் வேண்டும்..George Ovashvili இயக்குனருக்கு பாராட்டுகள்
அந்த பையன் அவன் மண் மிதித்து அங்கு இருக்கும் சில இளைஞர்கள் அந்த மண்ணின் கலாச்சார இசையை அதாவது நமது பறை போன்ற லோக்கல் இசையை இசைக்க அந்த பையக் போடும் ஆட்டம் பார்வையாளர்கள் கண்களில் இருந்து கண்ணீரையும் உற்சாகத்தையும் அந்த காட்சி கொடுத்து என்றால் மிகை இல்லை...
ஒரு காரில் போகும் போது ஒரு இளம் பெண்ணுக்கு லிப்ட் கொடுக்க அந்த பெண் தயங்க ... இந்த சின்ன பையனை பார்த்து நம்பிக்கையில் ஏற... அவளை பாலியல் வன்புனர்வு செய்யும் போது இந்த பையன் கத்தி கூச்சல் போடும் காட்சி அற்புதம்...
அந்த நாடு நம் நாட்டை விட ரொம்பவும் வறுமையி்ல் பின் தங்கி இருப்பதை அந்த நாட்டின் பேருந்து பறைசாறிவிடுகின்றது... சாலைகள் எல்லாம் நமது சென்னையின் நகரின் சாலைகன் போல் இருக்கின்றன... இருப்பினும் அது கிராமம் இது நகரம் அவ்வளவுதான்...
சொந்த மண்ணை மிதித்தால் அது எப்படி பட்ட சோகத்தையும் தூங்கி தூர போட்டுவிடும் என்பதையும் மென்சோகமுமாக படத்தை முடித்து இருப்பார் இயக்குனர்...
பார்டர் கிராஸ் செய்யும் காட்சியில் இந்த சிறுவனுக்காக பேசி உயிர் விடும் அந்த இளைஞனும் இரக்கமற்ற ராணுவம் எல்லாவற்ரறயும் பார்க்கும் போது இலங்கை பரச்சனை நினைவுக்கு வராமல் இல்லை...
படத்தின் டிரைலர்....
படக்குழவினர் விபரம்...
டைரக்டர்..George Ovashvili
Title: Gagma Napiri
Running Time: 90 Minutes
Status: Production/Awaiting Release
Country: Georgia, Kazakhstan
Genre: Drama, Foreign
அன்புடன்
ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி..
நன்றி .........
ReplyDelete//சொந்த மண்ணை மிதித்தால் அது எப்படி பட்ட சோகத்தையும் தூங்கி தூர போட்டுவிடும்//
ReplyDeleteஅருமையான வரிகள், படத்தின் ஓட்டமும் நன்றாகத்தான் இருக்கிறது.
ஓட்டு போட்டாச்சு பாஸு
ReplyDeleteஇந்த மாதிரி நல்ல படங்கள் பற்றி தொடர்ந்து எழுதுங்கள் தல .அப்புறம் போன பட விமர்சனத்திலும் சரி. இந்த பதிவிலும் சரி .எழுத்து பிழைகள் அதிகமா இருக்கு. பாத்துக்குங்க, ( ரொம்ப பிஸியா ?)
ReplyDeleteஎங்கிருந்துதான் படங்களைத் தேடிப் பிடிகிறீங்களோ!!அருமையான விவரிப்பு..வாழ்த்துக்கள்
ReplyDeleteWhere can i get the movie.....pls send the link
ReplyDeleteWhere can i get the movie.... pls send the link...
ReplyDeleteநன்றி இராஜபிரியன்..
ReplyDeleteநன்றி சைவ கொத்துபரோட்டா.. மிக்க நன்றி இது போல் தொடர் பின்னுட்டம் ஓட்டு போடுவதன் மூலம் நான் இன்னமும் நிறைய எழுதிக்கொண்டு இருப்பேன்...
ReplyDeleteஎன்னுடைய பலமே உங்களை போன்றவர்களால்தான்...
நன்றி ராசா மிக்க நன்றி...
ReplyDeleteஇந்த மாதிரி நல்ல படங்கள் பற்றி தொடர்ந்து எழுதுங்கள் தல .அப்புறம் போன பட விமர்சனத்திலும் சரி. இந்த பதிவிலும் சரி .எழுத்து பிழைகள் அதிகமா இருக்கு. பாத்துக்குங்க, ( ரொம்ப பிஸியா ?)//
ReplyDeleteகண்டிப்பா எழுதுறேன் நீங்கள் ஓட்டும் பின்னுட்டழம் தொடர்ந்து போடும் போது எனக்கு என்ன கவலை...
வேலை பளு அதிகம் அதனால் அவசரத்தில் அந்த பிழைகள்..
எங்கிருந்துதான் படங்களைத் தேடிப் பிடிகிறீங்களோ!!அருமையான விவரிப்பு..வாழ்த்துக்கள்//
ReplyDeleteநன்றி மயில்ராவணன்..மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்...
Where can i get the movie.....pls send the link// சாதிக் குகூளில் தேடுங்கள்.. கிடைக்கும்...
ReplyDelete