(MADE IN HUNGARIA)18+ உலக சினிமா/ ஹங்கேரி.. உற்சாக இசை...

எனக்கெல்லாம் மைக்கெல் ஜாக்சன் பாடல்களில் எந்த பாட்டுக்கும் அர்த்தம் தெரியாது... நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஐ லைக் யூ என்ற ஆங்கலி சொல்லுக்கு , தமிழ் அர்த்தம் தெரியாது... அப்படித்தான் நான் படித்தேன்... நான் ஒரு சரியான மக்கு....அப்போது எல்லாம் ஒரு கிணற்றுதவளையாகவே என் வாழ்க்கை இருந்தது... (இப்போதும் அப்படித்தான்...)

முதன் முதலாக பாண்டி ஆனந்தா தியேட்டரில் படம் தொடங்குவதற்க்கு முன் ஒரு மைக்கேல் ஜாக்சன் இசை தொகுப்பில் ஒரு பாடலை ஓட விடுவார்கள்.. அந்த பாடலின் அர்த்தம் எனக்கு தெரியாது... ஆனால் அந்த இசை என்னை சொக்க வைத்தது என்பேன்... அந்த பாடலை அர்த்தம் தெரியாத என் உதடுகள் உச்சரிக்க தொடங்கின... இருவில் சைக்கிள் மிதித்து வீடு வருகையில் என் கவலையை அந்த பாடல் போக்க வைத்து என்பேன்...

அந்த பாடல் டேன்சரஸ் தொகுப்பில் வந்த பாடல் எனக்கு சுத்தமாக இப்போது கூட அர்த்தம் தெரியாது... அர்த்தம் தெரிகின்றதோ இல்லையோ... அந்த பாடல் என்னை ரசிக்க வைத்தது...அதற்க்கு காரணம் இசை....அது போல இந்த ஹாங்கேரி படம் உங்களை உற்சாகபடுத்தும் என்ற நம்புகின்றேன்...

made in hungaria படத்தின் கதை இதுதான்...

1960ல் மிக்கியின் குடும்பம் கம்யுனி்ஸ்ட் நாடான ஹாங்கேரிக்கு வருகின்றது...இங்கு வந்துதான் மிக்கியின் அப்பா வேலை தேட வேண்டும்...வசதியாய் வாழ்ந்த குடும்பம் வேறு....கட்டுபாடான கம்யுனிஸ்ட் நாட்டில் அமெரிக்க இசை கலாச்சாரம் போன்றவை தடை செய்யபட்டு இருக்கின்றன...மிக்கி அமெரிக்க உடையில்தான் அவன் பவனி வருகின்றான்.... அவனது உடை , சிகை அலங்காரம் எல்லாம் அமெரிக்க இளைஞனை போல் உடை உடுத்துகின்றான்...ஹங்கேரி இளைஞர்களுக்கு மேற்கத்திய கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு... ஆனால் கட்டபாடுகள் கொண்ட நாட்டில் எப்படி அந்த கட்டுபாடுகள் உடைத்து எரிய மூலகாரணமாக மிக்கி இருக்கின்றான் என்பதுதான் மீதி கதை என்றாலும்... அதன் நடுவில் மிக்கிக்கு ஏற்படும காதல், லோக்கல் இளைஞனுடன் பாட்டு போட்டியில் ஜெயிக்க வேண்டிய கட்டாயம்....அரசியல் தலையீடுகள் என சுவாரஸ்யம் கலை கட்டும் இடங்கள்...மிக்கி ஹங்கேரி வந்த முதல் நாளே... ராக் அன்டு ரோல் மியுசிக் இசைத்து பாட அந்த இளைஞர்களும் யுவதிகளும் போடும் கும்மாள ஆட்டம் மற்றும் உற்சாகம் படம் முடியும் வரை மொழி தெரியாத பார்வையாளனையும் இந்த படம் வசீகரிக்க வைக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

1960ம் ஆண்டு ஹாங்கேரியை அப்படியே நம் கண் முன் நிறுத்திய ஆர்ட் டைரக்டருக்கு முதல் பாராட்டு...

ஒளிப்பதிவாளருக்கு... படம் முழுவதும் ஆடும் ஆட்டங்களை அந்த உற்சாகத்தோடு பல ஆங்கில்களில் உள்வாங்கி கொண்ட கேமராவுக்கும்,உறுத்தாத ஒளிப்பதிவுக்கு இரண்டாம் பாராட்டு...

இசை... படத்தின் நாதம் இதுதான்... படம் முழுவதும் தடுக்கி விழுந்தால் பாடல்தான் என்றாலும் அதனை போர் அடிக்காமல் மிக உற்சாகமாய் இசைத்து இருக்கின்றார்கள்... அதனால் முன்றாம் பாராட்டு...

நான்காவது நடனம் இந்த பாடலுக்கு மேற்கத்திய சாயலோடு உற்சாக நடனம் அமைத்த நடன இயக்குனருக்கு.... அப்பா சான்சே இல்லை....

மொத்தமாக இந்த குழுவினை தேர்ந்து எடுத்த இயக்குனருக்கு மொத்த பாராட்டுகளும்....

அப்பாவுக்கும் மிக்கிக்குமான மனஸ்தாபங்கள்.... அது சரியாகும் இடம்...

மிக்கி காதலுக்காக அப்பாவின் பியோனோவையே தீக்கு தின்ன கொடுக்ககும் காட்சிகள் அற்புதம்..

அதே போல் அந்த உள்ளுர் இளைஞனுக்கு ஏற்படும காதலும்... அந்த காதலினால் அவன் திருட்டு குற்றத்தில் இருந்து காப்பாற்றபடுவதும் நல்ல டுவிஸ்ட்...
படத்தின் கிளைமாக்ஸ் எல்லோரையும் எழுந்து ஆட வைக்கும்...

இந்த படம் சென்னையில் நடந்த ஏழாது உலக படவிழாவில் உட்லன்ட்ஸ் தியேட்டரில் திரையிடபட்டது....

படத்தின் டிரைலர்...

படக்குழுவினர் விபரம்....

Director////Gergely Fonyó
Writers:
István Tasnádi (play)
István Tasnádi (screenplay)
Release Date:
February 2009 (Hungary) more
Genre:
Biography | Comedy | Musical | Music | Romance more
Tagline:
Music sets you free!
Plot:
Music sets you free! full summary | add synopsis

109 min
Country:
Hungary
Language:
Hungarian | English
Color:
Color
Aspect Ratio:
2.35 : 1 more
Filming Locations:
Budapest, Hungary


அன்புடன்
ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே உள்ள தகவல்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

7 comments:

 1. ஆங்கில படம் பார்க்க முடியாத குறையை, நான் தொடர்ந்து உங்கள் மூலம் குறைத்துக்கொண்டு வருகிறேன். சத்தியமாக சொல்கிறேன் எனக்கு வாக்களிக்க(ஓட்டு) தெரியவில்லை, நானும் பல முறை முயன்று தோற்றுவிட்டேன். அடுத்த வாரம் எனது நண்பர் சென்னையிலிருந்து எங்கள் ஊருக்கு வருகை புரிவதாக வாக்களித்துள்ளார். அவரிடம் கற்றுக்கொள்ளலாம் என பேராசையில் இருக்கிறேன் ............ அதுவரை நான் வாக்களிக்க தகுதியற்றவனாகவே இருக்கிறேன் ...........

  ReplyDelete
 2. ஆஹா அற்புதமான ஓப்பனிங்கோட இருக்கே பதிவு.. நன்றி தல..:)

  ReplyDelete
 3. Dear Mr. J

  Already Thangamani banned my DVD Rental Shop membership. You know I used to rent from new shop and I am saying that I am getting DVDs from my friends.....if you are keep on tempting for more films...then you have to resolve the dispute between myself and my thangamani.

  Another great introduction to a film. As I always says I like way you start articles....from personal stories....then to the actual content.

  Even I too have doubt in voting...several times I used to vote for you in tamilmanam & tamilish...but lot of the time I have to search your articles...I don't know what is + vote or - vote.

  Small article about voting will helps us. At least we have to vote for the effort your are taking to entertain us.

  ReplyDelete
 4. MEEEEEEEEEEE THE "FIRST"UUUUUUUU
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  like that I can not say.... Rajapriyan and Bala seems to be more alert.

  ReplyDelete
 5. MEEEEEEEEEEE THE "FIRST"UUUUUUUU
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  like that I can not say.... Rajapriyan and Bala seems to be more alert.

  ReplyDelete
 6. hi...
  we want ur email ID.. plz send it..

  ReplyDelete
 7. ஒட்டு போட்டாச்சு. தலைப்புல 18 + ன்னு இருக்கு.படிச்சா அப்படி ஏதும் இல்லையே ?
  ஹி,ஹி,ஹி.சும்மாதான் சொன்னேன். மற்றுமொரு நல்ல படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner