(American Virgin) 18++ அமெரிக்க (கன்னி)

பதிவர் பின்னோக்கிரொம்பவும் குறைபட்டுக்கொண்டார்... டைம்பாஸ்படங்கள் பதிவு போட்டு நாள் ஆகி விட்டதாக குறைபட்டுக்கொண்டார்... நண்பர் பதிவர் பின்னோக்கிக்காகவும் அவர் குறை தீர்ககவும் இந்த பதிவு...

எல்லா ஊரிலும் பெண் என்பவள் கன்னி கழியாமல் இருக்க வேண்டும்... என்றுதான் ஆண் சமுகம் விரும்புகின்றது.. ஆனால் ஆண் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்ற வரையறை உலகில் எங்கும் கிடையாது... ஆனால் பெண் என்பவள் அப்படி அல்ல...

பாராம்பரிய மிக்க குடும்பத்தில், கடவுள் பக்தி அதிகம் கொண்ட குடும்பத்தில் இருக்கும் பெண் பிள்ளைகளை, ரொம்பவும் பொத்தி பொத்தி வளர்ப்பார்கள்... தாயும் தந்தையும், அவளுக்கு எல்லாமுமாக இருப்பார்கள்... ஆனால் சமுகம் அப்படி அல்ல...

தாய் தந்தை மட்டுமே வாழ்வின் எல்லா கணங்களிலும் கூடவே வர போவதில்லை... இது போன்ற பொத்தி பொத்தி வளர்க்கபட்ட பெண்கள் வாழ்க்கை படகில் ஏறும் போது பல பெண்களால் அதனை எதிர்கொள்ள தெரிவதில்லை...

சமுக அமைப்பில் நல்லவர்களும் இருப்பார்கள் தீயவர்களும் இருப்பார்கள்... ஒரு பரிசுத்தமான பெண் அதாவது 100 பர்சென்ட் பியுரிட்டியாக, வளர்ந்த பெண், பெற்றோரை விட்டு வெளியே வரும் போது, எப்படி100 பர்சென்ட் பியுரிட்டி எப்படி? படி படியாக குறைகின்றது... என்பதை அமெரிக்கர்களுக்கே உரிதான செக்ஸ் நகைச்சுவையில் இந்த படத்தை எடுத்து இருக்கின்றார்கள்...



American Virgin படத்தின் கதை இதுததான்......

பிரிசில்லா கட்டுபாடன குடும்பத்தில் வளர்க்கபட்ட பெண்... சிறுவயதில் இருந்தே ஒழுக்கத்தை 5 படி அதிகமாகவே ஊற்றி வளர்க்கின்றார்கள் அவள் பெற்றோர்...

அந்த பெண் பருவ வயதில் அவள் பெற்றோரை பிரிந்து கல்லூரியில் படிக்க வேண்டிய கட்டாயம்...அமெரிக்க கல்லூரிகளில் எல்லாமே கொஞ்சம் அதிக படியாக இருக்கின்றது.... பெண்கள் இருக்கும் ஹாஸ்டலிலேயே ஆண் நண்பர்களை அழைத்து வந்து உறவு வைத்துக்கொள்கின்றார்கள்... கஞ்சா புகைக்கின்றார்கள்....

பிரிசில்லா உட்காரும் இடத்தையே சுத்தபடுத்தி விட்டு உட்காரும் ரகம்... ஒரு பியர் அடிப்பதையே ரொம்பவும் பாவாமாக நினைப்பவள்... செக்ஸ் அவனை பொறுத்தவரை பாவமான செயல்... முதலிரவில் விளக்கை அனைத்த பிறகு என்ன நடக்கும் ?என்று அப்பாவியாக கேட்பவள்... அவளின் ரூம் மெட் முதலில் ஒரு பார்ட்டியில் அவளுக்கு போதை மருந்து கலந்த ஜெல்லை தின்னும் கொடுக்கும் போது... போதையில் மிதந்து பிரிசில்லா அவளது உடைகளை களைந்து அரை நிர்வாணமாக ஆடுகின்றாள்..... அப்போது அவளை ஒரு டிவி நிகழ்ச்சிகாரர்கள் அவளை படமெடுத்து வைக்க... இவள் ஸ்காலர்ஷிப்பில் படிப்பாதால் அந்த அரை நிர்வாண காட்சிகள் வெளியானால் படிப்பு வேறு கெட்டு விடும் என்பதால்... அந்த டேப்பை எடுக்க பிரிசில்லா அலைவதும்... அவள் கொஞ்சம் கொஞசமாக100 பர்சென்ட்டில் சுத்தமாக இருந்தவள்.... எப்படி படிப்படியாக சூழ்நிலை எவ்வாறு குறைக்கின்றது என்பதை மார்பக கவர்ச்சியாக கதை சொல்லி இருக்கின்றார்கள்....

படத்தின்சுவாரஸ்யங்கள்.......

இது போலான கதைகளில் லாஜிக் பார்க்கவேமாட்டார்கள்....

அமெரிக்கர்கள்....நீங்கள் எழுத்தில் எழுத யோசிக்கும் வார்த்தைகளை பேசுவார்கள்... நீங்கள் பேச யோசிக்கும் வார்த்தைகளை அவர்கள் படமாகவே எடுத்து விடுவார்கள்...

படத்தில் ஒரு டிவி நிகழ்ச்சிகாக காம்பெயராராக Rob Schneider இதற்க்கு முன் பிக்டாடி,அனிமல் போன்ற காமெடி படங்களில் நடித்தவர்.... அவர் வரும் காட்சிகளில் பல பெண்கள் சடார், சடார் என்று பனியனை தூக்கி பிரம்மனின் வள்ளல் தன்மை இவ்வளவுதான் என்பது போல் காட்டுகின்றார்கள்...

பிரிசில்லாவின் நண்பன் மார்கெட்டில் மார்பக்த்தை பற்றி யோசிக்கையில்,கிராபிக்சில் ஒரு ஆயிரக்கனக்கான வித விதமான மார்பகங்கள் கிராபிக்சில் அவனை சுற்றி பறப்பது போலான காட்சி அங்கே மட்டும் சாத்தியம்....

பிரிசில்லா தன் கன்னிதன்மையை அழித்து கொள்ள ஒவ்வொறு ஆளாக தேடிக்கொண்டு நீ வரியா? நீ வரியா என கேட்காத குறையாக அவள் செல்லும காட்சிகள் குபிர் சிரிப்பை வரவழிக்கும் இடங்கள்....

பிரிசில்லா பாத்திரத்தில் நடித்து Jenna Dewan அப்பாவிதனமான நடிப்பு,படத்திற்க்கு பெரிய பலம்..
படத்தின் கடைசி டுவிஸ்ட் கொஞ்சம் ரசிக்கலாம்...
படத்தின் டிரைலர்....




படக்குழுவினர் விபரம்....


Directed by Clare Kilner
Produced by Lucas Jarach
Written by Jeff Seeman
Starring Rob Schneider
Jenna Dewan
Brianne Davis
Bo Burnham
Cinematography Oliver Curtis
Distributed by Echo Bridge Entertainment
Release date(s) 2009
Country United States
Language English

பலர் அலுவலகத்தில் இந்த தளத்தை பார்க்கின்றார்கள்.. மிக முக்கியமாக பல பெண்கள் இந்த தளத்தை பார்வையிடுவதாகவும் 18+++ படங்கள் செய்திகள் எழுதுவதாக இருந்தால் தளத்தின் மேல் எதாவது எச்சரிக்கை கொடுக்க சொல்லி பெண் வாசகிகளிடம் இருந்து அன்பான உத்தரவு வந்த காரணத்தால் இனி அது போல் படங்கள் எழுதும் போது 18++ வார்னிங் பிக்சர் போடுகின்றேன்... இதனை அலுவலகத்தில் பார்க்காமல் வீட்டில் போய் பார்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்..... இது ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவான அறிவிப்பு....

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

14 comments:

  1. எனது கோரிக்கையை பரிசீலித்து, இவ்வளவு சீக்கிரமாக நிறைவேற்றுவீர்கள் என நினைக்கவில்லை. வாழ்க. ஜாக்கி. வளர்க அவரது புகழ்

    ReplyDelete
  2. ரொம்ப "இயல்பா" எடுத்து இருக்காங்க போல.

    ReplyDelete
  3. ஒன்னும் சொல்றதுக்கில்ல... டிவிடி வாங்க வேண்டியதுதான்.. ;)

    ReplyDelete
  4. ///மிக முக்கியமாக பல பெண்கள் இந்த தளத்தை பார்வையிடுவதாகவும் 18+++ படங்கள் செய்திகள் எழுதுவதாக இருந்தால் தளத்தின் மேல் எதாவது எச்சரிக்கை கொடுக்க சொல்லி பெண் வாசகிகளிடம் இருந்து அன்பான உத்தரவு வந்த காரணத்தால் இனி அது போல் படங்கள் எழுதும் போது 18++ வார்னிங் பிக்சர் போடுகின்றேன்.///

    ஒரு அளவா கதை விடுங்க ஸார்..! நீங்க பண்ற சேட்டைக்கு பெண் பதிவர்களை எதுக்கு இழுக்குறீங்க..?

    பிய்ச்சிருவேன் பிய்ச்சு..!!!

    ReplyDelete
  5. //அமெரிக்கர்கள்....நீங்கள் எழுத்தில் எழுத யோசிக்கும் வார்த்தைகளை பேசுவார்கள்... நீங்கள் பேச யோசிக்கும் வார்த்தைகளை அவர்கள் படமாகவே எடுத்து விடுவார்கள்...//

    சூப்பராச் சொன்னீங்க... அமெரிக்கன் ஸ்பை பார்த்தே அந்த பாதிப்பு இன்னும் தீரலை... இது அதுக்கும் மேல இருக்கம்போல...
    எலே பாண்டி விட்றா வண்டியை டோரான்டுக்கு..

    ReplyDelete
  6. எனது கோரிக்கையை பரிசீலித்து, இவ்வளவு சீக்கிரமாக நிறைவேற்றுவீர்கள் என நினைக்கவில்லை. வாழ்க. ஜாக்கி. வளர்க அவரது புகழ்--

    நன்றி பின்னோக்கி உங்கள் தொடர் வருகைக்கும் பின்னுட்டத்துக்கும் நான் எதாவது செய்ய வேண்டும் அல்லவா?... அதான் மிக்க நன்றி..

    ReplyDelete
  7. நன்றி ராஜ பிரியன்

    நன்றி சைவ கொத்து பரோட்டா-..

    ReplyDelete
  8. ஒன்னும் சொல்றதுக்கில்ல... டிவிடி வாங்க வேண்டியதுதான்.. //

    வாங்கி பாரு மணி...நல்ல சிரிப்பான படம்தான்...

    ReplyDelete
  9. பெண் வாசகிகளிடம் இருந்து அன்பான உத்தரவு வந்த காரணத்தால் இனி அது போல் படங்கள் எழுதும் போது 18++ வார்னிங் பிக்சர் போடுகின்றேன்.///

    ஒரு அளவா கதை விடுங்க ஸார்..! நீங்க பண்ற சேட்டைக்கு பெண் பதிவர்களை எதுக்கு இழுக்குறீங்க..?

    பிய்ச்சிருவேன் பிய்ச்சு..!!!//

    மிஸ்டர் உண்மை தமிழன் நீங்க வாசன் ஐ கேரில் கண்ணை செக் செய்து கொள்வத ரொம்ப நல்லது என்று நினைக்கின்றேன்...

    என் வாசகிகளிடம் இருந்து என்றுதான் எழுதி இருக்கேன்... நான் எங்கயும் பெண் பதிவர்கள் பற்றி குறிப்பிடபடவே இல்லை...

    ஏணிமாடுன்னா நோனிமாடுன்னு புரிஞ்சிக்கற பழக்கம் உங்களுக்கு எப்ப மாற போறதுன்னு தெரியலை...

    டைட்டல் பார்க்கில் இருந்து ஒரு வாசக நண்பர் பேசி இருந்தார் எனது.. தளத்தை அவருக்கு அறிமுகபடுத்தியதே ஒரு பெண்கள் கூட்டம் என்றும்... எனது சான்ட்வெஜ் கட்டுரைக்கு விசிறி என்றும் சொன்னார்...

    நான் எனது வாசக நண்பிகளை பற்றி மட்டுமே சொன்னேன்...பெண் பதிவர்களை நான் குறிப்பிடவே இல்லை..

    அதே போல் நான் கதை விட்டு ஒன்றும் ஆக போவதில்லை...

    அதே போல் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்யும் பல பெண்கள் இந்த பதிவை படிப்பதும் எனக்கு தெரியும்...
    அவர்களுக்காக நான் சொன்னதை...

    எப்பவுமே தப்பா மாத்தி யோசிக்கிறிங்களே? அது எப்படி???? உண்மை தமிழன்...

    ஒரு வேளை உண்மை தமிழனாக இருப்பதாலா???

    ReplyDelete
  10. சூப்பராச் சொன்னீங்க... அமெரிக்கன் ஸ்பை பார்த்தே அந்த பாதிப்பு இன்னும் தீரலை... இது அதுக்கும் மேல இருக்கம்போல...
    எலே பாண்டி விட்றா வண்டியை டோரான்டுக்கு//

    நன்றி நாஞ்சில் மிக்க நன்றி தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்துக்கும்..

    ReplyDelete
  11. //அமெரிக்கர்கள்....நீங்கள் எழுத்தில் எழுத யோசிக்கும் வார்த்தைகளை பேசுவார்கள்... நீங்கள் பேச யோசிக்கும் வார்த்தைகளை அவர்கள் படமாகவே எடுத்து விடுவார்கள்...//

    :))

    சூப்பர்.


    நலமா??

    ReplyDelete
  12. மங்களூர் சிவா அண்ணே நலமா?ரொம்ப நாளாய் காணவில்லையே?

    ReplyDelete
  13. ஜாக்கி அண்ணே,
    இந்த படமும் தரவிறக்கி விடுகிறேன்.
    அண்ணே விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அண்ணே, முன்பே கருத்து போட்டிருந்தேன்.
    ஓட்டுக்கள் போட்டாச்சி

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner