எங்கள் கிராமம் (கவிதை)


எங்கள் கிராமம்



முட்டிக்கால் சேற்றில்
கொறவை மீன் பிடித்த
பெரியவாய்க்கால்
தூர்ந்து போய் வெகுநாளாயிற்று....

தார்சாலைகளில்
வெது வெதுப்பாய்
மாட்டுசானம் பாத்து
பலவருடமாயிற்று....


வீட்டுக்கு வெள்ளையடிப்பது
அவுட்டாப் பேஷனாகிவிட்டது...

ஒரு வார
பொங்கல் பண்டிகை உற்சாகத்தை
கலைஞரும், சன்னும்
களவாடி கொண்டுவிட்டார்கள்...

சாலைகளில்
பளிர் கலர்களில் உடை அணிந்த
தாவாணி பெண்கள்
காணாமலே போய்விட்டனர்...

சிறுவர்களின்
கில்லி ஆட்டம்,
பாண்டி ஆட்டம்,
ஐஸ்பாரி, போன்றவை
தற்கொலைசெய்து கொண்டு விட்டன....

கல் அடுப்பு கட்டி
விறகுபுகை கண்கலங்க வைத்து,
மண்பானையில் பொங்கலிட்டது
அரிதாய் போய்.... காஸ் அடுப்பும்,
ஸ்டெய்னஸ் ஸ்டிலும்,
எங்கள் கலாச்சாரமாயிற்று...


பட்டுசாமி பொண்ணையும்
காசாம்பூ பையனையும்
இலகுவாய் அடையாளபடுத்திக்கொண்ட
பழக்கம் அழிந்து விட்டது...

மறைவாய் கைமைதுனம் செய்த
மாரியாத்தா கோவில் மாந்தோப்பு
கான்கிரீட் காடாய் மாறிவிட்டது...

எல்லை காவல் தெய்வம்
ஐயனாரை சுற்றி...
சன்,டாடாஸ்கை,
பயிர்விளைச்சல் அமோகம்...

மஞ்சு விரட்டு நடந்த
மாரியாத்தா கோவில் மைதானத்தில்,
நான்கு பசுக்களும்,இரண்டு காளைகளும்
சாங்கியத்துக்கு பலூன்கொம்போடு நிற்க்கின்றன...


மரவள்ளி கிழங்கு,
சுருளி கிழங்கு,
சக்கரை வள்ளி கிழங்கு,
கடலை மிட்டாய் விற்ற பாட்டிகளும்...
ஆலமரத்தடியும்,
அரசமரத்தடியும்,
சடுதியில் மறைந்து விட்டன...


விரல் முனை சுண்ணாம்புக்கறை
பெரியவ்ர்கள் காணாமல் போய்,
உள்ளங்கையில் ஹான்ஸ் தேய்க்கும்
இளைஞர்கள் வந்து விட்டார்கள்....

சைடில் ரோஜா பூ வைத்து நடந்தாள்...
அவள் தேவிடியா என்று உருவகபடுத்தியவர்கள்...
லோ ஹீப்பையும்,லோ நெக்கையும்
ஏற்றுக்கொண்டு விட்டார்கள்...

முப்பதே குடும்பங்கள் வாழ்ந்த கிராமம்....
மூவாயிரம் நகர்களாய் விரிந்து கிடக்கின்றது....

எல்லாம் மாறி
மாறாமல் இன்னும்
துரு பிடித்த வண்ணம் நிற்கிக்கின்றது....
கூத்தப்பாக்கம் கிராமம்
உங்களை அன்புடன்வரவேற்கின்றது...
என்கின்ற பஞ்சாயத்து போர்டு
பெயர்பலகைதான்...






அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

32 comments:

  1. பள்ளி விடுமுறை காலங்களில் என் தாத்தா இருந்த கிராமத்திற்கு செல்வேன்,
    அந்த அழகிய நாட்களை அசை போட வைத்து விட்டது உங்களின் கவிதை. அழகு.
    (ஓ போட்டாச்சு தலைவா )

    உங்களுக்கும், அணைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நேட்டிவிட்டி
    ரியாலிட்டி
    கிரியேடிவிடி
    பெண்டாஸ்டிக்

    ReplyDelete
  4. கவிதை, யோசிக்க வைக்கிறது ஜாக்கி சார்.
    பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  5. பள்ளி விடுமுறை காலங்களில் என் தாத்தா இருந்த கிராமத்திற்கு செல்வேன்,
    அந்த அழகிய நாட்களை அசை போட வைத்து விட்டது உங்களின் கவிதை. அழகு.
    (ஓ போட்டாச்சு தலைவா )
    --//

    நன்றி சைவ கொத்து பரோட்டா... கொசவத்தி சத்த வச்சிட்டோமில்லை...

    நன்றி வருகைக்கும் ஓட்டுக்கும்...

    ReplyDelete
  6. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//
    நன்றி சினிமா புலவன்.... உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்...நன்றிகள்...

    ReplyDelete
  7. நேட்டிவிட்டி
    ரியாலிட்டி
    கிரியேடிவிடி
    பெண்டாஸ்டிக்//

    நன்றி

    தண்டோரா....

    ReplyDelete
  8. கவிதை, யோசிக்க வைக்கிறது ஜாக்கி சார்.
    பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி//

    நன்றி ராம் திருப்பூர்...

    ReplyDelete
  9. ஜாக்கி சத்தியமாய் இந்த கவிதையை யாராலும் படமாய் எடுக்க முடியாது. வார்த்தைகள் குத்திய கத்திகளை

    அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்...

    வாழ்த்துக்கள். ::))

    ReplyDelete
  10. சூப்பர்.. நீங்க கவிதை எழுதுவீங்களா சொல்லவேயில்லை... போட்டோவும் நல்லாயிருக்கு

    ReplyDelete
  11. //கலைஞரும், சன்னும்
    களவாடி கொண்டுவிட்டார்கள்...//

    என் கன்டனத்தை பதிவு செய்கிறேன்..
    ஏன் விஜய் டி.வி., ராஜ் டி.வி யை விட்டுவிட்டீர்கள்?

    //சைடில் ரோஜா பூ வைத்து நடந்தாள்...
    அவள் தேவிடியா என்று உருவகபடுத்தியவர்கள்.//

    வேசின்னு ரீஜன்டா சொல்லுண்ணே..

    //என்கின்ற பஞ்சாயத்து போர்டு
    பெயர்பலகைதான்.//

    உங்களுக்காவது நிக்குது.. எங்களுது படுத்துகிச்சி!!

    ஒவராலா பார்த்தா உங்க கவிதை..
    ஆவரேஜூக்கு மேல..
    அட்டகாசத்துக்கு கீழே..
    :-))))))))))))

    ReplyDelete
  12. இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அடா.. அடா.. அடா..
    சூப்பருண்ணே..
    பொங்கல் வாழ்த்துக்கள்..
    அப்படியே கொஞ்சம் நம்ம பக்கமும் வந்து போங்க... :)
    http://anbudan-mani.blogspot.com

    ReplyDelete
  14. அருமை,

    இதேபோன்ற ஏக்கங்களும் என்னிடமும் உண்டுதானே. வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு பொங்கலிடும்
    ஜாக்கி,பழைய நினைவுகளை கொண்டு வந்துவிட்டாய் நண்பா!

    பொங்கல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  15. ரொம்ப பிடிச்சிருக்கு சேகர்.

    ReplyDelete
  16. மிக அருமையான வார்த்தைகளுடன், கிராமத்தை சுற்றி வந்த உணர்வு. நீங்கள் அடிக்கடி கவிதை எழுதவேண்டும்.

    பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    தார்சாலை, சாணம், டிவி. சூப்பர்

    ReplyDelete
  17. அதெல்லாம் இனி கனவு காலம் தான்......
    பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. Dear Mr. J

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    Now a days celebration means sitting in front of TV.

    pongaloooo pongal became pongal-LOW-pongal.

    Each and every line of your poem is excellent and it reflects the feeling of my childhood days.

    ReplyDelete
  19. அண்ணே பொங்கலோ பொங்கல்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    ஓட்டுக்கள் போட்டாச்சி

    ReplyDelete
  20. ஜாக்கி, இந்த கேபிள் கூட சேராதேன்னு எத்தனை வாட்டி சொல்றது, எண்டர் கவிதை வியாதி வந்திருச்சி பாரு..

    அப்புறம் இனிமே போட்டோ எடுக்கும்போது தொப்பி போட்டுக்கோ, கண்ணு கூசுது- ஒண்ணுமே தெரியல..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  21. ரசித்தேன்!

    ReplyDelete
  22. நல்லா கவிதை எழுதுறீங்க ஜாக்கி தொடருங்கள்.

    என் இனிய தமிழ் புத்தாண்டு , பொங்கல் வாழ்த்துக்கள்.

    இந்த தமிழ் புத்தாண்டு தங்களுக்கு பெருமை தரகூடிய ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. கவிதை-ன்னு டைட்டில் பார்த்ததும்.. கொஞ்சம் நடுங்கிட்டேதான் படிச்சேன்.

    --

    கலக்கல் ஜாக்கி!! :) :) வெரி நைஸ்!

    --

    தொடர மாட்டீங்களே?

    --

    பொங்கல் வாழ்த்துகள்! :)

    ReplyDelete
  24. நல்ல அழுத்தம் திருத்தமான நடை... கவிதையும் நல்லாத்தான் இருக்கு... வாழ்த்துகள்...

    ReplyDelete
  25. தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. \\சாலைகளில்
    பளிர் கலர்களில் உடை அணிந்த
    தாவாணி பெண்கள்
    காணாமலே போய்விட்டனர்..//

    நானும் இந்த மாதிரி எதாவது பிகர் கண்ணலப்ப்படுமானு தேடுறேன் ஒருத்தரும் சிக்கமட்டேன்குறங்க..

    ReplyDelete
  27. பொங்கல் வாழ்த்துக்கள் ஜாக்கி.

    ReplyDelete
  28. பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  29. தல ................. அருமை உண்மையை சொல்லி உருகவச்சிடிங்க ............... இனிய பொங்கல் வாழ்த்துகள் ....... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் .........

    ReplyDelete
  30. //தார்சாலைகளில்
    வெது வெதுப்பாய்
    மாட்டுசானம் பாத்து
    பலவருடமாயிற்று..

    nalla eekkam kalantha sudukinra kavithai

    ReplyDelete
  31. அன்பின் ஜாக்கி சேகர் - அருமையான கவிதை - இளவயதில் சுற்றிய - கிராமங்களை - அப்படியே படம் பிடித்தது போல கவிதை வடிவில் எளிய சொற்களைக் கொண்டு - ஜாக்கியின் ட்ச்சுடன் - எழுதியமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner