மனிதம் செத்துவிட்டது....

நானும் என் மனைவியும் நேற்று நங்க நல்லூரில் வீடு பார்த்து கொண்டு இருந்தோம்... என் மனைவிக்கு நங்கநல்லூர் பிடிக்கும்... வேறு சில காரணங்களுக்காக எனக்கு ரொம்பவும் பிடிக்கும்... சரியாக மாலை மூன்று மணியளவில்,ஒரு மலையாளத்து காப்பி கடையில் காபி சாப்பிட்டு கொண்டு இருந்தோம்... மலையாள சேச்சிதான் காபி போட்டு கொடுத்தார்... இரண்டு வாய் குடிக்கவில்லை... ஒரு கைனட்டிக் ஹோன்டாவில் ஒரு பெரியவர் ஒரு 50 கீலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டு இருந்தார்...


ரோட்டு பக்கத்தில் இருந்த குப்பை தொட்டியில் யாரோ நங்கநல்லூரில் ஞாயிற்றுகிழமை அதுவுமாக... நல்லி எலும்பை தின்று விட்டு குப்பை தொட்டியில் போட்டு இருக்க வேண்டும்... குப்பையில் கிடந்த எலும்புக்காக... இரண்டு நாய்களுக்கு இடையே... ஆக்ரோஷ சண்டை... சண்டை போட்டுக்கொண்டே ரோட்டில் வர, பெரியவருக்கு நாய் மேல் மோதாமல் இருக்க பிரேக் போட.... அங்கே ரோட்டில் கிடந்த கல் ஒன்று வண்டியை புரட்டி, புவியிர்ப்பு திசை நோக்கி இழுக்க...ஆஞ்சநேயர் கோவிலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் நிலையில் தரையில் தேய்து கொண்டே விழுந்தார்... நான் ஒரு 150 மீட்டர் தள்ளி பார்த்து கொண்டு இருந்தேன்...


அந்த பெரியவ்ர் விழுந்த இடத்தின் எதிரே இருந்த கடை உரிமையாளர்... வாழ்க்கையில் இது போல் வழுக்கி விழுவது எல்லாம் சாதாரணம் என்பது போல் கைகட்டிக்கொண்டு இருக்க... பக்கத்து கடைகாரர்கள் எல்லாம் கை கட்டி வேடிக்கை பார்க்க, அந்த பெரியவர் சுய நினைவு அற்று விழந்து கிடந்தார்... நான் அவரை தூக்க வேகமாக ஓட ஆரம்பித்தேன்.... நம்புங்கள்.... மூன்று சிறுவர்கள் ஒரு சிறுமி முதலில் ஒடி வந்து தூக்க எத்தனித்ததுதான்.. அதில் அந்த சிறுமி பிராமண பெண் போல் இருந்தாள்.... அந்த பெரியவருக்கு ஏற்பட்ட ரத்த காயத்தை பார்த்து முகம் சுளிக்கவில்லை... அதே போல் அந்த பையன்களும்... ஒரு பொடியன்... ஆண்னே தூக்குங்கன்னே என்று எனை பார்த்து குரல் கொடுத்த போது இன்னும் சில பெரியவர்கள் ஓடி வர ஆரம்பித்தனர்... எதிரில் சிறுவன் தூக்குவதற்க்கு ஆயுத்தமாக இருந்தான்...

பெரியவருக்கு நெற்றியில் வீங்கி விட்டது... உதடு கிழிந்து விட்டது... கை கால்களில் நல்ல சிராய்ப்பு.... வெள்ளை உடம்பில் ரத்த சிவப்பு நல்ல அடி என்று அடையாளம் காட்டியது... வெற்றிவேல் தியேட்டருக்கு 20 கடை தள்ளி மெயின் ரோட்டில் நடந்த சம்பவம் இது... அந்த பெரியவர் சேட்டாம்.. கடை வைத்து இருக்கிறாராம்... என்று ஒரு பூக்கார பெண்மணி சொல்ல.. அதன் பிறகு அவர் முகத்தில் தண்ணீர் அடித்து அவரை சகஜ நிலைக்கு வர வைத்து அவரை ஆட்டோ ஏற்றி அனுப்பினார்கள்....

இதில் மகிழ்வை கொடுத்த விஷயம் என்னவென்றால் தூக்க முடியுதோ இல்லையோ... உடனே ஓடி வந்த குழந்தைகள்.... அவர்கள் ஓடி வந்ததும்தான் பெரியவர்கள் ஓடி வந்தார்கள்... அந்த பிள்ளைகள் படித்த பள்ளியில், சமுக அக்கரையை போதித்த, முகம் தெரியாத அந்த ஆசிரியர்களுக்கும்... அந்த பிள்ளைகளை நல் விழி சொல்லி கொடுத்த பெற்றோருக்கும் என் நன்றிகள்... இன்னும் கிராமத்தில் அடிப்படையில் பிள்ளைகள் இப்படித்தான் வளர்க்க படு்கின்றார்கள்.. என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கின்றேன்....

ஆனால் இதே போல் ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் ஒரு போலிஸ்காரருக்கு ஏற்பட்டு இருக்கின்றது... இது விபத்து அல்ல... திட்டமிட்ட கொலை சதி... நடு ரோட்டில் ரவுடிகளால் ஆயுதங்களால் தாக்க பட்டு, ஒரு கால் இழந்த நிலையில்,ரத்த சகதியில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றார்... அந்த வழியாக வந்த அமைச்சர்கள் வாகனமும், அடிப்பொடிகள் வாகனமும் அங்கேயே நின்று... உயிருக்கு போராடும், ரத்த சகதியில் வலியோடு கெஞ்சும் ஒரு ஜீவனை... சட்டென மருத்துவமனைக்கு எடுத்து சென்று காப்பாற்றாமல் போன் செய்து வேறு ஒரு காரைவரவழைத்த அதில் ஏற்றி மருத்துவமைனைக்கு அனுப்பிய கொடுமையை என்னவென்று சொல்வது...

சரிடா அமைச்சர்கள் எல்லாம் தலப்பாகட்டு பிரியானியை சாப்பிட்ட மயக்கத்தில் அவர்களுக்கு ஏதும் புரியவில்லை... அவர்களுக்கு பதவி போகும் வரை மக்கள் சேவகன் என்ற நினைப்பே அவர்களுக்கு வர வாய்ப்பில்லை... ஏனென்னறால் அவர்கள் அமைச்சர்கள்... அவர்களை விடுங்கள்.... அவர்கள் கூடவே பயணித்த அரசு உழியர்கள் ஏன் எவரும் சமயோஜிதமாக உதவி செய்யவில்லை என்பதே என் கேள்வி....

அம்புலன்சுக்கு போன் பண்ண ங்கோத்தா நீங்க ஏதுக்குடா இருக்கிங்க??? அதுவும் பக்கத்துல வண்டியை நிறுத்தி வச்சிக்கினு...இப்பதான் மாடு மேய்க்கற பையன்கிட்ட கூட செல்போன் இருக்கு அவன் போன் பண்ணி சொல்லிட போறான்... அதே பையன்கிட்ட மாட்டு வண்டி இருந்தது.. இருந்தா.... ரத்தகறை... எதைபத்தியும் கவலைபடாம வண்டியல தூக்கி போட்டுகிட்டு போய் இருப்பான்... விபத்து அல்லது கொலை செயல் நடைபெற்ற 10, 15 நிமிடங்கள் என்பது கோல்டன் டைம் என்பார்கள் இந்த நேரத்தில் அழைத்து சென்று மருத்துவ உதவி செய்தால்தான் உயிர் பிழைக்க வாய்பு இருக்கும் என்பது இந்த படித்த பண்ணாடைகளுக்கு தெரியாத என்ன?

மனிதம் செத்து விட்டது.... கண் எதிரில் உயிருக்கு போராடுபவனுக்கு உதாவத இந்த நாதாரிகாளா? கடல் கடந்து முள்ளிவாய்காலில் ,உயிர் விட்ட, உயிரோடு இருந்தும் நடைபினமாக வாழும், எம் இன மக்களுக்கா உதவ போகின்றார்கள்...????
போங்கடா நீங்களும் உங்கள் மனிதாபிமானமும்....

வட இந்திய சேனல்களில் இந்த செய்தியை போட்டு கிழி கிழி என்று கிழித்து்கொண்டு இருக்கின்றார்கள்...
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லுக்கு அவமானம் தேடி தந்து விட்டார்கள்.... இந்த நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்...ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலமை என்றால்... ஒரு பொது ஜனத்துக்கு என்ன நிலமை? என்று சற்றே யோசித்து பாருங்கள்....



கால் இழந்து போராடும் அந்த போலிஸ் அதிகாரி.. ஒரு இரவு நேரத்தில் எந்த உதவியும் இல்லாமல் செத்து போவது என்பது... ஒரு பெரிய செய்தியே அல்ல...பட்ட பகலில் பலர் முன்னிலையில்.... இரண்டு அமைச்சர்கள், கலெக்டர் முன்னிலையில், உயிருக்கு போராடும் ஒரு இந்திய குடிமகன், உயிர் பிச்சை கேட்டு, நாதியத்து ரோட்டில் கிடக்கின்றான்.... உதவிக்கு இந்தனை பேர் இருந்தும் உதவி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த அந்த போலி்ஸ்காரனின்... கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அவன் சாவும் போது குழி தோண்டி புதைத்து விட்டார்கள்...

இனிமேல் may i help you??? என்று போலிஸ் பூத்தில் எழுதி இருப்தை படித்ததால்... என்னால் சிரிக்காமல் இருக்க முடியாது.... கண்ணுக்கு எதிரில் I WANT HELP...என்று கெஞ்சி கொண்டு இருந்த அந்த மணிதனுக்கு என்ன செய்து கிழித்தீர்கள்????

இதே அமைச்சர்கள்,கலெக்டர் வீட்டு வாசலில்... இதே போலி்ஸ்காரன் அவர்கள் பாதுகாப்புக்கு கால்கடுக்க காத்துக்கொண்டு இருந்து இருப்பான்...இன்று அவன் கால் போன நிலையில் அவனக்கு உதவ யாருக்கும் மனிதாபிமானம் இல்லாமல் போய்விட்டது..

குமுதத்தில் ஞானி எழுதி இருந்தார், மும்பை வெடிகுண்டு தாக்குதலில், போலிஸ் அதிகாரிகளுக்கு கொடுத்த குண்டு துளைக்காத கவச ஆடைகளில் ஊழல் நடந்த காரணத்தால்தான் பல உயரதிகாரிகள் இறந்து போனார்கள் என்பதால்... இனி தேச சேவை, நாட்டுக்கு சேவை என்று எந்த இளைஞன் சென்றாலும் அவன் உயிருக்கு பொறுப்பற்ற அரசே வேட்டு வைக்கும் என்றார்.... அது எவ்வளவு உண்மை...





நகரத்திலும் நகர மனிதர்களிடத்திலும் மனிதம் மொத்த்தில் செத்துக்கொண்டு இருக்கின்றது.. நம்பிக்கை கீற்றாக அந்த நங்கநல்லூர் சிறுவர்களும் சிறுமிகளை போல் தமிழகம் முழுவதும் இளயதலைமுறை இருப்பதால்தான், மார்கழியிலும் மழை பெய்கின்றதோ????

59 comments:

  1. மனிதம் உண்மையிலேயே செத்துப்போச்சுண்ணே... படிக்கவே வேதனைதான் மிச்சம்

    ReplyDelete
  2. உண்மையில் மிகவும் வருத்தப்பட மற்றும் வெட்கப்பட வைக்கும் சம்பவம் தான் அது.. :(

    ReplyDelete
  3. மிக மிக நியாயமான கோபத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்றீர்கள்

    ReplyDelete
  4. நாம என்னதான் எழுதினாலும் போன உயிர் திரும்ப வரபோவதில்லை. தேர்தல் வந்தால் இந்த நிகழ்வை எல்லாரும் மறந்து விடதான் போகிறோம். அரசியல் வாதிகள் மதி கெட்டவர்கள். நாம் மானம் கெட்டவர்கள்.

    ReplyDelete
  5. 'பர்ஸ்ட் எய்ட்' குறித்த புரிதல் பலருக்கும் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது :-(

    ReplyDelete
  6. பதிவை படித்ததும் பதறிவிட்டேன்.
    மனிதம் எங்கே ? கேள்வியே எஞ்சி நிற்கிறது.. நல்ல பதிவு..

    நேரம்கிடைக்கும்போது எந்தளங்களுக்கும் வந்து செல்லுங்கள்.

    ReplyDelete
  7. மனிதம் உண்மையிலேயே செத்துப்போச்சுண்ணே... படிக்கவே வேதனைதான் மிச்சம்--//

    நாஞ்சில் அந்த போலிஸ்காரன் உயிர் பிச்சை கேட்டது இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை...

    ReplyDelete
  8. உண்மையில் மிகவும் வருத்தப்பட மற்றும் வெட்கப்பட வைக்கும் சம்பவம் தான் அது.. :(//

    ரொம்பவே மணி...

    எதிரில் இருக்கும் போதே அரசு சேவை இப்படி இருக்கையிர் கடை நிலை ஊழியர்கள் ஓட்டும் 108 ஆம்புலன்ஸ் சேவை பற்றி நினைக்கும் போதே பயமாக இருக்கின்றது..

    ReplyDelete
  9. மிக மிக நியாயமான கோபத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்றீர்கள்//
    நன்றி கதிர் சார்... வருகைக்கு வருத்தத்திற்க்கும்..

    ReplyDelete
  10. நாம என்னதான் எழுதினாலும் போன உயிர் திரும்ப வரபோவதில்லை. தேர்தல் வந்தால் இந்த நிகழ்வை எல்லாரும் மறந்து விடதான் போகிறோம். அரசியல் வாதிகள் மதி கெட்டவர்கள். நாம் மானம் கெட்டவர்கள்.// கோபத்தை கொட்ட வேண்டும் அல்லவா??? ராம்

    ReplyDelete
  11. பர்ஸ்ட் எய்ட்' குறித்த புரிதல் பலருக்கும் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது :-(//

    உண்மைதான் லக்கி... அதுவும் படித்தவர்கள் இந்த வேலையை செய்ததுதான் எனக்கு வருத்தம்..

    ReplyDelete
  12. பதிவை படித்ததும் பதறிவிட்டேன்.
    மனிதம் எங்கே ? கேள்வியே எஞ்சி நிற்கிறது.. நல்ல பதிவு..

    நேரம்கிடைக்கும்போது எந்தளங்களுக்கும் வந்து செல்லுங்கள்.//
    நன்றி அன்புடன் மல்லிகா.. தங்கள் முதல் வருகைக்கு

    ReplyDelete
  13. நாம என்னதான் எழுதினாலும் போன உயிர் திரும்ப வரபோவதில்லை. தேர்தல் வந்தால் இந்த நிகழ்வை எல்லாரும் மறந்து விடதான் போகிறோம். அரசியல் வாதிகள் மதி கெட்டவர்கள். நாம் மானம் கெட்டவர்கள்."
    இத தமிழன் சொல்லும் இழிநிலைக்கு ஆளாக்கின அந்த தே ப ... பத்தி என்ன சொல்லுறது?

    ReplyDelete
  14. விபத்துகால உதவியை நாம் அரபிகளிடமும் மேலை நாட்டினரிடமும் கற்றுக்கொள்ளவேண்டும், இங்கு நடக்கும் சாலை விபத்துக்களில் , அடுத்த நிமிடமே ஆம்புலன்ஸ் எங்கிருந்தாலும் வந்துவிடும்,கடந்து போகும் கோடீஸ்வர அரபி கூட காரை விட்டிறங்கி முதலில் அடிபட்டவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பார்.
    ---------------
    இந்த சம்பவத்தின் போது
    4 போலிஸ்காரர்களாவது கொலையாளிகளை துரத்திபோகாமல் இவரை காப்பாற்றியிருக்கலாம்.அமைச்சருக்கு வெடிக்காத குண்டினால் பயமாம்.(காரணம்)
    போலீஸ்காரருக்கு என்ன ஆயிற்று?
    ---------------
    அண்ணே இதுக்கும் மனிதாபிமானம் இல்லாமல் சில பேர் ஒரு சில பதிவுகளில் கமெண்ட் போடிருந்தனர்.
    மிக நல்ல ஆக்கம்
    ஓட்டுக்கள் போட்டாச்சின்னே

    ReplyDelete
  15. நிறைய இருக்கு சார். இத பாருங்க
    http://ngprasad.blogspot.com/2009/12/blog-post_31.html

    ReplyDelete
  16. சேகர் கண் கொண்டு பார்க்க முடியாத அவலம். ஒரு சக மனிதன் உயிருக்குப்போராடுவதை ......ஒன்றுமே சொல்ல இயலவில்லை..கண்ணீர் விடுவதைதவிர.......

    ReplyDelete
  17. போலிஸ் விசயத்தில், அங்கே கூடி நின்று செய்வது அறியாது தவித்த "சிறுவர்களை"
    நங்கநல்லூர் ஹோண்டா நபரை தூக்கிவிட்ட "பெரியவர்களிடம்"
    அனுப்பி பாடம் படிக்க சொல்ல வேண்டும். அவசியமான, ஆணித்தரமான பதிவு இது.

    ReplyDelete
  18. முதல் நிகழ்வின் அந்த நம்பிக்கைக் கீற்றுக்களுக்கு வாழ்த்துக்கள்.. உதவிய உங்களுக்கும் ..

    போலீஸ்காரர் விசயத்தில் முதலுதவி என்ற ஒன்று யாருக்குமெ நினைவுக்கு வரவில்லை என்பது தான் வருத்தம்.

    ReplyDelete
  19. ஒவ்வொருவரையும் செருப்பால் அடிப்பது போன்ற இடுகை ஜாக்கி.

    கிராமங்களில் இன்னமும் மனிதம் கொஞ்சம் ஒட்டி இருப்பது நிஜம் தான். என் அப்பா ஸ்கூட்டரில் சென்றபோது தவறி கீழே விழ, அவரை உடனடியாக காப்பாற்ற உதவியவர் எங்கள் குடும்பத்துக்கு வேண்டாத ஒருவர்.

    எதிரியாக இருந்தாலும் உதவ நினைப்பது கிராமத்து குணம். பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  20. very very good post sir
    ivanunga thirunthave mattanunga
    itha parthu ethavathu oru police thirunthuna sari aana athai panna mattanga namma police
    MANITHAPIMANAM namma oorla comedy pannatheenga

    ReplyDelete
  21. //விபத்துகால உதவியை நாம் அரபிகளிடமும் மேலை நாட்டினரிடமும் கற்றுக்கொள்ளவேண்டும்//

    அரேபியர்கள் இந்த மாதிரி சில விசயங்களில் நம்மையெல்லாம் முந்திக் கொண்டு ஓடுகிறார்கள் இப்போதைய காலகட்டத்தில்.

    ReplyDelete
  22. பரவ வேண்டிய விசயம் இது!
    இவ்வளவு நாள் ஆகியும் இந்த விசயம் தமிழ் நாட்டில் நிறைய பேருக்கு தெரியவில்லை!
    நன்றி ஜாக்கி!

    ReplyDelete
  23. இரண்டு அமைச்சர்கள், கலெக்டர், அத்தனை போலீசுகள் இருந்தும் இந்த நிலை என்றால்......
    இறந்த பின் பேட்டி குடுக்கிறார்கள் "பத்து நிமிடங்கள்தான் தாமதம் ஆகியது.. முப்பது நிமிடங்கள் என்பது பொய்" !!!
    நமது அரசியல்வாதிகளுக்கு பணி செய்ய வந்தவர்கள், மக்களுக்கு எதுக்காக செய்ய போகிறார்கள்.... ?
    மிக பெரிய கொடுமை...

    ReplyDelete
  24. வருத்தத்தை எப்படி தெரிவிப்பது, இதெல்லாம் நம் நாட்டிற்குத்தான் அடுக்கும் .................

    ReplyDelete
  25. மனதைத் தொடும் விதம் எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  26. அண்ணே அந்த கொடுமையை பார்த்து மனசு ரொம்ப கஷ்டமா ஆச்சு.

    ReplyDelete
  27. இப்போதுல்லாம் அமைச்சர்களுக்கு காசு என்னவே நேரம் இல்ல! சை கேவலம் அதுவும் தமிழ்நாட்டில் ......சொல்லவே வெட்கமா இருக்கு!
    இவங்களுக்கு வெள்ளை வேஷ்டி வேற! 5 அறிவு உள்ள மிருகங்கள் கூட கூட்டத்துல ஒருதனுக்கு பிரச்சினைன்னா சுத்தி சுத்தி வந்து உதவி செய்யும்.யாரு இந்த அமைச்சர்கள்? மக்களுக்கு உதவி செய்ய மக்களால் தேர்ந்து எடுகபட்டவர்கள்......அனால் இப்படியா? என்ன அழகான உதவி.அந்த உதவி-ஆய்வாளர் எவ்வளவு கஷ்டபட்டிருப்பார்.....முழுவதும் பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு. அவரு உயிர் பிச்சை கேட்கிறது. அவரோட குடும்பம் , குழந்தைங்க......பக்கதுல சும்மா பார்த்துட்டு நின்னவுங்க இவங்களுக்கு என்ன பதில் சொல்வாங்க .....சொல்ல முடியும்.

    ஆமாம் மனிதம் செத்துவிட்டது........தமிழகத்தில்.

    ReplyDelete
  28. நியாயமான அறச்சீற்றம் ஜாக்கி.

    சின்னக்குழந்தைகளுக்கு இருக்கும் மனிதாபிமான உணர்ச்சி கூட நமது அமைச்சர்களூக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இல்லாதது மிகவும் வருத்தத்திற்குரியது. அதிலும் பாட்டிலால் தண்ணீர் கொடுத்த ஒரு அதிகாரி மேலே இரத்தம் பட்டுவிடக்கூடாது என்பதற்காக துள்ளி நகர்ந்த காட்சி காணவே மிகவும் கொடுமையாக இருந்தது.

    முதல் உதவி என்றால் என்ன என்று அறியாதவரெல்லாம் சுகாதாரத்துறை அமைச்சர்.சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், கலெக்டர், உயிர் மதிப்பு தெரியாத உயரதிகாரிகள் அனைவரையும் ஏன் ஒரு உயிரை காப்பாற்ற தகுந்த உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்.மீண்டும் பதவி தராமல் நிரந்தரப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

    காவல்துறைக்கே உயிர் பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள் நாமெல்லாம் எம்மாத்திரம்... :((

    ReplyDelete
  29. ஜாக்கிசேகர், பணத்திற்காக அரசியல்வாதிகள் மாமாக்கள் ஆனதும், அதை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்ட மக்கள் விபச்சாரத்தை விட மோசமாகப் போனதும் தான் மிச்சம்.

    ReplyDelete
  30. மனித நேயம் செத்து விட்டது . மனம் கல்லான‌தே

    ReplyDelete
  31. அங்கே ஒரு மருத்துவரும் இருந்ததாக செய்தி தாள்களில் படித்தேன். அவர் அந்த உதவி ஆய்வாளருக்கு முதல் உதவி செய்ததாக வேறு கூறியுள்ளார். அதுவும் அமைச்சரின் காரில் இருந்த சால்வை கொண்டு உதவியதாக கூறியுள்ளார். அவர் அரசியல்வாதியும் மிஞ்சிவிட்டார். வெட்கம் கெட்ட செயலுக்கு சப்பை கட்டு வேறு.

    ReplyDelete
  32. :(

    என்னது இது, இந்த வாரம் நீங்க போற இடத்துல விபத்துக்கள் துரத்துது.

    அடுத்த தலைமுறை ஈவு இரக்கம் கொண்டு வளர்கிறார்கள் என்பது நல்ல செய்தி.

    அதிக அளவில் விபத்துக்கள் மக்களை “அட இன்னும் ஒரு விபத்தா” என்ற மனநிலைக்குத் தள்ளாமல் இருக்க வேண்டும்.

    அந்த போலீஸ்காரர் - கொடுமைங்க. என்ன சொல்றதுன்னு தெரியலை.

    ReplyDelete
  33. //அந்த பிள்ளைகளை நல் விழி சொல்லி கொடுத்த பெற்றோருக்கும் என் நன்றிகள்//

    மனிதம் வாழும் இடங்களிலுல் சில......

    ReplyDelete
  34. நாம என்னதான் எழுதினாலும் போன உயிர் திரும்ப வரபோவதில்லை. தேர்தல் வந்தால் இந்த நிகழ்வை எல்லாரும் மறந்து விடதான் போகிறோம். அரசியல் வாதிகள் மதி கெட்டவர்கள். நாம் மானம் கெட்டவர்கள்."
    இத தமிழன் சொல்லும் இழிநிலைக்கு ஆளாக்கின அந்த தே ப ... பத்தி என்ன சொல்லுறது?--//நன்றி அண்ணமலையான்

    உங்கள் கோபத்துக்கு

    ReplyDelete
  35. விபத்துகால உதவியை நாம் அரபிகளிடமும் மேலை நாட்டினரிடமும் கற்றுக்கொள்ளவேண்டும், இங்கு நடக்கும் சாலை விபத்துக்களில் , அடுத்த நிமிடமே ஆம்புலன்ஸ் எங்கிருந்தாலும் வந்துவிடும்,//

    பல வெளிநாட்டு நண்பர்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கின்றேன்... நாம மட்டும் ஏன் இப்படி மாறிப்போனோம்.. எங்கிருந்து அந்த சுயநலம் வந்தது...???? கார்த்தி...

    ReplyDelete
  36. நிறைய இருக்கு சார். இத பாருங்க
    http://ngprasad.blogspot.com/2009/12/blog-post_31.html//


    படிச்சேன் குரு நல்லா எழுதி இருக்கிங்க...எல்லா டாக்டர்களும் அப்படித்தான் மாறிகிட்டு இருக்காங்க...

    ReplyDelete
  37. சேகர் கண் கொண்டு பார்க்க முடியாத அவலம். ஒரு சக மனிதன் உயிருக்குப்போராடுவதை ......ஒன்றுமே சொல்ல இயலவில்லை..கண்ணீர் விடுவதைதவிர.......//

    கண்ணகி நம்ம சமுகம் எதை நோக்கி போயிகிட்டு இருக்கு என்பதை இது உணர்த்துகின்றது...

    ReplyDelete
  38. போலிஸ் விசயத்தில், அங்கே கூடி நின்று செய்வது அறியாது தவித்த "சிறுவர்களை"
    நங்கநல்லூர் ஹோண்டா நபரை தூக்கிவிட்ட "பெரியவர்களிடம்"
    அனுப்பி பாடம் படிக்க சொல்ல வேண்டும். அவசியமான, ஆணித்தரமான பதிவு இது.//


    நன்றி சைவ கொத்து பரோட்டா...

    ReplyDelete
  39. முதல் நிகழ்வின் அந்த நம்பிக்கைக் கீற்றுக்களுக்கு வாழ்த்துக்கள்.. உதவிய உங்களுக்கும் ..

    போலீஸ்காரர் விசயத்தில் முதலுதவி என்ற ஒன்று யாருக்குமெ நினைவுக்கு வரவில்லை என்பது தான் வருத்தம்.//

    எனக்கும் அதுதான் முத்துலட்சுமி தெரியவில்லை.. ஒருவருக்கு கூடவா? தோன்றவில்லை..

    ReplyDelete
  40. கிராமங்களில் இன்னமும் மனிதம் கொஞ்சம் ஒட்டி இருப்பது நிஜம் தான். என் அப்பா ஸ்கூட்டரில் சென்றபோது தவறி கீழே விழ, அவரை உடனடியாக காப்பாற்ற உதவியவர் எங்கள் குடும்பத்துக்கு வேண்டாத ஒருவர்.//

    கேவி ஆர் இதே போல் எங்கள் தாத்தாவுக்கு நடந்து இருக்கின்றது.. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  41. very very good post sir
    ivanunga thirunthave mattanunga
    itha parthu ethavathu oru police thirunthuna sari aana athai panna mattanga namma police
    MANITHAPIMANAM namma oorla comedy pannatheenga//நன்றி யலிபாபா மிக்க நன்றி..

    ReplyDelete
  42. //விபத்துகால உதவியை நாம் அரபிகளிடமும் மேலை நாட்டினரிடமும் கற்றுக்கொள்ளவேண்டும்//

    அரேபியர்கள் இந்த மாதிரி சில விசயங்களில் நம்மையெல்லாம் முந்திக் கொண்டு ஓடுகிறார்கள் இப்போதைய காலகட்டத்தில்.///

    நன்றி ராஜ நடராஜன் எங்க பல நாட்களா ஆளையே கானோம்??

    ReplyDelete
  43. பரவ வேண்டிய விசயம் இது!
    இவ்வளவு நாள் ஆகியும் இந்த விசயம் தமிழ் நாட்டில் நிறைய பேருக்கு தெரியவில்லை!
    நன்றி ஜாக்கி!//

    நன்றி மணிப்பாக்கம் பகிர்வுக்கு நன்றி,..

    ReplyDelete
  44. இரண்டு அமைச்சர்கள், கலெக்டர், அத்தனை போலீசுகள் இருந்தும் இந்த நிலை என்றால்......
    இறந்த பின் பேட்டி குடுக்கிறார்கள் "பத்து நிமிடங்கள்தான் தாமதம் ஆகியது.. முப்பது நிமிடங்கள் என்பது பொய்" !!!
    நமது அரசியல்வாதிகளுக்கு பணி செய்ய வந்தவர்கள், மக்களுக்கு எதுக்காக செய்ய போகிறார்கள்.... ?
    மிக பெரிய கொடுமை...// இளங்கோ இந்த பதிவின் கோப நடைக்கு காரணமே அந்த பேட்டிகள்தான்...

    ReplyDelete
  45. வருத்தத்தை எப்படி தெரிவிப்பது, இதெல்லாம் நம் நாட்டிற்குத்தான் அடுக்கும் ..//
    நன்றி ராஜபிரியன்

    ReplyDelete
  46. மனதைத் தொடும் விதம் எழுதியிருக்கிறீர்கள்.// நன்றி டாக்டர் ருத்ரன்....தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்துக்கும்..

    ReplyDelete
  47. அண்ணே அந்த கொடுமையை பார்த்து மனசு ரொம்ப கஷ்டமா ஆச்சு.//
    நன்றி ரோமியோபாய் .. மன்னிக்கவும் ரோமியோ... போதுமா?

    ReplyDelete
  48. முழுவதும் பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு. அவரு உயிர் பிச்சை கேட்கிறது. அவரோட குடும்பம் , குழந்தைங்க......பக்கதுல சும்மா பார்த்துட்டு நின்னவுங்க இவங்களுக்கு என்ன பதில் சொல்வாங்க .....சொல்ல முடியும்.


    அந்த பசங்க எப்படி இந்தியாவின் பாதுகாப்பை நம்புவாங்க.. உதவி செய்யவே இத்தனை நேரமா??

    ReplyDelete
  49. முதல் உதவி என்றால் என்ன என்று அறியாதவரெல்லாம் சுகாதாரத்துறை அமைச்சர்.சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், கலெக்டர், உயிர் மதிப்பு தெரியாத உயரதிகாரிகள் அனைவரையும் ஏன் ஒரு உயிரை காப்பாற்ற தகுந்த உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்.மீண்டும் பதவி தராமல் நிரந்தரப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.
    //

    நடந்தால் மகிழ்வேன்...

    ReplyDelete
  50. ஜாக்கிசேகர், பணத்திற்காக அரசியல்வாதிகள் மாமாக்கள் ஆனதும், அதை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்ட மக்கள் விபச்சாரத்தை விட மோசமாகப் போனதும் தான் மிச்சம்.//

    என்ன செய்வது கோபி பழகி விட்டார்கள்.. அப்படி பழக்க படுத்திவிட்டார்கள்..

    ReplyDelete
  51. மனித நேயம் செத்து விட்டது . மனம் கல்லான‌தே//
    நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  52. அங்கே ஒரு மருத்துவரும் இருந்ததாக செய்தி தாள்களில் படித்தேன். அவர் அந்த உதவி ஆய்வாளருக்கு முதல் உதவி செய்ததாக வேறு கூறியுள்ளார். அதுவும் அமைச்சரின் காரில் இருந்த சால்வை கொண்டு உதவியதாக கூறியுள்ளார். அவர் அரசியல்வாதியும் மிஞ்சிவிட்டார். வெட்கம் கெட்ட செயலுக்கு சப்பை கட்டு வேறு.//
    நன்றி மலைச்சாரல்..

    ReplyDelete
  53. என்னது இது, இந்த வாரம் நீங்க போற இடத்துல விபத்துக்கள் துரத்துது.

    அடுத்த தலைமுறை ஈவு இரக்கம் கொண்டு வளர்கிறார்கள் என்பது நல்ல செய்தி.///

    தினமும் நிறைய விபத்துகள் நடக்குது பின்னோக்கி.. ஆனால் சிலதைதான் எழுதுகின்றோம்... அவ்வளவே..

    ReplyDelete
  54. //அந்த பிள்ளைகளை நல் விழி சொல்லி கொடுத்த பெற்றோருக்கும் என் நன்றிகள்//

    மனிதம் வாழும் இடங்களிலுல் சில......//
    நன்றி சடுதண்ணி.. தங்கள் முதல் வருகைக்கு

    ReplyDelete
  55. நானும் அந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தேன். தண்ணீர் கேட்ட அவருக்கு அதை கொடுக்க சென்றவர் கூட வெட்டுபட்டவர் கையை நீட்டும்போது எங்கே அவரின் ரத்தம் படிந்த கை தன் மேல் பட்டு விடுமோ எனும் அளவுக்கு சட்டென்று தண்ணீர் கொடுக்க சென்றவர் பின்வாங்கினார்.

    அப்படித்தான் எனக்கு தோன்றியது.

    ReplyDelete
  56. நானும் அந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தேன். தண்ணீர் கேட்ட அவருக்கு அதை கொடுக்க சென்றவர் கூட வெட்டுபட்டவர் கையை நீட்டும்போது எங்கே அவரின் ரத்தம் படிந்த கை தன் மேல் பட்டு விடுமோ எனும் அளவுக்கு சட்டென்று தண்ணீர் கொடுக்க சென்றவர் பின்வாங்கினார்.

    அப்படித்தான் எனக்கு தோன்றியது.//

    நன்றி ஆதிமனிதன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  57. ஜாக்கி..அந்த NDTV வீடியோல "police did a wonderful job" அப்படின்னு வெக்கமே இல்லாம அந்த ஹெல்த் செகரட்டரி சொன்னானே...த்தா டேய் என்று தோன்றியது..

    ReplyDelete
  58. a good leader should take action againts thouse bitchs .the bitchs may be have the same day

    ReplyDelete
  59. a good leader should take action againts thouse bitchs .the bitchs may be have the same day

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner