பதிவர் சந்திப்பும், 33வது சென்னை புத்தக கண்காட்சியும்...(புகைபடங்களுடன்)


எல்லா சாலையும் ரோம் நகரத்தை நோக்கி செல்கின்றன என்பது போல எல்லா வாகனங்களும் புத்தக கண்காட்சி நோக்கி சென்றதால் சென்னை சாலைகளில் வாகன நெரிசல் அதிகம் ஏற்பட்டது...

பல பதிவர்கள் வாகனங்களை அரை கிலோமீட்டர் தள்ளி நிறுத்தி விட்டு நடராஜா சர்விஸில் புத்தக கண்காட்சி அரங்குக்கு வந்து சேர்ந்தனர்....

லயோலா கல்லூரி அருகில் வரும் போது ஒருவர் ஹெல்மெட்டை கழட்டி விட்டு நீங்க ஜாக்கிதானே? என்று கேட்க எனக்கு ரொம்ப ஆச்சர்யமாகி போனது... வலைதளத்தின் வீச்சை யோசிக்கையில் ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது... அதன் பின் கண்காட்சி வரும் வரை எனது எழுத்து நடை, கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள், மற்றும் உலக சினிமா பற்றி அதிகம் பேசிக்கொண்டு வந்தார்.. அவர் பெயர் திருமுருகன்... சென்னை டைடல் பார்க் அருகில் ஒரு பன்னாட்டு கம்பெனியில் பொட்டி தட்டும் வேலை செய்கின்றாராம்...

அதிக நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கண்காட்சிக்கு வந்து நொந்து போனார்கள்....

கிழக்கு பதிப்பக ஸ்டால் அருகில் பதிவர்கள் ஒன்று கூடி இருந்தனர்... பல பதிவர் அல்லாத வாசக நண்பர்கள், சரவணன் போன்றவர்கள்... கைகுலுக்கி தங்கள் அன்பை தெரிவித்து கொண்டனர்....

தண்டோரா, கேபிள் ,வண்ணத்து பூச்சி சூர்யா, எறும்பு, ஜெட்லி, ரோமியோபாய், மீன்துளியான், சங்கர், குகன், பைத்தியக்காரன், நர்சிம்,அகநாழிகைவாசு, காவேரிகனேஷ்,பலா பட்டறை, புலவன் புலிகேசி, வெள்ளி நிலா பத்திரிக்கை ஆசிரியர் சர்பூதின், நிலாரசிகன், செல்வகுமார்,அவிய்ங்க ராஜா, போன்றவர்களை சந்தித்து பேசினோம்.... அதன் பிறகு லக்கிலுக், அதிஷா, இருவரும் வந்து கலந்து கொண்டார்கள்...

ரொம்ப லேட்டாக பதிவர் அப்துல்லாமற்றும் டாக்டர் அசோக் கலந்து கொண்டு பேசினார்கள்...

அன்புடன் மணிகண்டனும் நானும் முதலில் சுஜாதாவின் என் இனிய இயந்திரா வாங்க, திருமகள் நிலையத்துக்கு சென்றோம் பில் போடும் போது, ஏதோ ஒரு டிவியில் நடிக்கும் பெண் கருப்பு ஜீன்ஸ்ம், கருப்பு டீ ஷர்ட்டும் போட்டுக்கொண்டு புத்தகம் பார்க்க, அந்த பெண்ணின் பரிணாம வளர்ச்சியை பார்த்ததும் மணிகண்டன் அண்ணே என்றவாறு என் வயிற்றில் இடிக்க, அவனின் வாலிப, படபடப்பை என் வயிற்றில் இடித்த இடியில் என்னால் உணர முடிந்தது... நைட்டு அன்புடன் மணிகன்டன், கையையும் காலையும் ஒழுங்காக வைத்துக்கொண்டு இரவில் தூங்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொண்டேன்...நானே ஒழுங்கா தூங்கறது சந்தேகம்தான்...
நானும் பட்டர்பிளை சூர்யாவும் புத்தக கண்காட்சியை ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வர கிளம்பினோம்... விகடன் பிரசுரத்தில் அப்பாஸ் மந்திரி எழுதிய அடேங்கப்பா அமெரிக்கா, நாஞ்சில் நாடனின் தீதும் நன்றும் புத்தகமும்,தமிழருவி மணியனின், மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற புத்தகத்தை வாங்கினேன்....சரவணா ஸ்டோர்சில் 1500 ரூபாய்க்கு துணி வாங்கினால்... அங்கு இருக்கும் சூப்பரவைசர்... ஏதோ தர்மபுரி மாவட்ட கலெக்டர் ரேஞ்சுக்கு கையெழுத்து போட்டு ஒரு வித அலட்சியத்துடன் கொடுக்கும் கட்டை பையை... ரூபாய் 250க்கு புத்தகம் வாங்கியதற்க்கே கொடுத்தார்கள்... விகடனுக்கு நன்றி... பட்டர்பிளை சூர்யா நான் வாங்கும் போது இதெல்லாம் கொடுக்கவே இல்லையேப்பா என்று சொன்னார்.... ஏற்க்கனவே இரண்டாயிரத்துக்கு புத்தகம் வாங்கி இருந்தாலும் இன்றும் ரூபாய் ஆயிரத்துக்கு வாங்கினேன்...

காவேரி கணேஷ்... குகனின் என்னை எழுதிய தேவதைக்கு ,புத்தகம் வாங்கி தண்டோரா வுக்கு பரிசளித்தார்...

அதன் பிறகு ரூபாய் பத்துக்கு சுஜாதா புத்தகங்களை வாங்கி கொண்டு வந்த லக்கிலுக்கை வியப்போடு பார்த்தேன்.. எல்லாம் பழைய ஸ்டாக்... பாரதி பதிப்பகத்தின் வெளியீடுகள்...

இடம் கேட்டு 20, 15, 10,4 ரூபாய் விலைகளில் 270க்கு புத்தகம்வாங்கினேன், அதில் சுஜாதா,சுபா, பட்டு்கோட்டை பிரபாகர் புத்தகங்கள் அடக்கம்...மொத்தம் 15 புத்தகங்கள் வாங்கினேன்.. நல்ல இடத்தை காட்டிய லக்கிக்கு என் நன்றிகள்... பட்டர் பிளை சூர்யா சொன்னார் ஒரு டீயே 7 ரூபாய்.... பத்து ரூபாய்க்கு புக் கிடைக்கறது பெரிய விஷயம் என்றார்...
முதுகில் ஜாக்கெட்டில் சுருக்கு வைத்துபடி இருந்த ஆண்ட்டி ஒன்று ....ஒரு 5 தடவைக்கு மேல் என் கண்ணில் பட்டுகொண்டே இருந்தது... ஒரு கறுப்பு பணியனும் வெள்ளை உள்ளாடை வெளியே தெரியும் படி அணிந்து ,அந்த சின்ன கறுப்பு பனியனை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டே தன் 3 வயது ஆண்பிள்ளையை அழைத்துக்கொண்டு போன அந்த இளம் அம்மாவின் முகத்தை கடைசி வரை என்னால் பார்க்க முடியவில்லை....

லேடிஸ் ஸ்பெஷல் புத்தக ஸ்டாலில் இருந்த ஒரு பெண் பியூட்டி பார்லரில் இருந்து நேரே ஸ்டாலுக்கு வந்தது போல் இருந்தார்...

பதிவர்களோடு தொடர்ந்து பேச முடியாமல் துண்டு துண்டாய் பேசும் அளவுக்கு நிறைய இடர்பாடுகளுக்கு காரணமாய் பெண்கள் இருந்தார்கள்... வேறு என்ன நாளை புத்தக கண்காட்சி கடைசிநாள்....

கடைசியில் காவேரி கணேஷும் நானும் பேசிய படி பிரிந்து சென்றோம்...

பதிவர்கள் பல பேர் எனக்கு தெரியாத காரணத்தால் பெயர்கள் போடவில்லை.. புகைபடங்களை கிளிக்கி பெரிதாக பார்த்துக்கொள்ளவும்


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

52 comments:

  1. Thanks for sharing.

    after Jyovram sundar's post, you have also added humour in book exhibition post

    ReplyDelete
  2. படங்களும்,பகிர்வும் அருமை ஜாக்கி.

    புத்தக கண்காட்சியிலும்,சந்திப்பிலும் கலந்து கொண்ட பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தமிழ் பதிவு உலகத்தில் முதல் முறையாக அவிங்க பதிவர் படம் வந்த பதிவு இதுதான் என நினைக்கிறேன்.

    அது என்ன இரவு குளிரிலும் நரசிம் குளிர் கண்ணாடியோடு இருக்கிறார்.

    ReplyDelete
  4. ரைட்டு! நடத்துங்க!!!

    ReplyDelete
  5. அதுக்குள்ளே பதிவா!! தலைவரே நீங்க ரொம்ப பாஸ்ட் :))

    ReplyDelete
  6. இதுக்கும் ஒரு மைனஸ் , யாருப்பா அது

    தலைவரே, சுஜாதா புத்தக விஷயத்தை அங்கேயே சொல்லியிருக்கக் கூடாதா,

    ReplyDelete
  7. ஜாக்கி வர்ணனை அருமை .. எப்படியோ அன்புடன் மணிகண்டனை கவுத்துட்டீங்க ..

    ReplyDelete
  8. சங்கர் said...
    அதுக்குள்ளே பதிவா!! தலைவரே நீங்க ரொம்ப பாஸ்ட் :))//

    ரொம்ப ரொம்ப...::)) நன்றி ஜாக்கி சார்..சந்தித்ததில் மகிழ்ச்சி::))

    ReplyDelete
  9. தல கடைசியா ஜக்குபாய் பத்தி பேசும் போது கார்ல போன பிகர பத்தி எழுதாம உட்டுட்டீங்களே..அந்த பொண்ணு மனசு கஷ்டப்பட போகுது. பகிர்வுக்கு நன்றி தல

    ReplyDelete
  10. எம்பட பேரப் போடாம போன அண்ணன் ஜாக்கிக்கு சட்றியானபடிக்கு தண்டனை கொடுக்கோனும்.அந்த பொருப்பை ‘புலவன் புலிகேசிக்கிட்டயும்’,’ரோமியோபாய்’க்கிட்டயும் விட்டுவிட்டு வாய்ப்புக்கு நன்றி கூறி விடை....பாதி தூக்கத்தில இருக்கேன்.அப்புறம் பேசுவம்.
    நன்றி ஜாக்கி அண்ணே.படங்கள் ஜூப்பர்.

    ReplyDelete
  11. Thanks for sharing.

    after Jyovram sundar's post, you have also added humour in book exhibition post--//

    நன்றி குப்பன்... நான் சுந்தர் பதிவை வாசிக்க வில்லை இருப்பினும் என் நன்றிகள்...

    ReplyDelete
  12. தமிழ் பதிவு உலகத்தில் முதல் முறையாக அவிங்க பதிவர் படம் வந்த பதிவு இதுதான் என நினைக்கிறேன்.

    அது என்ன இரவு குளிரிலும் நரசிம் குளிர் கண்ணாடியோடு இருக்கிறார்.//

    ஆமாம்.. குப்பன் அவியிங்கராஜா ரொம்பவும் அதாவது அநியாயத்துக்கு கூச்சபட்டுக்கொண்டே நின்றார்... புதிதாய் பார்த்த பதிவர்களிடம் பேசவே கூச்சபட்டு நின்று கொண்டு இருந்தார்..

    ReplyDelete
  13. ரைட்டு! நடத்துங்க!!!//

    நன்றி அபி அப்பா... வருகைக்கு

    ReplyDelete
  14. அதுக்குள்ளே பதிவா!! தலைவரே நீங்க ரொம்ப பாஸ்ட் :))//
    நன்றி சங்கர்... நான் கொஞ்சம் பரபரபப்பான ஆள்தான்...

    ReplyDelete
  15. இதுக்கும் ஒரு மைனஸ் , யாருப்பா அது

    தலைவரே, சுஜாதா புத்தக விஷயத்தை அங்கேயே சொல்லியிருக்கக் கூடாதா,//

    எனக்கே லக்கிலுக் லேட்டா சொன்னதால அந்த புத்தகம் எல்லாம் இருக்கான்னு சந்தேகத்தோடவே போனேன்.. இருந்துச்சு இன்னைக்கும் இருக்கும் ஸ்டால் எண் 125ன்னு நினைக்கின்றேன்..

    எனக்கும் கேபிளுக்கு படிக்கறாங்களோ இல்லையோ.. மைனஸ் ஓட்டு போட்டுறாங்க...

    சங்கர் நீங்க நல்ல ஓட்டு போடுங்க..

    ReplyDelete
  16. ஜாக்கி வர்ணனை அருமை .. எப்படியோ அன்புடன் மணிகண்டனை கவுத்துட்டீங்க ..//

    ஏலே.. போ்டோவுல பார்த்தா பெரிய பையனாட்டும் இருக்க.. நேர்ல காலேஜ் பையன் கணக்கா இருக்க.. சந்தித்ததில் மகிழ்ச்சி..

    ReplyDelete
  17. சங்கர் said...
    அதுக்குள்ளே பதிவா!! தலைவரே நீங்க ரொம்ப பாஸ்ட் :))//

    ரொம்ப ரொம்ப...::)) நன்றி ஜாக்கி சார்..சந்தித்ததில் மகிழ்ச்சி::))//

    பலா உன்னை என் மைன்ட்ல வச்சி இரக்கேன் ஏதாவது ஷாட் பிலிம் எடுத்ததா? உன்னை கூப்பிடுறேன்..எனக்கும் மகிழ்ச்சி

    ReplyDelete
  18. தல கடைசியா ஜக்குபாய் பத்தி பேசும் போது கார்ல போன பிகர பத்தி எழுதாம உட்டுட்டீங்களே..அந்த பொண்ணு மனசு கஷ்டப்பட போகுது. பகிர்வுக்கு நன்றி தல//

    எழுதலாம்... அப்படி எழுதுனா... இவன்க புத்க கண்காட்சிக்கு போனானன்களா? இல்லை பிகர் கண்காட்சிக்கு போனான்னகளா?ன்னு சந்தேகம் வந்துடும் அதனாலதான்...

    ReplyDelete
  19. எம்பட பேரப் போடாம போன அண்ணன் ஜாக்கிக்கு சட்றியானபடிக்கு தண்டனை கொடுக்கோனும்.அந்த பொருப்பை ‘புலவன் புலிகேசிக்கிட்டயும்’,’ரோமியோபாய்’க்கிட்டயும் விட்டுவிட்டு வாய்ப்புக்கு நன்றி கூறி விடை....பாதி தூக்கத்தில இருக்கேன்.அப்புறம் பேசுவம்.
    நன்றி ஜாக்கி அண்ணே.படங்கள் ஜூப்பர்.//

    மன்னிக்கவும் மயில் எனக்கு யாரோட பேரோ விட்ட மாதிரி இருந்துச்சி...மறந்துடுச்சி சாரி...

    ReplyDelete
  20. படங்களும்,பகிர்வும் அருமை ஜாக்கி.

    புத்தக கண்காட்சியிலும்,சந்திப்பிலும் கலந்து கொண்ட பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    நன்றி துபாய் ராஜா... உங்கள் தொடர் வருகைக்கும் பின்னுட்டத்துக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  21. நான் வரும்போது பிரசண்ட் பண்ண புக்கை இப்பவே ரெடி பண்ணறீங்க போல...??
    :-))))))))))))))

    ReplyDelete
  22. நான் வரும்போது பிரசண்ட் பண்ண புக்கை இப்பவே ரெடி பண்ணறீங்க போல...??
    :-))))))))))))))--//

    நேரில் வா கலை நிச்சயம் நல்ல புத்தகம் பரிசளிக்கின்றேன்...நன்றி

    ReplyDelete
  23. சிரிச்சிக்கிட்டே இருக்கேன்...
    டேமேஜ் நிச்சயமுன்னு நான் அப்போவே நெனச்சேன்.. இப்படி டோட்டல் டேமேஜ் ஆகப் போகுதுன்னு தெரியலையே... அய்யகோ... :)
    அந்தப் பொண்ணு சன் மியூசிக்'ல காம்பியரிங் பண்ணுது.. (இன்னிக்கு காலைல தான் டிவி'யில பார்த்தேன்..)

    ReplyDelete
  24. //எழுதலாம்... அப்படி எழுதுனா... இவன்க புத்க கண்காட்சிக்கு போனானன்களா? இல்லை பிகர் கண்காட்சிக்கு போனான்னகளா?ன்னு சந்தேகம் வந்துடும் அதனாலதான்..//
    பதிவ படிச்சா உடனே எனக்கு லேசா தோணுச்சு ....

    ReplyDelete
  25. உங்களை மற்றும் பல பேரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணே....

    ReplyDelete
  26. அண்ணே, நல்ல வேலை மணிகண்டன் வந்த மாதிரி நான் உங்க கூட வரலை. அப்புறம் 300 follwersku வாழ்த்துக்கள். அப்புறம் முன்நூறாவதா சேர்ந்த ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, சரி விடுங்க...
    எறும்புக்கும் வாழ்த்துக்கள்.

    :))

    ReplyDelete
  27. மீன்துள்ளியான் Said..
    //எப்படியோ அன்புடன் மணிகண்டனை கவுத்துட்டீங்க//

    நீங்களே பாருங்க மீன்துள்ளியான்.. ஜாக்கி அண்ணன் புத்தகம் வாங்க கூட்டிட்டு போயிட்டு இப்போ என்னை வச்சி காமெடி பண்றாரு.. இதுல என் க்ளோஸ்-அப் போட்டோ வேற..
    :)

    ReplyDelete
  28. //மீன்துள்ளியான் Said..
    //எப்படியோ அன்புடன் மணிகண்டனை கவுத்துட்டீங்க//

    நீங்களே பாருங்க மீன்துள்ளியான்.. ஜாக்கி அண்ணன் புத்தகம் வாங்க கூட்டிட்டு போயிட்டு இப்போ என்னை வச்சி காமெடி பண்றாரு.. இதுல என் க்ளோஸ்-அப் போட்டோ வேற..
    :)//

    மணி எப்படியோ ஒரு விளம்பரம் நமக்கு ...

    ReplyDelete
  29. மணிகண்டன் பத்தின கமெண்ட், கூடவே அவரது க்ளோஸ் அப் சிரிப்பு (தெய்வீகச் சிரிப்பையா உமது) - சூப்பர்.

    மணி, அப்டியே அம்மணி பேர் என்னன்னு சொன்னிங்கன்னா புண்ணியம் கிடைக்கும்.

    ReplyDelete
  30. பகிர்வுக்கு நன்றி ஜாக்கி :)

    ReplyDelete
  31. மொக்கைப் பதிவர்கள் பற்றி ஒரு பார்வை. நாளை மானிட்டர் பக்கங்களில்

    ReplyDelete
  32. அருமையான கவரேஜ் ஜாக்கி.

    வெளியூர், வெளிநாடு பதிவர்கள் பார்க்க தக்க வகையில் பதிவு.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. போட்டாவ பெரிசு பண்ணி பார்த்து, புத்தகத்து பெயர் எல்லாம் (பாரதி பதிப்பகம்), எழுதி வெச்சுட்டு, யாரு மாட்டுவான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன் :). ரொம்ப நன்றி.

    ReplyDelete
  34. நீங்க சொல்றதும் சரிதான் மீன்துள்ளியான் :)

    =========================

    எறும்பு நீங்க தப்பிசிட்டீங்கன்னு நெனைக்கறீங்களா.. ஜாக்கி அண்ணா நோட் திஸ்.. விடாதீங்க தலைவர.... :)

    =======================

    (KVR) ராஜா நீங்களுமா? வேணாம்.. வலிக்குது.. அழுதுடுவேன்.. அவ்வ்வ்வ்... :)
    அந்த அம்மணி பேர் தெரீயிலீங்ண்ணோவ்... தெரிஞ்சதும் சொல்றேன்..

    ReplyDelete
  35. சிரிச்சிக்கிட்டே இருக்கேன்...
    டேமேஜ் நிச்சயமுன்னு நான் அப்போவே நெனச்சேன்.. இப்படி டோட்டல் டேமேஜ் ஆகப் போகுதுன்னு தெரியலையே... அய்யகோ... :)
    அந்தப் பொண்ணு சன் மியூசிக்'ல காம்பியரிங் பண்ணுது.. (இன்னிக்கு காலைல தான் டிவி'யில பார்த்தேன்..)---//

    அதுக்குள்ள கண்டுபிடிச்சிட்டியா?

    ReplyDelete
  36. //எழுதலாம்... அப்படி எழுதுனா... இவன்க புத்க கண்காட்சிக்கு போனானன்களா? இல்லை பிகர் கண்காட்சிக்கு போனான்னகளா?ன்னு சந்தேகம் வந்துடும் அதனாலதான்..//
    பதிவ படிச்சா உடனே எனக்கு லேசா தோணுச்சு ....//


    கூடவே இருந்து கும்மி அடிச்சிட்டு உன்க்கு தோனினது கொஞ்சம் ஓவர்தான்..

    ReplyDelete
  37. உங்களை மற்றும் பல பேரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணே.//
    நானும் மகி்ழ்கின்றேன்...

    ReplyDelete
  38. அண்ணே, நல்ல வேலை மணிகண்டன் வந்த மாதிரி நான் உங்க கூட வரலை. அப்புறம் 300 follwersku வாழ்த்துக்கள். அப்புறம் முன்நூறாவதா சேர்ந்த ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, சரி விடுங்க...
    எறும்புக்கும் வாழ்த்துக்கள்.

    :))//

    300 வது பாலோயருக்கு எனது வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  39. மீன்துள்ளியான் Said..
    //எப்படியோ அன்புடன் மணிகண்டனை கவுத்துட்டீங்க//

    நீங்களே பாருங்க மீன்துள்ளியான்.. ஜாக்கி அண்ணன் புத்தகம் வாங்க கூட்டிட்டு போயிட்டு இப்போ என்னை வச்சி காமெடி பண்றாரு.. இதுல என் க்ளோஸ்-அப் போட்டோ வேற..
    :)//

    ம் நடக்கட்டும்..

    ReplyDelete
  40. மணிகண்டன் பத்தின கமெண்ட், கூடவே அவரது க்ளோஸ் அப் சிரிப்பு (தெய்வீகச் சிரிப்பையா உமது) - சூப்பர்.

    மணி, அப்டியே அம்மணி பேர் என்னன்னு சொன்னிங்கன்னா புண்ணியம் கிடைக்கும்.//


    கேவிஆர் அதுக்குதான் காலையில இருந்துடிரை பண்ணிகிட்டு இருக்கோம்..

    ReplyDelete
  41. பகிர்வுக்கு நன்றி ஜாக்கி :)//

    நன்றி அஷோக் 3001க்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  42. மொக்கைப் பதிவர்கள் பற்றி ஒரு பார்வை. நாளை மானிட்டர் பக்கங்களில்//
    உங்க பிளாக்குக்காக வெயிட்டிங் தண்டோரா

    ReplyDelete
  43. அருமையான கவரேஜ் ஜாக்கி.

    வெளியூர், வெளிநாடு பதிவர்கள் பார்க்க தக்க வகையில் பதிவு.

    வாழ்த்துக்கள்//

    நன்றி காவேரி கணேஷ்.. மிக்க நன்றி..

    ReplyDelete
  44. போட்டாவ பெரிசு பண்ணி பார்த்து, புத்தகத்து பெயர் எல்லாம் (பாரதி பதிப்பகம்), எழுதி வெச்சுட்டு, யாரு மாட்டுவான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன் :). ரொம்ப நன்றி.//

    மிக்க நன்றி .. ஒரு வாரத்துக்கு மன்னையே தெரிஞ்சு இருந்தா... நிச்சயம் தெரியபடுத்தி இருப்பேன் அல்லது வாங்கி வந்து கொடுத்து இருப்பேன்..

    ReplyDelete
  45. 3001...இதிலியுமா?

    ஏற்கனவே உங்க ப்ளாயர் லிஸ்டல இருக்கேன் ஆனா உங்க பதிவு எதுவும் எனக்கு update ஆகா மாட்டேங்குது, அதான் rejoin...

    301 வாழ்த்துகள் (treat உண்டுயில்ல)

    ReplyDelete
  46. \\பதிவர்களோடு தொடர்ந்து பேச முடியாமல் துண்டு துண்டாய் பேசும் அளவுக்கு நிறைய இடர்பாடுகளுக்கு காரணமாய் பெண்கள் இருந்தார்கள்//

    அதான் பக்கத்தில் உக்காந்து பார்த்துட்டு இருந்தேனே.

    ReplyDelete
  47. நீங்கள் மறுப்பு சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த பதிவிலிருந்து ஒரு புகைப்படத்தை எனது பதிவில் உபயோகப்படுத்தியிருக்கிறேன். உங்கள் பெயரை அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  48. தல உங்கள சந்திச்சதுல மிக்க மகிழ்ச்சி,
    அதுவும் கேபிள் ளார் , லக்கி லுக் , பைத்திய காரன் போன்றவர்களுக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தது இன்னும் மகிழ்ச்சி.

    //ஒரு பன்னாட்டு கம்பெனியில் பொட்டி தட்டும் வேலை செய்கின்றாராம்...//
    இந்த குசும்பு தானே வானாங்கிறது :)

    ஆம் நீங்கள் சொன்னது போல ப்ளாக் களின் வீச்சு நிரம்ப அதிகம் தான், எங்கள் அலுவலகத்தில் நிறைய பேருக்கு உங்கள் ப்ளாக் பற்றி தெரிகிறது, இப்போது உலக திரைப்படங்களை பற்றி நிறைய பேர் எழுத ஆரம்பித்து விட்டாலும் நீங்கள், "hollywood பாலா ", இன்னும் வெகு சிலருக்கு மட்டும் தான் அந்த நடை அனாவசியமாக வருகிறது, அதை தக்க வைத்து கொள்ளவும் தல (Keep It Up).

    குறைந்தது ஆயிரம் பேர் வருகை தரும் உங்கள் ப்ளாக் இற்கு "கூகிள் அட்சென்ஸ்" பயன்படுத்தி , கொஞ்சம் காசு பார்க்கலாம். அது பற்றி தனி மடலில்.

    திருமுருகன்.

    ReplyDelete
  49. நன்றி மூவி போஸ்டர்..

    நன்றி ராஜபிரியன்..

    நன்றி அசோக்...

    நன்றி ரோமியோபாய்

    ReplyDelete
  50. நன்றி பின்னோக்கி..

    நன்றி ஆதிரை என்கின்ற திருமுருகன்... மிக்க நன்றி... பலருக்கு நமது வலைதளத்தை அறிமுகபடுத்துங்கள்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner