சென்னை மாநகர பேருந்து...(பகுதி 3)

சென்னையில் பெரும்பாலான காதல் பூக்கும் இடங்களில் மாநகர பேருந்தும் ஒன்று.. நிறைய காதல்கள்... நிறைய காதல் தோல்விகளை சந்தித்த இடமும் கூட... பேருந்தில் பொதுவாய் அது டிக்கெட் எடுத்துக்கொடுக்கும் வகையில் அல்லது படிக்கெட்டில் பயணம் செய்யும் போது காலேஜிக்கு எடுத்து போகும் புத்தகங்களை ஜன்னல் ஓர யுவதிகள் வாங்கி வைத்துகொண்டு உதவி செய்வதன் மூலமும் பல காதல்கள் உருவாயின...

நான் கல்லூரியில் வேலை செய்த போது பல காதல்களை பார்த்து இருக்கின்றேன்... பல காதல் அனுபவங்களை கேட்டு இருக்கின்றேன்.. பலரிடம் பேசிய போது அந்த அனுபவங்கள் பல கதைகள் எழுதும் அளவுக்கு இண்டிரஸ்டிங்காக இருக்கும்...

எனது மாணவன் ஒருவன் தினமும் படிகட்டு பயணம் செய்வானாம்... ஜன்னல் ஓரத்தில் அந்த குயின் மேரிஸ் குயின் உட்கார்ந்து இருக்குமாம்... அந்த பிகருக்கு எல்லோரும் நூல் விட அது யாரை பார்க்கின்றது என்று எல்லோரும் குழம்மி போனார்களாம்... பேருந்தில் படிக்கட்டில் தொத்திக்கொண்டு கையில் புத்தகம் வைத்துக்கொண்டு அவஸ்தை படுவதை பார்த்து ஜன்னல் ஓர பெண்கள் புத்தகம் வாங்கி வைத்துக்கொள்வார்கள்... ஆனால் இந்த பெண் யாரிடமும் வாங்கி வைத்து கொள்ளாதாம்....

நல்ல பீக் அவரில் படிக்கட்டில் தொங்கும் போது அந்த பெண்ணிடம் இவன் புத்தகம் கொடுக்க அவள் வாங்கி வைத்தக்கொண்டாள்... அவ்வளவுதான் அவள் புத்தகம் வாங்கி வைத்துக்கொண்டதால் ,அன்று இரவு நம்ம பையன் பசங்களுக்கு பீர் பார்ட்டி வைத்து இருக்கின்றான்...

இது போல் புத்தகம் வாங்கி வைத்துக்கொள்ளும் பழக்கம் தினமும் தொடர அவன் நண்பன் இதே போல் படிக்கட்டில் தொங்கும் போது புத்தகத்தை அவளிடம் நீட்ட...அவள் வாங்காமல் முகம் திருப்பிக்கொண்டாலாம்....

அதன் பிறகு பார்வை பறிமாற்றம் மட்டுமே ஒரு நாள் அவள் வழக்கமாக இறங்கும் பேருந்து நிறுத்தத்தில் இறங்காமல் அவன் இறங்கும் நிறுத்தத்தில் இறங்கி உன்னோடு ஒரு சில வார்த்தை பேச வேண்டும் என்று சொல்லி இருக்கின்றாள்.... அவள் பஸ் நிறுத்தத்திலேயே பேசலாம் என்ற சொல்ல...இவனுடன் ஆவலடன் கேட்க...நான் முஸ்லி்ம் பெண்... நீ இந்து... நீ என்னை கல்யாணம் செய்ய நீ மதம் மாற வேண்டும்... உன்னால் முடியுமா?.. என்று கேட்டு இருக்கின்றாள்....

அதற்கு நம்ம பையன் சினன வயசல இருந்தே பழகிய விஷயத்தை என்னால் மாற்றிக்கொள்ள முடியாது என்று சொல்ல... சட்டென அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டாலாம்...

அடுத்த நாள் இதே போல் அவன் தொங்கி கொண்டு புத்தகத்தை நீட்ட, முகத்தை திரும்பிக்கொண்டு விட்டதாம் அந்த பெண்.... இது போல பல காதல்கள் ஜெயித்த காதல், ஜெயிக்காத காதல்கள் பலது மாநகர பேருந்து பின் புலத்தில் நடந்த நிகழ்வுகள்தான்...

அதே போல இடிமன்னர்கள்... பேருந்தில் ஏறுவதே பெண்களை இடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே பிரதானமாக எடுத்துக்கொண்டு பேருந்தில் பயணிப்பவர்கள்... இதற்கு முன் ஏதோ ஒரு பதிவில் அதை சொன்னாலும்... இப்போது சொல்கின்றேன்...

கோவையில் அதன் சுற்று புற பேருந்துகளில் பெண்கள் முன் பக்கமும் ஆண்கள் பின் பக்கமும் ஏறும் பழக்கம் இன்றும் நடை முறையில் உள்ளது... ஆனால் சென்னையில் இது சாத்தியம் இல்லை... பேருந்தின் நடுவில் படி வைத்து பெண்களை முன் பக்கமும் ஆண்களை பின் பக்கமும் ஏற்ற வைத்து பார்த்தார்கள்... அதுவும் சாத்தியம் இல்லை... அந்த பேருந்தில் அதிக விபத்துகள்தான்....


பாண்டி டூ கடலூர் பேருந்துகளில் பின் பக்கம் பெண்கள் நிற்க்கும் இடத்தில் ஆண்களை ஏறவே விட மாட்டார்கள்.. ஏன் என்றால் எல்லோரும் தண்ணி அடித்து விட்டுதான் ஏறுவார்கள்... அதே போல் இரண்டு கண்டக்டர்கள் இருப்பார்கள்... அவர்களுக்கு தெரியும் யார் இடிக்கின்றார்கள்... யார் நடிக்கின்றார்கள்.. என்பது தெரியும்... அப்படி ஏதாவது அவர்கள் கண்ணில் பட்டால் அவர்களே சொல்லி விடுவார்கள்.... ஆனால் பல லட்சக்கணக்கான மக்கள் புழங்கும் சென்னை பேருந்தில் இது சாத்தியம் இல்லை...




ராயபுரம் பக்கம் பேருந்தில் பயணம் செய்த போது இரண்டு பேர் சரக்கில் பேனாக்த்தியை கண்டக்டர் எதிரில் பறி மாறிக்கொள்ள கடைசி வரை கண்டக்டர் அவர்களிடத்தில் டிக்கெட்டே வாங்கவில்லை... இப்படி எல்லாம் பயமுறுத்தும் சென்னையில் கண்டக்டர் தட்டி கேட்பது என்பது சாத்தியம் இல்லை....

எங்கள் ஊர் 3ம் நம்பர் பேருந்தில் ஒரு உடல் ஊனமுற்ற நடத்தனர் இருந்ததார் அவர் பேருந்தில் பிக்பாக்கெட் ஆசாமிகள் ஏறினாலே... செயின் பர்ஸ் எல்லாம் பத்திர படுத்திக்கொள்ளுமாறு சவுண்ட் விடுவார்....

ஆனால் அது போல் சென்னை பேருந்தில் நடத்துனருக்கு இது சாத்தியம் இல்லை
அந்த பெண்ணை திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் ரவுண்டான வரும் வரை அந்த பெண்ணை கூட்டத்தை சாக்காக வைத்து அவள் பின் புறம் அந்த பொறுக்கி அசிங்கம் செய்து கொண்டு வர, அந்த பெண் புழுவாய் துடிக்க... அண்ணா நகர் ஆர்ச்சில் அந்த பெண்ணின் பின்புறம் சுடிதாரில் அவனது செமன்... அவள் அவமானத்தில் அழுது துடிக்க... இதை கவனித்த பக்கத்தில் நின்ற பெண்மணி சத்தம் போட அவ்வளவுதான்.... அவனக்கு செமை மாத்து....

இது நடந்தது 1994ம் வருட காலகட்டம்....அவன் நன்றாக படித்த பையனாக இருந்தான்... எனக்கு அவன் எப்படி? இந்த கூட்டத்தில் இவ்வளவு தைரியமாக இந்த வேலையை செய்தான் என்பதுதான் என் ஆச்சர்யம்??? ஒன்று மட்டும் புரிந்து போனது காமம் தலைக்கேறினால் அது குறையும் வரை அவன் ஒரு மிருகம் என்பதை தெரிந்து கொண்டேன்... அது ஆண் பெண் இருவருக்கும் பொது என்பேன்.... அது நல்லவன் கெட்டவன் என்ற வரைமுறையிலும் வராது...

அந்த பெண் அழுது கொண்டே ஆட்டோ ஏறி போய் விட்டாள்...ஆனால் அவன் மீது போலிஸ் கம்ளெயின்ட் கொடு்த்து இருக்கலாம்.. இதற்கு பின் அந்த பெண்ணை போலிஸ் ஸ்டேசனில் கேள்வி கேட்டே கொன்று விடுவார்கள்...

இந்த நிலை மாற வேண்டும்....

இன்னும் விதி படத்து சுஜாதா போல மூக்கை உறிஞ்சிகொண்டு இருக்ககூடாது... வரும் தலைமுறைக்காவது எல்லாவற்றையும் சொல்லி வளரச்செய்யுங்கள்...இரண்டும் கெட்டனாக வளர்த்த காரணம்தான் அந்த பையன் காமத்தை பற்றி தெளிவில்லாமல் பலர் முன்னிலையில் அவமானபட நேர்ந்தது... தன் மீதான பாலியல் வன் கொடுமையை, அப்படி பட்ட அவமானத்தை எல்லோரிடமும் சொல்ல முடியாத சுழலில் அந்த பெண்ணை சிக்க வைத்த , அல்லது சகித்துக்கொள்ள வைத்தது எது என்பது விடை தெரியா? கேள்விகள்... என்னுள் இன்றளவும்...

என்னை பொறுத்தவரை அந்தபுரம் தனியாக கொலுமண்டபம் என்று பிரித்து வைத்து வரும் தலைமுறையை வளர்க்க கூடாது.... ஆண் பெண் இரண்டு பேரும் சேர்ந்தே பயணிக்க வேண்டும்... இன்னமும் ஆண் பூச்சாண்டி என்பதாக பெண்ணை வளர்க்க கூடாது... அப்படி வளர்த்ததின் விளைவுதான் அழுகையும் ஆட்டோ ஏறலும்... அப்போதே செருப்பை கழட்டி இருந்தா??? அல்லது பக்கத்தில் இருப்பவரிடம் சொல்லி உதவி கேட்டு இருந்தால்???? இனி வரும் காலங்களில் அவனோடுதான் இனி சரிக்கு சமமாக உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும்...அவன் எல்லை மீறினால் தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும்..

உங்கள் வாழ்வில் இது போல மாநகர பெருந்தில் ஏதாவது பிரச்சனைகள் நடந்து இருந்தால் அதை இந்த பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..


அடுத்த பாகத்தில் சென்னை மாநகர பேருந்து மற்றும் கல்லூரி மாணவர்கள்...


அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

18 comments:

  1. உங்கள் அனுபவம் அனைத்தும் அருமை...

    ReplyDelete
  2. மிளகு தூவி தான் ஒரே தீர்வுன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. நன்றாக எழுதி உள்ளீர்கள்...

    ReplyDelete
  4. நன்றாக எழுதி உள்ளீர்கள்

    ReplyDelete
  5. அருமையான பதிவு ஜாக்கி சார்.

    ReplyDelete
  6. //இன்னமும் ஆண் பூச்சாண்டி என்பதாக பெண்ணை வளர்க்க கூடாது//

    கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  7. நான் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நேர்லயே பார்த்திருக்கேன்.. நெரிசல் மிக்க பேருந்து ஒன்றில், ஒரு மிருகம் வேலைக்குப் போகும் பெண் ஒருத்தியை உரசிக் கொண்டே வர, நகரவும் முடியாமல், எதிர்க்கவும் இயலாமல், விதியை நொந்து கொண்டு அந்தப் பெண் தவித்த தவிப்பு இருக்கே.. இத்தனைக்கும் அந்தாளுக்கு சற்றேறக்குறைய அந்தப் பெண் வயதில் ஒரு மகள் இருப்பாள்..

    ReplyDelete
  8. 90களில் தான் என் பஸ் பயணமும், இப்போ இன்னும் அதிக கொடுமையாக இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.:(

    சக பயணிகள் அடித்து துவைத்தாலே போதும் இவர்கள் தொல்லை அடங்கிவிடும்.

    யூத்ஃபுல் விகடன் - குட் ப்ளாக்ஸ் ல போட்ருக்காங்க, நிறைய பேரை சென்றடையும். வாழ்த்துக்கள் ஜாக்கி.

    ReplyDelete
  9. //இனி வரும் காலங்களில் அவனோடுதான் இனி சரிக்கு சமமாக உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும்...அவன் எல்லை மீறினால் தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும்//

    இது கண்டிப்பாக நடக்க வேண்டும்
    அனால் இது நடக்க கொஞ்ச காலம் ஆகும்

    நன்றி,
    ஜோசப்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  10. இவ்ளோ மேட்டர் இருக்கா!!
    இடி மன்னர்கள்..திருடர்கள் போலத்தான்...தானா
    திருந்தினதான் உண்டு....

    ReplyDelete
  11. நல்ல பதிவு.
    விஜய்,
    மஸ்கட்.

    ReplyDelete
  12. ஜாக்கி,

    பேருந்தில் இந்த ஆண் உருவில் உள்ள 'ஒன்பது' களின் தொல்லைகளை விட்டுவிடீர்களே!! அந்த கொடுமையை 18 வயதில் அனுபவித்தவன் நான். ச்சீ என்றாகிவிட்டது அன்று எனக்கு!!

    ReplyDelete
  13. அண்ணே எங்க ஏரியால சின்ன சின்ன பொம்பள பசங்கள கூட இந்த இடி நாய்ங்க சும்மா விடுறது இல்ல.

    ReplyDelete
  14. இந்த மாதிரி நடந்துக்கிறதுக்கு கேவலமா இல்லை அவனுக்கு ..

    சே என்ன உலகம்டா சாமி ...

    ReplyDelete
  15. நான் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நேர்லயே பார்த்திருக்கேன்.. நெரிசல் மிக்க பேருந்து ஒன்றில், ஒரு மிருகம் வேலைக்குப் போகும் பெண் ஒருத்தியை உரசிக் கொண்டே வர, நகரவும் முடியாமல், எதிர்க்கவும் இயலாமல், விதியை நொந்து கொண்டு அந்தப் பெண் தவித்த தவிப்பு இருக்கே.. இத்தனைக்கும் அந்தாளுக்கு சற்றேறக்குறைய அந்தப் பெண் வயதில் ஒரு மகள் இருப்பாள்

    ReplyDelete
  16. //(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்..//

    உண்மையிலேயே எங்களுக்கு மேல் தான் நீங்கள் எழுதுகிறீர்கள். உளப்பூர்வமான பதிவு...

    ReplyDelete
  17. இது ஞாயமானது. ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் பேருந்தில்,முன்னால் இடம் இருந்தும் ஆண்களுக்கு மிக அருகாமையில் வந்து நிற்கும் பெண்கள் இருக்கிறார்கள் இது உண்மை.அதுவும் பக்கத்தில் இருக்கும் ஒரு கம்பெனிக்குச் செல்லும் பெண்கள் தான் இப்படிச் செய்கிறார்கள். 3 பேர் அமரும் இருக்கையில், நான்காவதாக ஒரு பையன் அமர்ந்து பந்தா காட்டுவது போல் உக்கார்ந்து கொள்வது. பெண்களின் கை கால்கள் அனைத்தையுமே உரசுவது..என் இந்த பெண்கள் நகர்ந்து நிக்கலாமே.. அது தான் முன்னால் அவ்வளவு இடம் உள்ளதே..காலேஜ் செல்லும் பெண்களில் சிலர் ஏறிய உடன் முன்னால் சென்று நின்று கொள்கிறார்கள். ஆனால் இந்த பெண்கள் ஏறும்போது முன்னால் பார்ப்பதே இல்லை.. கொடுமை என்னவென்றால் இதில் பெரும்பாலானோர் கல்யாணம் ஆன பெண்கள். சகஜமாகப் பேசிக்கொள்ளும்போதும் கண்களில் காம நெடி.. கொடுமை கொடுமை.. கண்ணியம் என்பது கொஞ்சம் கூட இல்லை இரு பாலரிடமும்.. பெண்களை நான் முழுமையாகக் குறை கூறவில்லை. ஆனால் என் நிலைமையை யோசியுங்கள்.ஏறும்போது பின்னால் தான் ஏறுகிறேன். உள்ளே போ, உள்ளே போ, முன்னால் போ, என்று தள்ளித்தள்ளி கடைசியில் முதல் படிக்கட்டுகே வந்து விடுகிறேன். நான் மேலே சொன்ன பெண்கள் அருகே வந்து நிற்க,எவ்வளவு நேரம் மூச்சை இழுத்துப் பிடிச்சிட்டு நிக்கறது. இதில் லேசாக மூச்சுப் பட்டு விட்டால் கண்ணகிப் பார்வை வேறு.. கோபம் தான் வருகிறது.. உண்மையைக் கொட்டி விட்டேன். நம்பினால் நம்புங்கள்..

    ReplyDelete
  18. என்ன எழவுக்கு இப்படி?
    வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம்.ஐயோ,ஐயோ

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner