பொங்கலோ பொங்கல் 2010

பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இந்த ஜாக்கியின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...2010௦
அந்த விளம்பர படத்தை எனக்கு பாலா என்கின்ற வாசகர் லிங்கை அனுப்பிவைத்து இருந்தார் .... அந்நாட்களில் எனக்கு பிடித்த விளம்பர பாடல் அது மலேஷியா வாசுதேவன் ரொம்ப ஹிபிட்சில் பாடி இருப்பார்... மிக முக்கியமாக "வண்ணமும் எண்ணமும் ஒன்றாய்
கலந்தன" வாசலில் இன்பங்கள் பூத்துக்குலுங்கின..... சொந்தமும் பந்தமும் மகிழ்ந்தன.... என்று பாடி விட்டு கொஞ்சமே கொஞ்சம் குரல் இறக்கி
"மண்பார்த்து பொங்கியது பொங்கல் வண்ணநிறம் பார்த்து பொங்கியது மனசு... என்று முடியும் இந்த விளம்பர பாடலில் பொங்கலின் பொது ஒரு கிராமத்து என்ன? என்ன ? நிகழுமோ அது எல்லாம் இந்த விளம்பர பாடலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும்...

முன்பு போல் இப்போது எல்லாம் பெயின்ட் விளம்பரங்களை பார்க்க முடிவதில்லை.... .காரணம் தெரிவதில்லை
இந்த கார்டூன் பாடல் கூட இந்த பண்டிகையின் பெருமையை சொல்லும் என்று நினைக்கிறேன் ....இனி வரும் காலங்களில் இந்த கார்டூன் பாடல் ஒரு ஆவன பாடலாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை ..


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி..

9 comments:

  1. ஆமாம் அண்ணே.. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசையில்.. சூப்பர் விளம்பரம்.. !!!

    ReplyDelete
  2. பாப்பா பாட்டு அழகு, மீண்டும் ஒருமுறை பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அழகான விளம்பரம். பாடலுக்கு இசை A.R.R என நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. பொங்கல் வாழ்த்துகள் ஜாக்கி.

    ReplyDelete
  5. பொங்கலோ பொங்கல்..


    பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பொங்கலோ பொங்கல்...

    தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பொங்கலோ பொங்கல்...

    தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ஏழை - பணக்காரன்
    நல்லவன் - கெட்டவன்
    முடிந்தவன் - முடியாதவன்
    இருப்பவன் - இல்லாதவன்
    மேலோன் - கீழோன்
    என எந்த வேறுபாடும் பார்க்காமல்
    எல்லோருக்கும் ஒன்றாய்
    மிகவும் நன்றாய்
    அனைவரும் மகிழ்ச்சியாய்
    கூடி கொண்டாட
    இனிதே பொங்கு
    பொங்கலோ பொங்கல் என்று.
    பொங்கலோ பொங்கல்

    நான் ஊரில் இல்லை. என் மக்கள் நான் அவர்களுடன் இல்லை என்று வருத்தத்தில் உள்ளனர்.
    அப்பன் திருவிழா, விசேஷம் என்று பாராமல் கடல்கடந்து கண்விழித்து கண்ணியமாக,
    தீவிரவாதிகளுக்கும், கொள்ளையர்களுக்கும் அஞ்சாமல் பணம் சம்பாதிப்பதால் தான் என் வீட்டில் பொங்கல் பொங்குகிறது என்று என் மக்களுக்கு தெரியாது.
    ஆனால் என் மனைவிக்கு தெரியும்.
    பிரிவின் துயர் அவளுக்கு தெரியும்.
    தனிமை அவளுக்கு தெரியும்,
    இளமையில் தனிமை எவ்வளவு கொடுமை
    என்பதும் அவளுக்கு தெரியும்.
    அவளுக்காக ஒருமுறை
    பொங்கு
    பொங்கலோ பொங்கல் என்று
    இவ்வளவும் என் மக்களுக்கு தெரியாது.
    அவர்களுக்கு தெரியாமல் இருப்பதில் தான் என்போன்ற வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு கிடைக்கும் சிறு சந்தோசம்.
    என்போன்ற அவர்களுக்காக மீண்டும்
    பொங்கு

    பொங்கலோ பொங்கல்.

    பொங்கல் நல் வாழ்த்துக்கள்
    இப்படிக்கு,
    பாலா, நைஜீரியா,
    +234708 999 6984

    ReplyDelete
  9. நல்லவன் - கெட்டவன்
    முடிந்தவன் - முடியாதவன்
    இருப்பவன் - இல்லாதவன்
    மேலோன் - கீழோன்
    என எந்த வேறுபாடும் பார்க்காமல்
    எல்லோருக்கும் ஒன்றாய்
    மிகவும் நன்றாய்
    அனைவரும் மகிழ்ச்சியாய்
    கூடி கொண்டாட
    இனிதே பொங்கு
    பொங்கலோ பொங்கல் என்று.
    பொங்கலோ பொங்கல்

    நான் ஊரில் இல்லை. என் மக்கள் நான் அவர்களுடன் இல்லை என்று வருத்தத்தில் உள்ளனர்.
    அப்பன் திருவிழா, விசேஷம் என்று பாராமல் கடல்கடந்து கண்விழித்து கண்ணியமாக,
    தீவிரவாதிகளுக்கும், கொள்ளையர்களுக்கும் அஞ்சாமல் பணம் சம்பாதிப்பதால் தான் என் வீட்டில் பொங்கல் பொங்குகிறது என்று என் மக்களுக்கு தெரியாது.
    ஆனால் என் மனைவிக்கு தெரியும்.
    பிரிவின் துயர் அவளுக்கு தெரியும்.
    தனிமை அவளுக்கு தெரியும்,
    இளமையில் தனிமை எவ்வளவு கொடுமை
    என்பதும் அவளுக்கு தெரியும்.
    அவளுக்காக ஒருமுறை
    பொங்கு
    பொங்கலோ பொங்கல் என்று
    இவ்வளவும் என் மக்களுக்கு தெரியாது.
    அவர்களுக்கு தெரியாமல் இருப்பதில் தான் என்போன்ற வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு கிடைக்கும் சிறு சந்தோசம்.
    என்போன்ற அவர்களுக்காக மீண்டும்
    பொங்கு

    பொங்கலோ பொங்கல்.

    பொங்கல் நல் வாழ்த்துக்கள்
    இப்படிக்கு,
    பாலா, நைஜீரியா,
    +234708 999 6984

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner